Friday, 5 September 2014

பிளாக்கின் உள்ளேயே படங்களை திறக்க டிப்ஸ்

பிளாக்கர்தான் வலையுலகில் மிக அதிகமாக உபயோகபடுத்தபட்டு வருகிறது. அதில் மேன்மேலும் பல வசதிகளை உட்செலுத்தி அதனை மேலும் மெருகூட்டுவது சுவையான அனுபவம்தான்.

பிளாக்கரில் ஒரு இடுகையில் இடப்பட்ட படத்தை பெரிதாக காண வேண்டும் என்றால் அந்த படத்தை கிளிக் செய்ய வேண்டும். அந்த படம் புதிய பக்கத்தில் திறக்கும். மீண்டும் இடுகைக்கு திரும்ப இணைய உலாவியில் உள்ள "Back" பட்டனை அழுத்தி மீண்டும் இடுகை பக்கத்துக்கு வரவேண்டும். இடுகை பக்கம் மீண்டும் திறக்க நேரம் எடுக்கும். இது சலிப்பான வேலைதான். இதற்கு பதிலாக நாம் இடுகை பக்கத்தில் இருக்கும் போது அதனுள்ளாகவே படம் திறந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும். பார்வையாளருக்கும் நல்ல அனுபவமாக இருக்கும்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியாதவர்கள் இந்த இடுகையில் இடப்பட்டுள்ள படங்களை கிளிக் செய்து பாருங்கள். வித்தியாசம் தெரியும். இந்த வசதியினை பிளாக்கரில் செய்வது எளிதான வேலைதான். ஒரு சிறிய ஜாவா ஸ்கிரிப்ட் நிரல் இந்த வேலையை செய்யும்.

கீழே உள்ள ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை காப்பி செய்து உங்கள் பிளாக்கர் டெம்ப்ளெட்டில் பேஸ்ட் செய்ய வேண்டும்.

1. கீழே உள்ள ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை காப்பி செய்து கொள்ளுங்கள்.



2. உங்கள் பிளாக்கரின் Dashboard -ல் Layout --> Edit HTML பக்கத்திற்கு செல்லவும் .
பின்பு அங்கு தோன்றும் Code -ல்  என்ற வார்த்தையை தேடவும். அதன் கீழே நீங்கள் காப்பி செய்து வைத்துள்ள ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை பேஸ்ட் செய்து விடவும்.
இப்போது SAVE TEMPLATE செய்து விடவும்.
[தெளிவாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும் ]


அவ்வளவுதான். வேறு எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை. இனி உங்கள் இடுகை பக்கத்தை Refresh செய்யவும். அதில் உள்ள படங்களை கிளிக் செய்து பார்க்கவும். இந்த இடுகையில் உள்ளது போன்றே தோன்றும்.

இதை செயல்படுத்துவதில் உங்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தால் தயங்காமல் பினூட்டத்தில் கேட்கவும். நிவர்த்தி செய்து வைக்கிறேன்.

No comments:

Post a Comment