Monday, 2 February 2015


கிரைண்டர் பராமரிப்பு முறைகள்!

• தானியங்கள் எதுவும் போடாமலோசிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.

• கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும்.

• கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைத்தால் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் பூப்போல இருக்கும்.

• முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும்.

• கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை டிரம்மில் ஒட்டாதபடியும்வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும் சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில் தேய்ந்துவிடும்.

• குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும்.

• கிரைண்டர் வீட்டின் மூலையில் இருந்தால்எலி சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயமுள்ளது. ஆகையால் கிரைண்டர் இருக்குமிடம் தனியாக இருக்க வேண்டும்.

• கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது.

• கிரைண்டரில் உள்ள கல்லும்குழவியும் வழ வழ என்று இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.

• கொரகொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்கும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும்.

• மோட்டார் சுழன்று டிரம் சுழவில்லை எனில் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.

• கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.

காஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்




குறைந்தஅதி சிறந்த சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும்.
ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்களையும்இரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடிவீட்டுப் பிறகு அடுப்பின் வால்வை மூடுவது நல்லது.

அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும்சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும்.

அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது கவனக் குறைவாக இருக்கக்கூடாது. கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற பொருள்கள்அடுப்பை அணைத்து வெளி வரும் எரிவாயுவினால் வாயுக் கசிவு ஏற்பட்டுத் தீ விபத்து ஏற்படலாம்.

காஸ் ஸ்டவ் வைத்திருப்பவர்கள் வீட்டில் உள்ளக் குழந்தைகள் காஸ் குழாயைத் திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காஸ் குழாயில் குழந்தைகள் விஷமம் செய்வதால் பல ஆபத்துக்கள் ஏற்படுகின்றன.

அடுப்பின் வால்வையும்சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு சிலிண்டரை மாற்ற வேண்டும்.
சுய ரிப்ப்பேர் வேலை ஆபத்தானது. யாரையும் காஸ் உபகரணங்களைப் பழுது பார்க்க அனுமதுக்கக் கூடாது. விறபனையாளர்களிடமே இந்த பொறுப்பை விட்டுவிட வேண்டும்.

மாற்று சிலிண்டர் இணைக்கும்போது பூஜை விளக்குகள்ஊதுவத்தி அனைத்தையும் அணைத்து விட வேண்டும். மின்சார இணைப்புகள் இயங்க கூடாது.

ரப்பர் குழாயில் வெடிப்புதுளை இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

காஸ் அடுப்பின் பர்னரை 10 நிமிடம் மண்ணெயில் ஊற வைத்துப் பிறகு பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம்.

அடுப்பின் பர்னர்களை சலவை சோடா சேர்ந்த வெது வெதுப்பான் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து சுத்தப்படுத்தி உலரச் செய்த பிறகே பொருத்த வேண்டும்.

குரோமிய காஸ் அடுப்புஸ்டவ் போன்றவற்றைச் சூடாக இருக்கும்போது துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.

பெயிண்ட் அடுப்பாக இருந்தால் சூடாக இருக்கும் போது நனைந்த துணியால் துடைக்கக் கூடாது. திடீர் வெப்ப மாறுதலால் வண்ணம் மாறலாம்.

காஸ் சிலிண்டரிலோரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உடனடியாகக் கதவுகள்ஜன்னல்கள் அனைத்தையும் திறந்துவிட வேண்டும். எரிந்து கொண்டிருக்கும் அடுப்புவிளக்கு முதலியவற்றை அணைக்க வேண்டும். சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலிண்டர் வால்வை அழுத்தி மூட வேண்டும். இது வால்விலிருந்து காஸ் கசிதைத் தடுக்கும்.

மண்ணெண்ணெய் ஸ்டவ்களைப் பயன்படுத்துபவர் அது எரிந்துக் கொண்டிருக்கும் போது அதற்கு எண்ணெய் ஊற்ற முயலக்கூடாது. ஸ்டவ்வின் எல்லாப் பகுதிகளும் சூடேறி இருப்பதால் எண்ணெய் பட்டவுடன் திடீரென அது பற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு.

டாங்கில் எவ்வளவு மண்ணெண்ணெய் நிரப்ப வேண்டும் என்றா குறியீடு எல்லா ஸ்டவ்களுலும் இருக்கும். அதற்கு மேல் மண்ணெண்ணெய் ஊற்றக்கூடாது.

இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஸ்டவ் திரிகளைச் சமன்படுத்தி உயரமாக இருக்கும் திரிகளை மட்டும் நறுக்கி விடவும். டாங்கில் மண்ணெண்ணெய் ஊற்றி ஒரு மணி நேரம் ஆனப் பின்பே புதிய ஸ்டவ்வை முதல் முறையாகப் பயன்படுத்த முடியும்.

நீரைத் தெளித்து அடுப்பை அணைப்பது தவறு. அப்போது வெளிப்படும் வாயு உடலுக்கு கேடு செய்யும்.

ஆஹா 50! வீட்டுக்குறிப்புக்கள் சில

ஆஹா 50! வீட்டுக்குறிப்புக்கள் சில

மழை நாளாக இருப்பதால்மிளகாயைக் குறைத்து மிளகை அதிகம் பயன்படுத்தலாம். மழையினால் வரும் வியாதிகளைத் தடுக்க தேவையான எதிர்ப்புச் சக்தி மிளகில் உள்ளது.

தோசைக்கு மாவு அரைக்கும்போது அதில் இரண்டு உருளைக் கிழங்குகளைத் தோல் நீக்கி சேர்த்தரைக்கவும். மறுநாள் தோசை வார்த்தால்பொன்னிறமாக மிருதுவாக இருக்கும்.

தரையைத் துடைக்கும்போது வாரத்தில் ஒருநாள்தண்ணீரில் உப்பு போட்டுத் துடைக்கவும். மற்றொரு நாள் மண்ணெண்ணெய் சில துளிகள் சேர்த்துத் துடைத்தால்தரை பளபளவென்று கிருமிகள் இல்லாமல் இருக்கும்.

குழந்தைகளுக்குப் புதிய ஆடைகள் வாங்கியவுடன்டெட்டால் கலந்த நீரில் அலசிய பிறகேஅணிவிக்க வேண்டும். ரேஷஸ்அரிப்பு போன்ற தொல்லைகள் வர வாய்ப்பிருப்பதால்அதை முன்கூட்டியே தவிர்க்கலாமே!

முடி கொட்டுகிறதாவேப்பமுத்துமிளகுகருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து நல்லெண்ணெயுடன் காய்ச்சவும். இதைத் தலையில் தேய்த்துக் குளித்து வர செழித்து வளரும்.

விருந்தின்போது வெற்றிலைப் பாக்குத் தட்டில் இருக்கும் பாக்குப் பொட்டலங்களைகையால் பிரிக்க முடியாமல் சிலர் திணறுவார்கள். ஒரு சிறிய கத்திரிக்கோலைஅந்தத் தட்டில் வைத்தால் சௌகரியமாக இருக்கும்.

மூலநோயால் அவதிப்படுகிறீர்களாதுத்தி இலையை அரைத்துநெல்லிக்காய் அளவு உருட்டி காய்ச்சிய பசும்பாலில் கலந்து குடியுங்கள். நாற்பது நாள் தொடர்ந்துகாலையில் குடித்து வந் தால் மூலநோய் குண மாகும்.

உலர்ந்த பச்சைப் பட்டாணியை பவுடராக்கவும். ஒரு டீஸ்பூன் மாவில் பன்னீர் கலந்து பேஸ்ட் போலச் செய்து முகத்தில் பூசவும். காய்ந்ததும் கழுவமுகம் பளிச்சிடும்.

சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயில் நன்றாக வதக்கி அரை கப் சாதத்தில் பிசைந்து சூட்டோடு சாப் பிடுங்கள். மலச்சிக்கல்மூலம் போன்றவைக் கட்டுப்படும்.

ஏ.சி.வைத்திருப்பவர்கள் அவ்வப்போது தூசி படிதல்கேஸ் லீக் பிரச்னைகளைக் கவனித்து சர்வீஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஏசி பழுதாவ தோடு விபத்து ஏற்படவும் வாப்புண்டு.

இரவு படுக்கப் போகும் முன்பு கொட்டைகள் நீக்கிய பேரீச்சம் பழங்களைபசும்பாலுடன் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிகுடிக்கவும். நல்ல சக்தி கிடைக்கும். சத்து அதிகமுள்ள பானம் இது.

ஓமத்தை இலேசாக வறுத்துஅத்துடன் அரைப் பங்கு உப்பும்கால் பங்கு வெல்லமும் சேர்த்துகொட்டைப் பாக்களவு காலையிலும்மாலையிலும் சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள் நீங்கும்.

காலை எழுந்தவுடன் இருக்கும் சுறுசுறுப்பு மதியம் இருக்காது. எனவேகாலை எழுந்தவுடன் கடினமான வேலைகளை முடித்து விட்டால்இலகுவான வேலைகளை மதியத்துக்கு மேல் செயலாம்.

சுண்டை வற்றல்மணத்தக்காளி வற்றலை வெயிலில் காயவைத்து எடுத்து வையுங்கள். இதில் உள்ள அதிகப்படியான உப்புமண் உதிர்ந்துவிடும். எண் ணெயில் வறுக்கும்போது அதிக கசடும் வராது.

ஃபேக்ஸ் மூலம் டாகுமெண்ட் வந்தால் அதனை உடனே நகல் எடுத்து வைக்க வேண்டும். ஃபேக்ஸ் எழுத்துக்கள் நாளடைவில் மங்கிவிடும்

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்



பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!

மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டுஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.
சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
பாகற்காய் கசப்பு நீங்கஅரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
நான்கு வெற்றிலைமூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவைதலைபாரம் ஆகியவை குணமாகும்.
சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்குநெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.
சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.
புளியமரப்பூஉப்புமிளகாய்தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடிருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.
விருந்தாளிகளுக்கு டீகாபியை மொத்தமாக ட்ரேயில் வைத்துப் பரிமாறும்போதுகப்புகளுக்குள் ஒரு ஸ்பூனைப் போட்டு எடுத்துச் செல்லுங்கள். டீகாபி தளும்பி சிந்தாது. – கா.அருள்நங்கைதிருநெல்வேலி.
மெழுகுவர்த்தியை ஒரு அகல் விளக்கிலோகுழிவான தட்டிலோ ஏற்றி வைத்துவிட்டுஉடனே அதில் ஒரு திரியையும் போட்டு வையுங்கள். மெழுகுவர்த்தி எரியும்போதுஉருகி வழியும் மெழுகு அனைத்தும் அகலில் நிறைந்துவிடும். மெழுகுவர்த்தி முழுவதும் கரைந்த பிறகு அகலில் உள்ள திரியை ஏற்றினால் அகல் விளக்கைப் போல பிரகாசமாக எரியும். மெழுகும் வீணாகாது. – பா.சுவாதிசிலட்டூர்.
இட்லிதோசைக்கு மாவு அரைத்தவுடன் ஒரு கப் மாவைத் தனியே எடுத்து வையுங்கள். ஒரு கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்துஇந்த மாவில் சேர்த்துப் பிசைந்தால்இன்ஸ்டன்ட் முறுக்கு மாவு ரெடி! இதில் வெங்காயம்பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி சேர்த்துப் பிசைந்துபக்கோடாக்களாகவும் பொரிக்கலாம். – ஆர்.ஸ்ரீ நந்தினிகோவை.
தேங்காய் மூடிகள் அதிகம் சேர்ந்துவிட்டதாஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பிதேங்காய் மூடிகளை அதில் மூழ்கும்படி வைத்துவிடுங்கள். தினமும் இரண்டுவேளை தண்ணீரை மாற்றினாலே நாட்களானாலும் தேங்காய் கெடாமல் அப்படியே இருக்கும். – பிரேமா ராஜன்திருப்பத்தூர்.
பட்டுகாட்டன் புடவைகளை அழுத்தமாக அயர்ன் செய்து மடித்து வைப்பதால்தான்அவை சிக்கிரத்தில் நைந்து விடுகின்றன. அவற்றைத் துவைத்ததும் சிராக மடித்து உள்ளே வைத்து விட்டுஉடுத்தும்போது அயர்ன் செய்தால் வருடக்கணக்கில் உழைக்கும்! – ஆர்.கனிமொழிகந்தர்வக்கோட்டை.
அப்ளிகேஷன் ஃபார்ம்முக்கியமான டாக்குமென்ட் போன்றவற்றைப் பூர்த்தி செய்வதற்கு முன்இரு நகல்கள் எடுத்து,ஒன்றில் பூர்த்தி செய்துஅதைப் பார்த்து ஒரிஜினலில் பூர்த்தி செய்யுங்கள். இதனால்அடித்தல் திருத்தல்பிழை ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன்இன்னொரு ஃபார்முக்காகக் காத்திருப்பதையும் தவிர்க்கலாம். – ஷாலினிஆரணி.
கிரைண்டரில் மசால் வடைக்கு அரைக்கும்போதுஅதில் இஞ்சிமிளகாய் சரியாக அரைபடவில்லையாஅரைக்க வைத்திருக்கும் பருப்பில் ஒரு கைப்பிடி எடுத்து அதில் இஞ்சிமிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால்நைஸாக அரைபட்டு விடும். இதை மாவோடு சேர்க்கலாம். – ஆர்.சௌந்திரவல்லிபுதுச்சேரி.
வாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது.
ஆர்.ராமாத்தாள்சென்னை.
வளையல்கள் குவிந்து கிடக்கின்றன… அவற்றை அடுக்கி வைக்க "ஸ்டாண்ட்இல்லையே என்ற கவலையாவீட்டில் இருக்கும் பழைய வாரப் பத்திரிகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சுருட்டி வைத்தால்செலவே இல்லாமல் நிமிடங்களில் ஸ்டாண்ட் ரெடி! – லஷ்மி சுரேந்திரநாத்சென்னை.
கட்டிலின் கீழே எப்போதும் ஒரு மிதியடியை போட்டு வைத்திருங்கள். படுக்கப் போகும் முன்கால்களை அதில் நன்றாக தேய்த்து சுத்தப்படுத்திக் கொண்டால் மெத்தையும் படுக்கை விரிப்புகளும் அழுக்காகாது. அடிக்கடி படுக்கை விரிப்புகளை துவைப்பதை விட மிதியடியை உதறி விடுவது சுலபம்தானே! – மீனாசங்கரன்மும்பை.
இட்லி மாவில் ஆரம்பித்து பஜ்ஜி மாவுவடை மாவு என அனைத்துமே கடைசி ஸ்பூன் வரை வீணாகக் கூடாது என்று நினைப்பவரா நீங்கள்அவற்றை குழிவான அல்லது அடி வளைவான பாத்திரத்தில் வைத்து விட்டால் போதும். கடைசி கரண்டி வரை எளிதாக எடுத்து உபயோகிக்கலாம். – மீனாசென்னை.
பால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை! அதேபோல நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ரசம் செய்யலாம். அப்பளம் பொரித்த கடாயில் வற்றல் குழம்பையும் மோர் பாத்திரத்தில் தோசை மாவையும் வைக்கலாம். – கவிதா வீராசுவாமிசென்னை.
உங்கள் வீட்டில் வெள்ளை அடித்தாலோ அல்லது பெயிண்ட் அடித்தாலோ ஒரு வாரத்துக்கு அந்த வாசம் போகாது. அந்த அறைகளில் நறுக்கிய வெங்காய துண்டுகளை போட்டு வையுங்கள். பெரும்பாலும் அறைகளின் கதவை மூடி வைத்திருந்தால் ஒரே நாளில் பெயிண்ட் வாடை ஓடியே போய்விடும்!
காலையில் அரக்கப் பறக்க வேலைக்கு செல்பவர்கள்இரவு எவ்வளவு சோர்வாக இருந்தாலும் பாத்திரங்கள் முழுவதையும் தேய்த்து சுத்தப்படுத்தி விடவும். இல்லாவிட்டால் காலையில் பாத்திரம் தேய்ப்பது ஒரு இமாலய வேலையாகத் தெரியும்.
முட்டை கீழே விழுந்து உடைந்து விட்டால்… அதன் மேல் உப்பு போடவும். சிறிது நேரத்துக்குப் பின்னர் துடைத்துவிட்டால் சுத்தம் செய்வது எளிது. வாடையும் இருக்காது.
அசைவ உணவுகளை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து எடுத்த பிறகும்வாசனை போகாது. வாஷிங் லோஷன் இல்லாவிட்டால் பவுடர் போன்றவற்றை ஓவனில் கொஞ்சநேரம் வைத்து எடுங்கள். உணவின் வாசனை போயே போச்…!
விளக்கெண்ணைகடலை எண்ணைஇலுப்பை எண்ணை ஆகிய மூன்றையும் கலந்து விளக்கு ஏற்றினால்நீண்ட நேரம் விளக்கு எரியும். எண்ணையும் குறையாது. ஆடைகளில் எண்ணைக் கறை பட்டு விட்டால் கவலை வேண்டாம். அதன் மீது சிறிது ஆல்கஹாலை தேய்த்துவிட்டு அப்புறம் துவைத்தால் கறை போய்விடும்.
வாஷிங் மெஷினில் துணியை போடும்போதோ அல்லது அழுக்கு துணிகளை வாளியில் உள்ள சோப்பு நீரில் ஊற வைக்கும்போதோ அதனுடன் சிறிதளவு ஷாம்பு சேர்த்தால் துவைக்கும் துணிகள் காய்ந்த பிறகும் கமகம வாசனையாக இருக்கும்.
சமையலறை மேடை மீதும்கப்போர்டுகள் மீதும் அடிக்கடி அழுக்கு ஒட்டிக் கொள்ளும். வாரம் ஒருமுறையாவது நன்றாக துடைத்தால் தான் சுத்தமாக இருக்கும். இதற்கு எளிய வழி உண்டு. சமையலறை மேடை மற்றும் கப்போர்டுகள் மீது பாலிதீன் பேப்பர்களை ஒட்டி வைத்து வாரத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.
பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும். இதை தவிர்க்க அதனுடன் எட்டு முதல் 10 துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து வைத்தால் உறையாமல் இருக்கும்.
தினமும் வெந்நீரில் குளிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்அப்படி என்றால் வெந்நீர் வைக்க மற்ற பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். குக்கரையே காஸ்கட் போடாமல் தண்ணீர் ஊற்றி வைத்தால் சிக்கிரமே சூடாகி விடும். அதேபோல்இளஞ்சூடான நீரில் துணிகளை துவைத்தால் எளிதில் அழுக்கு போய்விடும்.
உங்கள் வீட்டில் இருக்கும் செல்ல நாய் எப்போதும் குரைத்துக் கொண்டே இருக்கிறதாஅப்படி என்றால் ஒரு சின்ன ஐடியா… உங்களுடைய செல்லத்தை டிவி அறையில் உட்கார வையுங்கள். அல்லது அதன் அருகில் ரேடியோவை பாட விடுங்கள். யாரோ பேசுவதாக நினைத்து கொஞ்ச நேரம் குரைத்து விட்டு அமைதியாகி விடும்.
ஒரு பெரிய பக்கெட் தண்ணீரில் "பிளீச்சிங் பவுடரைகரைத்துஅதில்கரை படிந்த பாத்திரத்தைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு சோப்பு பவுடரால் பாத்திரத்தைத் தேய்த்தால் பாத்திரம் சுத்தமாகி விடும்.
அதிக எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரத்தில் நான்கு சொட்டு வினிகரை ஊற்றித் தேய்த்தால் பிசுக்கு போய் விடும்.
பிளாஸ்டிக் பாத்திரத்தில்சூடு இல்லாத சாம்பார்ரசம்பொரியலைப் போட்டு வைத்தால் கூடபிளாஸ்டிக்கில் கரை ஏறும். இதைத் தவிர்க்கபிளாஸ்டிக் பாத்திரத்தின் உள் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவிவிட்டுஉணவு வகைகளைப் போட்டால் கரை ஏறாது.
எலுமிச்சை தோலை வெயிலில் காய வைத்துபொடித்து வைத்துக் கொண்டால்சோப்பு பவுடருடனோசபீனாவுடனோ கலந்து பாத்திரங்களைத் தேய்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். கடலை மாவுடன் கலந்து வைத்துஉடலுக்குத் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தலாம்.
டீகாபி கரை உள்ள பாத்திரங்களில்சிறிதளவு உப்புத் தூளைத் தேய்த்துசிறிது நேரம் ஊற வைத்துப் பின் கழுவினால் கரை நீங்கும்.
முட்டைவெங்காயம்பூண்டு சமைத்த பாத்திரங்களில் ஏற்படும் வாடை நீங்கபாத்திரத்தில் உப்பு போட்டு தேய்த்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
எண்ணெய் வைக்கும் பாத்திரங்களில் பிசுக்கு வாடை நீங்காமல் தொல்லை கொடுக்கும். சிகைக்காய்ப் பொடியால் தேய்த்துக் கழுவிபிறகு எலுமிச்சைத் தோல் பொடியைத் தேய்த்தால்வாடை நீங்கிபாத்திரம் பளபளக்கும்.
பிசுக்கு நிறைந்த பாத்திரத்தைச் சுத்தம் செய்யகடலை மாவு கூட பயன்படும். கடலை மாவை பாத்திரத்தில் தூவிவழித்து எடுத்தால் ஓரளவு பிசுக்கு நீங்கும். அதன் பின்சிகைக்காய் பொடி போட்டு தேய்க்கலாம்.

உங்களுக்கு உதவுவதற்காக இங்கே விரிகிறது '100/100 சூப்பர் டிப்ஸ்'.

சூப்பர் மார்க்கெட்ஷாப்பிங்மால்மல்டிபிளெக்ஸ் காம்ப்ளெக்ஸ் என்று திரும்பிய பக்கமெல்லாம் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்ததுமே... 'ஹையா...என்று குடும்பம் குடும்பமாக புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால்இப்போதெல்லாம் தினம் தினம் தீபாவளி என்றாகிவிட்டது.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் இதுதான் நிலைமை. என்றாலும், ' பர்ச்சேஸூக்கு தனி மரியாதை இருக்கத்தான் செய்கிறது. துணிகள் மட்டுமில்லை... செல்போன்கம்ப்யூட்டர்எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என்று பலவற்றையும் சமயத்தில் வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் கூட்டம் அதிகம் இருக்கிறது. இதற்குக் காரணம்... போனஸ் உள்ளிட்ட சமாசாரங்கள்தான்'' என்கிறார்கள் சென்னைதி.நகர் பகுதியில் பிரபலமான ஷாப்பிங் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள்.

ஷாப்பிங் என்பது சந்தோஷமான சமாசாரம்தான். ஆனால்நம்முடைய தலையில் எப்படி எப்படியெல்லாம் மிளகாய் அரைப்பது என்பதில்தான் பலரும் குறியாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஏமாந்துவிடாமல் ஷாப்பிங் செய்வதுதான் புத்திசாலித்தனம். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவுவதற்காக இங்கே விரிகிறது '100/100 சூப்பர் டிப்ஸ்'.

செல்போன் வாங்கப் போறீங்களா?

1. மொபைலை மாற்றும்போது 'எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது. நல்ல கடைகளாகப் பார்த்து மொபைலை மாற்றுங்கள். உங்களின் பழைய மொபைலுக்கு அவர்கள் சொல்லும் விலைக்கு உடனே தலையாட்டிவிடாதீர்கள். கூச்சப்படாமல் பேரம் பேசினால்உங்களுக்குக் கூடுதல் லாபம் கிடைப்பது நிச்சயம்.

2. பேட்டரியின் லைஃப் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைக் கவனமாகப் பாருங்கள். அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல் இருந்தால்நம்முடைய நேரத்தை சாப்பிடுவதோடு பணியையும் பாதிக்கும். அடிக்கடி சார்ஜ் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால்... உடனே பேட்டரியை மாற்ற வேண்டியதுதான் என்று முடிவு செய்துவிடாதீர்கள். அது மொபைல் போனின் தொழில்நுட்பக் கோளாறாகவும் இருக்கலாம். முறைப்படி செக் செய்து கொள்ளுங்கள்.

3. மொபைல் வாங்கியதுமே.... சிம் கார்டு போட்டுப் பேசிப் பாருங்கள். தெளிவாகசத்தமாகக் குரல் கேட்பது ரொம்ப முக்கியம். என்னதான் எக்ஸ்ட்ரா சமாசாரங்கள் இருந்தாலும்... பேசுவதற்கும் கேட்பதற்கும்தான் மொபைல் போன் என்பதை மறந்து விடாதீர்கள்.

4. மொபைல் போன் வாங்க நினைப்பவர்கள்நேரில் போய் வாங்குவதே மிக மிக நல்லது. பட்டன்கள் எல்லாம் நன்றாக இருக்கிறதாசரியாக இருக்கிறதா என்பதைக் கவனிப்பது முக்கியம். 'ஆகா... வீடியோ இருக்கிறதுஆடியோ இருக்கிறது,போட்டோ எடுக்கலாம்என இத்யாதி இத்யாதிகளில் கவனம் செலுத்திமுக்கியமான சமாசாரங்களை கோட்டை விட்டுவிடாதீர்கள்.

5. மொபைல் போன் வாங்கும் முன் அதைப் பற்றிய தகவல்களை நண்பர்களிடமோஇணைய தளத்திலோ சில நாட்கள் அலசுங்கள். பிறகு, 'இதுதான் எனக்குத் தேவையான போன்என முடிவெடுங்கள். தீர்மானம் செய்துவிட்ட பிறகுகடைக்குச் செல்லுங்கள்.

6. காஸ்ட்லி போன் எனில் மொபைல் போனுக்கான இன்ஷுரன்ஸ் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். மொபைல் போன் கோளாறுதீதிருட்டு என்று எந்த விஷயங்களுக்கெல்லாம் இன்ஷுரன்ஸ் கவரேஜ் இருக்கிறது என்பதை விசாரித்த பிறகு பாலிஸி எடுப்பது நல்லது!

7. நீங்கள் மொபைல் போனை அடிக்கடி பயன்படுத்துபவரா..அப்படியென்றால், 'அம்பாஸடர் மாதிரிஎன்பார்களே... அதுமாதிரி தரமானஎல்லா சூழலையும் தாக்குப் பிடிக்கற மாடல் போன்களைத் தேர்ந்தெடுங்கள். அதாவது 'பேஸிக் மாடல்என்றுகூட சொல்லலாம். 'டச் ஸ்க்ரீன்போன்ற 'ஃபேன்ஸிமற்றும் அதிக சென்ஸிடிவ்வான தொழில்நுட்பங்கள் இல்லாத மாடலாக இருப்பது பயன் தரும். அத்தகைய போன்கள் நீண்ட நாள் உழைக்கவும் செய்யும்.

8. 'இரண்டு சிம்', 'குறைந்த விலைஎன்று சீனா போன்ற வெளிநாட்டு போன்களை வாங்கி விடாதீர்கள். அந்த போன்களில் உள்ள ஆன்டெனா மூலம் ரேடியேஷன்கள் அதிகமாக ரிஸீவாகும். இதுஉடலுக்கு ஊறு விளைவிக்கும்.

சிம் கார்டு ஜாக்கிரதை!

9. செல்போன் வைத்திருக்கிறீர்களா... சிம் கார்டு வாங்கும்போதுஎந்த நிறுவனத்தின் (சர்வீஸ் புரவைடர்) சேவை,உங்களுக்குத் தேவை என்பதை தீர ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். வழக்கமாக எந்தெந்த ஊர்களுக்குச் செல்வீர்களோ... அங்கெல்லாம் கவரேஜ் இருக்கும் சர்வீஸ் புரவைடராக இருப்பதுதான் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.

10. மொபைல் சர்வீஸ் வாங்கும்போது எஸ்.எம்.எஸ்.இன்டர்நெட்கால் சார்ஜ்மாதக் கட்டணம் என அனைத்தையும் கவனியுங்கள். பலர் நாசூக்காக மறைமுகக் கட்டணங்களை வைத்திருப்பார்கள்.

11. கால் சார்ஜ் விஷயத்தில் அதிக கவனம் தேவை. 'நாங்கள்நிமிடத்தில் வசூலிக்கிறோம்...', 'நாங்கள் விநாடிகளில்தான் வசூலிக்கிறோம்...என்றெல்லாம் வகை வகையாக வலை விரிப்பார்கள். வார்த்தைகளில் மயங்கினால் பாக்கெட் பணால்! சர்வீஸ் புரவைடர்களிடம் பேசிஅவர்களின் கால் கட்டணங்களைத் (டேரீஃப்) தெரிந்து கொண்டுஅலசி ஆராய்ந்து எது நமக்கு லாபகரமானது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

12. போனில் இன்டர்நெட் இருக்கிறதுவீடியோ சேட்டிங் இருக்கிறது என்பதற்காக சதா அவற்றையே சுழற்றிக் கொண்டிருந்தால்... சத்தம் இல்லாமல் பைசா கரைய ஆரம்பித்துவிடும். 'அதெல்லாம் நமக்குத் தேவையாஎன்று தெரிந்து,அந்த வசதிகளைப் பெற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

13. ஹலோ ட்யூன்/காலர் ட்யூன் எனப்படும் வசதியை ஏற்படுத்தும் முன்பாக அதனால் என்ன பயன் என்பதை முதலில் உணரவேண்டியது அவசியம். அந்த ட்யூன் உங்களுக்குப் பிடித்த பாடலாக இருக்கலாம். ஆனால்எதிர் முனையில் பேசுபவர்தான் அதைக் கேட்கப்போகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்தப் பாடல் சிலருக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமைந்துவிட்டால்... உங்கள் மீதான அபிப்பிராயத்தில் பேதங்கள் வரலாம்.

ஆடைகளில் அலட்சியம் வேண்டாம்!

14. விழாக் காலம் என்றால்... கடைசிக் கட்டத்தில் ஆடைகள் வாங்கச் செல்லாதீர்கள். கூட்டம் அதிகமாக மொய்க்க ஆரம்பித்துநின்று நிதானித்து தேர்வு செய்ய வசதியில்லாமல் செய்துவிடும். அதோடுநல்ல துணிகளெல்லாம் விற்றும் தீர்ந்திருக்கும். அதேபோல மிகவும் ஆரம்பக் கட்டத்திலும் செல்லக் கூடாது. பழைய ஸ்டாக்குகளைத் தலையில் கட்டிவிடுவார்கள்.

15. 'என்ன வாங்க வேண்டும்?' என்று பட்டியல் போட்டுக் கொண்டு சென்றால் நல்லது. ரெடிமேடு ஆடைகளென்றால் உடுத்திப் பாருங்கள்எல்லா பட்டன்களையும் போட்டுப் பாருங்கள்ஜிப்கள் சரியாக இருக்கிறதா என்று இழுத்துப் பாருங்கள்முக்கியமாக ஆடையை அணிந்து கொண்டு நடக்க முடிகிறதாஅமர முடிகிறதாஎழ முடிகிறதா என்பதையும் கவனியுங்கள். உதாரணத்துக்குஇடுப்பு மிகவும் ¬ட்டான ஆடை என்றால்... அது அந்தப் பாகத்தில் புதுவித பிரச்னையை உண்டாக்கும்.

16. எளிதில் கழற்ற வசதியான ஆடைகளை அணிந்து கொண்டு ஷாப்பிங் செல்லுங்கள். உடைகளைப் போட்டுப் பார்த்து வாங்க இது வசதியாக இருக்கும். இறுக்கமான ஆடைகள்ஷு போன்றவற்றைத் தவிருங்கள். போட்டுப் பார்க்கத் தடை செய்யும் கடைகளைத் தவிர்ப்பதே நல்லது.

17. ஆடைகளை நீங்களே தேடித் தேடி வாங்குவதை விடஉங்களுக்குத் தேவையான ஆடையை சேல்ஸ்மேனிடம் கேட்டு வாங்குவது ரொம்பவே நேரத்தை மிச்சப்படுத்தும். உங்கள் கவனத்தையும் அதிகமாக சிதைக்காது.

18. தனியே போய் ஷாப்பிங் செய்வதே நல்லது. நான்கைந்து தோழிகளுடன் போனால்... உங்களால் எதையும் நிம்மதியாக வாங்க முடியாது. யாராவதுகூட வந்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தால்... கணவருடன் செல்வதுதான் பயனுள்ளதாக இருக்கும் - குழந்தையை வைத்துக் கொள்வதில் ஆரம்பித்து பல விஷயங்களுக்கும்!

19. எவ்வளவு பட்ஜெட் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அந்த பட்ஜெட்டுக்குரிய பொருள் கிடைக்கும் கடைகளுக்கு மட்டும் செல்லுங்கள். கடைகளிலும் அதற்குரிய இடங்களைத் துழாவுங்கள்.

20 ஆடைகள் வாங்கும்போது... தண்ணீரில் அடிக்கடி நனைக்கக் கூடியதாடிரை கிளீனிங் தேவைப்படுமா என்பதையெல்லாம் நன்றாகக் கேட்டுத் தெரிந்து வாங்குங்கள்.

21. நீங்கள் வாங்கிவந்த துணி சாயம் போகிறதா..? 'சரி நம்ம தலையெழுத்துஎன்று விட்டுவிடாதீர்கள். வாங்கிய கடைக்கே திரும்ப எடுத்துச் சென்று புதிய துணியைக் கேட்டு வாங்குங்கள். அவர்களும் சத்தமில்லாமல் மாற்றித் தருவார்கள். அடுத்த தடவை சாயம் போனாலும்அதேபோல மாற்றிக் கேட்கத் தயங்காதீர்கள்.

உள்ளபடியே தள்ளுபடியா?
22. கடையில் நுழைந்தவுடன் முதலில் உங்கள் கண்களில் தெரிவது 'தள்ளுபடிவாசகங்கள். அவசரப்பட்டு உங்கள் பணத்தை அங்கே கொட்டாதீர்கள். எதை முக்கியமாக வாங்க வேண்டுமோ... அதை முதலில் வாங்குங்கள். மீதமிருக்கும் பணத்துக்கு ஏற்ப 'தள்ளுபடிபக்கம் கவனத்தைத் திருப்புங்கள்.

23. 'ஒரு துணி வாங்கும் பணத்தில்இரண்டு துணிகள்... மூன்று துணிகள்... நான்கு துணிகள்என்று ஆசை காட்டினால் மயங்கி விழாதீர்கள். தேவைக்கேற்றதை மட்டும் வாங்குங்கள். தரமான பொருள்நீண்ட நாட்கள் மெருகுடன் இருக்கும்.

24. 'தள்ளுபடியில் வாங்கிய ஆடைகளை மாற்றித் தர இயலாதுஎன்றொரு வாசகத்தைக் கவனித்திருப்பீர்கள். அதுதரமற்ற பொருட்களை உங்களிடம் தள்ளி விடும் தந்திரமாகவும் இருக்கலாம். துணிகள் லேசாகக் கிழிந்திருந்தால்கூடஅதை மாற்றமுடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அப்படி ஒரு பொருளை வாங்க வேண்டுமா... என்றும் முடிவு செய்யுங்கள்.

25. 'அசத்தலான 50% தள்ளுபடிஎன்றவுடன் உற்சாகமாகி, 'பாவம்கடைக்காரர் நஷ்டத்தில் விற்கிறார்என நினைத்து எல்லாவற்றையும் அள்ளி விடாதீர்கள். விற்பனை விலை மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். அடக்க விலை,சேர்க்கப்பட்ட விலை போன்ற இத்யாதி விலைகளெல்லாம் கடைக்காரருக்கே வெளிச்சம்.

புன்னகைக்கும் பொன் நகை!

இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம் (Bureau of Indian Standards), 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட நகைகளுக்கு வழங்கும் முத்திரைதான் '916 ஹால்மார்க்'. ஒரு கிராம் நகையில் 91.6% தூய தங்கம் இருக்கிறது என்பதைத்தான் குறிக்கிறது அந்த 916.தூய தங்கத்தின் அளவைப் பொறுத்து இந்த எண்கள் மாறுபடும் (கேரட்- 375; 14 கேரட்- 585; 17 கேரட்- 708; 18 கேரட்- 750; 21கேரட்- 875; கேரட்- 23 கேரட்- 958). இதையெல்லாம் கவனித்து நகைகளை வாங்குவது நல்லது.

26. நீங்கள் வாங்கும் நகை, 'ஹால்மார்க்முத்திரையுடன் இல்லையென்றால்... 'ஹால்மார்க்முத்திரையைப் போட்டு தரச்சொல்லி வாங்கலாம். ஆனால்நகைகளை அதற்குரிய விற்பனை ரசீதுகளுடன் வாங்குவது முக்கியம்.

27. வாங்கும் நகையின் தரம் எதுவென்று முத்திரைக்கு உள்ளே இருக்கும் தர எண்ணைலென்ஸ் மூலம் தெளிவாகப் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.

28. பெண் குழந்தை என்றால்எதிர்காலத்துக்குத் தேவை என்று நகைகளாக வாங்கிச் சேமிப்பீர்கள். அதைவிடதங்க நாணயங்களாகச் சேமித்தால்... எதிர்காலத்தில்அன்றைய நாகரிகத்துக்கு ஏற்றாற்போல புதிய நகைகளைச் செய்து கொள்ளலாம்.

29. தங்க நகை விலை உயர்ந்து கொண்டே போகும் இந்தக் கால கட்டத்தில்உங்களின் முதலீடுதங்க நகைகளாக இருக்கட்டும். அதுவும் '916 ஹால்மார்க்நகைகளாக இருப்பது மிகவும் புத்திசாலித்தனமானது.

30. தங்க நகை வாங்கும்போதுதரமானதா என்பதைத்தான் முக்கியமாக கவனிக்க வேண்டும். 'பவுனுக்கு இத்தனை ரூபாய் தள்ளுபடிஎன்பதையெல்லாம் பார்த்துதரமற்ற தங்க நகைகளை வாங்கிவிடாதீர்கள். விற்கும்போது உங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.

31. கல் வைத்த நகைகள் வாங்கும்போதுஅந்தக் கற்களின் தரம் பற்றி நன்றாகக் கேட்டறியுங்கள். அவை தங்கத்தின் எடையுடன் சேருமாசேராதா என்பதையும் கவனிப்பது முக்கியம். விலை குறைந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் நகையை,தங்கத்துக்குரிய விலை கொடுத்து வாங்குவது புத்திசாலித்தனமல்ல.

சூப்பர் மார்க்கெட் போவோமா?!

32. தேவையில்லாமல் பணம் செலவாகும் ஒரு இடம்... சூப்பர் மார்க்கெட். என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டுப் பொருட்களை வாங்க வேண்டும். இல்லையென்றால்தேவையில்லாமல் வாங்கிக் குவிப்பீர்கள். அவையெல்லாம் வீட்டு அலமாரியிலும் ஃப்ரிட்ஜிலும் தூங்கிக் கொண்டிருக்கும். அந்தப் பொருள் கெட்டுப்போக ஆரம்பித்தால்உங்களின் நோக்கமே வீணாகிவிடும்.

33. 'பிராண்ட்பார்த்து மயங்கிவிடாதீர்கள். அதே தரத்தில்உள்நாட்டுப் பொருட்கள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கக் கூடும். அதைக் கவனித்து வாங்குங்கள்.

34. அடிக்கடி பயன்படுத்த வேண்டிய பொருட்களை கவனித்து வாங்குங்கள். விற்பவர்களின் வசீகர வார்த்தையில் மயங்கி வாங்கிக் குவிக்கும் வெஜிடபிள் கட்டர்சப்பாத்தி மேக்கர் எல்லாம் பெரும்பாலும் பயன்படுவதில்லை.

35. பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரும்பாலும் உடலுக்கு நல்லவையல்ல. முடிந்தவரை அவற்றைத் தவிர்க்கப் பாருங்கள். அல்லது குறைவாகவே வாங்குங்கள்.

36. ஒரு கடைக்குச் செல்லும்போதுஅந்தக் கடையின் சொந்தத் தயாரிப்புகள் ஏதேனும் இருந்தால்அவற்றை வாங்கி பயன்படுத்திப் பார்க்கலாம். நன்றாக இருந்தால்தொடரலாம். அந்தப் பொருட்கள் பெரும்பாலும் விலை குறைவாக இருக்கும் என்பதைக் கவனிக்கத் தவறிவிடாதீர்கள்.

கம்ப்யூட்டர் வாங்க கவனம் தேவை!

37. கம்ப்யூட்டர் கொஞ்சம் கவனமாக வாங்க வேண்டிய விஷயம். ஒரே மாதிரி செயல் திறன் கொண்ட பல கம்ப்யூட்டர்களை பார்த்தபின் முடிவெடுக்க வேண்டும். எல்லா அப்டேஷன் சமாசாரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மலிவு விலையில் 'ரேம்போன்றவை கிடைத்தால்அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

38. நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முதல் அயிட்டம்ரேம். அதிக திறன் கொண்ட ரேம்உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டை அதிகரிக்கும். கூடவேஆபரேடிங் சிஸ்டம் உங்கள் கம்ப்யூட்டரில் சக்திக்குத் தக்கதாக இருக்க வேண்டியது அவசியம்.

39. உங்கள் தேவையை அந்த கம்ப்யூட்டர் பூர்த்தி செய்யாது எனத் தெரிந்தால்... அதை வாங்காதீர்கள். ஒரு கம்ப்யூட்டரை வாங்குவது என்று முடிவெடுத்துவிட்டால்... கொஞ்ச நேரம் அதைத் தனியாகச் சோதித்துப் பாருங்கள். சேல்ஸ்மேன் அருகில் இருக்கும்போது சிலவற்றை சரியாகச் சோதிக்க முடியாமல் போகலாம்.

40. கம்ப்யூட்டருடன் என்னென்ன இணை பொருட்கள் கிடைக்கின்றன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் அனைத்தும் இல்லாவிட்டால்தைரியமாகக் கேட்டு வாங்குங்கள்.

41. கம்ப்யூட்டரின் வாரண்டிகியாரண்டிரிட்டர்ன் போன்றவவை ரொம்ப முக்கியம். குறிப்பாக முக்கியமான பாகங்கள் பழுதானால் மாற்றித் தரும் கியாரண்டி அவசியம். அந்தக் கம்ப்யூட்டருக்கான சர்வீஸ் சென்டர்கள் உங்களுக்கு அருகில் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். எந்தெந்த நிறுவனங்கள்சிறப்பான சேவை தருகின்றன என்பதையும் விசாரித்து அறியுங்கள்.

42. இரண்டு பிராண்ட் கம்ப்யூட்டர்கள் ஒரேபோல இருந்தும்பயங்கர விலை வித்தியாசம் இருந்தால் நன்றாகக் கவனித்து வாங்கவும். புராஸசர்மெமரிபிராண்ட் போன்றவை விலை வித்தியாசத்துக்குக் காரணமாக இருக்கலாம். அவையெல்லாம் திருப்தியாக இருக்கும்பட்சத்தில்விலை அதிகம் என்றாலும்கூட வாங்கலாம்.

43. பத்திரிகை விமர்சனங்கள்தயாரிப்பாளர் விமர்சனங்கள்பயன்பாட்டாளர் விமர்சனங்கள் மூன்றும் வேறு வேறு விதங்களில் கம்ப்யூட்டரை அலசும். எனவேஒவ்வொரு பிராண்ட்டுக்கும் இந்த மூன்று விதமான விமர்சனங்களையும் படித்துவிட்டு முடிவெடுங்கள்.

டிஜிட்டல் கேமரா டிஷ்யூம்!

44. கேமரா வாங்குவது ஒரு கலை. கேமரா வாங்கும் முன் பல விஷயங்களில் நீங்கள் தெளிவு கொள்ளவேண்டும். முக்கியமாக புகைப்படம் எடுப்பது உங்களுக்கு கலையாவேலையாபொழுதுபோக்காவீட்டு உபயோகத்துக்கா என்பதில் தெளிவு வேண்டும். சாதாரணத் தேவைக்கு எனில் 'ஆட்டோமேடிக்கேமராவே போதும்.

45. டிஜிட்டல் கேமரா என்றதும், 'எத்தனை மெகா பிக்ஸல்?' என்பதுதான் எல்லோரும் முதலில் கேட்கும் கேள்வி. ஆனால்,அது அவ்வளவு முக்கியமில்லை. நீங்கள் படங்களை 'சாதாரணஅளவில் பிரின்ட் போடப் போகிறீர்களெனில் மெகா பிக்ஸல் கேமராக்களே கனகச்சிதம். மிகப் பெரிய 'புளோ-அப் சைஸ்படங்களாக பிரின்ட் செய்ய வேண்டுமெனில் அதிக மெகா பிக்ஸல் கேமராக்கள் வாங்கலாம்.

46. பேட்டரி விஷயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். அதிகம் 'இண்டோர்போட்டோக்கள் எடுக்கும் கேமராவில் ஃப்ளாஷ் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு அதிக பேட்டரிகள் இருப்பது நல்லது. சார்ஜ் செய்து பயன்படுத்தக் கூடிய பேட்டரிகள் வாங்குவது அவசியம்.

47. கேமராவுடன் எல்லா உபபொருட்களும் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு கேமரா வாங்க முடிவு செய்தபின் அதன் விலை எங்கே குறைவாக இருக்கிறதுஎங்கே இலவசமாக கவர்பேட்டரிமெமரிகார்டு போன்றவை தருகிறார்கள் என்று பார்த்து வாங்குங்கள்.

48. சாதாரண தேவைகளுக்கு 'எஸ்.எல்.ஆர்.ரக கேமரா வகைகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் பயன்படுத்தக் கூடிய'பாயின்ட் அண்ட் ஷுட்கேமராக்களே அன்றாடத் தேவைகளுக்கு இலகுவானது.

49. கேமராவின் 'ஸும்' (zoom) வசதியைப் பார்க்கும்போது 'ஆப்டிகல் ஸும்அதிகம் உள்ளதைப் பார்த்து வாங்க வேண்டும். டிஜிட்டல் ஸும் அதிகம் பயன் தராது.

50. அளவில் சிறியதாக... ஸ்டைலிஷாக இருக்கவேண்டும் என்று கணக்குப் போட்டு கேமரா வாங்காதீர்கள். கையில் பிடித்து எடுப்பதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதை முக்கியமாக வைத்து வாங்குங்கள். அத்தகைய கேமராக்கள்தான் குடும்பத்திலுள்ள அனைவரும் பயன்படுத்த வசதியாக இருக்கும்.

51. 'இமேஜ் ஸ்டெபிலைஸேஷன்எனப்படும் வசதியுள்ள கேமராவா என்று பார்த்து வாங்குங்கள். அது இருந்தால்... போட்டோ எடுக்கும்போது கேமரா கொஞ்சம் அசைந்துவிட்டாலும்படம் தெளிவாக வரும்.

பாதுகாப்பான ஃபர்னிச்சர்!

52. ஃபர்னிச்சர் வாங்கச் செல்லும் முன் ஒவ்வொரு அறைக்கும் என்னென்ன தேவைஎன்ன அளவில்என்ன தரத்தில்,என்ன வடிவத்தில்என்ன நிறத்தில் தேவை என்பதை ஓரளவுக்கு முடிவு செய்து விட்டு செல்லுங்கள். என்ன விலையில் வாங்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானித்து அதற்கேற்ற மரத்தையோஉலோகத்தையோதரத்தையோ முடிவு செய்யலாம். பெரிய கடைகளில் சின்னதாக தோன்றும் சோஃபாக்கள்... நமது வீட்டுக்கு வந்ததும் அறைகளை முழுமையாக ஆக்கிரமித்துவிடும் என்பதை மனதில் கொள்ளவும்.

53. வீட்டை அடைப்பது போல ஃபர்னிச்சர்களை வாங்கி நிறைத்து வைக்காதீர்கள். மிகத் தேவையானதை மட்டுமே வாங்குங்கள். பழையவற்றை விற்பனை செய்வது கடினம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

54. மாதத்தின் துவக்கத்தில் பர்னிச்சர் வாங்குவதைவிடகடைசியில் வாங்குவது நல்லது. பெரும்பாலான கடைகள் மாதம் எவ்வளவு விற்பனை என கணக்கு காட்ட வேண்டியிருக்கும். எனவேகடைசி வாரத்தில் கொஞ்சம் மலிவு விலையில் அல்லது நியாயமான விலையில் பொருட்களைத் தள்ளிவிட பார்ப்பார்கள். அது நமக்கு லாபகரமானதாக இருக்கும்.

55. கட்டில் வாங்கப் போகிறீர்கள் எனில்எத்தனை பேருக்கான கட்டில் என்பதைவிடஎந்த அறையில் அதைப் போடப்போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து வாங்குவது நல்லது.

56. சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் விலையுயர்ந்த லெதர் சோஃபா போன்றவற்றை வாங்கும்போது கவனம் தேவை. குழந்தைகள்... கத்திபென்சில்பேனா என எதை வைத்து வேண்டுமானாலும் கிழிக்கக் கூடும். அதேபோல,குழந்தைகளுக்கான கட்டில் அல்லது மேஜை போன்றவை வாங்கும்போது பாதுகாப்பை அதிகமாக கவனத்தில் கொள்ளுங்கள். ஆணிகள்கழன்று விழும் பகுதிகள் போன்றவை இல்லாத பொருட்களாக வாங்கவேண்டும். கட்டில்,குழந்தைகளுக்குரிய உயரத்தில்வடிவத்தில் இருக்கவேண்டும்.

57. உங்கள் பட்ஜெட்டுக்கு இதுதான் கிடைத்தது என்று எதையாவது வாங்குவதைத் தவிருங்கள். ஃபர்னிச்சர் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டியவை என்பதால் பயன் தரக் கூடியதை மட்டுமே வாங்குங்கள்.

58. சோஃபாவில் உட்கார்ந்து பார்த்து உங்களுக்கு சரியாக இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே வாங்குங்கள். அதி அற்புதமான சோஃபாக்கள்கூட சிலருக்கு உட்கார்ந்து எழுந்துகொள்ள சிரமத்தைக் கொடுப்பவையாக இருக்கும்.

ஏ.சி. வாங்குவோர் கவனிக்கவும்!

59. உங்கள் அறையின் அளவுக்கு ஏற்பஏ.சி. மெஷினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரிய அறை என்றால்அதற்கென குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுள்ள மெஷினை வாங்காமல்விலை குறைவாக இருக்குமே என்று குறைவான அளவுள்ள மெஷினை வாங்கினால்... அது கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். விரைவிலேயே மெஷின் கெட்டும் போகும். அதேபோலசிறிய அறைக்குகுறிப்பிட்டதைவிட கூடுதல் அளவுள்ள மெஷினை வாங்கினால்அறை விரைவில் குளிர்ந்து,அவஸ்தையைக் கொடுப்பதாக அமைந்துவிடும்.

60. அறையில் எத்தனை ஜன்னல்கள் உண்டுஃபால்ஸ் சீலிங் உண்டாஅறைக்கு மேல் மொட்டை மாடியா... போன்ற பல விஷயங்களை அலசி உங்கள் ஏ.சி-யின் அளவை முடிவு செய்யுங்கள்.

61 'ஃபில்ட்டர்'களை எளிதாகச் சுத்தம் செய்யக் கூடிய ஏ.சி. மெஷின்களை வாங்குங்கள். அதுதான் சொந்தமாக நீங்களே பராமரிக்க வசதியாக இருக்கும்.

62 'எனர்ஜி சேவர்என்ற பெயரில் வரும் ஏ.சி. மெஷின்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். தொடர்ச்சியாக மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். 'எனர்ஜி ஸ்டார்அதிகம் இருந்தால் அதிக மின்சாரம் மிச்சமாகும்.

63. ஏ.சி. மெஷின் கன்ட்ரோல்கள் எளிதில் இயக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இருளிலும் எத்தனை டிகிரி குளிர் என்பதை டிஜிட்டலில் காட்டும் மெஷின் என்றால் வசதியாக இருக்கம். அதேபோல 'டைமர்உள்ளிட்ட சமாசாரங்களும் இருக்கிற மெஷினென்றால்... அதிகம் பயனுள்ளதாக இருக்கும். ரிமோட்டும் இருளிலும் ஒளிரக் கூடிய வகையில் இருப்பது நல்லது.

64. விண்டோ ஏ.சி. மெஷின் அதிகம் சத்தமிடும். சத்தம் தவிர்க்க நினைப்பவர்கள் ஸ்பிலிட் ஏ.சி. வாங்குவதே நல்லது.

65. ஏ.சி. மெஷினுக்கு 'வருட சர்வீஸ்வாங்கி வைப்பது நல்லது. தேவையான இடைவெளியில் சர்வீஸ் செய்வது மெஷினின் ஆயுளை நீட்டிக்கும்.

66. நீளமான வராண்டா போன்ற அறை எனில்அதன் குறுகிய சுவரில் ஏ.சி. மெஷின் மாட்டும் போது, 'டர்போ ஆப்ஷன்'உள்ள மெஷினாக இருப்பது நல்லது. அதுதான் காற்றை அறை முழுதும் வீரியத்துடன் செலுத்தும்.

67. ஏ.சி. போன்ற பொருட்களை வாங்கும்போது குளிர் காலத்தில் வாங்குங்கள். குழம்பவேண்டாம்... பெரும்பாலான பொருட்கள் 'சீஸன்முடிந்தபின்பு வாங்குவதுகுறைந்த விலைக்கு உத்தரவாதமாக இருக்கும்.

வாஷிங்மெஷின் - வெளுத்துக்கட்டுங்க!

68. வாஷிங் மெஷின் வாங்கும் முன்முக்கியமாக வீட்டில் வாட்டர் சப்ளை எப்படி இருக்கிறது. எத்தனை பேருக்கு மெஷின் பயன்படப் போகிறது என்பதை முடிவு செய்வது நல்லது.

69. எப்போதும் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் எனில்ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின் வாங்கலாம். இல்லையேல் செமி ஆட்டோமேடிக் வாங்குவது நல்லது.

70. 'எனர்ஜி சேவர்ஸ்டார் இருக்கும் மெஷின் வாங்கினால் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.

71. முன்பக்கம் வழியாகத் துணிகளைப் போடும் 'ஃபிரெண்ட் லோடிங்மெஷின்அதிக விலைகொண்டதாக இருக்கும். ஆனால்தண்ணீரும் மின்சாரமும் குறைவாகவே தேவைப்படும். அதிகம் சத்தமும் இருக்காது. துணிகளைக் கொஞ்சம் மென்மையாகத் துவைக்கும்!

72. எத்தனை ஆண்டுகளுக்கு ஃப்ரீ சர்வீஸ்கொள்ளளவு என்னஎத்தனை கிலோ எடைக்கு துணிகள் என்பதையெல்லாம் பாருங்கள். முழுக்க வாஷிங் மெஷினை மட்டும் நம்பியிருந்தால்... அதிக கொள்ளளவு உள்ள மெஷினை வாங்கலாம்.

'ஆன்லைன்ஷாப்பிங்!

விழாக்காலத் 'தள்ளுமுள்ளு'களிலிருந்து தப்பித்து ஷாப்பிங் செய்ய எளிய வழி 'ஆன்லைன் ஷாப்பிங்'. இணையத்தில் உங்களுக்குத் தேவையான பொருட்களின் விலைகளை ஒப்பீடு செய்து உங்களுக்குத் தேவையானவற்றை வீட்டி லிருந்தே ஆர்டர் செய்யலாம். நேரமும் மிச்சம்... அலைச்சலும் மிச்சம்.

73. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது தேவையானதை மட்டும்தான் வாங்குவோம். கண்ணில் படுவதெல்லாம் வாங்கிக் குவிக்க மாட்டோம். அதனால் பணமும் மிச்சம். போக்குவரத்து செலவும் மிச்சம்.

74. என்னென்ன வாங்குகிறோம் எனும் பட்டியல் எப்போதும் நமது 'கிரெடிட் கார்ட்ஹிஸ்டரியில் இருக்கும். 'பணமெல்லாம் எப்படிப் போச்சுனு தெரியலையே!என குழம்ப வேண்டியிருக்காது.

75. யாருக்காவது விழாக்கால பரிசு கொடுக்க விரும்பினால்ஆன்லைனில் ஆர்டர் செய்து விலாசத்தைக் கொடுத்தால் போதும். அவர்களுடைய வீட்டுக்கே உங்கள் பெயரில் பொருள் சென்று சேர்ந்து விடும். கொடுப்பவருக்கு ஈஸி,வாங்குபவருக்கு சர்ப்ரைஸ்.

76. இணையத்தில் ஆர்டர் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. முக்கியமானது இணைய தளம் நம்பிக்கையானதாஅது செக்யூர்டு சைட்தானா (பாதுகாப்பான தளம்... அதாவது, 'SSL - Secure Sockets Layer' என்றால்... பிரவுசரில் கீழ்ப்பாகத்தில் பூட்டு போன்ற படம் வரும்) என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

77. இணைய தளத்தில் 'ரிஜிஸ்டர்செய்ய வேண்டி இருந்தால்உங்கள் பாஸ்வேர்ட் ரொம்ப ஸ்டாரங்காக இருக்கட்டும். யாரும் ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட் முக்கியம். மாமன் பேருமச்சான் பேருபோன் நம்பர்பிறந்த நாள் எல்லாம் உதவாது.

விளையாட்டா எடுத்துக்காதீங்க!

78. குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கும்போது அந்தந்த வயதினருக்கு உரியதையே வாங்குங்கள். ஐந்து வயது குழந்தைக்குரிய பொருள்இரண்டு வயது குழந்தைக்கு ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

79. விளையாட்டுப் பொருளில் காந்தப் பொருட்கள் இல்லாமல் இருப்பதைக் கவனித்து வாங்குங்கள். சிறுசிறு காந்தப் பொருட்களை விழுங்கிவிட்டால் பெரும் ஆபத்து. அதோடுபிளக் பாயின்ட் போன்ற எலெக்ட்ரிக்கல் கனெக்ஷன் உள்ள இடங்களுக்கு அருகில் கொண்டு செல்லும்போதுஅதன் மூலம் ஷாக் ஆபத்துக்கும் வாய்ப்பிருக்கிறது.

80. பலூன் வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது. சாதுவாக இருக்கும் பலூன்வெடித்துவிட்டால்... மிகவும் ஆபத்தைக் கொண்டு வரும். கண்ணுக்குத் தெரியாத துகள்களாககூட வெடிக்கும் பலூன்வாய் மற்றும் மூக்கு வழியாக உடலுக்குள் ஊடுருவிவிடும். இதனால் பல்வேறு உபாதைகள் ஏற்படலாம்.

81. ஒரு பொம்மையில்சிறுசிறு பாகங்கள் அதிகம் இருக்கிறதென்றால் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும். அந்தப் பொம்மை உடையும்போதுசிறு பாகங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம்.

82. 'குறைவான விலைக்குக் கிடைக்கிறதேஎன்று சீன தயாரிப்பு பொம்மைகளை வாங்க வேண்டாம். தரமற்ற பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் அந்தப் பொம்மைகளை கையில் வைத்திருப்பதே ஆபத்துதான். சமயங்களில் குழந்தைகள் அவற்றைக் கடிக்கும்போது ஆபத்து அதிகரிக்கும்.

டெலிவிஷன்... பவர்விஷன்!

83. டி.வி. வாங்கப் போகிறீர்களா... என்ன டி.வி. என்பதை முதலில் முடிவு செய்வதைவிடஅதை எந்த அறையில் வைக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். அறையின் அளவுக்குத் தக்க டி.வி-யை வாங்குவதுதான் நல்லது. சின்ன அறையில் பெரிய டி.வி-யும்பெரிய அறையில் சின்ன (போர்ட்டபிள்) டி.வி-யும் வைத்தால்பார்வைக்கு நன்றாக இருக்காது என்பதோடு உங்களின் கண்களுக்கும் பிரச்னையை ஏற்படுத்தும்.

84. டி.வி-யைப் பயன்படுத்தி வீடியோ கேம்ஸ் விளையாடும் வசதியும் சமீபகாலமாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. எனவே,குழந்தைகளை மனதில் வைத்துவீடியோ கேம்ஸ் வசதியுள்ள டி.வி-யாக வாங்கிவிட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

85. டி.வி.டி. பிளேயர்வீடியோ கேம்ஸ்ஹோம் தியேட்டர் என நாளுக்கு நாள் தொழில்நுட்ப முன்னேற்றம் வந்து கொண்டே இருப்பதால்லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் வகையில் இன்புட்அவுட்புட் வசதியுள்ள டி.வி-யாக இருப்பது நல்லது.

86. நம்பிக்கையான பிராண்ட்அதிக வாரண்டி/கியாரண்டி தரும் நிறுவனத்தின் டி.வி-க்கு முன்னுரிமை தரலாம்.

87. டி.வி-யின் ரிமோட்எளிதாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பது நல்லது. ஒருவேளை ரிமோட் வேலை செய்யாமல் போனால்டி.வி. பெட்டியில் உள்ள சுவிட்சுகளைப் பயன்படுத்த நேரிடலாம். எனவேதேவையான சுவிட்சுகள் டி.வி-யிலும் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்.

88. நீங்கள் எந்த பிராண்ட் டி.வி-யை வாங்கினாலும்அதற்குரிய சர்வீஸ் சென்டர்கள் உள்ளூரிலேயே இருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொண்டு வாங்குங்கள்.

உஷார்... உஷார்...

89. ஷாப்பிங் முடிந்தவுடன் உங்கள் 'பில்'லை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறு இருந்தால் உடனடியாகச் சரி செய்வதுதான் நல்லது.

90. ஒரு பொருளை வாங்கினால்அது சம்பந்தமான கடிதங்கள்ரசீதுகள்கியாரண்டி/வாரண்டி கார்டுகள் எல்லாவற்றையும் அந்தப் பொருள் உங்களிடம் இருக்கும் வரை சேமித்து வையுங்கள். பொருட்கள் பழுதடைந்திருந்தால் அதுதொடர்பான நடவடிக்கைகளுக்கு கட்டாயம் பில்கள் தேவைப்படும்.

91. கியாரண்டி மற்றும் வாரண்டி என்றால் என்ன என்பதே பலருக்கும் குழப்பமான விஷயம். கியாரண்டி என்றால், 'குறைபாடுள்ள பொருளை மாற்றித் தருவதற்கு நாங்கள் உத்தரவாதம்என்று சம்பந்தபட்ட நிறுவனம் சொல்வதாக அர்த்தம். இதுவே வாரண்டி என்றால், 'குறைபாடினை சரிசெய்து கொடுப்போம்என்ற உத்தரவாதத்தைத் தருவதாக அர்த்தம்.

92. பொருட்களை வாங்கும்போது 'கியாரண்டி கார்ட்பார்க்க வேண்டியது அவசியம். வாங்கிய பொருளை எப்படி இயக்குவதுஎப்படிப் பராமரிப்பது போன்ற விஷயங்களைக் கேட்டறியுங்கள்.

93. வாங்கிய பொருளில் ஏதேனும் குறை இருந்தால் நீங்களே மெக்கானிக்காக மாறி களத்தில் குதிக்காதீர்கள். கடைக்காரருக்கோசர்வீஸ் சென்டருக்கோ தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் பொருளைப் பிரித்தால் அதுதான் சாக்கு என''ஸாரி... ஓப்பன் பண்ணிட்டீங்க. அதனால கியாரண்டி கிடையாதுங்க'' என்று மிளகாய் அரைத்துவிடுவார்கள்.

94. 'இப்போது புதிய கைப்பிடியுடன்...', 'இப்போது புதிய ஸ்பீக்கருடன்...இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டு வரும் பழைய பொருட்களின் புதிய அவதாரங்களை அதிகமாக ரசித்தால்... பர்ஸூக்குத்தான் ஆபத்து.

95. 'பதினைந்து பொருட்கள் வெறும் 2,000 ரூபாய்க்குஎன்று கூவும் விளம்பரங்களை கண்டு மயங்காதீர்கள். அத்தனை பொருட்களை அள்ளிக் கொண்டு வந்துவிளம்பரமும் செய்து கொடுக்கிறார் என்றால்... நிச்சயமாக அதைவிட மிகவும் குறைவான விலையில்தான் அவை வாங்கப்பட்டிருக்கும் என்பதுதானே உண்மை!

96. ஒரு சேலை வாங்கினால் மூக்குத்தி இலவசம்பிளாஸ்டிக் வாளி இலவசம் என்று விற்பதைக் கொஞ்சம் கழுகுக் கண்களுடன் கவனியுங்கள். பிளாஸ்டிக் வாளியின் அழகைப் பார்த்துவிட்டுமோசமான சேலையை வாங்கிவிடப் போகிறீர்கள்!

97. நுகர்வுப் பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ.விவசாயப் பொருட்களுக்கு அக்மார்க்தங்க நகைகளுக்கு ஹால்மார்க்,பட்டுச்சேலைகளுக்கு சில்க் மார்க் என பார்த்து வாங்குங்கள். விலை கூடினாலும் தரம் நன்றாக இருக்கும். சமயங்களில் இந்த முத்திரைகளே போலியான பொருட்களிலும் இடம் பெற்றிருக்கும் உஷார்.

98. தேவைகளைக் குறைப்பதுதேவையற்றவற்றை நிராகரிப்பதுபொருட்களை திரும்பத் திரும்ப பயன்படுத்துவது,ரீசைக்கிள் பண்ணுவது போன்ற விஷயங்களைப் புரிந்து கொண்டால்... நீங்கள் தலைசிறந்த கன்ஸ்யூமர்!

99. ஃபேன்ஸியாக பாட்டில்களிலோஅழகிய கவர்களிலோ விலை கூடுதலாக வைத்து விற்கப்படும் பொருட்கள்தான் தரமானவை என்று நினைக்காதீர்கள். உண்மையில் ஆரோக்கியமான பொருட்கள்பகட்டான பேக்கிங் இல்லாமல் குறைந்த விலையிலேயே கிடைத்துவிடும்.

100. வீட்டிலேயே திருப்தியாக சாப்பிட்ட பின்பு ஷாப்பிங் கிளம்புங்கள். இல்லையேல் கண்ட கண்ட ஸ்நாக்ஸ்குளிர்பானம்... அதுஇது என தேவையற்ற செலவு உங்கள் தோளில் வந்தமரும்.