Friday, 9 September 2016

வேலைவாய்ப்பு தகவல்கள்,

                                        







காசு கொழிக்கும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு

‘         சமீப காலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்க நகை அணிந்து செல்லவே பெண்கள் அஞ்சுகின்றனர். மேலும் ஜெட் வேகத்தில்  தங்கம் விலை உயர்வதால் நடுத்தர குடும்பத்து பெண்கள் தங்க நகைகளை நினைத்து கூட பார்க்க முடிவதில்லை. கிரிஸ்டல் நகைகள் விலை குறைவு. அதேவேளையில்  பார்ப்பதற்கு ஆடம்பரமாக காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள்  கிரிஸ்டல் நகைகளை அணியவே விரும்புகின்றனர். பெண்கள் வீட்டில் இருந்தபடி செய்ய ஏற்ற தொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பு. இதில்  நல்ல லாபமும் சம்பாதிக்கலாம்’ என்கிறார்கள் கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்த செல்வி, ரம்யஜோதி. அவர்கள் கூறியதாவது: தையல் பயிற்சி நிலையத்தில் எங்களுக்கு ஒருவர் கிரிஸ்டல் நகை தயாரிப்பு குறித்து  இவருடன் சேர்ந்து பயிற்சி அளித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து கிரிஸ்டல் நகை தயாரிப்பை ரூ.5 ஆயிரம் முதலீட்டில் துவக்கினோம். கோவைக்கு வாரம் ஒருநாள் சென்று, உற்பத்தி பொருட்களை வாங்குவோம். வீட்டு வேலை இல்லாத நேரங்களில் இருவரும் சேர்ந்தோ, தனியாகவோ நகைகளை கோர்ப்போம். இதனால் உற்பத்தி அதிகரித்தது.

ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக செய்யத் தொடங்கிய நாங்கள், தயாரித்த நகைகளை அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு விற்றோம். இதில் நல்ல லாபம் கிடைத்தது. வீட்டில் உள்ளவர்கள் ஊக்குவித்தனர். அதிகளவில் உற்பத்தி செய்து அருகில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு விற்று விற்பனையை அதிகப்படுத்தினோம். பள்ளி மாணவிகளையும் எங்கள் கிரிஸ்டல் நகை கவர்ந்தது. விலை  மிகவும் குறைவாக இருப்பதோடு விரும்பிய மாடலில் கிடைப்பதால், பல பெண்கள் ஆர்வத்தோடு வாங்குகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் அவரவர் உடைக்கேற்ப மேட்சிங்காக அணிய, பல்வேறு வண்ணங்களில் கிரிஸ்டல் நகைகளுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். நாங்கள் கலைநயத்தோடு செய்கிறோம். எங்கள் நகைகளை பார்ப்பவர்கள் உடனே தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். அதன் மூலம் உற்பத்தி படிப்படியாக உயர்ந்து வருகிறது. விலை குறைவோடு தரமாகவும் தயாரிப்பதால், எதிர்பார்த்ததை விட வரவேற்பு அதிகமாக உள்ளது. ஒளியை பிரதிபலித்து மின்னுவதால் லைட் கலர் கிரிஸ்டல் நகைகளை இளம்பெண்கள் விரும்பி வாங்குகின்றனர்.  பெரியவர்கள் அடர் வண்ண  கிரிஸ்டல் நகைகளை விரும்புகின்றனர். பொறுமையும், அழகுணர்ச்சியும் உள்ளவர்கள் புதுப்புது டிசைன்களில் கிரிஸ்டல் நகையை உருவாக்கலாம். இதன் மூலம் எளிதில் வாடிக்கையாளர்களை பெருக்க முடியும். பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய ஏற்ற தொழில் இது. பெரியளவில் பயிற்சி எதுவும் தேவையில்லை.


உற்பத்தி செலவு (ஒரு நாளைக்கு): ஒரு நபர் ஒரு நாளில் 8 மணி நேரத்தில் சிறிய அளவு கிரிஸ்டல் நகை 50 தயாரிக்கலாம். நடுத்தர அளவு என்றால் 15, பெரிய அளவு என்றால் 20 தயாரிக்க முடியும். சிறிய அளவு நகைக்கு ரூ.90 முதல் ரூ.110 வரை செலவாகும். நடுத்த அளவுக்கு ரூ.150 முதல் ரூ.160 வரையும், பெரிய அளவுக்கு ரூ.200ம் செலவாகும்.  சிறிய அளவிலான 50 கிரிஸ்டல் நகை கள் தயாரிக்க உற்பத்தி செலவு ரூ.5,500. நடுத்தர அளவு 15 நகை தயாரிக்க ரூ.2,600, பெரிய அளவு 20 நகை  தயாரிக்க ரூ.4,000 தேவைப்படும். அனை த்து வகைகளையும் கலந்து தயாரிக்க சராசரியாக ரூ.5 ஆயிரம் போதும்.

வருவாய் (ஒரு நாளைக்கு): ஒரு நாள் உற்பத்தியாகும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கிரிஸ்டல் நகைகளை குறைந்தபட்சம் 30 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்க முடியும். இதன் மூலம் ஒரு நாள் வருவாய் ரூ.6,500 இதில் லாபம்  ரூ.1,500.  இதை உழைப்பு கூலியாகவும் எடுத்து கொள்ளலாம். கூட்டாக சேர்ந்து தயாரித்தால் லாபம் இரு மடங்காக அதிகரிக்கும்.  ஒரு நாள் தயாரித்ததை விற்ற பின், அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு அடுத்த உற்பத்தியை தொடங்கலாம். இது வீட்டில் இருந்தவாறு தொழில் செய்பவர்களுக்கு பொருந்தும். விற்பனை அளவுக்குகேற்ப உற்பத்தியை அதிகரித்தால், வருவாய் கூடும். 

சந்தை வாய்ப்பு: சேலை மட்டுமல்லாமல் சுடிதார், சல்வார் உள்ளிட்ட நவீன ஆடைகளுக்கு ஏற்றபடி அணிய கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கலாம். இவற்றை இளம்பெண்கள் விரும்பி வாங்குவார்கள். குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.300க்குள் கிடைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பொலிவு குன்றாமல் காட்சியளிக்கும். கலைநயத்தோடு இருப்பதால் வயதானவர்களும் விரும்பி வாங்குவார்கள். தோழிகளுக்கு பரிசளிக்கவும் பெண்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர்.  கிரிஸ்டல்  செயின் மட்டுமல்லாமல், கிரிஸ்டல் தோடு, கிரிஸ்டல் கொலுசு ஆகியவற்றையும் எளிதில் தயாரிக்கலாம். தனிப்பட்ட முறையில் விற்பது மட்டுமல்லாமல் பேன்சி ஸ்டோர்கள், கவரிங் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம்.


தயாரிப்பது எப்படி?

கிரிஸ்டல் நகை தயாரிப்பு என்பது தங்க, வெள்ளி நகைகளை போல் உருக்கி, தட்டி செய்வதல்ல. ரெடிமேடாக உள்ள பல வண்ண கிரிஸ்டல் மற்றும் இணைப்பு பொருட்களான சக்கரியா, பால் ஆகியவற்றை சேர்த்து கோர்ப்பதுதான்.  சிறுமிகள், இளம்பெண்கள், வயதானவர்கள்  அணிவதற்கேற்ப குறைந்த நீளம் (ஒரு அடி), நடுத்தர நீளம் (ஒன்றரை அடி), அதிக நீளம் (2 அடி) ஆகிய அளவுகளில் கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. முதலில் கிரிஸ்டல் வயர் கம்பியை கட் டரை கொண்டு தேவையான அளவுகளில் வெட்டி கொள்ள வேண்டும். 2 பேர் கூட்டாக செய்தால்,  முதலில் டாலரை கோர்த்து நடுவில் தொங்கவிட்டு, இரு முனைகளில் ஒரு பால், ஒரு சக்கரியா, ஒரு கிரிஸ்டல் கல் ஆகியவற்றை வரிசைப்படி கோர்க்க வேண்டும். அதே பாணியில் தொடர்ந்து கோர்த்து வர வேண்டும். இவ்வாறு இருபுறமும் கோர்த்து முடிக்கும் இடத்தில் கியர் லாக்கை கோர்த்து கட்டிங் பிளேயர் மூலம் முடிச்சு போட வேண்டும். இங்கு ஊக்கு, காந்தம் அல்லது ஸ்க்ரூ பொருத்தினால் கிரிஸ்டல் நகை ரெடி.

தேவையான பொருட்கள்: இளம் மற்றும் அடர்த்தியான பல வண்ண கிரிஸ்டல் சிறியது முதல் பெரியது வரையில் 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ஆகிய எண்களில் கிடைக்கும். எண் 2 கிரிஸ்டல் 90 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.65. எண் 4 ரூ.75, எண் 6 ரூ.95, எண் 8 முதல் 18 வரை ரூ.100. சக்கரியா 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.52, கோல்டு பால் 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.19. கியர் வயர், கோல்டு மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும். 100 மீட்டர் கொண்ட ஒரு ரோல் ரூ.65. கியர் லாக் 100 எண்ணிக்கையுள்ள ஒரு பாக்கெட் ரூ.52. ஊக்கு ஒரு செட் ரூ.7, காந்த ஊக்கு ஒன்று ரூ.10, ஸ்க்ரூ செட் ரூ.7 முதல் ரூ.10. கட்டர், பிளேயர் ஆகியவை தலா ரூ.100. நகரங்களில் உள்ள பேன்சி ஸ்டோர்களில் இந்த பொருட்கள் கிடைக்கின்றன.

Thursday, 8 September 2016

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்,


Block செய்யப்பட்ட தளங்களை Open செய்வது எப்படி?





அலுவலகத்திலோ, பாடசாலையிலோ , பல்கலைக்கழகத்திலோ சில தளங்கள் Block செய்யப்பட்டு இருக்கலாம்.அதில் சில பயன்படும் தளங்களும் வந்துவிடும். அம்மாதிரியான நேரங்களில் நம்மால் நமக்கு தேவையானதை உடனே தேட முடியாது அல்லது படிக்க முடியாது. அப்படி பிளாக் செய்யப்பட்ட தளங்களை எப்படி படிப்பது என்று பார்க்கலாம் ..

பிளாக் செய்யப்பட்ட தளங்களை ஓபன் செய்ய பல மென்பொருட்கள் இருந்தாலும் இலவசமாக வருவது இல்லை. ஆன்லைனில் நிறைய தளங்களில் இதை இலவசமாக செய்ய முடியும். அவற்றில் ஐந்தை பார்ப்போம்.

1. Hidexy -
அதிக விளம்பரங்கள் வந்தாலும் கொஞ்சம் வேகமாக லோட் ஆகிறது.

2. Hide IP Surfing - http://hideipsurfing.com/
விளம்பரங்கள் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் மெதுவாக லோட் ஆகிறது. இதை http://www.ezprxy.com/ என்ற முகவரியிலும் பயன்படுத்த முடியும்.

3. Hide My IP Address - http://www.hidemyipaddress.org/
எல்லா தளங்களையும் ஓபன் செய்தாலும் மெதுவாக லோட் ஆகிறது.

4. Hide IP Free - http://hideipfree.com/
மேலே உள்ளது போலவே மெதுவாக ஓபன் ஆகிறது. சில widget- களை மறைத்து விடுகிறது. 

5. Hide My Ass - http://hidemyass.com/
இருக்கும் ஐந்தில் இது தான் மிக மெதுவாக தளங்களை திறக்கும்.

Monday, 5 September 2016

வேலை வாய்ப்பு தகவல்கள்


பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!





இயற்கை முறையில் மூலிகைப் பண்ணையைப் பராமரித்து வரும் சிவகங்கை மாவட்டம், ஆவுடப் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த  சித்த மருத்துவர் சொக்கலிங்கத்தின் நாற்பது ஏக்கர் மூலிகைப் பண்ணையில் இயற்கையில் பல மூலிகைகள் முளைந்திருந்தன. அது போக, மருத்துவத்திற்குத் தேவையான பல மூலிகைகளைத் தேடித்தேடி வாங்கிட்டு வந்து வளர்த்திருக்கிறார் சொக்கலிங்கம். விஷத்திலேயே கொடிய விஷமான எட்டி, ஒத்தத் தலைவலியைக் குணப்படுத்தும் காஞ்சொறி, ஆஸ்துமாவை அழிக்கும் ஆஸ்துமா கொடி, சர்க்கரை நோயை குணப்படுத்தும் சர்க்கரைக் கொல்லி, இன்சுலின் செடிகளும் இங்கே இருக்கிறது. இந்த இன்சுலின் நாற்றுகளை நிறைய பண்ணைகளில் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என்று விற்கிறார்கள். ஒரு செடியை வாங்கிக் கொண்டு வந்து அது வளர்ந்ததும் தண்டை ஒடித்து வைத்தாலே போதும், தன்னால் வளர்ந்துவிடும்.
அதேமாதிரி .. பிரம்பு, கருப்பு வெத்திலை, கருநெல்லி,  கருநொச்சி, ரசவாதத்திற்குப் பயன்படும் செங்குமரி, வெள்ளை நாவல், திருவோடு மரம், பேய்கரும்பு, வல்லாரை, ஓரிதழ் தாமரை, முடக்காத்தான், ரணகள்ளி, நீர் நொச்சி, நீர் பிரம்மி, நீல மிளகாய், தவசி, முருங்கை, மான் செவி, கேசவர்த்தினி, கரிசலாங்கன்னி, தண்ணீர் விட்டான் கிழங்கு, ஆகாயகருடன், மதனகாமப்பூ, ஈஸ்வர மூலிகை என்று வகை வகையான அறிய மூலிகைகளையும் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து வளர்க்கிறேன் என்றார்.
கனகாம்பரத்தில் பச்சை கலரில் பூ வரும் செடி, இரண்டு வகை வல்லாரை, இரண்டு வகை மருதாணி, மூன்று வகை பொன்னாங்கன்னி, ஐந்து வகை வில்வம், ஐந்து வகை பிரண்டை, மூன்று வகை நாரத்தை, ஐந்து வகை எலுமிச்சை என்று ஒரே செடியில் இருக்கும் பல வகைகளும் இங்கே இருக்கிறது. இருமல் உள்ளிட்ட நிறைய நோய்களை குணப்படுத்தும் சித்தரத்தை மட்டுமே தனியாக அரை ஏக்கரில் இருக்கிறது.
மொத்தமாக பார்த்தால்.. ஏறத்தாழ ஐநூறுக்கும் மேற்பட்ட மூலிகைகள் இங்கே இருக்கு. இந்த மூலிகைகளை வைத்து ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, புற்றுநோய், தோல் நோய் என்று ஆங்கில மருத்துவத்திற்கு சவால் விடும் எல்லா நோய்களையும் முழுவதுமாக குணப்படுத்த முடியும். இங்கிருக்கும் எந்தச்செடிக்கும் எந்த ஊட்டமும் கொடுப்பதில்லை. தன்னாலேயே வளர்கிறது. மூலிகையயோட குணமே அதுதான். காட்டில் உரம் போட்டா வளர்க்கிறார்கள் என்றார் சொக்கலிங்கம்.
பாம்பும் கீரியும் சண்டை போடும் போது, கீரி ஒரு இலையைச் சாப்பிடும். அதற்குப் பேர் கீரி புரண்டான் செடி, அது வேற ஒன்றும் கிடையாது. நம்ம காலடியில் கிடக்கும் சாதாரண சுண்ணாம்புக் கீரைதான். பொதுவாக, நாம செம்பருத்தி என்று சொல்லும் செடி அது கிடையாது. அதை ‘செம்பரத்தைப்பூ’ என்று சொல்லணும். செம்பருத்தி என்பது நாட்டுப்பருத்தியில் சிவப்பு கலரில் பூக்கும் ஒரு ரகம்’ என்றபடியே அந்தச் செடியைக் காண்பித்தார் சொக்கலிங்கம். எளிய மருத்துவக் குறிப்பு ஒன்றையும் சொன்னார்.
‘பல் சொத்தை, பல்லில் புழு என்று பல்டாக்டரிம் போய் ஐநூறு, ஆயிரம் என்று செலவழிப்பாங்க. அதற்கு ஒரு சுலபமான வைத்திய முறை இருக்கு. தும்பை இலைகளை ஒரு கைப்பிடி எடுத்துக்கிட்டு, நான்கைந்து சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வாயில் மென்று குதப்பி துப்பினால்... எல்லாம் சரியாயிடும்.
நிறைவாக, என்னோட மூலிகைத் தோட்டத்தை பார்க்கணும் என்று ஆசைப்படுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.
தொடர்புக்கு,
சொக்கலிங்கம், செல்போன் : 94439 – 19801.

வேலைவாய்ப்பு தகவல்கள்,

வாருங்கள் சுயதொழில் தொடங்க வழி காட்டுகிறோம்...


சுயதொழில் தொடங்க ஆர்வத்துடன் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்களைப் பெற்றுத்தரும்பகுதி இது.
9 காரட் தங்கம் என்றால் என்ன, அதை வாங்குவது நல்லதா, மறுபடியும் விற்பனை செய்ய முடியுமா, இதை வாங்கி விற்கும் தொழிலை மேற்கொண்டால் பலன் கிடைக்குமா?
‘சொக்கத் தங்கம் என்பது 24 காரட். இதில் 99.9 சதவிகிதம் தங்கமாக இருக்கும். சொக்கத் தங்கத்தில் நகைகள் செய்ய முடியாது. செம்பு (காப்பர்)கலந்து செய்தால்தான் நகை உறுதிபெறும். சாதாரணமாக 8 முதல் 9 சதவிகிதம் செம்பை கலந்து செய்வார்கள். இப்படி தயாராகும் நகைகள் 22 காரட். இதற்கும் கீழே… 18, 14, 9 ஆகிய காரட்களிலும் நகைகள் கிடைக்கும். எந்த அளவுக்குசெம்பு சேர்க்கப்படுகிறதோ… அதை வைத்து தங்க நகையின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
10 கிராம் செம்பு விலை 5 ரூபாய் மட்டுமே. செம்பை கலந்து நகை செய்யும்போது, தங்கத்தின் விலை குறையும்.ஆனால், குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக செம்பு சேர்த்து, 22 காரட் தங்கம் என்று கூறி விற்பனை செய்வது தாராளமாக நடக்கிறது. எனவே, வாங்குபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!
இந்தியாவில் இருக்கும் தரக்கட்டுப்பாடு மையம் (Bureau of Indian Standards), தங்கத்தின் தரத்தை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்ற தர நிர்ணய முத்திரையை நகையில் பதித்து விற்பனை செய்வதற்கு உதவுகின்றது. ‘ஹால்மார்க் பி.ஐ.எஸ்-916′ (Hallmark BIS-916) தங்க நகைதான் உண்மையான 22 காரட்தங்க நகை.
இதில் 91.6% தங்கம் இருக்கும். ஒரு கிராமுக்கு குறைவான எடை உடைய நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை தேவையில்லை. அதனால் மூக்குத்தி, சிறிய தோடு முதலியவற்றை குறைந்த காரட் தங்கத்திலேயே தயாரித்து, 22 காரட் விலையில் விற்பனை செய்வதும் நடக்கிறது! இதில், விலைகுறைந்த கற்களைவேறு பதித்து விற்பதால், நகையில் உள்ள கற்களுக்கும் தங்கத்தின் விலையையே கொடுத்தாக வேண்டியுள்ளது. இதுவும் வாங்குபவர்களுக்கு நஷ்டத்தையே தரும்!
18 காரட், 14 காரட், 9 காரட் தங்க நகைகளும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள். இதற்கும் தர நிர்ணய முத்திரை உண்டு. 9 காரட் தங்க நகை என்பது ‘ஹால்மார்க் பி.ஐ.டி.எஸ்-375′ (Hallmark BIS-375). அதில் 37.5% தங்கம் இருக்க வேண்டும். அதனால் 38% டு 40% தங்கம்தான் அந்த நகையில் இருக்கும். அதனால், சொக்கத் தங்க விலையில் அல்லாமல், கிராம்1,600 ரூபாய்க்கு தர முடியும். இதை மறுவிற்பனை செய்தால்… செய்கூலி, சேதாரம் போக, அந்த நகையில் உள்ள தங்கத்தின் அடிப்படையில் மறு விற்பனைக்கு ஏற்றுக்கொண்டு பணம் தருவார்கள்.
9 காரட் நகைகள் குறைந்த விலையில், அதாவது அதன் உண்மையான மதிப்புக்கு விற்பனை செய்யப்பட்டால் வாங்கலாம். 9 காரட் நகைகள் உறுதியானவை. இதில் தகடுகள்நன்றாக வரும். எனவே, எடை குறைவான (Light Weight) நகைகள் செய்யலாம். தாங்கள் 9 காரட் தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்தால், ‘ஹால்மார்க்’ முத்திரையுடன் கூடிய நகைகளை வாங்கி விற்பனை செய்யுங்கள். முக்கியமான விஷயம்… ’9 காரட் நகை’ எனக்கூறி, அதற்குரிய விலையிலேயே விற்பனை செய்யுங்கள். தங்கம் எத்தனை காரட் என்பதை அறிய உதவும் காரட் மீட்டரையும் கடையில் பயன்படுத்துங்கள்.உங்களின் நேர்மைக்குப் பரிசாக லாபம் கொட்டட்டும்!”
”கடந்த ஒரு வருடத்துக்கு முன் சுயமாக தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில்… 10 ஆயிரம் ரூபாய் முதலீடு போட்டு… நைட்டி, சேலைகள் போன்றவற்றை மதுரையில் மொத்த விற்பனைக் கடையில் வாங்கி விற்றேன். இதில் சிலருக்கு உடனடியாக பணத்தைக் கொடுத்தும், சிலருக்கு மாதாந்திர தவணையிலும் கொடுத்துதான் கொள்முதல் செய்தேன். ஆனால், திட்டமிடல் இல்லாததால், தொடர்ந்து வியாபாரத்தை நடத்த முடியவில்லை. மீண்டும் இத்தொழிலை முழுமையாக நடத்தவும், அதில் வெற்றி பெறவும் எனக்குள் உள்ள சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பி, விடையைப் பெற ஆர்வமாக இருக்கிறேன். உதவுவீர்களா?
வீட்டிலே வைத்து இந்த வியாபாரம் செய்வதற்கு குறைந்தபட்ச முதலீடு என்ன? திருவிழாக் காலங்களில் மட்டும் அல்லாமல் வருடம்தோறும் இந்த வியாபாரம் நடப்பதற்கு வழிமுறை, குறைந்த செலவில் நல்ல தரமான துணிகளை எங்கு வாங்கலாம், இந்தத் தொழிலில் எத்தனை சதவிகிதம் லாபம் வைத்து விற்கலாம்? நான் 12-ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன்.
இந்த சுயதொழில் செய்வதற்கு வங்கிக் கடன் கிடைக்குமா? இதற்கு வங்கியிடம் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் எவை? அல்லது மாவட்ட தொழில்மையத்திடம் விண்ணப்பிக்கலாமா?” வாசகிகேட்டுள்ள கேள்விக்கு தெளிவாக பதில் சொல்ல வேண்டுமானால், ஒருநாள் தனிவகுப்பு எடுக்க வேண்டும். இருந்தாலும் சில முக்கியமான தகவல்களைத் தருகிறேன்.
முதலீடு பற்றி கேட்கிறீர்கள். சில வருடங்களுக்கு முன் ஒரு விதவைத் தாய், 500 ரூபாய் முதலீட்டுடன் வீட்டில் இருந்தபடியே இந்த ஜவுளி விற்பனை செய்து, தன் 2 குழந்தைகளையும் படிக்க வைத்து இன்று ஒரு தொழிலதிபராக உயர்ந்துள்ளார். இந்தத் தொழிலுக்கு ஆரம்பத்திலேயேஅதிக முதலீடு தேவையில்லை என்பதற்காகச் சொல்கிறேன்.
உங்களுக்காக அவர் பெற்ற வெற்றியின் சில டிப்ஸ்கள்…
1.உங்கள் சரக்குகளை மொத்த வியாபாரியையும் தாண்டி, உற்பத்தியாளரை அணுகி வாங்க வேண்டும்.
2.சேலை, நைட்டி எல்லோருக்கும் விலை தெரியும். இத்துடன் பெண்கள் வெளியில் சென்று வாங்கத் தயங்கும் பெண்கள் உள்ளாடைகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யலாம்.
3.நைட்டி, பிரா போன்றவற்றை ராஜபாளையத்துக்கு அருகில்உள்ள தளவாய்புரம் என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உற்பத்தி செய்கிறார்கள். விசாரித்துசரியானவரை அணுகி வாங்கவும். நைட்டி துணி ராஜஸ்தான் பலோத்ராவில் இருந்து வாங்கவும்.
4.சேலை, சுடிதார் போன்றவை குஜராத்தில் உள்ள சூரத்தில் இருந்து வாங்கலாம். தரம் உயர்வாகவும் விலை குறைவாகவும் இருக்க வேண்டும்.
5.பொருள் வாங்கும்போது கிழிந்திருந்தாலோ, சரியாக விலை போடவில்லை என்றாலோ… திரும்ப பெற்றுக் கொண்டு புதுசரக்கு தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். அதனால்உங்களிடம் பழைய சரக்கு எப்போதும் இருக்காது
6.வாடிக்கையாளர்களிடம் பொறுமை அவசியம். அவர்கள் என்ன கேட்கிறார்களோ அவற்றை உங்கள் கொள்முதல் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.
7.வாங்கும் விலை 250 ரூபாய் என்றால், உங்களுடையமுதலீடு, உழைப்பு, விற்பனைக்கு இருக்கும் இடைவெளியில் உங்கள் முதலீட்டுக்கான வட்டி என்று பலவற்றையும் கணக்கிட்டு, விற்பனை விலை 350 என்று வைத்து விற்பனை செய்யவும். இதுவே, கடைகளாக இருந்தால், விளம்பரம், வேலை ஆட்களுக்கான கூலி, கடை வாடகை என்று அனைத்தையும் சேர்த்து 450ரூபாய்க்கும் மேல் விலை வைப்பார்கள்.
நீங்கள் அதைவிட 100 ரூபாய்குறைவாகத்தான் தருகிறீர்கள் என்பதை, வாங்குபவர்களுக்குப் புரியவைத்து விற்பனை செய்தால், உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, பிஸினஸுக்கும் கைகொடுக்கும். நைட்டி, சேலை என்று அதிக அளவில் விற்பனையாகும் துணி வகைகளாக இருந்தால், 150 விலைக்கே விற்பனை செய்யலாம். கடனுக்கு விற்பனை செய்யும்போது ஒரு விஷயத்தில் தெளிவாக இருங்கள். அசல் தொகையான 100 ரூபாயை முதலில் பெற்றுக்கொண்டு, மீதி 50 ரூபாயை தவணையில் வாங்கலாம். எக்காரணம் கொண்டும் அசலை இழந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பது முக்கியம்!
8.வாடிக்கையாளர்களிடம்…‘சரக்கு சூரத், மும்பையில் இருந்து வந்தது’ என்பதைக் கூற வேண்டும்.
எக்காரணம் கொண்டும் துணியை உபயோகித்துவிட்டால், மாற்றித் தராதீர்கள்.
9.உறவினராக இருந்தாலும் பணம் வாங்காமல் கொடுக்காதீர்கள்.
வருடமாவது அந்தத் தொழில் உங்கள் பங்குக்கு பணம் எடுக்காமல் இருங்கள்.உங்களுக்கு லாபம் பெருகும். வியாபாரம் பெருகும்.
11.நீங்கள் வியாபாரம் செய்ய, ‘யு.ஒய்.இ.ஜி.பி’ (UYEGP) திட்டத்தின்கீழ், 50 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை கடன் பெறலாம். 15% மானியமும் உண்டு. உடனடியாக மாவட்டத் தொழில் மையத்தை அணுகவும்.

பயனுள்ள வலைபூக்கள் மற்றும் வலைதளங்கள்

தமிழில் இன்று பல வலைபூக்கள் எழுதப்படுகின்றன. அவை துறை சார்ந்தவையாகவும், பொழுதுபோக்கு அம்சம் கொண்டவையாகவும், பயனுள்ள தகவல்கள் அடங்கியவையாகவும் இருக்கின்றன. அவற்றிலிருந்து சில வலைபூக்கள் மற்றும் வலைதளங்கள் உங்களுக்காக...

கணிணி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளுக்கு


அனைத்து வகையான தமிழ் மென்புத்தகங்களும் பதிவிறக்கம் செய்ய


துறைசார்ந்த ஆங்கில மென்புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய


பொறியியல்  மென்புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய
 

புதிய திரைப்படங்களை பார்ப்பதற்க்கு முன் அத்திரைப்படங்களை பற்றிய விமர்ச்சனம் படிப்பதற்க்கு


(மேலே குறிப்பிட்டுள்ள வலைபூக்களில் திரைவிமர்ச்சனம் மட்டுமின்றி பல சுவாரசியமான விசயங்களும் எழுதி வருகின்றனர்.)

அரசியல் தொடர்புடைய பதிவுகளுக்கு


ஆயுர்வேத மருத்துவம் பற்றி அறிந்து கொள்ள சிறந்ததொரு வலைபூ


சமையல் மற்றும் வீட்டுக்குறிப்புக்கள் குறித்த பதிவிற்க்கு


வகை வகையான கோலங்கள் கற்றுக்கொள்ள
 

தமிழ் திரைப்பட பாடல்கள் தரவிறக்கம் செய்ய


தமிழ் mp3 பாடல்கள் தரவிறக்கம் செய்ய


Ismail.mkm

தமிழ் வலைபூக்கள்

எனது தமிழ் வலைபூக்கள்







திருவண்ணாமலை 

பெண்கள் 

பொருள் செய்ய விரும்பு  


பத்ரின் பதிவுகள் 

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? 

இளம் ஹீரோ பால பாரதி தலைவன் 


அருணை ஒளி  

தமிழ் இணைய தளங்கள்  

உங்கள் விருப்பம் 


தமிழ் இணைய தளங்கள்  







தமிழ் இதழ்கள்






கீற்று 

அர்ச்சுனா 

தமிழர் கண்ணோட்டம் 


தென்செய்தி 

விகடன் 

திண்ணை 


நக்கீரன்  

குமுதம் 

தமிழ் சி.பி 


காலச்சுவடு 

வெப் உலகம் 

பதிவுகள் 


தமிழ் .காம் 

உண்மை 

தமிழம்.நெட் 


இளமை 

மரத்தடி 

அப்பால் தமிழ் 


கூடல் 

வார்ப்பு 

நெய்தல் 


அப்புசாமி 

கல்கி 

குவியம் 


நட்கீரன் 

கொல்டன் தமிழ்  

நெட் தமிழ் 


சென்னை நெட்வொர்க் 

முரசம் 







உலகத் தமிழர் செய்திகள்







உலகத் தமிழர் செய்திகள் 

உலகத் தமிழர் இணையம் 

உலகசந்தை 



தமிழ் நாதம் 

நாளாந்த தமிழ் செய்திகள் 

தமிழ் நெட் 



புதினம் செய்திகள் 

ஈழமுரசு 

வீரகேசரி 



தினக்குரல் 

தமிழ் ஈழ செய்திகள் 

உதயன் 



தமிழ்நேசன் 

முழக்கம் 

வணக்கம் மலேசியா 



தமிழ் கனேடிய செய்திகள் 

தமிழ் பிரித்தானிய செய்திகள் 

சங்கம் 



மைக்ரோசாப்ட் செய்திகள் 

தமிழ் ஆஸ்திரேலியன் 

குளோப் அன்ட் மெயில் 



தமிழ் கார்டியன் 

டோரண்ட்டோ தமிழ் 

பாரீஸ் தமிழ் 


தமிழ் குடில்