Thursday, 25 September 2014

உலகின் முக்கிய செய்தி , திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்

செய்திகளை தெரிந்து கொள்வதில் சில முன்னனி நிறுவனங்கள் மட்டுமல்லாது திருவாளர் பொது ஜனமும் ஆவலாகவே உள்ளனர் , பல செய்தி தளங்களில் வரும் செய்திகளை காட்டிலும் உலகின் முக்கிய செய்தி சேனல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காட்ட ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் முதல் வெளிநாட்டு செய்தி சேனல்கள் வரை அனைவரும் செய்திகளை உடனடியாக தங்கள்
தொலைக்காட்சியில் முதன் முதலில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதற்காக பல செய்தி சேனல்களை பார்த்து வருவதுண்டு ஆனால் ஆன்லைன் மூலம் கடந்த நிமிடம் நடந்த செய்திகளை உடனுக்கூடன் எடுத்து சொல்ல உலகின் பல செய்தி சேனல்கள் உள்ளது இவை அனைத்தையும் நாம் ஒரே இடத்தில் இருந்து இலவசமாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://wwitv.com
இத்தளத்திற்கு சென்று நாம் உலகின் முக்கிய செய்தி சேனல்களின் செய்திகள் அனைத்தும் சேமிக்கப்பட்டு காட்டப்பட்டிருக்கும் இதில் எந்த செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை சொடுக்கி எளிதாகசெய்தியின் முழுவிபரமும் அறிந்து கொள்ளலாம்.இணையத்தில் உலாவந்து கொண்டிருக்கும் நாம் சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து உலகின் முன்னனி செய்தி சானல்களில் செய்திகளை முழுமையாக தெரிந்து கொள்ளலாம், தொலைக்காட்சி மற்றும் செய்தித்துறை மற்றும் நம் அனைத்து நண்பர்களுக்கும்  இந்தத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

No comments:

Post a Comment