Monday, 28 July 2014


Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய

Facebook சமூக இணையத்தில் வழமையாக குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நண்பருடன் மட்டமே சாட் செய்யும் வசதி உள்ளதாக மட்டுமே நம்மில் பலரும்  அறிந்திருக்கிறோம்.  ஆனால் ஒரே சமயத்தில் ஆன்லைனில் உள்ள நாம் விரும்பும் பல நண்பர்களை ஒரு குழுவாக சேர்த்து சாட் செய்ய முடியும் என்பது நம்மில் சிலருக்கு தெரியாது. .
Facebook கணக்கில் நுழைந்து கொண்டு, ஆன்லைனில் இருக்கும் விரும்பிய நண்பர் ஒருவரை சாட்டில் க்ளிக் செய்யுங்கள். 






இப்பொழுது திறக்கும் சாட் பெட்டியில் வலது மேற்புறமுள்ள கியரை க்ளிக் செய்து Add Friends to Chat.. என்பதை க்ளிக் செய்யுங்கள். 





கீழே தோன்றும் பெட்டியில் நீங்கள் சாட் குழுவில் இணைக்க விரும்பும் நண்பர்கள் பெயரை ஒவ்வொன்றாக டைப் செய்து தேர்வு செய்து கொள்ளுங்கள். 




அவ்வளவுதான் இனி இப்பொழுது உருவாக்கிய குழுவில் உள்ள நண்பர்களிடம் ஒரே சமயத்தில் சாட் செய்திட முடியும். 


.

இணையத்தில் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க பயனுள்ள நீட்சி!

நம்மில் பெரும்பாலான இணைய பயனாளர்கள், Facebook, Orkut, Youtube போன்ற சில இணைய தளங்களுக்கு அடிமையாகி விடுகிறோம். ஒரு சில சமயங்களில் ஒழுங்காக ஆணி பிடுங்க வேண்டிய நேரங்களையும், பிற அத்தியாவசிய பணி நேரங்களையும், இந்த தளங்களில் உலாவுவதன் மூலமாக வீணடித்து விடுகிறோம். (டிவி சீரியல்கள் போல).  
இதற்கு மேல் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டும்தான் இந்த தளங்களுக்கு செலவழிக்க வேண்டும் என்றோ அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும் என்றோ பல சமயங்களில் சபதமெடுத்து, மறுநாளே மறந்து போய் பழையபடி நமது நேரத்தை வீணடித்து கொண்டிருப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

இந்த பிரச்சனைக்கு Google Chrome உலாவிக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைவது Chrome Nanny எனும் ஒரு பயனுள்ள நீட்சி! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

  Install பொத்தானை சொடுக்கி இந்த நீட்சியை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்டபிறகு, நிறுவப்பட்டதற்கான அறிவிப்பை திரையில் அதற்குரிய ஐகானுடன் காணலாம். 

இந்த ஐகானை வலது க்ளிக் செய்து, Options வசதியை க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் திரையில், Blocked URLs டேபில், Block set Name என்பதற்கு நேராக உள்ள பெட்டியில், தேவையான பெயரை கொடுங்கள். அடுத்துள்ள URLs பெட்டியில், எந்தெந்த தளங்களை ப்ளாக் செய்ய வேண்டுமோ அவற்றின் வலைத்தள முகவரிகளை, ஒன்றன்கீழ் ஒன்றாக டைப் செய்யுங்கள். (உதாரணமாக www.facebook.com)    
அடுத்துள்ள Block Time பகுதிக்கு நேராக உள்ள பெட்டியில், எந்தெந்த நேரங்கள் ப்ளாக் செய்ய வேண்டும் என்பதை கொடுங்கள். (உதாரணமாக 1000-1300, 1430-1730) அடுத்து Apply on Days பகுதியில் எந்தெந்த நாட்கள் ப்ளாக் செய்ய வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொண்டு, Save URL பொத்தானை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள். 

அவ்வளவுதான். இனி அந்த ப்ளாக் செய்யப்பட நேரங்களில் குறிப்பிட்ட வலைத்தளங்களுக்கு செல்ல முயற்சிக்கையில், கீழ் காணும் செய்தி மட்டுமே திரையில் தோன்றும். 

  ஒருவேளை குறிப்பிட்ட நேரத்தில் என்றில்லாமல், ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டுமே அந்த குறிப்பிட்ட தளங்களில் பணிபுரிய அனுமதி வேண்டும் (அது எந்த நேரமானாலும் பரவாயில்லை) எனில், இந்த பகுதியில் உள்ள Blocked Time க்கு நேராக 0000-0000 என கொடுத்து, Max Time In a Dayஎன்பதற்கு நேராக 60 என கொடுத்து Save URL பொத்தானை சொடுக்கினால் போதுமானது. 

இது போன்று ப்ளாக் செய்யப்பட்ட தளங்களுக்கு செல்ல முயலும் பொழுது, திரையில் தோன்றும் செய்திக்கு பதிலாக, அந்த குறிப்பிட்ட டேபை மூட வேண்டும் என்றாலோ, அல்லது மற்றொரு தளத்திற்கு Redirect ஆக வேண்டும் என்றாலோ, இந்த நீட்சியின் Options பகுதிக்கு சென்று, General Options டேபிற்கு சென்று நமது தேவைக்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். 

    இது தவிர மேலும் பல வசதிகளை இந்த நீட்சி உள்ளடக்கியுள்ளது. ஆனாலும் இதே நீட்சியில் ப்ளாக் செய்யப்பட்ட தளங்களை நீக்கிவிட்டு, ஆணி பிடுங்குகிற நேரத்தை வீணடிப்பேன் என்று யோசிப்பவர்களுக்கு வேறு வழியில்லை. 

இதே போன்ற வசதிகளை உள்ளடக்கிய நெருப்பு நரி உலாவிக்கான நீட்சிLeechBlock !
 


.

Firefox: இணையத்தில் வேகமாக பணிபுரிய...

நாம் இணையத்தில் உலாவும்பொழுது, வழக்கமாக அட்ரஸ் பாரில் வலைபக்க முகவரியை டைப் செய்யும் பொழுது, www.sitename.com என்பது போன்று, www. மற்றும் .com, .org, .net என முழு முகவரியையும் டைப் செய்வதுண்டு, சிலர் .com இற்கு பதிலாக வலைப்பக்கத்தின் பெயரை மட்டும் டைப் செய்து Ctrl+Enter கொடுப்பதுண்டு. (gmail என டைப் செய்து Ctrl+Enter கொடுக்கும் பொழுது www.gmail.com என Prefix மற்றும் Suffix ஐ அதுவாகவே நிரப்பிக் கொள்ளும்) இது பலரும் அறிந்த ஒன்று.

ஆனால், நாம் அடிக்கடி உலாவும் வலைப்பக்கங்கள், .com மட்டுமின்றி .net, .org, .co.in என பலதும் இருப்பதுண்டு. இவற்றிற்கான ஷார்ட்கட் கீகளை நெருப்புநரி உலாவியில் உருவாக்க ஒரு எளிய நீட்சி URL Suffix. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இந்த நீட்சியை தரவிறக்கி உங்கள் நெருப்புநரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, Tools மெனுவிற்கு சென்று, Add-ons ஐ க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் சிறு திரையில், URL Suffix பகுதியில் உள்ள Options பொத்தானை சொடுக்கவும்.


அடுத்து திறக்கும் வசனப்பெட்டியில், கொடுக்கப்பட்டுள்ள ஷார்ட்கட் கீகளுக்கு தேவையான Prefix மற்றும் Suffix ஐ நம்முடையை வசதிக்கு ஏற்ப கொடுத்து, OK பொத்தானை சொடுக்குங்கள்.


அவ்வளவுதான், இனி இந்த கீகளை நினைவில் வைத்துக் கொண்டு, விரைவாக இணையத்தில் பணிபுரிய இயலும்.


.

THURSDAY 9 DECEMBER 2010

Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!..

அலுவலகத்தில் உருப்படியாக ஆணி பிடுங்காமல், அலுவல் சம்பந்தப்படாத வலைப்பக்கங்களில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறீர்களா?.. திடிரென உங்கள் மேலதிகாரி வரும் பொழுது என்ன செய்வீர்கள்? உலாவியை முழுமையாக மூடிவிடலாம் என்றால், பல டேப்களில் தேடிப்பிடித்த வலைப்பக்கங்கள் இருக்கும். இவையனைத்தையும் மறுபடியும் பிறிதொரு சமயத்தில் வேண்டும் என வைத்துக் கொண்டால், இந்த சூழ்நிலையில் டக்கென்று எஸ்கேப் ஆவது எப்படி? 


இதோ கூகுள் க்ரோம் உலாவிக்கான PanicButton நீட்சி! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

Install பொத்தானை அழுத்தி இதை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்டபிறகு, டூல்பாரில் Panic Button ஐகான் வந்திருப்பதை கவனிக்கலாம்.


இதற்கு மேல், நீங்கள் இணையத்தில் உங்கள் மேலதிகாரி விரும்பாத வலைப்பக்கங்களை பல டேப்களில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென அவர் வரும் பொழுது, இந்த பொத்தானை அழுத்தினால், நீங்கள் திறந்து வைத்துள்ள வலைப்பக்க டேப்களின் விவரங்கள் வெளியில் தெரியாத ஒரு புக் மார்க்காக உருவாக்கப்பட்டு (ஓரிரு வினாடிகளில்) முழுவதுமாக மறைக்கப்படும். 

எத்தனை டேப்கள் இப்படி மறைக்கப்பட்டுள்ளன என்பதை, இந்த PanicButton ஐகானில் தோன்றும் எண்ணிக்கையை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

மறுபடியும் இவற்றை திறக்க, இதே பொத்தானை க்ளிக் செய்தால் போதுமானது. எஸ்கேப்பு..

ஒருவேளை அதேநாளில், மறுபடியும் அந்த வலைப்பக்கங்களை உங்களால் பார்க்க முடியாது எனும் பட்சத்தில் இந்த பக்கங்களை நீக்க, டூல்பாரில் உள்ள டூல்ஸ் பட்டனை அழுத்தி Bookmark Manager க்ளிக் செய்து, 



திறக்கும் திரையில் இடது புற பேனில், Other bookmarks இற்கு அடுத்துள்ள Temporary Panic ஃபோல்டரை வலது க்ளிக் செய்து, Delete செய்தால் போதுமானது.



(இது போன்று, உலாவிகள் மட்டுமின்றி பிற பயன்பாடுகளிலிருந்தும் எஸ்கேப் ஆவது எப்படி என்ற எனது மற்றொரு இடுகையை பாருங்கள்..Don't Panic! : இப்படியெல்லாம் யோசிப்பாய்ங்களா?)



.

TUESDAY 23 NOVEMBER 2010

நமக்கு பிடித்த வலைப்பக்கங்களை PDF கோப்புகளாக சேமித்து வைக்க

நாம் அன்றாடம் பல பயனுள்ள வலைப்பக்கங்களை படித்து வருகிறோம்.இந்தவலைப்பக்கங்களில் நாம் விரும்பும் பக்கங்களை PDF கோப்புகளாக நமதுகணினியில் சேமித்து வைப்பதற்குபல வழிகள் இருந்தாலும், Web2Pdf Converterஎன்ற தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நமக்கு வேண்டிய வலைப்பக்கத்தின் URL  காப்பி செய்து இந்த தளத்தில்உள்ள பெட்டியில் பேஸ்ட் செய்து Convert PDF பொத்தானை அழுத்துங்கள்.


அடுத்த திரையில் PDF Successfully Created என்ற செய்தியை அடுத்து கீழே உள்ளDownload PDF File என்ற லிங்கை க்ளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.



ஒவ்வொரு முறையும் இது போன்று URL  காப்பி செய்து பேஸ்ட் செய்வதைதவிர்க்கஇந்த தளத்தில் உள்ள Save Page as PDF என்ற புக்மார்க்லெட்டை ட்ராக்செய்து உங்கள் உலாவியில் புக்மார்க்ஸ் உடன் இணைத்து விட்டால்,தேவையான வலைப்பக்கங்களில் நீங்கள் உலாவும் பொழுதுஇந்தபுக்மார்க்கை க்ளிக் செய்து, PDF கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.






.

WEDNESDAY 17 NOVEMBER 2010

Facebook: புதிய மின்னஞ்சல் கணக்கை துவங்க..




சமூக இணைதளமான Facebook தனது Email சேவையை துவங்குவது பலரும் அறிந்ததே. இந்த மின்னஞ்சல் சேவை Facebook ஐ பொருத்தமட்டில் ஆரம்ப நிலையில் இருப்பதால், நம்மால் நேரடியாக yourname@facebook.com என துவங்க இயலாது. முன்பு ஜிமெயில், ஆர்குட் போன்ற கணக்குகளுக்கு Invitation வசதி இருந்தது அனைவருக்கும் நினைவிலிருக்கலாம். அந்த வசதியை ஃபேஸ்புக்கும் வழங்கியிருக்கிறது. 

இந்த Invitation ஐ நீங்கள் பெறுவதற்கு பதிவு செய்வதன் மூலம். உங்களுக்கு விருப்பமான பெயரில் (மற்றவர்கள் உருவாக்குவதற்கு முன்பாக) Facebook இல் மின்னஞ்சல் கணக்கை உருவாக்க முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Facebook இல் எற்கனவே id இல்லாதவர்கள் இங்கே க்ளிக் செய்து (http://www.facebook.com/username/) திறக்கும் திரையில் நீங்கள் விரும்பும் id ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.


உங்கள் Facebook கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள், இந்த இடுகையின் இறுதியில் தரப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து Facebook இன் New Messages பகுதிக்கு செல்லுங்கள்.


அங்கு வலது புறமுள்ள Request an Invitation பொத்தானை சொடுக்குங்கள்.

அடுத்த திரையில் You will receive as Invite soon எனும் செய்தி வந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இனி Invitation உங்களுக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.





.

SATURDAY 13 NOVEMBER 2010

குழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள்

இது ஒரு மீள்பதிவு.. மற்றும் ஒரு புதிய இடுகையும்.

அறிந்தோ அறியாமலோ, நம்மில் பலர் தம் குழந்தைகளுக்கு, கணினி விளையாட்டு என்ற பெயரில், கத்தியையும், ஏ.கே  47 ஐயும் கொடுத்து அவர்களின் பிஞ்சு மனதில் வன்முறை எண்ணங்கள்  வளர்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டோம்.

கணினி விளையாட்டுகளில் பெரும்பாலும் ஆயுதங்களோடுதான்  சுற்றுகிறார்கள் நமது சின்னஞ் சிறுசுகள்.

அவர்களுக்கு ஒரு மாற்றாக, Paint Brush + Power Point + Instant Artist ஆகிய மென்பொருட்கள் கலந்த ஒரு கலவையாக, அவர்களுக்கு உற்சாகமும், க்ரியேடிவ் திறனும் வளர்க்கும் வகையில் TUXPAINT என்ற கட்டற்ற இலவச மென்பொருள் உங்கள் குழந்தைகளுக்காக  குழந்தைகள் தினத்தில் வழங்கி மனம் மகிழ செய்யுங்கள். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் உள்ளது)

இது Tuxpaint மற்றும் Tuxpaint Stamps என இரண்டு பிரிவுகளாக உள்ளது.

முதலில் Tuxpaint ஐ நிறுவுங்கள். இந்த மென்பொருளை நிறுவுவது மிகவும் எளிது.  Installation முடிந்தவுடன் Tux Paint Config திரைக்கு வந்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
இதில் Video/Sound டேபில் சென்று உங்களுக்கு தேவையான திரை  அளவு, ஒலி ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
இதே போன்று ஒவ்வொரு டேபிலும் சென்று தேவையான வசதிகளை செய்து கொள்ளுங்கள்.
இனி Tuxpaint Stamps ஐ நிறுவுங்கள். இதில் உங்களுக்கு தேவையான Components அனைத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.  


இனி உங்கள் குழந்தைகளின் உற்சாகத்தைப் பாருங்கள்.

சரி குழந்தைகளுக்கு விளையாட்டு மட்டும் போதுமா? படிக்க வேண்டாமா? என கேட்பவர்களுக்கும், எவ்வளவுதான் சொல்லிக் கொடுத்தாலும் கணக்கு பாடம் மட்டும் புரிவதே இல்லை என யோசிக்கும் பெற்றோர்களுக்கும் வரபிராசதமாக அமைகிறது TuxMath எனும் ஒரு இலவச மென்பொருள்.



இது கணித பாடத்தை விளையாட்டாய் கற்றுக் கொடுக்கும் சுவாரசியமான மென்பொருள்.
கூட்டல், கழித்தல்,பெருக்கல், வகுத்தல் என பல வகையான வசதிகள்.


இது ஒரு ஸ்பேஸ் விளையாட்டு போல வடிவமைக்கப்பட்டு ஸ்கோர்களும் வழங்கப்படுவதால், குழந்தைகளை மிகவும் கவரும் என்பதில் ஐயமில்லை.


ஒவ்வொரு வகுப்புகளுக்கு ஏற்றவாறு, கணித ஸ்கில்லை தேர்வு செய்து கொள்ளலாம்.



மேலும் நெகடிவ் மற்றும் பாஸிடிவ் எண்களின் கூட்டல், கழித்தலும் உண்டு.
தரவிறக்கி உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்களை உற்சாகப் படுத்துங்கள்! 



குழந்தைகளுக்கு எனது இனிய 
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்! 
 .

SATURDAY 6 NOVEMBER 2010

Facebook: வேண்டாதவர்களை Block செய்ய

Facebook சமூக இணைத்தில் பல நண்பர்களை நாம் இணைத்திருப்போம். சில சமயங்களில், நம்க்கு வேண்டாத, நாம் விரும்பாத ஒரு சிலரை நமது Facebook கணக்கிலிருந்து நீக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
முதலில் Facebook  தளத்தில் உங்கள் பயனர் கணக்கில் நுழையுங்கள். பிறகு வலது மேற்புறமுள்ள Accounts லிஸ்ட் பாக்ஸை க்ளிக் செய்து, Privacy Settings பகுதிக்கு செல்லுங்கள்.


அடுத்து திறக்கும் privacy settings பக்கத்தில் கீழே உள்ள, சிவப்பு நிற ஐகானை கொண்டுள்ள, Block Lists பகுதியில் Edit your lists லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து திறக்கும் திரையில், நாம் இரண்டு வழிகளில் ஒருவரை Block செய்திட முடியும். முதலாவது, அந்த நபரின் பெயரை Block Users பகுதியில் உள்ள Name என்பதற்கு நேராக உள்ள பெட்டியில் தட்டச்சு செய்து, Block this User பொத்தானை க்ளிக் செய்வதன் மூலமாகவும், 

(ஒரே பெயரில் பலர் இருக்கும் பட்சத்தில், அந்த குறிப்பிட்ட பெயரைக் கொண்ட அனைவரது விவரங்களும் பட்டியலிடப்படும், அவற்றில் நமக்கு வேண்டாதவரை தேர்வு செய்து கொள்ளலாம்.)


இரண்டாவது, அந்த நபரின் மின்னஞ்சல் முகவரியை Email என்பதற்கு நேராக உள்ள பெட்டியில் கொடுத்து Block this User பொத்தானை க்ளிக் செய்வதன் மூலமாகவும் Block செய்திடலாம். 


.

நெருப்பு நரி: வீடியோ பிரியர்களுக்கான பயனுள்ள நீட்சி!

நெருப்பு நரி (FireFox) உலாவியில், நமக்கு விருப்பமான காணொளிகளை Youtube, Google Video, Metacafe மற்றும் MySpace போன்ற தளங்களிலிருந்து கண்டு களிக்கிறோம். இவ்வாறு நாம் காணொளிகளை பார்த்தபடியே, வேறு எந்த வலைப் பக்கங்களையும், பார்வையிட முடியாது.  இதற்கான சரியான தீர்வாக அமைவது நெருப்புநரி உலாவிக்கான YouPlayer நீட்சி! 

இந்த நீட்சியை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, உங்கள் நெருப்புநரி உலாவியில், Status Bar இல் YP என்ற குறியீடு வந்திருப்பதை கவனிக்கலாம். இந்த குறியீட்டை க்ளிக் செய்வதன் மூலமாக YouPlayer ஐ திறக்கவோ மூடவோ இயலும். இந்த வசதி உலாவியில் இடது புற sidebar இல் திறக்கும். இங்கு நீங்கள் விரும்பும் வீடியோக்களுக்கான URL ஐ  Drag & Drop செய்தால் போதுமானது.


Youtube மட்டுமின்றி, Google Video, Daily Motion, Metacafe மற்றும்  MySpace போன்ற தளங்களை தேர்வு செய்ய, நெருப்பு நரி உலாவியின், வலது கீழ்புற மூலையில் உள்ள சிறிய பொத்தானை க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.


மேலும், இதிலுள்ள Playlist வசதியின் மூலமாக, நாம் டேப்களில் திறக்கும், வீடியோ லிங்குகளை sidebar Playlist இல் Drag & Drop  செய்து கொள்ளலாம். 


இதன் Options பகுதிக்கு சென்று,  ‘Use new player (experimental)’ option ஐ தேர்வு செய்வதன் மூலமாக, நமது கணினியில் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள, FLV கோப்புகளை Playlist ல் Drag & Drop செய்து, கண்டு களிக்கலாம்.





இவ்வாறு நமக்கு தேவையான வீடியோக்களை சைடுபாரில் கண்டுகளித்தபடியே, இணையத்தில் உலாவமுடியும்.  இந்த நீட்சியிலுள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இவ்வாறு கண்டு களிக்கும் வீட்யோக்களை Playlist இல் வலது க்ளிக் செய்து Download பொத்தானை அழுத்தி நமது கணினியில் சேமித்துக் கொள்ளவும் இயலும்.




.

SATURDAY 30 OCTOBER 2010

Facebook: உங்கள் பெயரை மாற்ற

Facebook தளத்தில் முதல் முறையாக நீங்கள் கணக்கை துவங்கிய பொழுது, உங்கள் பெயரை கொடுத்திருப்பீர்கள். அதன் பிறகு, அந்த குறிப்பிட்ட பெயருக்கு பதிலாக, வேறு ஒரு பெயரை கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றினால்,  உங்கள் பெயரை முகபுத்தகத்தில் எப்படி மாற்ற முடியும் என்பதை பார்க்கலாம்.
Facebook இல் உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புறமுள்ள Account லிஸ்ட் பாக்ஸை க்ளிக் செய்து, Account Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து திறக்கும் திரையில், My Account என்பதற்கு கீழாக உள்ள Settings tab தான் Default ஆக இருக்கும், இல்லையெனில் Settings டேபை க்ளிக் செய்யுங்கள்.


இனி கீழே உள்ள Name என்பதற்கு நேராக உள்ள Change என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்


அடுத்த திரையில், First Name மற்றும் Last Name ஆகியவற்றை உங்கள் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பிறகு Change Name பொத்தானை அழுத்தினால் போதுமானது.


Alternate Name ஏற்கனவே கொடுக்கவில்லை என்றால் இப்பொழுது கொடுத்துக் கொள்ளலாம். (அதுவும் தமிழில்)

No comments:

Post a Comment