Thursday, 24 July 2014

பயனுள்ள தளங்கள்

பயனுள்ள சில இணைய தளங்கள்!
தினந்தோறும், இணையத்தில் உலா வரும்போது நாம் கூகிள், யாஹூ, மைக்ரோசாப்ட், ட்விட்டர் போன்ற தளங்களை பார்வையிட்டிருப்போம் இதைவிட பயனுள்ள நம்முடைய தேவைக்கேற்ற பின்வரும் ஒருசில இணைய தளங்களுக்கு சென்று பயன்பெற்றிடுக
1. டேஸ்ட்கிட் (Tastekid): புதிய நூல்கள், திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், நூலாசிரியர்கள் ஆகிய வகைகளில் புதியதாக என்னவெல்லாம் உள்ளன என்றும் அவற்றைக் காணச் செல்ல வேண்டிய தளங்கள் குறித்தவிவரங்களும் (http://www.tastekid.com)என்ற தளத்திலிருந்து அறிந்துகொள்ளலாம்
2. ஆல்டர்னேட்டிவ் ட்டூ (Alternative To): ஏதேனும் ஒரு பயன்பாடு அல்லது சேவையை மனதில் நினைத்துக் கொண்டு, இதே போல ஒன்று இருந்தால் நல்லது என்று எண்ணும் நிலையில்http://alternativeto.net/ என்ற தளம் பயனுள்ளதாகவுள்ளது
கூகுள் ஒன்று மட்டுமே மிக,மிக நல்ல தேடு தளம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதைப் போல, ஏன், அதைக் காட்டிலும் சிறப்பாக தகவல்களைக் காட்டும் தளங்கள் பல உள்ளன. இவற்றின் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்கும். இதோ அவை:
3. ஜூங்கெல் (Joongel): :http://www.joongel. com/index.php என்ற இணையதளம் கூகிளைவிட சிறந்த தேடுபொறியாக பயன்படுகின்றது இது அனைத்து தேடுபொறிகளையும் வகைப்படுத்தி மொத்தமாக தருகிறது. அத்துடன், குறிப்பிட்ட சேவைகளை முன்னிறுத்தியும் முடிவு களைத் தருகிறது. இசை, படங்கள், சமுதாய மையங்கள், கிசுகிசு என அனைத்து பிரிவுகளையும் முதன்மைப் படுத்தித் தகவல்களைத் தருகிறது. இது  ஒரு தேடுபொறி மூலம் கிடைக்கும் தகவல்களை முதலில் தருகிறது. அதனைத் தொடர்ந்து, மேலும் வேறு வகை தகவல்கள் வேண்டுமாயின், எந்த தேடல் தளத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறது.
4.ஸ்குரூகிள் (Scroogle): http://www.scroogle.org/cgibin/scraper.htm. என்பது கூகிளைவிட மற்றொரு சிறந்த தேடுபொறியாகும் நாம் இணையத்தில் உலாவரும்போது குக்கீஸ் என்பதன்மூலம் நம்முடைய  கணினியில் பின்வருங்காலங்களில் உலாவருவதை எளிதாக இருப்பதற்காகப் தொடர்புடைய விவரங்கள் பதியப்படும். அதாவது நம்முடைய சொந்த விருப்பங்கள் கணினியில் பதிந்து வைக்கப்படும். மேலும் நாம் எந்தெந்த தளத்திற்கெல்லாம் செல்கிறோம் என்ற பட்டியலும் பதிந்து வைக்கப்படும். இவை இல்லாமல் நம்முடைய இணையஉலாவியை மேற்கொள்வதற்கு இந்த தளம் பயன்படுகின்றது.
5.டூப்ளெட் (Dooblet): என்ற தேடுபொறி  வாழ்கையை வண்ணமயமாக்க இருப்பதற்கான மாற்று வாய்ப்புகளை வழிகாட்டுகிறது.
இந்த டூப்ளெட்தேடுபொறியானது எந்த தலைப்பை கொடுத்தாலும் அதற்கான மாற்று வாய்ப்புகளை தேடித்தருகிறது. மற்ற தேடுபொறிகளில் குறிச்சொல்லை கொடுத்தால் தொடர்புடைய தேடல் முடிவுகளின் பட்டியல் வருவது போல டூப்ளெட்டில் குறிச்சொல்லை கொடுத்ததும் அதற்கான மாற்றுகள் பட்டியலிடப்படுகின்றன அதாவது பயன்பாட்டு மென்பொருளில் துவங்கி மருத்துவம், காப்புரிமை ,திரைப்படங்கள், தத்துவம் என எதைப்பற்றி வேண்டுமென தேடினாலும்,அவற்றுக்கு மாற்று வாய்ப்புகளை டூப்ளெட் பட்டியலிடுகின்றது.
பிரபலமாக இருக்கும் விண்டோவிற்கு மாற்று இருக்கிறதா என அறிய விரும்பினாலும் சரி லினக்ஸ்,ஆப்பிள், மெக்கின்டோஷ்   என்றவாறு மாற்றிருப்பதாக டூப்ளெட் பட்டியலிடுகின்றது  சிலவற்றுக்கு மாற்று கிடைக்கவில்லையெனில் கோபிக்காதீர்கள் என கெஞ்சும் டூப்ளெட் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் இவற்றுக்கும் மாற்றுகளை தேடித்தருகிறோம் என்கிறது. அது மட்டுமன்று;இது போன்ற தருணங்களில்,மன்னிக்கவும் மாற்று கைவசம் இல்லை,உங்களுக்கு தகுந்த மாற்று தெரிந்தால் பரிந்துரைக்கவும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
6.சூப்பர் குக் (Supercook): பொதுவாக, சமையல் குறித்து தகவல் தரும் தளங்கள் சில உணவுப் பண்டங்களின் பெயர்களை கூறி, அவற்றைத் தயாரிக்கும் வழிமுறை தகவல்களை அதாவது தேவையான  பொருட்கள், காய்கறிகள், மசாலாக்கள் , பிற பொருட்கள் குறித்தும், அவற்றைக் கொண்டு, அப்பதார்த்தத்தை எவ்வாறு தயார்செய்வது  என்றும் விளக்கமாக .விலாவாரியாகத் தருகின்றன. இதைப் படித்துவிட்டு,நாமும் மளிகை கடைகளுக்கு பொருட்களை வாங்கச் சென்றால். அக்கடைகளில் ஒன்று கிடைத்தால், மற்றொன்று கிடைக்காது. இதற்காக நாம் தேடிஅலைந்ததுதான் மிச்சமாகும்  அதனால் கடைசியில் நம்முடைய சமையல் ஆசையே வெறுத்து போய்விடும். ஆனால் http://www.supercook.com/ என்ற  தளம் சற்று வித்தியாசமானது. அதாவது நம்மிடம் என்னென்ன  பொருட்கள் உள்ளன என்று பட்டியலிடுமாறு கோரும் உடன் அவ்வாறு நம்மிடமுள்ள பொருட்களை உள்ளீடுசெய்து பட்டியலிட்டால். அவற்றைக் கொண்டு, என்னென்ன உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம் என்று விபரங்களை இந்த தளம் தருகிறது.
7. கீ எக்ஸ் எல் (keyxl): ஏதேனும் ஒரு பயன்பாட்டு மென்பொருளை உபயோகிக்கும்போது அதற்கான குறுக்குவழிவிசைகள் யாதென அறிந்துகொள்ள  http://www.keyxl.com/ என்ற தளம் பயனுள்ளதாக உள்ளது.
8. சி.எல்.1.ப்பி. நெட் (cl1p.net): இணைய வெளியில் உலாவரும்பேது பின்னர் படித்துக் கொள்ளலாம் என்ற வகையில் உரைகளை தேர்ந்தெடுத்து பதிவு செய்து வைத்துக் கொள்ள விரும்பும் நிலையில் . ஒவ்வொரு முறையும், உரையை தேர்ந்தெடுத்த பின்னர், ஏதேனும் வேர்ட் பயன்பாட்டினை ஒன்றைத் திறந்து, அதில் பதிந்து கோப்பிற்கு ஒரு பெயரிட்டு சேமித்து கொள்வதற்கு பதிலாக http://cl1p.net/ என்ற தளத்தில் பதிந்துகொம்டு பின்னர் இந்த தளத்திலிருந்து நாம் சேகரித்த  தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும் இதில் அதிகபட்சம் ஏழஉநாட்களுக்கு நாம் சேகரித்த தகவல்களை வைத்துள்ளது
9. நாம் பிறந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள :http://whathappenedinmybirthyear.com/ என்ற தளம் பயன்படுகின்றது.சரித்திர நிகழ்வுகளை அறிந்துகொள்ள இது ஒரு சிறந்த பயனுள்ளதளமாகும்

POSTED BY RAMESHRAM

No comments:

Post a Comment