Saturday, 12 July 2014

பயனுள்ள இணைய தளங்கள்

பயனுள்ள இணையதளங்கள்

சில இணைய தளங்கள் பற்றிய குறிப்பு இங்கே சிறிய அளவில் தரப்படுகிறது. இந்த தளங்கள் அனைவருக்கும் பல விதங்களில் பயன்தரும் தளங்களாகும்.
www.photonhead.com  டிஜிட்டல் கேமரா வாங்கிப் பயன்படுத்தாத வாசகர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக சிறுவர்கள் கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால் முழுமையாக அதன் வசதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்றால், இல்லை என்றே கூற வேண்டும். டிஜிட்டல் கேமராவின் வசதிகள் என்ன? எதனைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்று விலாவாரியாகத் தரும் தளம் இது. அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள்ளன. சிமுலேட்டர் முறையில் ஒரு கேமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் பழமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. நவீன தொழில் நுட்பம் தான் எனக்கு வேண்டும் என எண்ணுபவர்கள் www.slrgear.com  என்ற தளத்திற்குச் செல்லலாம்.
www.stopbadware.org  இது பக்கத்துவீட்டு காவல்காரன் போல செயல்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இது போன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக்கிறது.
www.gmailtips.com : கூகுள் மெயில்பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கையில் குறிப்புகள்,டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன.
www.quotedb.com  நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெரிய தலைவர்களின் கூற்றுக்களை கோடிட்டுக் காட்ட வேண்டுமா? அப்படியானால் அதற்கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில் ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன.
சிறந்த பேராசிரியராக, மாணவர்களிடத்தில் நற்பெயர் விரும்பும் ஆசிரியர்களுக்கும் இது உகந்த தளம்.
www.techcrunch.com  இன்டர்நெட் வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகிறது. குறிப்பாக வெப்2.0 குறித்த அண்மைக் காலத்திய செய்திகள் ஏராளம்.
www.tweakguides.com  உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்த தளம் மூலம் மேம்படுத்தி கம்ப்யூட்டர் இயக்கத்தை புதுப்பிக்கலாம்.

No comments:

Post a Comment