ஆண்ட்ராய்டு : IRCTC மொபைல் அப்ளிகேஷன்
ஆண்ட்ராய்டு ஃபோன்கள் இப்போது நிறைய உபயோகத்துக்கு வந்து விட்டன. உள்ளங்கையில் உலகம் என்பது நிரூபணம ஆவது போல ஆண்ட்ராய்டு ஃபோன்கள் கையடக்க அளவு, பையடக்க விலை என்று சக்கை போடு போட்டு வருகின்றன.
ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் பல ஆண்ட்ராய்டு மென்பொருட்கள் வெளி வருகின்றன.
தற்போது இந்திய ரயில்வேயில் irctc.co.in மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு பயணம் செய்யும் போது கையில் டிக்கெட்டின் அச்சுப் பிரதி எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. நமது மொபைலில் வந்திருக்கும் PNR உள்ளிட்ட விபரங்களை அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் சேர்த்து காண்பித்தாலே போதும்.
லேட்டஸ்டாக, இந்தியன் ரயில்வே, தனது இணைய தளத்தை மொபைல் உபயோகிப்பாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது. (https://www.irctc.co.in/mobile)
கட்டுரை.காம் வாசகர்களுக்காக அதை ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனாக மாற்றி இங்கே வழங்குகிறோம். தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.
No comments:
Post a Comment