Thursday, 2 October 2014

மொபைல் போன்

மொபைல் போன்

நீங்கள் ஒட்டுகேட்கப்படுகிறீர்கள்

இன்டெர்நெட் மூலம் தொலைபேசி யில் பேச முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஓஐபி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அந்த வசதியை நீங்கள் பயன்படுத்தியும் வரலாம். ஆனால் நீங்கள் இன்டெர் நெட்டில் பேசும் போது ஒட்டுகேட்கப் படும் சாத்தியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
ஒட்டுகேட்கப்படுகிறது என்றவு டன் நாம் என்ன அத்தனை பெரிய ஆளாக ஆகிவிட்டோமா என்றோ, நாம் பேசுவதை யார் ஒட்டுகேட்டு, என்ன செய்யப்போகிறார்கள் என்று அச்சப்படவோ தேவையில்லை.
இப்படி ஒட்டுகேட்பது தனிநபரோ, அமைப்போ அல்ல, ஒரு சாப்ட்வேர். அந்த சாப்ட்வேரின் நோக்கம், நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளவது அல்ல.
நீங்கள் பேசும் விஷயம் தொடர் பான பயனுள்ள தகவல்களை விளம்பரம் மூலம் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிப்ப துதான் அந்த சாப்ட்வேரின் நோக்கம்.
இன்டெர்நெட் உலகை இப்போது விளம்பரங்கள்தான் இயக்கி வருகிறது. மாமூலான விளம்பரங் களாக இல்லாமல், ஒருவருடைய கவனத்தை கவரக் கூடிய, மிகவும் பொருத்தமான விளம்பரங்கள் இணையவாசிகளின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
கூகுல் தனது விளம்பர திட்டத்தின் மூலம் இந்த வகை விளம்பரங்களை பிரபலமாக்கியது. தற்போது இன் டெர் நெட் முழுவதும் இத்தகைய விளம்பரங்களே கோலோச்சுகிறது.
உள்ளடக்கத்துக்கு பொருத்தமான விளம்பரங்களாக இவை அமைவது தான் விசேஷம்.
உதாரணமாக இன்டெர்நெட்டில் நீங்கள் எந்தவகையான தகவல் களை தேடுகிறீர்களோ அதன் உள்ளடக்கம் சார்ந்த, விளம்பர இணைப்புகள் மட்டுமே முன் வைக்கப்படும்.
அநேகமாக அது உங்களது ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக் கும். பல நேரங்களில் அது பயனுள்ள தகவலுக்கான இணைப்பாகவும் அமையும்.
எப்படி இருந்தாலும் நிச்சயம் உங்களது பார்வையை உருத்தும் வகையில் அந்த விளம்பரம் அமைந்து இருக்காது. அதாவது நீங்கள் தேவை யில்லை என்று நினைக்காத அளவுக்கு அந்த விளம்பரம் இருக்கும்.
இதே உத்தியை தற்போது இன்டெர் நெட் மூலம் போன் பேசுவதில் நிறுவனம் ஒன்று கொண்டுவந்து இருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பட்டிங் மீடியா என்னும் அந்த நிறுவனம் இன்டெர்நெட் தொலைபேசி உரை யாடல்களை ஒட்டுகேட்கக் கூடிய சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது.
பேசுவதை உணரும் தன்மை கொண்ட இந்த சாப்ட்வேர், உரையாடலின் தன்மையை வைத்து அதற்கு இணையான விளம்பரங் களை கம்ப்யூட்டர் திரையில் எட்டிபார்க்க வைக்கும்.
உதாரணமாக ஒருவர் தனது நண்பரோடு விருந்து சாப்பிட செல்வது பற்றி பேசினார் என்றால், கம்ப்யூட்டர் திரையில் மிகச்சிறந்த ரெஸ்டாரன்டுக ளின் விளம்பரம் தோன்றும்.
நண்பர் ஊருக்குப்போவது பற்றி பேசினால் விமான சர்வீஸ்களின் விளம்பரம் அல்லது சுற்றுலா நிறுவனங்களின் விளம்பரம் எட்டிப் பார்க்கும்.
இதே போல மருத்துவம் தொடர் பான உரையாடல் நடைபெற்றால் மருத்துவ இணைய தளங்கள் விளம்பரங்களாக வந்து நிற்கும்.
இப்படியாக பேசப்படும் உள்ளடக்கத் தின் தன்மையை வைத்து அதற்கேற்ற விளம்பரங்கள் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்த விளம்பரங்கள் மிகவும் பயனுள்ள தாக இருக்க வாய்ப்பு உண்டு.
தொலைபேசியில் நாம் பேசிக் கொண்டிருக்கும் போது, நமக்கு தேவைப்படக் கூடிய தகவல்கள் கேட்காமலேயே திரையில் தோன்றி னால் நன்றாகத்தான் இருக்கும்.
உதாரணமாக ஊருக்கு செல்கி றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஊரில் எங்கே தங்குவது என தெரியாமல் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அப்போது அந்த ஊரில் இருக்கக் கூடிய ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் பற்றிய தகவல் திரையில் தோன்றினால் சிறப்பாகத் தானே இருக்கும். போனில் பேசிக் கொண்டே கிளிக் செய்தால் தேவை யான விவரங்களை பெற்று விடலாம்.
இப்போதைக்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் சோதனை முறையில் இந்த சாப்ட்வேர் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பட்டிங் மீடியா இதற்காக பட்டிங் டாட்காம்(puddingmedia.com) என்னும் இணைய தளத்தை அமைத்துள்ளது. இந்த இணைய தளத்தில் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை டைப் செய்து விட்டு பேச வேண்டும். அதன் பிறகு அதே பக்கத்தில் விளம்பரங்கள் தோன்றும். ஆனால் இதன் வெற்றி சாப்ட்வேர் எந்த அளவுக்கு உரையாடலின் தன்மையை புரிந்து கொள்கிறது என்பதில்தான் இருக்கிறது. இந் நிறுவனம் இன்டெர் நெட் தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த சாப்ட் வேரை ஒப்பந்தம் முறையில் விற்க தீர்மானித்துள்ளது.
——


ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற சூப்பரான வழி.

http _www.coolphototransfer.com_கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் செயலி(அப்) ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு எளிதாக இடமாற்றம் செய்து அசத்துகிறது.இந்த செயலியை பயன்படுத்தும் போது  வழக்கமாக செல்போனில் உள்ள புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் யூஎஸ்பி கேபில் தேவைப்படும் அல்லவா? ஆனால் இந்த செயலி கேபில் எதுவும் இல்லாமலேயே வைபீ மூலமாக புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்றி விடுகிறது.
இது புகைப்படங்களை மாற்றுவதற்கான சுலபமான வழி மட்டும் அல்ல, விரைவான வழியும் கூட என்கிறது இந்த செயலி.
அது மட்டும் அல்ல சும்மா ஜாலியாக புகைப்படங்களை மாற்றலாம் என்கிறது. அதாவது விதவிதமான முறையில் ப‌டங்களை ,அனிமேஷன் பாணியில் படங்களை மாற்றலாம். எப்படி தெரியுமா? செல் போனில் உள்ள புகைப்படத்தின் மீது கையை வைத்து அப்படியே தள்ளிவிட்டால் அது கம்ப்யூட்டருக்குள் போய்விடும். அல்லது போனை கம்ப்யூட்டர் மேலே வைத்து மானிட்டர் மீது வைத்தாலும் புகைப்படம் இடம் மாறிவிடுகிறது.
இதே போல போனை குலுக்கினாலும் புகைப்படல் கம்ப்யூட்டருக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறது. புகைப்படத்தை கைகளால் பெரிதாக்கி அப்படியே தள்ளி விட்டாலும் புகைப்படம் கம்ப்யூட்டருக்கு சென்று விடுகிறது. உங்களுக்கு விசில் அடிக்க தெரியுமா? அடித்து பாருங்கள். அசந்து போவீர்கள். காரணம் விசில் அடித்தாலும் புகைப்படம் இடம்மாறிவிடுகிறது.
இந்த அனிமேஷன் வசதிகளை தான் புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற கூலான வழி என கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் வர்ணிக்கிறது. இதற்கான விளக்க வீடியோவே சூப்பராக இருக்கிறது.ஆன்ட்ராய்டு போன் இருந்தால் பயன்படுத்தி பாருங்கள்.
டவுண்லோடு செய்ய:http://www.coolphototransfer.com/


ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பார்ப்பது எப்படி?

ஐபோனோ ,ஆண்ட்ராய்டு போனோஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம் அவற்றில் செயல்படகூடிய அப்கள் .அதாவது செயலிகள் . இந்த சின்னஞ்சிரிய சாப்ட்வேர்கள் பல்வேறு மாயங்களை செய்ய வல்லவை. ஸ்மார்ட்போனில் புதிய பயன்பாட்டை தரக்கூடியவை. பிரச்சனைகளுக்கு தீர்வாக கூடியவை. ஜிமெயிலில் இருந்து , பேஸ்புக் ட்விட்டர் வரை எல்லாவற்றுக்குமான செயலிகள் இருக்கின்றன. இவை தவிர வாட்ஸ் அப் போன்ற பிரபலமான செயலிகளும் இருக்கின்றன. ரெயில் சேவைக்கான செயலிகள்டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலிகள் என்று பயனுள்ள செயலிகளை அடுக்கி கொண்டே போகலாம். இவை தவிர புதிய புதிய செயலிகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. சும்மாவா என்னஆண்ட்ராடு போன்களுக்காக மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல கட்டணமில்லாமல் பயன்படுத்தக்கூடியவை. அதாவது இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் மற்ற செயலிகளை கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும்.
செயலியின் பயன்கள்!
பயனுள்ள செயலி என்றால் அவற்றை கட்டணம் செலுத்தி வாங்கவும் பலர் தயாராக உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட செயலி பயனுள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வதுசெயலிகளை அறிமுகம் செய்யவும் அவற்றை விமர்சனம்  செய்யவும் இணையதளங்கள் இருக்கின்றன. ஆண்ட்ராய்டு செயலிகளின் இருப்பிடமான கூகுல் பிலே ஸ்டோரிலே கூட செயலிகள் தொடர்பான விமர்சன கருத்துக்களை படித்து பார்க்கலாம் தான்.
ஆனால் என்ன தான் இருந்தாலும் ஒரு செயலியை பயன்படுத்தி பார்ப்பது போல வருமாகுறிப்பிட்ட ஒரு செயலியை தரவிறக்கம் செய்து அது எப்படி செயல்படுகிறது என்பதை பயனாளிகளே தெரிந்து கொள்ள முடிந்தால் நன்றாக தான் இருக்கும். அதிலும் கட்டண செயலிகளை வாங்கும் முன் அவற்றின் பயன்பாட்டை பரிசோதித்து பார்த்து விடுவது இன்னும் நல்லது. இதற்கு செயலியை வாங்கும் முன் அவற்றை பயன்படுத்தி பார்க்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். இது சாத்தியமா ?
அமேசான் தரும் வசதி!
ஆண்டார்ய்டு செயலிகளுக்காக அமேசான் நிறுவனம் அப் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். சரவதேச அளவில் செயல்படும் இந்த வசதி கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் செயலிகளை வாங்கும் முன் பயன்படுத்தி பார்க்கலாம். ஆனால் கூகுல் பிலே ஸ்டோரில் இந்த வாங்கும் முன் பயன்படுத்தி பார்க்கும் வசதி இல்லை. அதனால் என்னநீங்கள் விரும்பினால் , கூகுல் பிலே ஸ்டோரிலும் ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பார்க்கலாம். இதற்கு அழகான குறுக்கு வழி இருக்கிறது.
பரிசோதிக்க குறுக்கு வழி!
எந்த செயலியை பரிசோதிக்க விரும்புகிறீர்களோ அந்த செயலியை காசு கொடுத்து வாங்குவது தான் அந்த வழி.
காசு கொடுத்து வாங்கிய பின் செயலி திருப்தி இல்லாமல் இருந்தால் என்ன செய்வது என்று கேட்கலாம். அதை வேண்டாம் என்று திருப்பி கொடுத்து விடலாம் தெரியுமாஇப்படி பணத்தை திருப்பி பெறும் வசதி தரப்பட்டுள்ளது. கட்டண செயலிகளை இவ்வாறு திருப்பி ஒப்படைத்து பணத்தை திருப்பி தரும் வசது கூகுல் நிறுவனத்தால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை செய்லியை பயன்படுத்தி பார்க்க பயன்படுத்தி கொள்ளலாம். செயலி பயனுள்ளதாக இருந்தால் அப்படியே விட்டுவிடலாம். எதிரபார்த்த வகையி இல்லாவிட்டால் திருப்பி கொடுத்த கட்டண தொகையை மீண்டும் பெற்றுக்கொள்ளாம். ஆனால் இந்த முறையில் ஒரே ஒரு குறை , செயலியை வாங்கிய 15 நிமிடத்திற்குள் அதை திருப்பி கொடுத்து விட வேண்டும் என்பது தான். ஆகையால செயலியை பரிசோதிக்க 15 நிமிடங்கள் தான் அவகாசம். 15 நிமிடங்களை கடந்து விட்டால் கூகுல் கைவிரித்து விடுகிறது. இருப்பினும் நேரடியாக செயலியை உருவாக்கியவரை தொடர்பு கொண்டு பேசிப்பார்க்கலாம் என்கிறது. ஆண்ட்ராய்டு செயலியை திரும்பித்தரும் வசதி பற்றி அறிய :https://support.google.com/googleplay/answer/134336?hl=en
அப்சர்பர் செயலி !
செயலியை வாங்கிவிட்டு திருப்பித்தருவது எல்லாம் சரியாக வராது என நீங்கள் நினைத்தால் , அப்சர்பர் எனும் செயலியை முயன்று பார்க்கலாம். எந்த செயலியையும் வாங்காமல் மட்டும் அல்ல அவற்றை தரவிறக்கம் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கும் வசதியை இந்த செயலி வழங்குகிறது. காரணம் புதிய செயலிகளை இந்த செயலிக்குள் இருந்தபடியே பரிசோதித்து விடலாம் என்பது தான்.
அப்சர்பர் செயலி உரிமையாளர்கள் தங்கள் செயலிகளுக்கான தனி பக்கத்தை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. அதன் இந்த செயலி , வர்ச்சுவல் போன் எனப்படும் இணையத்தில் மட்டுமே இருக்கும் போனில் தோன்றும் . இந்த போனில் செயலி எப்படி எல்லாம் இருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் பார்த்து கொள்ளலாம். இதே வசதியை வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க விரும்பும் செயலியை பரிசோதிக்க பயன்படுத்தி கொள்ளலாம்.
குறிப்பிட்ட செயலியை கிளிக் செய்ததும் அது பற்றிய விவரங்கள் மற்றும் விமர்சங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு மேலே உள்ள மூன்று கோடுகள் கிளிக் செய்தால் , உண்மையில் அந்த செயலி போனில் எப்படி செயல்படும் என்று திரையில் உள்ள இணையபேசியில் பார்க்கலாம். அதன் பிறகு வாங்கலாமா வேண்டாமா என தீர்மானிக்கலாம். அப்சர்பர் பற்றி விவரமறிய:https://play.google.com/store/apps/details?id=main.java.com.appsurfer

ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்.

nirbhayaசெல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என்று நினைத்து கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் . நடைமுறை வாழ்க்கையில் பயன் தரகூடிய செயலிகளும் பல இருக்கின்றன. அது மட்டுமா ஆபத்து காலத்தில் உதவிக்கான கோரிக்கை விடுக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன. செல்போன் செயலிகளில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த உயிர்காக்கும் செயலிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
எப்படியும் பெரும்பாலானோர் கைகளில் செல்போன் வைத்திருக்கின்றனர். ஆபத்து என வரும் போது இந்த செல்போன்கள் மூலமே ஒரு கிளிக்கில் உதவி கோர வழிசெய்யும் ஆபத்பாந்தவனாக  உயிர் காக்கும் செயலிகள் அமைந்துள்ளன.
ஆபத்து என தெரிந்தால் , செல்போனில் வேண்டியவர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி கோரலாம் தான். ஆனால் சில நேரங்களில் செல்போனில் உள்ள எண்களில் வேண்டியவர்களின் எண்ணை தேடி கண்டுபிடித்து அவர்களை அழைத்து உதவி தேவை என சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியில் சிக்கி கொள்ளலாம். அதோடு ஆபத்து சூழ்ந்திருக்கும் போது பயத்திலும் பதட்டத்திலும் செல்போனில் உரியவர்களை அழைத்து உதவி கோருவது கடினமாக இருக்கலாம். எதிர்பாரமால் விபத்து ஏற்படும் சூழல், உடனடி மருத்துவ உதவி தேவையான் நிலை மற்றும் வன்செயலாளர்களிடம் சிக்கி கொள்ளும் ஆபத்தான நிலைகளில் இந்த செயலிகள் உதவிக்கு வருகின்றன. பெண்கள், குழ்ந்தைகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இவை ஆபத்து காலத்தில் கைகொடுக்கும்.
ஹெல்ப் மீ ஆன் மொபைல்
ஹெல்ப் மீ ஆன் மொபைல் செயலி பாதுகாப்பை விரல் நுனியில் கொண்டு வருகிறது. ஆண்ட்ராய்டு போனுக்கான இந்த செயலியின் மூலம் ஆபத்தான நேரங்களில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி கோரலாம். இந்த செயலியை பயன்படுத்துவதும் எளிதானது. ஆண்ட்ராய்டு போனில் இவற்றை டவுண்லோடு செய்து கொண்டால் போதுமானது.  இந்த செயலியில் உள்ள பாதுகாவலர் பகுதியில் பயனாளிகள் வீட்டில் அறியப்படும் பெயரை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பாதுகாவலர்களின் செல்போன் எண்களை குறிப்பிட வேண்டும். தந்தை, சகோதரர், மாமா, நண்பர் ஆகியோரது செல்போன் எண்களை குறிப்பிடலாம். ஆபத்தில் சிக்கி கொள்ளும் நிலை ஏற்பட்டால் , இந்த செயலியின் உதவி தேவை பகுதியை கிளிக் செய்தால் போதும் , அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு அந்த கோரிக்கை குறுஞ்செய்தியாக போய் சேர்ந்துவிடும். மேலும், பயனாளியின் இருப்பிடம்  ஜிபிஎஸ் மூலம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். அது மட்டும் அல்லாமால் , செல்போனில் இருந்து ஆபத்து எச்சிரிக்கை ஒலி கேட்டிக்கொண்டே இருக்கும். இதில் அருகே உள்ளவர்களை உதவிக்கு அழைக்கும் அபயக்குரலாக செயலபடும்.
இந்த செயலியை பெண்கள் விஷமிகள் மத்தியில் சிக்கி கொண்டால் அல்லது முன்பின் தெரியாதவர்களால் பின் தொடர்ப்பாட்டால் பயன்படுத்தலாம். மேலும் விபத்து நேரங்களிலும் பயன்படுத்தலாம்.
அதே போல, எங்காவது சென்றிருக்கும் போது எதிர்பார்த்ததை விட கூடுதல் நேரம் ஆகிவிட்டால் , இதில் உள்ள நான் இங்கிருக்கிறேன் வசதி மூலமாக பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தை பாதுகாவலர்களுக்கு தெரிவிக்கலாம். செல்போன் சார்ந்த மதிப்புகூட்டப்பட்ட சேவைகளை வழ்ங்கி வரும் ஆன்மொபைல் நிறுவனம் இந்த செயலியை உருவாக்கி உள்ளது. நிறுவன இணையதளம் மற்றும் கூகிள் பிலே ஸ்டோரில் தரவிறக்கம் செய்யலாம்.
இணையதள முகவரி; http://www.helpme-onmobile.com/

ஆபத்தில் சிக்கி கொள்ளும் பெண்களுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள செயலி இது. கடந்த ஆண்டு தில்லியில் வன்செயலாலர்களின் கொடுரத்துக்கு பலியான இளம்பெண் நிர்பயா பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிர்பயாவுக்கு நேர்ந்த கதி இனி வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படாமல் தடுக்க உதவும் வகையில் இந்த செயலியை ஸ்மார்ட் கிலவுட் இன்போடெக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. நிர்பயா – பி பியர்லெஸ் எனும் பெயரிலான இந்த செயலியில் உதவி தேவை எனும் செய்தியை குடும்பத்தினர் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அதே போல உதவி தேவை எனும் தகவலை பேஸ்புக் பக்கத்திலும் நண்பர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள இந்த செயலி வழி செய்கிறது. விஅப்த்து மற்றும் மருத்துவ அவசர நிலைகளிலும் இந்த செயலியை பயன்படுத்தலாம். குடும்பத்தினர் தவிர காவல்தூறையினர் , மருத்துவமனை மற்றும் அவசர உதவி எண்கள் ஆகியவற்றுக்கும் உடனயாக தகவல் அனுப்ப முடியும். ஆண்ட்ராட்யு, ஐபோன் விண்டோஸ் போன் என எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம். ஆங்கில் மொழியிலானது.
இணையதள முகவரி; http://www.smartcloudinfotech.com/nirbhaya.html
ஆறு பேர் வட்டம்.
சர்கில் ஆப் 6 செயலி , ஆபத்து காலத்தில் மட்டும் அல்லாது சிக்கலான எந்த சூழலிலும் உதவி கிடைக்கசெய்கிறது. இந்த செயலியில், உங்கள் உதவி வட்டத்தில் ஆறு நபர்களின் தொடர்பு எண்களை குறிப்பிடலாம். உதவி தேவைப்படும் சூழலில் இந்த ஆறு பேருக்கும் பயனாளியின் இருப்பிடம் பற்றிய விவரத்துடன் தகவல் தெரிவிகக்ப்படும். மூன்று விதமான உதவிகளை கோரலாம். ஆபத்து இல்லை ஆனால் அச்சமூட்டும் சூழலில் இருந்தால் , உடனே வந்து அழைத்து செல்லுமாறு செய்தி அனுப்பலாம். இதற்காக கார் ஐகானை கிளிக் செய்தால் போதும். பெரும் ஆபத்து என்றால் , உதவி தேவை என்னும் தகவல் தெரிவிக்கலாம். இதே போலவே மிகவும் அறுவையான ஆசாமிகளிடம் மாட்டிக்கொண்டால் வந்து காப்பற்றுங்கள் எனும் செய்தியையும் அனுப்பலாம். குடும்ப சிக்கல் அல்லது காதல் விவகாரம் போன்றவ்ற்றால் மன் உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால் ஆலோச்னை மற்றும் ஆறுதல் தேவை என்றும் செய்தி அனுப்பலாம். அவசர எண்களை தொடர்பு கொள்ளும் வசதியும் இருக்கிறது. சர்வதேச அலவிலான செயலி இது. ஆங்கிலம் தான் பிரதான மொழி என்றாலும் இப்போது இந்தி மொழி வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராட் ,ஐபோன் இரண்டிலும் செயல்படுகிறது.
அமெரிக்காவில் பயனுள்ள செயலிகளுக்காக வெள்ளை மாளிகை நடத்திய போட்டியில் தேர்வான செயலி இது,.
இணையதள முகவரி; http://www.circleof6app.com/





ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ் மொபைலில் இதுதான் பெஸ்ட்




ஆண்ட்ராய்டு என்ற ஒன்று வந்தபிறகு இன்று மொபைல் வாங்க செல்பவர்களில் பெரும்பாலோனோர் கடைகளில் ஆண்ட்ராய்டு மொபைலை தான் கேட்டு வாங்குகின்றனர்.

அதுவும் ஆண்டிராய்டின் சென்ற பதிப்பான ஜெல்லி பீன் ஓ.எஸ் தான் மக்கள் அதிகம் விரும்பப்படும் ஓ.எஸ்ஸாக உள்ளது. அந்த வகையில் ரூ.15 ஆயிரம் விலைக்குள் இருக்கும் ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸூடன் வெளிவரும் பெஸ்ட் மொபைல்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா.

 இதோ இந்த மொபைல்கள் தாங்க ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸில் வெளிவரும் சூப்பர் மொபைல்கள்...



Samsung Galaxy Core GT-I826

 Dual sim
4.3 inch TFT LCD Capacitive Touchscreen
1.2GHz Dual core
1GB RAM
Android OS, v4.1.2 (JellyBean)
 5MP rear camera
 VGA front camera
8 GB internal memory
 Expandable up to 64 GB
 3G, Bluetooth, GPRS, Wi-Fi, EDGE, micro USB
1800 mAh battery



Samsung Galaxy Star Pro Duos

 4inch Capacitive Touchscreen TFT Display
Dual-SIM
Android v4.1 Jelly Bean OS
 1GHz Single Core A5
 512MB RAM
2MP Rear Camera
 4GB Internal Memory Up to 32GB External Memory
Bluetooth 4.0, EDGE , Micro USB
1500mAh Li-ion Battery



Samsung Galaxy Trend Duos

 4 inch TFT capacitive touchscreen
Android v4.1 (Jelly Bean) OS
1.2GHz dual core processor
512MB RAM
 3MP main camera 0.3MP secondary camera
4GB ROM expandable up to 32GB
 Bluetooth, Wi-Fi, 3G, USB port
 1500mAh Li-Ion battery



Samsung Galaxy Fame Duos

 S6812 Dual SIM
3.5 inch touch screen
Android 4.1 Jelly Bean
 5MP Camera VGA Front Camera
1GHz processor 512MB Ram
 4GB Internal Storage
3G, Wi-Fi, GPS, Bluetooth
1300 mAH battery



Samsung Galaxy Core Duos

 Dual sim
 4.3 inch TFT LCD Capacitive Touchscreen
1.2GHz Dual core 1GB RAM
 Android OS, v4.1.2 (JellyBean)
5MP rear camera VGA front camera
 8 GB internal memory Expandable up to 64 GB
3G, Bluetooth, GPRS, Wi-Fi, EDGE, micro USB
1800 mAh battery



Samsung Galaxy Grand Quattro (Win Duos)

Dual-SIM
4.7-inch Super AMOLED Capacitive Touchscreen
Android 4.1.2 OS
1.2GHz Quad-Core Cortex A5 Qualcomm Snapdragon Processor
 1GB RAM Adreno 203 GPU
5MP Rear Camera VGA Front Camera



Samsung Galaxy Pocket Neo Duos

 Dual-SIM
3-inch QVGA TFT LCD Display
Android 4.1.2 850 MHz Processor
512MB RAM
 2MP Rear Camera
4GB Internal Memory expandable up to 32GB
 3G, WiFi, Bluetoot
1200 mAh Battery



Samsung Galaxy Star

 3 Inch Display
 Android Jelly Bean( OS )
 1 GHz Processor 512 MB RAM
 2MP Camera
WiFi 4GB On-Board Storage MicroSD Slot
1200 MAh Battery



Samsung Galaxy Star Pro:

 1GHz Cortex A5 Processor
512 MB RAM
4 Inch Touch Screen Display
 Dual SIM Wi-Fi
 2 MP Rear Camera Wi-Fi Direct Bluetooth
1500 MAh Battery



Samsung Galaxy Young Duos

 Dual-SIM
 3.2-inch HVGA Display Android
 4.1 (Jelly Bean) OS
 1GHz single-core processor
768MB RAM
3MP Camera
 4GB Internal Memory expandable up to 64GB
 3G, Wi-Fi, Wi-Fi Hotspot, Bluetooth, USB, GPS
 1300 mAh Battery


நன்றி:http://tamil.gizbot.com/

மொபைல் போன்களின் ரகசிய குறியீட்டு எண்கள்


தற்போது நாம் காண இருப்பது மொபைல் போன்களில் செயல்படும் ரகசிய குறியீட்டு எண்களை பற்றி தான்....


     ரகசிய குறியீட்டு எண்கள் என்றால்..?

     ரகசிய குறியீட்டு எண்கள் என்பது தங்கள் போன்களில் உள்ள சில தகவல்களையும்,ரகசிய தகவல்களையும் பற்றி தெரிந்து கொள்ள பயன்படும் குறியீட்டு எண்கள்.....


     நாம் பார்க்க இருப்பது NOKIA மொபைல் போன்களில் ரகசிய குறியீட்டு எண்கள் தான்..




*#0000#          - தங்கள் மொபைல் போனின் சாப்ட்வேர் தகவல்களை தெறிந்துக்கொள்ள.



*#06#              - போனின் International Mobile Equipment Identity No அதாவது IMEI NO தெறிந்துக்கொள்ள.


*#21#           - தங்கள் போனில் Call Divert செய்துயிருந்தால் தாங்கள் Divert செய்த மொபைல் போனில் எண்ணை காண.


*#92702689#  -முக்கிய ஒன்று தங்கள் போனின் 
1.Serial Number, 
2. உருவாக்க பட்ட நாள், 
3.சந்தைக்கு வந்த நாள், 
4.கடைசியாக மொபைல் போனை ரிப்பேர செய்த நாள் (0000 என்றால் no repairs), 
5.மொபைல் போனின் LIfe Timer ஆகியவற்றை காணலாம்..
Refresh Ur Phone means Switch off then Switch On.


*#2820#          -தங்கள் போனின் Bluetooth தகவலை பற்றி தெறிந்துக்கொள்ள.


*#2820#          -Bluetooth Deviceயின் addressயை பற்றி தெறிந்துக்கொள்ள.


*#delset#        -தங்கள் போனின் MMS/GPRS Settings அழிக்க/நீக்க


*#73#              -தங்கள் போனின் கேம்ஸ் மற்றும் நேரத்தை Reset செய்ய


*#147#            -யார் தங்களுக்கு கடைசியாக கால் செய்தது என்பதை காண் (Only In Vodafone)


*#1471#           கடைசியாக தங்கள் மொபைல் கால்(Only In Vodafone)


*#7780#           - Restore Factory Settingsயை மேற்க்கொள்ள...அதாவது தங்கள் போனை பழைய நிலைக்கு கொண்டு வர.


*#7328748263373738#தங்கள் போனின் Security Codeயை Reset செய்ய...
தங்கள் Nokia போனின் Default security Code 12345
     தங்கள் மொபைல் போனில் தொடரந்து '0' வை அழுத்திக் கொண்டே இருந்தால் தங்கள் மொபைல் போனின் Home Page ஓப்பன் ஆகும்


     அடுத்தது தங்கள் மொபைல் போனில் பதியபட்டுள்ள சாப்ட்வேர் பற்றி தெறிந்துக்கொள்ள வேண்டுமா....இதோ 




Operating system

Symb OS v6.1

    Nokia 7650 Nokia 3650 Nokia 3660 Nokia N-Gage Nokia N-Gage QD Siemens SX-1 Sendo X

Symb OS v7.0

    Nokia 3230 Nokia 6600 Nokia 6620 Nokia 6260 Nokia 6670 Nokia 7610 Panasonic X700 Panasonic X800

Symb OS v8.0

    Nokia 6630 Nokia 6680 Nokia 6681

Symb OS v8.1

    Nokia N70 Nokia N90

Symb OS v9.1

    Nokia N91 Nokia 3250 Nokia E60 Nokia E61 Nokia E70 Nokia N71 Nokia N80 Nokia N92

மொபைல் screen protector - வீடியோ

பல்லாயிரம் தந்து வாங்கும் மொபைல் போன்களில் எவ்வளவு பொத்தி பொத்தி பார்த்துக் கொண்டாலும் கீறல் படுவதை தடுக்கவே முடியாது. மொபைல் ஸ்க்ரீன் கீறல் படுவதில் இருந்து பாதுகாக்கும் ஒரே சாதனம் ஸ்ராட்ச் கார்ட் மட்டும். இந்த கீறல் அட்டையை ஓட்டுவதிலும் பெரும் சிக்கல் இருக்கிறது. ஓட்டும்போது தூசி இருப்பது,
காற்று வட்டம் இருப்பது, சரியான கோணத்தில் ஓட்டமுடியாதது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

இது ஒரு பிரச்சனை என்றால் போதாதற்கு கடைக்காரன் கொள்ளை வேறு தாங்க இயலாது. வெறும் இருபது முதல் ஐம்பது வரை மட்டுமே மதிப்பு கொண்ட இந்த கீறல் அட்டைக்கும் அவன் ஒட்டி தர வாங்குற கட்டணம் பல மடங்கு அதுல்ல ஒரு கொறஞ்ச மதிப்புள மொபைலே வாங்கிடலாம்.

யோசிச்சா எடுக்குதான் தீர்வு கிடைக்காது சொல்லுங்க. இந்த கீறல் அட்டையை எந்தப் பிரச்சனையும் இல்லாது ஓட்டுவது எப்படி என்பதை விளக்க ரிலீஸ் ஆகி இருக்கிறது ஒரு வீடியோ. இனி இந்த வீடியோவ பார்த்து நீங்களே ஒட்டிக்காங்க.



என்ன முடியும் தானே!!!

உங்க செல்போன் ஒரிஜினலா?


(செய்தியின் உண்மைத்தன்மையை பரிசோதித்தபின் இப்பதிவு வெளியிடப்படுகிறது)

வானொலி, தொலைக்காட்சி எந்த ஒரு தகவல் தொழில்நுட்ப சாதனமும் செல்போனை போல் விற்பனையில் சாதனை படைத்திருக்காது என்பதை மறுப்பதற்கில்லை. பொருட்களுக்கு மவுசும் விற்பனையும் கூடும்போது போலிகள் சந்தையை ஆட்டத் துவங்கி விடுகின்றன. செல்போன் சந்தையிலும் எது உண்மை எனது போலி என்று அறிய இயலாத அளவுக்கு தத்துரூபமாக போலிகள் கொட்டிக்கிடக்கின்றன.


நாம் வாங்கிய செல்போன் ஒரிஜினலா என்பதை செல்போனில் உள்ள IMEI எண் மூலம் அறிந்துகொள்ள முடியும். உமது செல்போனில் *#06# என டைப் செய்தால் திரையில் செல்போனின் IMEI எண் காணக்கிடைக்கும். அந்த IMEI எண்ணை குறித்துக்கொண்டு http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr என்ற இணைய இணைப்பில் தகுந்த இடத்தில IMEI எண்ணை தந்து செல்போனின் மாடல் மற்றும் தயாரிப்பாளர் போன்ற தகவல்கள் மூலம் செல்போன் ஒரிஜினலா என்பதை அறிந்துகொள்ளலாம்.

இந்த பதிவை ஆங்கிலத்தில் படிக்க http://amourtech.blogspot.in/2013/09/check-your-mobile-handsets-orginality.html செல்லவும்.


Android போன்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

Android போன்கள் கணினியில் கிடைக்கும் அத்தனை வசதிகளையும் சுலபமாக சுருக்கி கையில் தந்துவிட்டாலும், பாதுகாப்பு குறித்த சர்ச்சைகள் நிறைய இருக்கிறது. ஸ்மார்ட் போனை யாரேனும் திருடிவிட்டாலோ அல்லது  வைரஸ்கள் மூலம் எளிமையாக நமது ஒட்டு மொத்த தகவல்களையும் அம்மாவின் கைப்பேசி எண் முதல் வங்கியின் கடவுச்சொல் வரை அனைத்தையும் தெரிந்துகொள்ள இயலும். இவற்றில் இருந்து முடிந்தவரை சில எளிய வழிமுறைகளில் நம்மை காத்துக்கொள்ள இயலும்.

* மொபைலை கடவுச்சொல் மூலம் பூட்டி வைக்கவும்.

* இலவசமாக கிடைக்கும் மொபைல் Anti-Virus களில் ஏதேனும் ஒன்றை பதிவிறக்கி பயன்படுத்தவும். இவை நம் அலைபேசிக்கு வரும் வைரஸ்களை கண்காணித்து நமக்கு அறிவிக்கும். வைரஸ் இருப்பின் அதை நீக்கவும் பயன்படும். (நம்பகமான Anti-Virus பெயர்களை அறிய http://ow.ly/rMvFn)

* மொபைல் தொலைந்து போனால் நமக்கு குறுந்தகவல் அனுப்பும் மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளவும்.

* அறிமுகமில்லாத நபரிடம் இருந்து கிடைக்கப்பெறும் மின்னஞ்சல் இணைப்புகளை திறந்து படிக்க வேண்டாம். அதில் வைரஸ் இருப்பின் உமது மொபைல் தகவல்களை திருட வழிவகை செய்யும்.

* இணையத்தில் இலவசமாக கிடைக்கிறதே என அத்தனை மென்பொருளையும் பதிவிறக்காமல் நம்பகமான மென்பொருளை மட்டுமே பதிவிறக்கி பயன்படுத்துதல் நல்லது.

NOKIA CODES - நோக்கியா போன் codes:


nokia-codes

To know private no
*#30#

To know warranty
*#92702689#

To format
*#7370#
*#7780#

To know prodct date
*#3283#

To know serial no
*#06#

To know model
*#0000#

புளூடூத் : தெரிந்ததும்தெரியாததும் ..

நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.
புளூடூத் பற்றித் தெரியுமா என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.
தெரியும் என்றால்எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.
பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைஎதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.
பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும்நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் ! புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B”தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !
புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான். உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோபடத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !
PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.
புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group  ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம்லைசன்ஸ்சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !
ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol)என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.
இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.
தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !
பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும்இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.








மொபைல் போன்: சில ஆலோசனைகள்


மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.


 
இயலுமானால் உங்கள் உடம்பி லிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம்.
 

 
மொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும்.
 

 
பேசும்போது கைகளால் போனை அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். எனவே போனைக் கீழாக அதனை அதிகம் மூடாமல் பிடித்துப் பேசவும்.
 

 
போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.
 

 
உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.
 

 
கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை
 
ஓரமாக நிறுத்திப் பேசவும்.

பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.

அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும்.

அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில் என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது போல மருத்துவ மனை சாதனங்களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவருக்குத் தராதே.

விமானத்தின் உள்ளேயும் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் ஸ்விட்ச் ஆப் செய்து வைப்பது நல்லது.

சிறுவர்கள் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். அவர்களை ஏன் கதிர்வீச்சுக்கு உள்ளாக்குகிறீர்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை.

மொபைல் போனில் பேசுகையில் உங்கள் அருகே இருக்கும் நண்பர்கள் குறித்து சிறிது சிந்திக்கவும். அவர்களுக்கு நீங்கள் பேசுவதில் நிச்சயம் அக்கறை இருக்காது. எனவே சற்று தள்ளிச் சென்று அவர்களின் வேலை கெட்டுப் போகாத வகையில் பேசவும்.

thanks and Read more: http://therinjikko.blogspot.com/2011/04/blog-post_05.html#ixzz2iJgez8wf

 பாஸ்போர்ட், விசா பற்றி அறிய அருமையான மொபைல் அப்ளிகேஷன்! எட்டி பார்க்க மறந்துவிடாதீர்கள்.



iPhone Screenshot 2      iPhone Screenshot 4

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தற்போது MEAIndia எனும் புத்தம் புதிய   மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.. இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் பாஸ்போர்ட், விசா,ஹஜ் சேவைகள்,போன்றவைகளை மொபைலிலே அறியலாம்.இதில் உள்ள முக்கியமான அம்சம்


Android மொபைல் பயன்படுத்துபவர்கள் இந்த லிங்கில் டவுன்லோட் செய்யலாம்
                                                 



     ஐபோன் பயன்படுத்துபவர்கள் இந்த லிங்கில் டவுன்லோட் செய்யலாம்

                                               


Ministry of External Affairs launches its Mobile App video
                

இந்த அப்ளிகேஷன் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.










நாம் பாதுகாப்பாக செல் போனை 

பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு வழிகள்


இன்று நாம் கைபேசி இல்லாமல் இருப்பதில்லை என்று சொல்லும் அளவுக்கு கைபேசி நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

காது பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு வழிமுறைகள்
  1. தவிர்க்க முடியாத நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் மிகக் குறைந்த கால அளவு மட்டும் கைபேசியில் பேசுங்கள்.
  2. தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் குறைந்த மின்காந்த கதிர்வீச்சு கொண்ட கைபேசிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள்.
  3. நேரடியாக கைபேசியில் பேசும் பழக்கத்தை தவிர்த்து speaker mode, hearing phone மற்றும் headset உபயோகித்து உரையாடுவது நல்லது.
  4. குழந்தைகளும்கர்ப்பிணிகளும் கைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
  5. பழுதடைந்தசரிவர இயங்காத அலைபேசிகளை உபயோகிக்கக் கூடாது.
  6. செல்போனுக்கு பதில் தொலைபேசியை உபயோகிக்கலாம் மற்றும் மின்னஞ்சல் தொடர்பும் சிறந்தது.
  7. கைபேசி மிகக்குறைந்த battery-யில் வலுவிழந்து நிற்கும் போது பேச வேண்டாம். முழுமையாக charge செய்து விட்டு பேசுங்கள்


No comments:

Post a Comment