படங்களின் அளவுகளை(Capacity) சுருக்குவதற்கான பயனுள்ள இலவச மென்பொருள்
நண்பர்களுக்கு எங்கள் படங்கள்,புகைப்படங்களை (Images,Photos) மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறுவழியிலோ பகிர்ந்துகொள்ளும்போது அவை மிகப்பெரிய அளவுகளில் இருந்தால் எம்மால் சிலவேளைகளில் பகிர்ந்துகொள்ளவோ அனுப்பவோ முடியாதநிலை ஏற்படும். அத்தகைய இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்கென பிரத்தியேகமாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
மிகப்பெரிய அளவிலான (Capacity) படங்களின் அளவுகளை அவற்றின் தன்மை மாறாமல் (Resolution) மிகக் குறைந்தளவில் படங்களை, புகைப்படங்களை சுருக்கிக்கொள்ளலாம். RIOT (Radical Image Optimization Tool) எனப்படும் இந்த மென்பொருளானது 1MB க்கும் குறைவான அளவில் கிடைப்பதால் மிக இலகுவாக தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளலாம். உங்கள் தேவைக்கேற்ப சுருக்கும் படங்களின் அளவுகளை நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம். படங்களின் அளவுகளை சுருக்குவதற்கான திறன்வாய்ந்த பயனுள்ள மென்பொருள்.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: RIOT
http://luci.criosweb.ro/riot/

கூகுளில் சில வித்தியாசமான நகைச்சுவையான தேடல்கள்
உலகில் இணைய தேடல் இயந்திரங்களில் முதலிடத்தை பல ஆண்டு காலமாக தக்கவைத்துகொண்டிருக்கும் தேடலில் ஆர்வமுள்ளவர்களுக்கென சில நகைச்சுவையான வித்தியாசமான சில தேடல் வடிவங்கள் உள்ளன. இந்த தேடல் வடிவங்கள் வித்தியாசமாக தேட விரும்புபவர்களுக்கு என உருவாக்கப்பட்டவை.
வித்தியாசமாக எவ்வாறு தேடுவது எனப்பார்ப்போம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களை Google இன் இணையமுகவரியில் (http://www.google.com/) சென்று தட்டச்சு(type) செய்யுங்கள்.
(Just write it in google searchbar )
பின்னர் I'm Feeling Lucky என்பதன் மேல் அழுத்துங்கள். அப்பொழுது கூகுளின் வித்தியாசமான தேடல் முகப்பு தோற்றங்கள் நகைச்சுவையாக தோற்றமளிக்கும்.
(Then Click on I'm Feeling Lucky)
வித்தியாசமான தேடல் வடிவங்களுக்குரிய சொற்கள்:

- Elgoog
- Google 133t
- Google Gothic
- Google BSD
- Google Easter egg
- xx-piglatin
- Google linux
- Ewmew fudd
- xx-klingon
- Google BearShare
- Google Loco
- Google Linux
- Google Ewmew
- Answer to life the Universe and Everything
- Google Mozilla
- Google Gizoogle
கடந்த வருடம்(2009) கூகுளில் அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியல்( top searches on google)
2009 கடந்து பல மாதங்கள் சென்றபின் இது ஒரு காலம் தாமதித்த இடுகை. கூகுளில் கடந்த 2009 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியல் இதோ. இதில் அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியலில் Michael jackson என்னும் சொல் முதலிடத்தில் உள்ளது.
இதோ கூகிளில் அதிகம் தேடப்பட்ட முதல் பத்து சொற்களின் பட்டியல்:
பொழுதுபோக்கு அம்சங்களில்...........
விளையாட்டு சம்பந்தமாக................
1. winter olympics schedule
2. valentines
3. pairs short program
4. mens moguls
5. medals
6. kumaritashvili
7. johnny spillane
8. bharti airtel
9. we are the world 25
10. ohno
இதோ கூகிளில் அதிகம் தேடப்பட்ட முதல் பத்து சொற்களின் பட்டியல்:
- michael jackson
- tuenti
- sanalika
- new moon
- lady gaga
- windows 7
- dantri.com.vn
- torpedo gratis
பொழுதுபோக்கு அம்சங்களில்...........
- michael jackson
- transformers
- eminem
- naruto shippuden
- beyonce
- peliculas id
- paranormal activity
- anime online
- natasha richardson
- poker face lyrics
விளையாட்டு சம்பந்தமாக................
- real madrid
- us open
- ufc
- sahadan
- livescore
- pacquiao vs cotto
- wbc 速報
- pga tour leaderboard
- confederations cup
- l'equipe football
- acai berry
- picnic
- クックパッド
- tesco direct
- senseo
- peanut butter recall
- nespresso commande
- habibs delivery
- mocktail
- masterchef ஆஸ்திரேலியா
1. winter olympics schedule
2. valentines
3. pairs short program
4. mens moguls
5. medals
6. kumaritashvili
7. johnny spillane
8. bharti airtel
9. we are the world 25
10. ohno
எந்தவித மென்பொருளும் பயன்படுத்தாமல் இணையவேகத்தினை அதிகரிப்பது எப்படி?
இயந்திரமயமான உலகில் இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் இணையம். கல்வி,தொடர்பாடல்,பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல விடயங்களில் இணையம் என்பது மிக ஆழ வேரூன்றிவிட்டது. அப்படிபட்ட வேகமாக செல்லும் இணைய உலகில் இணைய வேகம் என்பது சில இடங்களில் மிக வேகம் குறைந்ததாகவே காணப்படுகின்றது. அத்தகைய வேகம் குறைந்த கணனிகளில் இணையவேகத்தினை எதுவித மென்பொருளின் உதவியுமின்றி அதிகரிப்பது எப்படி என்பது தான் இப்பதிவின் நோக்கம்.
இனி எவ்வாறு இணைய வேகத்தினை அதிகரிப்பது எனப்பார்ப்போம்.
1.முதலில் கணனியில் Start சென்று Run என்பதை அழுத்துங்கள்.
( Click Start >>>Run)
2.பின்னர் வரும் Run இல் gpedit.msc என தட்டச்சு செய்து Enter விசையை (Enter Key) அழுத்துங்கள்.
3.அழுத்தியபின் Policy Editor என்னும் சாளரம்(Window) திறக்கப்படும்..இந்த சாளரத்தில் Local Computer Policy என்பதை அழுத்தி Computer Configuration என்பதை தெரிவுசெய்யுங்கள்.
(Local Computer Policy >>> Computer configuration)
5.பின்னர் Administrative Templates என்பதை தெரிவுசெய்து அதில் Network என்பதை அழுத்துங்கள்.
(Administative templates >>>Network)
6.பின்னர் QoS Packet Scheduler என்பதினை தெரிவுசெய்யுங்கள்.
7.பின்னர் தோன்றும் சாளரத்தின் (Window) இடது பக்க பகுதியில் Limit reservable bandwidth என்பதினை இரட்டை சொடுக்கின் மூலம் (Double Click) திறந்துகொள்ளுங்கள்.
8.பின்னர் தோன்றும் சாளரத்தில் (Limit reservable bandwidth Properties Window) Setting என்னும் பகுதியில் Enabled என்பதினை தெரிவுசெய்யுங்கள். ( முன்னர் இதில் Not Configured என்பது தெரிவுசெய்யப்பட்டிருக்கும்.)
9.Enabled என்பதினை தெரிவுசெய்தபின் Bandwidth limit(%) என்னும் இடத்தில் 0 (Zero) என்பதினை வழங்குங்கள். ( அதில் ஏற்கனவே 20 ஆகக்காணப்படும்)

Gmail இன் Google Buzz என்னும் தொடர்பாடல் துறைக்கான புதியதொரு சேவை

Google Buzz எனப்படும் இச்சேவையானது twitter, lite facebook போன்று நுண்ணிய பதிவுகளை (Micro blogging) பிறருடன் பகிர்ந்து கொள்ளவென உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சேவையினூடாக புகைப்படங்கள்,காணொளிகள்,போன்ற பல்வேறுபட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த சேவையை எமது Gmail முகப்பு பக்கத்தில் Inbox,Sent mail,Spam போன்ற பகுதிகளுடன் இணைந்து காணப்படும். இது எல்லோரினதும் Gmail இல் உடனடியாக தோன்றாது. (எனது முகப்பு பகுதியிலும் இதுவரை தோன்றவில்லை)காலப்போக்கில் இது தோன்றும் என Google அறிவிப்பு செய்துள்ளது. ஆனால் இந்த சேவைக்குரிய உங்களது தனிப்பட்ட கணக்கை நீங்கள் உருவாக்கி கொள்ளமுடியும்.
Google Buzz இல் என்னை பின்தொடர எனது விபரம்: http://www.google.com/profiles/vanniinfo
Google Buzz இன் இணையச்சுட்டி: http://www.google.com/buzz

கணனியிலுள்ள வைரஸ் மென்பொருள் (Anti Virus) ஒழுங்காக வேலை செய்கின்றதா என பரிசோதித்து(Check) பார்ப்பது எப்படி?

உங்கள் கணனியில் நீங்கள் நிறுவியிருக்கும் Anti-Virus மென்பொருளானது சிலவேளைகளில் அதனுடைய செயற்பாட்டை இழந்தோ அல்லது புதிய வைரஸ்களை இனங்கான முடியாமலோ இருக்கலாம். அத்தகைய நேரங்களில் உங்கள் கணனியிலுள்ள Anti-Virus மென்பொருளை பரிசோதித்து பார்ப்பதற்கான வழிமுறைதான் இது.
முதலில் Notepad ஐ திறந்து கொள்ளுங்கள் (open Notepad)
கீழே தரப்பட்டுள்ள Code ஐ பிரதி செய்து Notepad இல் இடுங்கள்.
(Copy this Code in text file)
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
இதனை fakevirus.exe என்னும் பெயரில் சேமித்து கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் சேமித்த இந்த ஆவணமானது உடனே அழிக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே உங்கள் கணனியிலுள்ள Anti-Virus ஆனது ஒழுங்காக செயற்படுகின்றது.

கணனியில் விரைவாக கோப்புக்களை (Folders) திறப்பதற்கான வழிமுறை

உங்கள் கணனியில் கோப்புறைகளை (Folders) திறக்க அதிக நேரம் எடுக்கின்றதா? இதற்கு காரணம் உங்கள் கணனியின் இயங்குதளமானது (operating system) உங்கள் கணனியில் இணைக்கப்பட்டுள்ள வலையமைப்பு ஆவணங்கள் மற்றும் அச்சியந்திர இணைப்புக்களை ( Network files and printers) தானாகவே தேடி கண்டுபிடிக்க நேரம் செலவாகுதலாகும்.
இவற்றினை நிறுத்தி மிக விரைவாக கோப்புகளை(Folders) திறப்பதற்கான வழிமுறைகள் இதோ..
1. முதலில் My Computer ஐ திறவுங்கள்.( open My Computer)
2. Tools Menu வில் அழுத்துங்கள்.
3. Tools menu வில் Folder option என்பதினை அழுத்துங்கள்.
4. View Tab என்பதினை தெரிவு செய்யுங்கள்.
5. Automatically search for network folders and printers என்பது தெரிவு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கி விடுங்கள்.
6. Apply செய்து OK பண்ணுங்கள்.
இப்பொழுது உங்கள் கணனியில் நீங்கள் விரைவாக கோப்புறைகளை திறக்க கூடியதாக இருக்கும்.

கூகிளின் GO என்னும் கணனி நிரலாக்க மொழி

தேடல் துறையில் பல புரட்சிகள் படைத்து உலகையே கட்டிப்போட்டிருக்கும் கூகிள் மேலும் பல்வேறுபட்ட புதிய படைப்புக்களான இயங்குதளம்(Google OS),இணைய உலாவி(google Chrome), கூகிள் அலை(Google Wave) போன்ற பல்வேறுபட்ட புதியனவற்றை அறிமுகப்படுத்தி வரும் கூகிள் கணனி நிரலாக்க மொழித்துறையிலும் காலடி பதித்துள்ளது.
GO என்னும் திறந்த இலவச கணனி நிரலாக்கமொழியினை(Open Source programming lanuage) அண்மையில் அறிமுகப்படுத்தி வெளியிட்டிருக்கின்றது.
இவ் கணனி நிரலாக்க மொழியானது உலகில் மிகவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் C என்னும் நிரலாக்க மொழிக் குடும்பத்தினை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவ் நிரலாக்க மொழியானது Python and the Pascal/Modula/Oberon போன்ற மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியாகவுள்ளமை இதிலுள்ள ஒரு சிறப்பம்சமாகவுள்ளது.அத்துடன் இந்த நிரலாக்க மொழியானது மென்பொருள் கட்டுமான துறைக்கென(Building software) விசேட விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இவ் நிரலாக்க மென்பொருளின் பயிற்சிகளும் விளக்கங்களுக்குமான இணையச்சுட்டிகள் இங்கே தரப்பட்டுள்ளன.
http://golang.org/
http://golang.org/doc/go_faq.html
அழிக்க முடியாதவாறு கோப்புக்களை (Folders) எவ்வாறு உருவாக்குவது?

முக்கியமான ஆவணங்கள் அடங்கிய கோப்புக்களை (Folders) மற்றவர்கள் அழிக்கமுடியாதவகையில் மிக இலகுவான முறையில் எந்த மென்பொருளின் உதவியுமின்றி உருவாக்கலாம்.
இத்தகைய கோப்புக்களை (Undeleteable Folders) DOS Command Prompt மூலமாக மட்டும்தான் உருவாக்கமுடியும். அத்தகைய கோப்புக்களை சாதாரணமாக எவரும் அழிக்கமுடியாது. அவ்வாறு அழிப்பதாயின் DOS Command Prompt வழியே சென்றுதான் அழிக்கமுடியும்.
இதோ அதற்கான வழிமுறைகள்.
1. முதலில் DOS Command Prompt ஐ திறவுங்கள்.(Open DOS Command prompt)
(Start>Run>(type) 'cmd' )

2. பின்னர் கோப்பு (folder) சேமிக்கவேண்டிய இடத்தினை (C: or D:) தெரிவு செய்த பின்னர் Command Prompt இல் 'md\aux\' என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.( கோப்புக்களை உருவாக்க நீங்கள் (aux,lpt1,con,lpt5) போன்ற பெயர்களைமட்டுமே பாவிக்க முடியும்.)

3. தற்பொழுது aux என்ற கோப்பானது (folder) உங்கள் கணனியில் நீங்கள் தெரிவுசெய்த இடத்தில் (directory: C: or D:) சேமிக்கப்பட்டிருக்கும்.

4. தற்பொழுது அந்த கோப்பினை அழிக்க முயற்சி செய்து பாருங்கள். அது கீழே உள்ளவாறான தகவலை உங்களுக்கு தரும்( Error Message).

5. இத்தகைய கோப்புகளை உருவாக்குவதற்கான பிற பெயர்கள். ( நீங்கள் கோப்புக்களை உருவாக்க வேண்டுமாயின் இத்தகைய பெயர்களையே பாவிக்க வேண்டும்.)
lpt1 (உதாரணம்: md\lpt1\),CON,lpt5,ஆக்ஸ்
6. கோப்பை அழிக்க வேண்டுமாயின் rd\aux\ என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.

எங்கே நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

கணணி திரையிலுள்ள(Desktop) சின்னங்களை (Icons) எவ்வாறு பூட்டி வைப்பது?-இலவச மென்பொருள்

கணணி திரையிலுள்ள (Desktop) சின்னங்களை (Icons) மற்றவர்கள் பாவிக்கமுடியாமல் கடவுச்சொல் (Password) கொடுத்து பாதுகாப்பாக பூட்டி வைக்கவென இலவச மென்பொருள் உள்ளது.
அதற்கான மென்பொருள் தான் Desklock. இந்த மென்பொருளை கணனியில் நிறுவி உங்கள் கணனித்திரையை பாதுகாப்பாக பூட்டி மற்றவர்கள் அவற்றை பாவிக்கமுடியாமல் செய்யமுடியும். இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணனியிலுள்ள சின்னங்களை (Icons) மற்றவர்கள் அதை ஒழுங்குபடுத்த முடியாமலும் செய்யமுடியும்.(drag and Drop).
மென்பொருள் தரவிறக்க சுட்டி: Desklock Download link

USB Devices ஐ பாதுகாப்பாக கணனியிலிருந்து அகற்றுவதற்கான ஒரு இலவச மென்பொருள்

USB Removable Devices ஐ எமது கணனியிலிருந்து பாதுகாப்பாக அகற்றுவது அவசியம். இல்லாதுவிடில் உங்கள் USB Drives களிலிருந்து சிலவேளைகளில்தரவுகளோ, கோப்புக்களோ( documents and folder) காணாமல் போகும் சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே உங்கள் கணனியிலிருந்து USB Devices பாதுகாப்பாக அகற்றப்படுவது மிக அவசியம்.

அவ்வாறு உங்கள் USB Devices ஐ பாதுகாப்பாகநீக்குவதற்கு என பிரத்தியேகமாக சில மென்பொருட்கள் உள்ளன. அத்தகைய ஒரு இலவச மென்பொருள் தான் USB Safely Remove.

மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியதன் (Install) பின்னர் கணனியில் System Tray இல் ICON ஒன்று தோன்றும். அதில் அழுத்தி (CLICK) USB Devices ஐ பாதுக்காப்பாக உங்கள் கணனியிலிருந்து அகற்றி கொள்ளுங்கள்.
மென்பொருள் தரவிறக்க சுட்டி: Download USB Safely Remove.

மற்றவர்களின் USB Drive இல் உள்ள தரவுகளை அவர்களை அறியாமலே திருடுவதற்கான மென்பொருள்:

உங்கள் இல் USB இல் உள்ள கோப்புகளையோ (Folders) அவர்களின் ஆவணங்களையோ (Documents) அல்லது உங்களுக்கு தெரியாத நபர்களின் USB Drive க்களில் உள்ள கோப்புக்களை,ஆவணங்களை அவர்கள் அறிந்து கொள்ளாமல் எவ்வாறு பிரதி (Copy) செய்து கொள்ள Copier என்னும் இந்த மென்பொருள் உதவுகின்றது.
(உங்களுக்கு விளங்கிற தமிழிலை சொன்னால் மற்ற ஆட்களின்ரை தரவுகளை திருடுறது.....எல்லாரும் ஒரு வகையிலை திருடர் தான்.)

அவர்கள் உங்கள் கணனியில் தங்கள் USB Drive களை பாவிப்பவர்களாயின் அவர்களின் சகல தரவுகள் யாவும் அவர்களை அறியாமலே பிரதி(Copy) செய்யப்பட்டுவிடும். அவர்களின் தரவுகள் பிரதி செய்யப்பட்டதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இருக்காது.
இந்த மென்பொருளானது ஆகக் கூடுதலாக 8GB அளவிலான தரவுகளையே திருடும். மன்னிக்கவும் பிரதி செய்யும். (திருடுறதிற்கும் ஒரு அளவு இருக்கு)
இந்த மென்பொருள் மூலம் பிரதி செய்யப்படும் தரவுகள் முன்னிருப்பு அடைவான (Default directory) "C:\WINDOWS\sysbackup\" என்னும் அடைவினுள் (Director) இல் சேமிக்கப்படும்.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Download USB Hidden File Copier
பெயரில்லாமல் கோப்புறையை(Folder) உருவாக்க முடியுமா?

பெயரில்லாமல் ஒரு கோப்புறையை (Folder) உங்களால் உருவாக்க முடியுமா? கணினியில் இருக்கும் ஒவ்வொரு கோப்பும்(File),கோப்புறையும்(Folder) ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில்(Windows) கோப்புறை (Folder) ஒன்றை அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும்.
பெயரை வழங்காதுவிடின் New Folder எனும் பெயரை விண்டோஸ் முன்னிருப்பாக(default) போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் கோப்புறையை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப Space Bar விசையையோ(Key) Delete விசையையோ(key) அழுத்தினாலும் New Folder எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும்.
நான் சொல்வது சரிதானா என்பதை கணினி முன்னே உட்கார்ந்து ஒரு முறை முயன்று பார்த்து விட்டு கீழே சொல்லப்படும் வழி முறையைப் படியுங்கள்.
முதலில் போல்டர் ஒன்றை உருவாக்குங்கள். அதன் பெயரை (text label) அழித்து விட்டு விசைப்பலகையில்(Keyboard) ‘Alt’ கீயை அழுத்தியவாறே இலக்கம் ‘255′ ஐ டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு கோப்புறை தோன்றக் காணலாம். இலக்கத்தை தட்டச்சு செய்ய விசைப்பலகையில் எண்ணியல் விசைப்பலகையையே(Numeric Keyboard) பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கோப்புறை(Folder) ஒன்றை கடவுச்சொல்(Password) கொடுத்து மற்றவர்கள் அதனைத் திறக்க முடியாமல் பாதுகாக்க முடியுமா?

Windows XP தொகுப்பிலேயே கோப்புறை(Folder) ஒன்றைப் கடவுச்சொல்(password) கொடுத்துப் பாதுகாக்க இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. Windows operating System க்கு என சில இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன் படுத்தும் நிரல்களும் உள்ளன.
1. உங்கள் அலுவலகக் கணனியில் உங்களுக்கென பயனர் கணக்குடன் (user Account) கடவுச்சொல் உள்ளதாக இருந்தால் . அதன் File System என்.டி.எப்.எஸ். (NTFS) ஆக இருக்கும்.
2. இனி எந்த கோப்புறைக்கு கடவுச்சொல் கொடுக்க வேண்டுமோ அதன் மீது Right Click செய்திடவும். பின் "Properties" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Alt அழுத்தியவாறே Double Click செய்திடவும்.
3. கிடைக்கும் விண்டோவில் Sharing என்று உள்ள Tab ஐத் தேர்ந்தெடுக்கவும். அதில் Make this Folder Private என்று உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
4. பின் Apply என்பதில் சொடுக்கவும். உங்களுடைய கணக்குக்கு கடவுச்சொல் இல்லை என்றால், ஒரு சிறிய பெட்டிச் செய்தி வரும். கடவுச்சொல் ஒன்றை தரப்போகிறீர்களா? என்று கேட்கப்படும். உங்கள் கோப்புறையை நீங்கள் Private ஆக மாற்ற வேண்டும் என்றால் இந்த கடவுச்சொல்லினைக் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டும். இவ்வாறு கொடுத்துவிட்டால் பின் கணனியில் உங்கள் கணக்கில் நுழைகையிலும் அதே கடவுச்சொல்லினை கொடுக்க வேண்டியதிருக்கும்.
5. கடவுச்சொல் ஒன்றைக் கொடுத்துப் பின் அதனை உறுதிப்படுத்தவும். பின் Create Password என்பதை அழுத்தி கடவுச்சொல் விண்டோவினை மூடவும்.
6. பின் Properties எனும் Dialog Box இல் OK என அழுத்தவும்.
7. இனி உங்கள் கடவுச்சொல் இல்லாமல் இந்த போல்டரை யாரும் திறக்க முடியாது. இரண்டாவதாக ஒரு வழி: இந்த கோப்புறை Zip செய்யப்பட்டிருந்தால் அதற்கு தனியாக கடவுச்சொல் ஒன்றினைக் கொடுக்க முடியாது. இதற்கு Zip செய்யப்பட்ட கோப்புறை மீது இருமுறை அழுத்திடவும். மேலாக உள்ள பட்டியலில் (menu) File தேர்ந்தெடுத்து, பின் ‘Add a Password’ என்பதில் சொடுக்கவும். கடவுச்சொல் பெட்டியில் கடவுச்சொல் ஒன்றை கொடுக்கவும். மீண்டும் Confirm Password பெட்டியிலும் இதனை கொடுக்கவும். இனி இந்த கோப்புறையை நீங்கள் மட்டுமே கடவுச்சொல் பயன்படுத்திப் பார்க்க முடியும்.
கணனியின் வேகத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளில் இதுவும் ஒன்று.

கணணியை இயக்க தொடங்கும்போது(Log on) உங்கள் கணனியானதுதொடங்குநிலைக்கு(Start up) செல்ல கூடிய நேரம் எடுக்கின்றதா?அதற்கான காரணம் நீங்கள் உங்கள் தொடங்குநிலை பட்டியலில்(Start up menu) கூடிய தகவல்களை வைத்திருப்பதுதான். அவற்றிக்கான தீர்வு அத்தகைய தகவல்களை உங்கள் தொடங்குநிலையிலிருந்துஅகற்றுவது தான் சரியான வழி.
அதற்கு நீங்கள் செய்யவேண்டியது Run கட்டளை என்ற (Run command window) msconfig என தட்டச்சு செய்யுங்கள்.

OK என்பதினை அழுத்துங்கள்.
பின்னர் வரும் சாளரத்தில்(Window) Startup என்ற Tab தெரிவுசெய்யுங்கள்

அதில் தொடங்குநிலையில்(start up menu) என்ன தகவல்கள் இருக்க வேண்டும் என்பதினை தெரிவுசெய்து விட்டு தேவையற்றவை என நீங்கள் கருதும் தகவல்களை நீக்கிவிடுங்கள்.
இப்பொழுது உங்கள் கணனியை மீள ஆரம்பிக்கவும்(Restart).
இப்பொழுது உங்கள் கணனியில் வேகத்தின் மாற்றத்தை உணருவீங்கள்.
கணனியில் ஆவணங்கள்(Documents), படங்களை(Pictures) ,கோப்புறைகளை(Folders) எவ்வாறு விரைவாக திறப்பது?

Internet Explorer அனைத்து வகை ஆவணங்களையும் திறக்கும். Internet Explorer ஆனது கணனியில் உடனடியாக திறபடக்கூடியதாக இருக்கும். ஆனால் படங்களைத் திறக்கும் Picture Manager, Adope photoshop போன்ற Applications programs திறக்கப்பட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
இ

(கணனியில் தமிழின் பாவனையை அதிகப்படுத்தும் முயற்சிக்கு உதவிடும் வகையில் இங்கு சில இடங்களில் கணனியின் தமிழ்க்கலைச்சொற்களை பயன்படுத்தியிருக்கிறேன்.)
சிஸ்டம் பாஸ்வேர்ட்(System password) மறப்பவர்களுக்கு.

போன் மூலமாகவும் கடிதம் மூலமாகவும் பல வாசகர்கள் என் சிஸ்டம் பாஸ்வேர்டை மாற்றினேன்; அல்லது பல நாட்களாக கம்ப்யூட்டரைத் தொடவில்லை. அதனால் பாஸ்வேர்ட் மறந்து போச்சு. என்ன செய்யலாம்? என்றெல்லாம் கேட்கின்றனர். இவர்களுக்கு ஒரு அருமருந்து ஒன்று தரப்போகிறேன்.பாஸ்வேர்ட் டைப் செய்கிறோம். சில வேளைகளில் தவறாக டைப் செய்கிறோம். சில வேளைகளில் மறந்து போய் பழைய பாஸ்வேர்ட் அல்லது வேறு ஒரு பாஸ்வேர்ட் கொடுக்கிறோம். இதற்குப் பதிலாக ஒரு பிளாப்பி அல்லது யு.எஸ்.பி. டிரைவில் பாஸ்வேர்டைப் போட்டு வைத்து அதனைச் செருகி கம்ப்யூட்டரை ஆன் செய்தால் அதுவே பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவிலிருந்து பாஸ்வேர்டை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? ஆஹா! என்கிறீர்களா! கீழே படியுங்கள். ஆஹா அஹஹா!! என்பீர்கள்.இந்த டிஸ்க்கிற்குப் பெயர் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் (Password Reset Disk) ஆகும். இந்த டிஸ்க் நீங்கள் பிளாப்பி டிஸ்க் அல்லது யு.எஸ்.பி. டிரைவ் வைத்துப் பயன் படுத்தினால் தான் சரியாக இருக்கும்.
1.முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும்.
2. அதன்பின் யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. இதில் உங்கள் அக்கவுண்ட்டில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரினைப் பார்க்கவும். இதில் Prevent a Forgotten Password என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
5. இனி Forgotten Password விஸார்ட் கிடைக்கும்.
6. இனி உங்கள் பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவினைச் செருகவும்.
7. தற்போதைய விண்டோஸ் எக்ஸ்பி யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்டினை டைப் செய்திடவும். பின் Nஞுதுt அழுத்தவும். சில நொடிகளில் உங்கள் Password டிஸ்க் ரெடியாகிவிடும்.
8. இனி விஸார்டில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
9. இதில் Password Reset Disk என எழுதி வைக்க மறக்க வேண்டாம். இதனை எப்படி பயன்படுத்துவது? எப்போதாவது உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போய்விட்டதா?
1.வெல்கம் ஸ்கிரீன் வந்தவுடன் உங்கள் யூசர் நேம் கிளிக் செய்து என்டர் அழுத்தவும்.
2. அடுத்து ஒரு மெசேஜ் கிடைக்கும். அதில் உங்கள் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்கினை செருகவும் என்று இருக்கும்.
3. அடுத்து "Use your password reset disk" என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும்.
4. மீண்டும் Password Reset Wizard என்ற விஸார்ட் திறக்கப்படும். தொடர்ந்து புதிய பாஸ்வேர்ட் அமைப்பதற்கான வழி முறை கிடைக்கும். அதனைப் பின்பற்றவும். புதிய பாஸ்வேர்ட் ஒன்றி னை அமைத்து இயக்கலாம்.
5. இனி மீண்டும் ஒரு Password Reset Disk தயாரிக்க வேண்டியதில்லை. இதனையே எப்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போகிறதோ அப்போதெல்லாம் இதனைப் பயன்படுத்தலாம். விஸ்டாவிலும் இதே போல நடைமுறையே கடைப்பிடிக்கப்படுகிறது.
நன்றி:தினமலர் கம்ப்யூட்டர்மலர்.

Registry என்றால் என்ன?
விண்டோஸ் இயங்கு தளத்தில் ரெஜிஸ்ட்ரி (பதிவகம்) என்பது ஒரு தரவுத் தளம். புதிதாக ஒரு வன்பொருளை அல்லது மென்பொருளை கணினியில் நிறுவும்போது அல்லது நீக்கும்போது அவை பற்றிய விவரங்களை தொடர்ச்சியாகப் பதியப்படும் ஒரு தரவுத் தளமே இந்த ரெஜிஸ்ட்ரி. கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய விவரங்கள் ரெஜிஸ்ட்ரியிலேயே பதியப்படுகின்றன.விண்டோஸில் என்னென்ன செட்டிங்ஸ் செய்யப்பட்டுள்ளன, கணினியை இயக்கியதும் எந்த எப்லிகேசன்களை ஆரம்பிக்க வேண்டும், ஒவ்வொரு பயனரும் என்ன செட்டிங்ஸ் வைத்திருக்கிறார், பல்வேறு எப்லிகேசன்களாலும் உருவாக்கப்படும் பைல் வகைகள் என்ன போன்ற் பல்வேறு தகவல்களை ரெஜிஸ்ட்ரி பதிந்து கொள்கிறது.டெஸ்க்டொப்பில் நீங்கள் காண்பவற்றையும், ஸ்டார் மெனு மற்றும் டாஸ்க் பார் என்பன எவ்வாறு இயங்குகின்றன, இயங்கு தளம் எவ்வாறு ஆரம்பிக்கின்றது என்பதனையும் ரெஜிஸ்ட்ரியே தீர்மாணிக்கின்ற்து.விண்டோஸ் 95 ற்கு முந்திய பதிப்புகளில் .ini (initialization) எனும் பைல் இந்த செயற்பாடுகளைத் தீர்மாணித்தன. இதற்கு மாற்றீடாகவே இந்த ரெஜிஸ்ட்ரி உருவாக்கப்பட்டுள்ளது.விண்டோஸ் கண்ட்ரோல் பேனலில் ஒருவர் மாற்றங்கள் செய்யும்போது தன்னையறியாமலேயே ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்கிறார். ரெஜிஸ்ட்ரியில் நாமாகவும் மாற்றங்கள் செய்யலாம்.ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்கள் செய்வதில் மிகுந்த அவதானம் தேவை. சராசரி கணினிப் பயனர்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்கள் செய்யாமலிருப்பதே நல்லது. ஏனெனில் நீங்கள் விடும் ஒரு சிறிய தவறும் கணினியில் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்வதற்கு முன்னர் ஒரு முன்னேற்பாடாக அதனை பேக்கப் (Backup) செய்து கொள்ள வேண்டும் அல்லது ஒரு ரீஸ்டோர் பொயிண்டை (Restore Point) உருவாக்கிக் கொள்ள வேண்டும். (பேக்கப், ரீஸ்டோர் பற்றி ஏற்கனவே இந்தப் பகுதியில் சொல்லியிருக்கிறேன்)எப்லிககேசன்களை முறையாக நீக்கப்படாதபோது ரெஜிஸ்ட்ரியில் அது பற்றிய தகவல்கள் சிதறலாக தேங்கியிருக்கும். இதனால் கணினியின் இயக்கத்தில் மந்த நிலை தோன்றும். அல்லது அடிக்கடி பிழைச் செய்திகளைக் (Error Messages) காண்பித்து எரிச்சலூட்டும். சில வேளை கனினி இயக்கமற்று முடங்கிப் போகவும் கூடும்.ரெஜிஸ்ட்ரியில் ஏற்படும் வழுக்களை நாமாக சரி செய்யவும் முடியும். அவற்றைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வென (Registry Cleaners) ரெஜிஸ்ட்ட்ரி க்ளீனர்ஸ் எனும் ஏராளமான மென்பொருள் கருவிகளும் பாவனையில் உள்ளன.மாதத்தில் ஒரு முறையேனும் இந்த ரெஜிஸ்ட்ரி க்ளீனரை இயக்கி ரெஜிஸ்ட்ரியில் ஏற்படும் பிழைகளை நீக்கிக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அடிக்கடி மென்பொருள்களை நிறுவுதல், நீக்குதல், பிழைச் செய்திகள் அடிக்கடி தோன்றுதல், கணினியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படல் போன்ற சந்தர்ப்பங்களில் ரெஜிஸ்ட்ரி க்ளீனரை அடிக்கடி இய்க்கிக் கொள்ளுதல் நல்லது. சில ரெஜிஸ்ட்ரி க்ளீனர்களில் உரிய கால இடைவெளிகளில் தானாகவே இயங்கும் வசதியும் இணைக்கபட்டிருக்கும். இந்த வசதி இல்லையாயின் விண்டோஸிலுள்ள ஸ்கெடியூல்ட் டாஸ்க் (Scheduled task) எனும் வசதியைப் பயன் படுத்தலாம்.ரெஜிஸ்ட்ரி கட்டமைப்புரெஜிஸ்ட்ரியானது ஐந்து தனியான கட்டமைப்புகளைக் கொண்டது. இவை ரெஜிஸ்ட்ரி தரவுத் தளத்தை முழுமையாகாப் பிரதி நிதித்துவப் படுத்துகின்றன. இந்த ஐந்து பிரிவுகளும் கீஸ் (Keys) எனப்படுகின்றன. ஒவ்வொரு கீயும் பல உப பிரிவுகளையும், உப பிரிவிகள மேலும் பல உட் பிரிவுகளையும் உள்ளடக்கியிருக்கும். அத்தோடு ஒவ்வொரு கீயும் பல்வேறு பெறுமானங்களையும் கொண்டிருக்கும்.. இங்கு HKEY என்பது Handle to a Key என்பதைக் குறிக்கிறது.
1) HKEY_CURRENT_USER இந்த ரெஜிஸ்ட்ரி கீயானது தற்போது கணினியில் லொக்-இன் செய்துள்ள பயனருக்குரிய தகவல்களைக் கொண்டுள்ளது.
2) HKEY_USERS இந்த கீயானது விண்டோஸில் பயனர் கணக்கு உருவாக்கியிருக்கும் அனைத்து பயனர் பற்றிய விவரங்களைக் கொண்டிருக்கும்.
3) HKEY_LOCAL_MACHINE இது கணினி பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்டிருக்கும்
4) HKEY_CLASSES_ROOT இங்கு பதியப்படும் தகவல்கள், ஒரு பைலை திறக்கும்போது அதனை எந்த எப்லிகேசனுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களைக் கொண்டுள்ளது..
5) HKEY_CURRENT_CONFIGடீவைஸ் ட்ரைவர். டிஸ்ப்லே ரெஸ்லுயூசன் மற்றும் எப்லிகேசன்கள் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது.ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்ய ரெஜிஸ்ட்ரி எடிட்டரை அணுக வேண்டும். அதற்கு ஸ்டாட் மெனுவில் ரன் தெரிவு செய்து Regedit என டைப் செய்யுங்கள் அப்போது Registry Editor விண்டோ தோன்றக் காணலாம்..

கணணியை சுத்தப்படுத்த 10 வழிமுறைகள்

கம்ப்யூட்டரைப் பராமரிப்பதற்கான செலவினைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றால் அதனை அவ்வப்போது சுத்தப் படுத்தி வைத்திருக்க வேண்டும்.பலர் கம்ப்யூட்டரின் சிபியு கேபினட்டை டேபிளின் அடியில் சிறு பெட்டி போன்ற அமைப்பில் வைத்து .அதற்குக் கதவும் வைத்து பூட்டி விடுவார்கள். பின்புறமாக கேபிள்கள் இணைக்கப் பட்டிருக்கும் டேபிளை சுவர் ஓரமாக வைத்துவிட்டால் சிபியு கேபினட்டை சுத்தம் செய்வதனையே மறந்து விடுவார்கள். விளைவு? ஒரு நாள் கம்ப்யூட்டர் பூட் ஆகாது. சுத்தம் செய்யாததால் தூசியும் ஈரமும் சேர்ந்து மதர்போர்டு அல்லது இணைக்கும் வயர்கள் கெட்டுப் போயிருக்கலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளைக் கடைப்பிடித்தால் கம்ப் யூட்டருக்குப் பாதிப்பு வருவதைத் தடுக்கலாம்.
1. உங்கள் கம்ப்யூட்டரை எப்போ தும் தரையில் வைத்து இயக்க வேண்டாம். கம்ப்யூட்டர் டேபிள் அல்லது ஷெல்ப் மீது வைத்து பயன்படுத்த வேண்டும்.
2. கம்ப்யூட்டரைச் சுத்தம் செய்திடும் முன் கம்ப்யூட்டருக்கு வரும் மின் சக்தியை நிறுத்தவும். சிபியூவிற்குச் செல்லும் அனைத்துக் கேபிள்களையும் எது எது எங்கு மாட்டப்பட்டுள்ளது என்பதைக் குறித்துக் கொண்டு கழற்ற வும்.
3. இப்போது வேக்குவம் கிளீனர் போன்ற சாதனம் அல்லது சைக்கிளுக்கு காற்றடிக்கும் பம்ப் போன்றவற்றை வைத்து காற்றை கேபினுக்குள் அடிக்கவும். காற்று தரும் முனை அரை அடியாவது விலகி இருக்க வேண்டும். நன்றாக அனைத்து தூசியும் வெளியே வரும் வகையில் இந்த ட்ரீட்மெண்ட் கொடுக்கவும்.
4. இறுதியில் கம்ப்யூட்டர் கேபினுக்கு வெளியே ஈரத் துணி கொண்டு அனைத்தையும் அழுத்தம் தராமல் துடைக்கவும். கிளினிங் ப்ளூயிட் இருந்தால் அதனை லைட்டாக ஸ்பிரே செய்து அது உலர்ந்தவுடன் பேப்பர் டவல் கொண்டு சுத்தம் செய்திடவும்.
5. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் கம்ப்யூட்டர் உள்பாகத் தினை அல்லது மதர் போர்டினை ஈரத் துணி கொண்டு துடைக்கக் கூடாது. உள்ளே ஸ்பிரே செய்யக் கூடாது.
6. கம்ப்யூட்டரில் செயலாற்றுகை யில் அதன் அருகே டீ, காபி கப் வைத்தல், குடித்தல் போன்றவை கூடாது. சிறிய பின், கேர் பின், ஜெம் கிளிப் போன்றவற்றை கீ போர்டு அல்லது சிபியூவின் மேல் வைத்தல் கூடாது.
7. கீ போர்டினைக் கிளீன் செய்கையில் அதிகக் கவனம் தேவை. கீ போர்டை அதன் இணைப்பை விலக்கி விட்டு தலைகீழாகத் திருப்பி மெதுவாகத் தட்டவும். உள்ளே நுழைந்து குடி இருக்கும் சிறிய துகள்கள் மற்றும் தூசி வெளியே வரும். பின் நெட்டு வாக்கில் இரு புறமும் நிறுத்தி தட்டலாம். இனி வேக்குவம் கிளீனர் அல்லது அது போன்ற சாதனத்தைக் கொண்டு காற்றை உள் செலுத்தி சுத்தம் செய்யலாம். கீ போர்டின் மேலாக கிளீனிங் ப்ளூயிட் நனைத்த துணியைக் கொண்டு சுத்தம் செய்திடலாம். பின் ஈரத் துணி கொண்டு சுத்தப்படுத்தலாம். மெம்ப் ரேன் கீ போர்டாக இல்லாமல் மெக்கானிக்கல் கீ போர்டாக இருந்தால் கீ போர்டின் பின்புறம் உள்ள ஸ்குரூக் களைக் கழற்றி உள்ளே இருக்கும் போர்டில் உள்ள தூசியினைத் துடைத்து எடுக்க லாம். மெம்ப்ரேன் எனில் அதனைச் சரியாக மீண்டும் பொருத்துவது கடினம். எனவே கழட்டாமல் இருப்பது நல்லது. தூசி நிறைந்த சூழ்நிலையில் நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குபவராக இருந்தால் கீ போர்டுக்கென விற்பனை செய்யப் படும் பிளாஸ்டிக் கவரினைக் கொண்டு கீ போர்டை மூடி இயக்குவது நல்லது. எப்படி இருந்தாலும் மாலையில் அல்லது இரவில் பணி முடித்துச் செல்கையில் கீ போர்டுக்கான கவர் போட்டு மூடவும். பெரும்பாலும் ஐவரி வண்ணத்தில் கீ போர்டுகள் உள்ளன. கறுப்பு வண்ணத்திலும் கிடைக்கின்றன. ஐவரி வண்ணத்தில் இருந்தால் அடிக்கடி துடைத்தால் தான் அழுக்கு படிவது தெரியாது. வெகுநாட் களாகத் துடைக்காமல் இருந்து அது மஞ்சள் அல்லது கருப்பாகிப் போனால் பின் என்ன அழுத்தி துடைத்தாலும் பழைய வண்ணம் கிடைக்காது.
8. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன் பாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் உண்டென்றால் அது மவுஸ்தான். எனவே தான் அதனைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் தேவை. மவுஸ் பல திசைகளில் நகர்வதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால் அதனை அவசியம் சுத்தம் செய்திட வேண்டும். முதலில் மவுஸைக் கழட்ட வேண்டும். ட்ராக் பால் மவுஸாக இருந்தால் அதன் மேலாக உள்ள சிறிய வீல் போன்ற பாகத்தினை ஆண்டி கிளாக் வைஸ் திசையில் திருகினால் தனியே வந்துவிடும். ட்ராக் பாலும் வெளியே வரும். நிச்சயம் அந்த சிறிய பந்தில் நிறைய அழுக்கு சேர்ந்து கருப்பாகி இருக்கும். இதனைத் தண்ணீர் அல்லது கிளீனிங் லிக்விட் போட்டு துடைக்க வேண்டும். அது இருந்த இடத்தில் சிறிய கம்பிகள் இரண்டு தெரியும். இதில் சிறிய முடி அல்லது அழுக்குகள் சேர்ந்திருக்கும். இதனையும் முழுமை யாகச் சுத்தப்படுத்த வேண்டும். இனி ட்ராக் பாலினை அதன் இடத்தில் வைத்து மேலாக வீல் போன்ற பிளாஸ்டிக் வளையத்தை வைத்து கிளாக் வைஸ் திசையில் சிறிது சுழட்டினால் அது கெட்டியாக அமர்ந்து கொள்ளும். இனி மவுஸைப் பயன்படுத்துவது இலகுவாக இருக் கும். பிற வகை மவுஸ்களைச் சாதாரணமாக அதன் வெளிப்புறத்தில் துடைத்தால் போதும்.
9. மானிட்டரையும் தரையில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. மானிட்டரின் பின்புறம் உள்ள கவரை எப்போதும் கழட்டக் கூடாது. அழுத்தமான காற்றை பின்புறம் இருந்து முன் புறமாகச் செலுத்தினால் தூசு தானாக வெளியேறும். இதைப் பலமுறைச் செயல் படுத்தி தூசியை வெளியேற்ற வும். பின் ஈரத்துணி அல்லது கிளீனிங் லிக்விட் பயன் படுத்தி மானிட்டரின் வெளிப் பாகம் மற்றும் திரையைச் சுத்தம் செய்யலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிய துளைகளின் வழியாக எதுவும் ஸ்பிரே செய்யக் கூடாது.
10. ஆர்வக் கோளாறினால் எந்த துணை சாதனத்தையும் கழற்றிப் பார்க்கக் கூடாது. பின் மீண்டும் அதனை மாட்டுவது கடினமாகிவிடும்.
அழிக்க முடியாமல் இருக்கும் File களை அழிப்பதற்கு ஒரு மென்பொருள்(softare)-Unlocker
பலமுறை நாம் ஏதேனும் பைல்களை(Files) அழிக்க முற்படுகையில் சில எரிச்சலூட்டும் செய்திகள் காட்டப்பட்டு நம் முயற்சியில் குறுக்கே நிற்கும். அந்த செய்திகள் பின்வருமாறு இருக்கலாம்:–
இன்னொரு புரோகிராம் இந்த பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளது.
பைலைப்(File) பகிர்ந்து கொள்வதில் வரையறை மீறப்பட்டுள்ளது. இன்னொரு புரோகிராம்(Program) அல்லது இன்னொரு User இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். டிஸ்க்(Disk) முழுமையாக இல்லை அல்லது எழுதப்படவிடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. பைல் இப்போது பயன்பாட்டில் இல்லை.
Source அல்லது Destination File ஒருவேளை பயன்பாட்டில் இல்லை.
இதில் என்ன சோகம் என்றால் இன்னொரு புரோகிராம் பயன்படுத்துவதாக செய்தி வருகையில் நாம் கம்ப்யூட்டரில் வேறு எந்த புரோகிராமினையும் பயன்படுத்தாமல் இருப்போம். என்ன புதிராக உள்ளதே என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்போம். இன்னொரு யூசர் எங்கே இருக்கிறார்? இது யாரைக் குறிக்கிறது என்று வியப்பில் இருப்போம். இதெல்லாம் கம்ப்யூட்டரில் சில செட் அப் அமைப்பின் காரணமாக நமக்கு வரும் செய்திகள். பொதுவாக இது போன் ற செய்திகள் வருகையில் பைலை அழிக்கும் வேலையையே விட்டுவிடுவோம்; அல்லது ரீஸ்டார்ட் செய்து பைலை அழிப்போம்.
இந்த வேலை இல்லாமல், கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடாமல் பைலை அழிக்க இலவசமாக ஒரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் (Unlocker)அன்லாக்கர். இதனை http://ccollomb.free.fr/unlocker/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இதனை எளிதாக டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்திடலாம்.
இன்ஸ்டால் செய்த பின் நீங்கள் அழிக்க விரும்பும் பைல் அல்லது போல்டரில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.
கிடைக்கும் மெனுவில் Unlocker என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடுங்கள். நீங்கள் இலக்கு வைக்கும் பைல் மேலே சொல்லப்பட்ட காரணங்களால் லாக் செய்யப்பட்டிருந்தால் ஒரு சிறிய விண்டோ ஒன்று திறக்கப்படும்.
அதில் எந்த புரோகிராமினால் அல்லது யூசரால் எதற்காக லாக் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைக்கும்.
உடனே மிக எளிதாக “ Unlock All ” என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். பைல் இப்போது விடுவிக்கப்பட்டு டெலீட் செய்திட ஏதுவாக இருக்கும்.

posted by rameshram
No comments:
Post a Comment