Tuesday, 29 July 2014

பேஸ்புக்


பேஸ்புக் 127 கோடி நண்பர்களை எல்லாம் ஒரே பக்கத்தில் பார்க்க

பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே பக்கத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? பேச‌ஸ் ஆப் பேஸ்புக் இணையதளம் இதை தான் செய்கிறது.பேஸ்புக்கின் 120 கோடியே மேல் உறுப்பினர்களையும் ஒரே இடத்தில் பட்டியலிட்டு காட்டுகிறது இந்த இணையதளம்.அதாவது பேஸ்புக் பயனாளிகள் ஒவ்வொருவரையும் வரிசைப்படுத்தியிருக்கிறது.
இந்த தளத்தில் நுழைந்ததும் அந்த கால டிவியில் தடங்களுக்கு வருதுகிறோம் அறிவிப்பின் போது தோன்றும் கருப்பு வெள்ளை புள்ளிகளாக காட்சி அளிக்கும்.ஆனால் தளத்தில் எந்த இடத்தில் கை (மவுஸ்) வைத்தாலும் அங்கு ஒரு எண்ணிக்கை தோன்றும்.அது அந்த புள்ளிக்கான பேஸ்புக் பயனாளியின் எண்ணிக்கை. மேலும் கிளிக் செய்தால் அந்த பேஸ்புக் பயனாளியின் புகைப்பட மற்றும் பேஸ்புக் அறிமுகத்தை பார்க்கலாம்.
இப்படியாக பேஸ்புக்கின் முதல் நண்பர் ( வேறு யார் அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் ) உட்பட இப்போதைய புதிய உறுப்பினர்கள் வரை அனைவரது பேஸ்புக் அறிமுக விவர்த்தையும் இந்த ஒரு பக்கத்தில் காணலாம்.பேஸ்புக்கில் ஒருவர் இனைந்த நாளின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.பேஸ்புக்கில் இனையும் புதிய உறுப்பினர்களுக்கு ஈடு கொடுத்து இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.
இந்த பட்டியலில் உங்களையும் காணலாம். நீங்களும் உங்கள் நண்பர்களும் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என கண்டுபிடிப்பது சுவார்ஸ்யமான விளையாட்டாக இருக்கும்.
பேஸ்புக்கில் வெளிப்படையாக கிடைக்கும் தக்வல்கள் அடிப்படையிலேயே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதால் அந்தரங்க மீறல் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிற‌து.
எது எப்படியோ நீங்கள் பேஸ்புக் போன்ற தளத்தில் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால் எவரும் உங்களை பார்க்கலாம் என்பது தானே உண்மை.                                         http://app.thefacesoffacebook.com

பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்[facebook live]


பிரம்மாண்ட படங்களின் பாடல் வெளியீட்டுவிழா நிகழ்ச்சியை நேரடி
ஒளிபரப்பு செய்த காலம் எல்லாம் மாறி இப்போது நம் வீட்டு திருமண
நிகழ்ச்சியைக் கூட உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும்
சொந்தங்களுக்கும் நேரடியாக இணையம் மூலம் காட்டலாம்.
பேஸ்புக் தன் பயனாளர்களுக்காக அவர்களது முக்கியமான
எல்லா நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பேஸ்புக்
லைவ் வீடியோ-வை அறிமுகப்படுத்தியுள்ளது. லைவ் ஸ்டிரிம்
என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த நேரடி ஒளிபரப்பை
 அனைத்து நண்பர்களும் நேரடியாக இருக்கும்
இடத்தில் இருந்தே பார்க்கலாம். இலவசமாக இந்த சேவையை
கொடுத்திருப்பதால் ஏற்கனவே சோசியல் நெட்வொர்க்-ல்
முன்னனியில் இருக்கும் பேஸ்புக் இனி யாரும் நெருங்க
முடியாத தனி இடத்தைப் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும்
இல்லை. பேஸ்புக் லைவ்-ல் வீடியோ பார்க்க விரும்பும்
நபர்கள் இந்த முகவரியைச் சொடுக்கி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் குறிபிட்ட ஒருவரின் அனைத்து போஸ்ட்களை ஓரிடத்தில் பார்க்கும் வசதி

இணைய உலகில் இன்று சமூக வலைதளங்கள் இன்று மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்டன. சில வருடங்களுக்கு முன்பு வரை இணையதளத்தில் இருவர் பேசிக்கொள்ள மெயில்கள் பயன்பட்டன. ஆனால் இன்று நிலமை வேறு. பெரும்பான்மையோர் சமூக இணையதளங்களே தஞ்சமென்று கிடக்கின்றனர்.
    சமூக இணையதளங்களில் பேஸ்புக்கின் பங்கு மிகப்பெரியது. சிலர் இணையதளம் பயன்படுத்துவது, பேஸ்புக் பயன்படுத்துவதற்காகதான் என்றாகிவிட்டது. சிலர் பேஸ்புக்கிற்கு அடிமையாகிவிட்டனர் என்று கூட சொல்லலாம் :)
    சில நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் முன், வேலைக்கு விண்ணப்பித்தவரை பற்றி உண்மையாக, முழுமையாக தெரிந்துகொள்ளும் நோக்கில் அவரின் பேஸ்புக் புரொபைலை பார்க்கின்றனர். இப்பொழுதெல்லாம் பெண்ணுக்கு மாப்பிளை
/மாப்பிள்ளைக்கு பெண் பார்க்கும் போதுகூட சிலர் இதையே பின்பற்றுகின்றனர். 
    இப்படி குறிப்பிட்ட ஒருவரின் போஸ்ட்களை அவரின் புரொபைலில் சென்று தேடிப்பிடித்து படிப்பது சற்று சிரமமாகவே இருந்துவந்தது. அந்த சிரமத்தை போக்க வந்துள்ள இணையதளமே FB TIME MACHINE. இதன் இணையதள முகவரிhttp://fbtimemachine.appspot.com
    நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த இணையதளத்திற்கு சென்று, உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் செய்து கொள்ள வேண்டும். திறந்த பின்பு எந்த நண்பரின் அனைத்து பதிவுகளையும் படிக்கவேண்டுமோ, அவரின் பெயரை குறிப்பிடவும். உடனே அவரின் “அனைத்து” பதிவுகளையும் காட்டும். இது பேஸ்புக் பிரியர்களுக்கும், பேஸ்புக் பயன்படுத்தும் “குறிப்பிட்ட ஒருவரை” பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கும் பயன்படும் ஒரு இணையதளம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப


மொபைலும் உபயோகிக்க வேண்டும்.அதேநேரம் நமது மொபைலில் இருந்தே இலவசமாக மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ்சும் அனுப்ப வேண்டும் இதற்கு சில நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ் சேவையுடன் கூடவே மொபைலுக்கான அப்ளிகேஷன்களையும் நமக்கு தருகின்றன.
பெரும்பாலானவர்களால் உபயோகிக்கப்படும் முதல் இடத்தில் இருக்கும் இலவச எஸ்.எம்.எஸ் இணையதளம் இதுதான். இந்த இணைய தளத்தில் இந்தியா மட்டுமல்லாது குவைத், சிங்கப்பூர், மலேசியா,யு.ஏ.இ என வெளிநாடுகளில் உள்ள மொபைல்களுக்கும் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.
இந்த இணையதளம் மொபைலுக்காகவே பிரத்யேகமாக தரும் அப்ளிகேஷனை நமது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டால் கணினி இல்லாமலேயே நமது மொபைலி லிருந்தே மற்றவர்களுக்கு இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். நோக்கியா, சாம்சங், சோனி எரிக்சன், எல்.ஜி, மோட்டோரோலா என பெரும்பாலான கம்பெனிகளின் மொபைல்களுக்கு இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது. பிளாக்பெர்ரி, ஐ-போன், ஆன்ட்ராய்டு ஆகிய ஒ.எஸ் கொண்ட மொபைல்களுக்கும் அதன் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது.
இந்த அப்ளிகேஷன் மொபைலின் போன்புக்கில் உள்ள நம்பர்களை தானாகவே இணைத்துக் கொள்வதால் நாம் எஸ்.எம்.எஸ் அனுப்புவது இன்னும் எளிமையாகிறது. இதன் ஒரே குறை 80  எழுத்துகளில் மட்டுமே எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.
அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.

நீங்கள் பிறந்து எத்தனை வருடங்கள்,நாட்கள்,நொடிகள் ஆகிறது என அறிய

நீங்கள் பிறந்து எத்தனை வருடங்கள் , நாட்கள் ,நிமிடங்கள் ,நொடிகள் ஆகிறது என்று அறிய ஆவலாய் இருக்கிறீர்களா .. எந்த இணையதளத்துக்கும் செல்ல வேண்டாம் ... இதில் உங்கள் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கொடுத்தால் உடனே உங்களுடைய வயது, கிழமை , நாட்கள் என அனைத்தையும் காட்டுகிறது.



Age Calculator
Month :
Day :
Year :

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு மிக முக்கிய அறிவுரைகள்

பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.

இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது. 

'data mining' எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள்  உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் . 

தங்கள் FACEBOOKஇல் உள்ள நண்பர்கள் பற்றிய கணக்கீட்டைப் பெற


தங்கள் Facebook கணக்கில் மொத்தம் எத்தனை நண்பர்கள் .... அதில் எத்தனைபேர் ஆண்கள் , எத்தனைபேர் பெண்கள் மற்றும் திருமணமான நண்பர்கள் எத்தனைபேர் , திருமணமாகாதவர்கள் எத்தனைபேர் என்பதுடன் உங்கள் சம வயதுக்காரர்கள் , உங்கள் Facebook கணக்கின் சுவர்ப்பக்கத்தில் அதிக பதிவிடுபவர் யார் என்ற தகவல்களோடு மேலும் பல தகவல்களை பெற ஆவலா?

இதற்கு முதலில் உங்கள் முகப்புத்தகக் கணக்கை திறந்துகொள்ளுங்கள். பின்னர் கீழ உள்ள இணைப்பை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் FACEBOOK பக்கத்தில் தோன்றும் விளம்பரங்களைத் தடுக்க



நீங்கள் FaceBook கணக்கைத் திறந்துபயன்படுத்தும்போது உங்கள் பக்கத்திலே பலவிளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக்காணலாம்இவ்வாறான விளம்பரங்கள் சிலருக்குஉபயோகமாயிருப்பினும் எம்மில் பலருக்குஇடையூறாகவோ  காணவும்படலாம்எனவேஇவ்வாறான விளம்பரங்களை எமது FaceBookபக்கத்திலிருந்து நீக்கினால் எப்படியிருக்குமென்றஎண்ணமும் பலருக்குத் தோன்றலாம்அதற்குதீர்வாக இப்பதிவு அமையமென எதிர்பார்க்கின்றேன்.

பேஸ்புக் கணக்கு ஒன்றை நிரந்தரமாக அழிக்க




Facebook கணக்கு ஒன்றை நிரந்தரமாக அழிக்கலாமா? ஆம் அழிக்கலாம். அதுவும் இலகுவாக அழிக்கலாம். 
பலர் பல தேவைகளுக்காக ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை Facebook இல் வைத்திருப்பார்கள். ஒரு நேரத்தில் இந்த கணக்குகள் அவர்களுக்கு தேவைப்படாமல் போகலாம். அல்லது சிலர் ஆரம்பத்தில் ஒரு கணக்கை வைத்திருந்துவிட்டு பின்னர் வேறு ஒரு கணக்கை உபயோகிக்கலாம். இதன்போது அவர்கள் தமது ஆரம்ப கணக்கை அழித்துவிட நினைக்கலாம். அப்படி நினைப்பவர்கள் யாரும் தமது கணக்கை நிரந்தரமாக அழிப்பதில்லை. தற்காலிகமாக Deactivate செய்துவிடுகிறார்கள். இப்படிச்செய்யும்ப்போது அவர்களது தரவுகள் அந்த கணக்கில் பேணப்படுகின்றன.

பேஸ்புக்கில் SHARE பண்ணிய புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை முழுமையாக நீக்க



முதலிடத்தில் இருக்கும் சமூக வலைத்தளம் பேஸ்புக், நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறது. பாவனையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல முன்னேற்றகரமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் அவ்வப்போது சில குறைபாடுகளையும் விட்டுச்செல்கிறது

அந்த வகையில் இப்போது பாவனையாளர்களால் பகிரப்படும் புகைப்படங்கள் தொடர்பிலும் சிறிய குறைபாடு ஒன்றை விட்டுள்ளது. அது என்னவெனில் நீங்கள் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துவிட்டு பின்னர் ஏதாவது காரணங்களால் நீக்கிவிட்டால் அந்த புகைப்படங்கள் பேஸ்புக்கில் இருந்து முற்றாக நீக்கப்படுவதில்லை.

பேஸ்புக் போட்டா ஆல்பம் முழுவதையும் ஒரே தடவையில் கணினிக்கு கொண்டு வர



ஏதாவது ஒரு தேவையின் நிமித்தம், இதுவரை நீங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றிய அனைத்து புகைப்படங்களையும் கணினிக்கு தரவிறக்கவேண்டிய சந்தர்ப்பம் உங்களுக்கு ஏற்படலாம். இதன்போது வழமையான முறையில் ஒவ்வொரு புகைப்படமாக தரவிறக்கிக்கொண்டிருப்பது இலகுவான விடயம் அல்லவே. ஒரு சில புகைப்படங்கள் என்றால் பரவாயில்லை. நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் என்றால்.


அதற்கும் இருக்கிறது ஒரு இலகுவான வழி. Facebook Album Downloader எனப்படும் Firefox add - on மூலமாக நீங்கள் விரும்பிய ஆல்பத்தை ஒரே கிளிக்கில் தரவிறக்கி கொள்ளலாம். 

கீழ் உள்ள இணைப்பில் சென்று (Firefox உலாவியில் மாத்திரம்)  Facebook Album Downloader  add - on ஐ தரவிறக்கி கொள்ளுங்கள்

பேஸ்புக்கில் நீங்கள் அனுப்பிய MESSAGEயை அனுப்பியவரின் INBOXஇல் அழிக்க


 ஒரே தடவையில் Message களை நிரந்தரமாக அழிக்கமுடியுமா? ஆம் முடியும். இதற்கென தற்போது ஒரு Google Chrome extension வந்துள்ளது.Facebook Fast Delete Messages எனப்படும் இந்த Extension ஐ உங்கள் Chrome இல் நிறுவிக்கொள்வதன் மூலம் அனைத்து Message ஐயும் ஒரே தடவையில் அழித்துக்கொள்ளலாம்.

இந்த Extension ஐ நிறுவியதும் உங்கள் Message பகுதிக்கு செல்லுங்கள். அங்கு ஒவ்வொரு Message இற்கு பக்கத்திலும் புதிதாகஎன்ற அடையாளம் தோன்றியிருக்கும்.

FACEBOOK CHAT HISTORYஐ DELETE செய்வது எப்படி?



Chat செய்வது எந்த அளவுக்கு நமக்கு உதவுகிறதோ அதே அளவுக்கு நமக்கு பிரச்சினைகளையும் கொண்டு வரும். யாரேனும் நம் அக்கௌன்ட்டை ஹாக் செய்தால் நாம் சாட் செய்த தகவல்களை அவர்கள் அறிய வாய்ப்பு உள்ளது. கடவுச் சொல் மற்றும் இன்னும் பல தகவல்கள் அதில் இருந்தால் பிரச்சினை எனவே இது போன்ற முக்கியமானவற்றை எப்படி Delete செய்வது என்று பார்ப்போம்.

1. உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து News Feed பகுதியில் Messages என்பதை கிளிக் செய்யவும்.

ஒரே நேரத்தில் ஒரு உலாவியில் பல பேஸ்புக் கணக்குகளை எவ்வாறு பயன்படுத்தல்?



உலாவி ஒன்றில் ஒரே நேரத்தில் எவ்வாறு பல Facebook கணக்குகளை கையாளலாம் என்று பார்ப்போம்.
இதற்காக கூகிள் குரோம் உலாவியையே பயன்படுத்த முடியும். ஏனெனில் கூகிள் குரோமின் நீட்சியை இங்கு நிறுவ வேண்டும். இது கையாள்வதற்கு மிகவும் சுலபமானது.
ஒருமுறை கணக்குக்குரிய மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் என்பவற்றைக் கொடுத்தால் போதும். அது உலாவியில் முறைமாற்றிச்(Encrypt) சேமிக்கப்பட்டுவிடும்.
ஐந்து வரையான Facebook கணக்குகளை கையாளலாம். (குறிப்பு: உங்கள் சொந்தப்பாவனையில் உள்ள கணணியில் செய்வதே சிறந்தது. ஏனெனில் இது எமது நேரத்தை மீதப்படுத்தும். ஆனால் மற்றவர்களும் எமது கணக்கை பயன்படுத்தலாம்.)

FACEBOOK நண்பர்களை தனித்தனியாக வேறுபடுத்தி பார்ப்பதற்கு



மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள சமூக வலைத்தளமான பேஸ்புக், தொடர்ந்து முதலிடத்தை தக்கவைக்கும் நோக்கில் பலவிதமான மாற்றங்களையும், புதிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதனடிப்பயைில் புதிதாக Pin View எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முதலில் Pin Viewer என்னும் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவவேண்டும்.
இதன் மூலம் நண்பர்களின் சுயவிபரங்களையும், பகிரப்படும் படங்கள், வீடியோக்கள் என்பனவற்றையும் தனித்தனியாக வேறுபடுத்த முடியும்.

மிக வேகமாக FACEBOOK பார்க்க சிறந்த ANDROID APP




எல்லோர் வாழ்விலும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது face book சமூக வலைத்தளம். இதனை பெரும்பாலானோர் தங்கள் கைத் தொலைபேசி வழியே பயன்படுத்தி வருகின்றனர். உத்தியோக பூர்வ FACE BOOK அப்ளிகேசன் மெதுவான வேகத்தை கொண்டதாக அமைந்துள்ளதை நீங்கள் அறிய முடியும். ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் மெதுவான வேகத்தை கொண்டதாக உள்ளது.





இந்த குறையினை நீக்கி FACE BOOK தளத்தை வேகமாக அணுகி செயற்படுத்த  ANDROID தொலைபேசிகளில் FAST FACE BOOK APP உதவுகிறது. தற்போது இதன் பீட்டா பதிப்பினை கூகிள் பிளே ஸ்டோர் மூலம் பெற முடியும்.

No comments:

Post a Comment