Sunday, 13 July 2014

பயனுள்ள தளங்கள்


பயனுள்ள தளங்கள்



இணையம் வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் இணையதளங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. நம் இந்திய அரசும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மற்றும் மாவட்டங்களுக்கும் தனித்தனி இணையதளங்களை உருவாக்கி தங்கள் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த இணையதளங்கள் அனைத்தயும் URL நாம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. உதாரணமாக இந்தியாவில் 627 மாவட்டங்கள் உள்ளது இதில் 569 மாவட்டங்களுக்கு தனி இணையதளங்கள் உள்ளது. இதை எல்லாம் நாம் ஞாபகம் வைத்து கொள்வது கடினம். ஆனால் இதை எல்லாம் ஒரே இடத்தில் காணும் வசதியாக நம் அரசாங்கம் ஒரு தளத்தை உருவாக்கி செயல் படுத்தி வருகிறது.

Districts என்ற தளத்தில் இந்திய மாவட்டங்களின் இணையதளங்களின் பட்டியலை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 


இதில் இந்தியாவில் உள்ள 35 மாநிலங்களின் பட்டியல் முகப்பு பக்கத்தில் இருக்கும் இதில் உங்களுக்கு விரும்பிய மாநிலத்தை கிளிக் செய்தால் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பட்டியலும் வரும். 



அந்த பட்டியலில் நீங்கள் ஏதேனும் தெரிந்து கொள்ளவேண்டிய மாவட்டத்தின் லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களை அந்த மாவட்டத்தின் தளத்திற்கு அழைத்து செல்லும். அதில் நீங்கள் அந்த மாவட்டத்தின் அரசாங்க அறிவுப்புகளை பார்த்து கொள்ளலாம். மட்டும் அரசு படிவங்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். உங்கள் குறைகளையும் அந்த மாவட்ட கலெக்டரிடம் ஆன்லைனில் தெரிவிக்கலாம்.

தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களில் அரியலூர் மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டத்திற்கும் தனி இணையதளம் உள்ளது


POSTED BY RAMESHRAM

No comments:

Post a Comment