Monday, 28 July 2014

இணையத்தகவல்கள்


உலகின் மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய இணையத்தளங்கள்

பலரும் பலவிதத்தில் சாதனை படைக்க விரும்புவார்கள்.  அவ்வாறு இணைய உலகில் சிலர் சாதனை படைத்திருக்கிறார்கள். அந்த வகையில் உலகில் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய இணையத்தளங்களை உருவாக்கி சிலர் சாதனை படைத்திருக்கிறார்கள். அத்தகைய இணையத்தளங்கள் பற்றிய தகவல்கள் இதோ:

உலகின் மிகச்சிறிய இணையத்தளம்:
http://www.guimp.com/  எனப்படும் இந்த இணையத்தளமானது வெறும் 18x18 படத்தனிமங்களை(18x18 pixels) கொண்டமைந்துள்ளதொரு இணையத்தளம். இந்த இணையத்தளம் கணணி விளையாட்டுக்களை கொண்டமைந்துள்ளது.




உலகின் மிகப்பெரிய இணையத்தளம்:
http://www.28fields.com/ எனப்படும் இந்த இணையத்தளம் பலமில்லியன் படத்தனிமங்களை கொண்டமைந்துள்ளது. இந்த இணையத்தளமானது 56k இணைய இணைப்பின் மூலமாக தரவிறங்க 8 வருடங்கள், 309 நாட்கள் , 8 மணித்தியாலங்கள், 57 நிமிடங்கள், 37 வினாடிகள் தேவை. DSL இணைய இணைப்பின் மூலமாக தரவிறங்க 120 நாட்கள், 13 மணித்தியாலங்கள், 31 நிமிடங்கள், 6 வினாடிகள் தேவை.


கூகுளில் சில வித்தியாசமான நகைச்சுவையான தேடல்கள்

உலகில் இணைய  தேடல்  இயந்திரங்களில்   முதலிடத்தை பல ஆண்டு காலமாக தக்கவைத்துகொண்டிருக்கும் தேடலில் ஆர்வமுள்ளவர்களுக்கென சில நகைச்சுவையான வித்தியாசமான சில தேடல் வடிவங்கள் உள்ளன. இந்த தேடல் வடிவங்கள் வித்தியாசமாக தேட விரும்புபவர்களுக்கு என உருவாக்கப்பட்டவை.


வித்தியாசமாக எவ்வாறு தேடுவது எனப்பார்ப்போம்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களை Google இன் இணையமுகவரியில் (http://www.google.com/) சென்று தட்டச்சு(type) செய்யுங்கள்.
(Just write it in google searchbar )

பின்னர் I'm Feeling Lucky என்பதன் மேல் அழுத்துங்கள். அப்பொழுது கூகுளின் வித்தியாசமான தேடல் முகப்பு தோற்றங்கள் நகைச்சுவையாக தோற்றமளிக்கும்.
(Then Click on I'm Feeling Lucky)

வித்தியாசமான தேடல் வடிவங்களுக்குரிய சொற்கள்:

  1. Elgoog
  2. Google 133t
  3. Google Gothic
  4. Google BSD
  5. Google Easter egg
  6. xx-piglatin
  7. Google linux
  8. Ewmew fudd
  9. xx-klingon
  10. Google BearShare
  11. Google Loco
  12. Google Linux
  13. Google Ewmew
  14. Answer to life the Universe and Everything
  15. Google Mozilla
  16. Google Gizoogle
கூகுளின் மற்றுமொரு வேடிக்கையான தேடலை அடுத்துவரும் பதிவுகளில் தருகிறேன்.






கடந்த வருடம்(2009) கூகுளில் அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியல்( top searches on google)

2009 கடந்து பல மாதங்கள் சென்றபின் இது ஒரு காலம் தாமதித்த இடுகை. கூகுளில் கடந்த 2009 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியல் இதோ. இதில் அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியலில் Michael jackson என்னும் சொல் முதலிடத்தில் உள்ளது.
இதோ கூகிளில் அதிகம் தேடப்பட்ட முதல் பத்து சொற்களின் பட்டியல்:



  1. michael jackson
  2. facebook
  3. tuenti
  4. twitter
  5. sanalika
  6. new moon
  7. lady gaga
  8. windows 7
  9. dantri.com.vn
  10. torpedo gratis
இதைவிட விளையாட்டுகள்,பொழுதுபோக்கு அம்சங்கள்,உணவு மற்றும் குடிபானங்கள் போன்றவற்றிலும் அதிகம் தேடப்பட்டவற்றையும் இங்கே பட்டியல் இட்டுள்ளேன். இது ஒரு உலகளாவிய பட்டியல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயம்.

பொழுதுபோக்கு அம்சங்களில்...........
  1. michael jackson
  2. transformers
  3. eminem
  4. naruto shippuden
  5. beyonce
  6. peliculas id
  7. paranormal activity
  8. anime online
  9. natasha richardson
  10. poker face lyrics

விளையாட்டு சம்பந்தமாக................
  1. real madrid
  2. us open
  3. ufc
  4. sahadan
  5. livescore
  6. pacquiao vs cotto
  7. wbc 速報
  8. pga tour leaderboard
  9. confederations cup
  10. l'equipe football
உணவு மற்றும் குடிபானம் சம்பந்தமாக................

  1. acai berry
  2. picnic
  3. クックパッド
  4. tesco direct
  5. senseo
  6. peanut butter recall
  7. nespresso commande
  8. habibs delivery
  9. mocktail
  10. masterchef ஆஸ்திரேலியா
இவற்றை எல்லாம் விட அண்மைய நாட்களில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியல்....
1. winter olympics schedule

2. valentines
3. pairs short program
4. mens moguls
5. medals
6. kumaritashvili
7. johnny spillane
8. bharti airtel
9. we are the world 25
10. ohno




 

Thursday, February 11, 2010

எந்தவித மென்பொருளும் பயன்படுத்தாமல் இணையவேகத்தினை அதிகரிப்பது எப்படி?

இயந்திரமயமான உலகில் இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் இணையம். கல்வி,தொடர்பாடல்,பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல விடயங்களில் இணையம் என்பது மிக ஆழ வேரூன்றிவிட்டது. அப்படிபட்ட வேகமாக செல்லும் இணைய உலகில் இணைய வேகம் என்பது சில இடங்களில் மிக வேகம் குறைந்ததாகவே காணப்படுகின்றது. அத்தகைய வேகம் குறைந்த கணனிகளில் இணையவேகத்தினை எதுவித மென்பொருளின் உதவியுமின்றி அதிகரிப்பது எப்படி என்பது தான் இப்பதிவின் நோக்கம்.
இனி எவ்வாறு இணைய வேகத்தினை அதிகரிப்பது எனப்பார்ப்போம்.

1.முதலில் கணனியில் Start சென்று Run என்பதை அழுத்துங்கள்.
       ( Click Start >>>Run)

2.பின்னர் வரும் Run இல் gpedit.msc என தட்டச்சு செய்து Enter விசையை (Enter Key) அழுத்துங்கள்.


3.அழுத்தியபின் Policy Editor என்னும் சாளரம்(Window) திறக்கப்படும்..இந்த சாளரத்தில் Local Computer Policy என்பதை அழுத்தி Computer Configuration என்பதை தெரிவுசெய்யுங்கள்.
      (Local Computer Policy >>> Computer configuration)

5.பின்னர் Administrative Templates என்பதை தெரிவுசெய்து அதில் Network என்பதை அழுத்துங்கள்.
        (Administative templates >>>Network)

6.பின்னர் QoS Packet Scheduler என்பதினை தெரிவுசெய்யுங்கள்.

7.பின்னர் தோன்றும் சாளரத்தின் (Window) இடது பக்க பகுதியில் Limit reservable bandwidth என்பதினை இரட்டை சொடுக்கின் மூலம் (Double Click) திறந்துகொள்ளுங்கள்.

8.பின்னர் தோன்றும் சாளரத்தில் (Limit reservable bandwidth Properties Window) Setting என்னும் பகுதியில் Enabled என்பதினை தெரிவுசெய்யுங்கள். ( முன்னர் இதில் Not Configured என்பது தெரிவுசெய்யப்பட்டிருக்கும்.)

9.Enabled என்பதினை தெரிவுசெய்தபின் Bandwidth limit(%) என்னும் இடத்தில்  0 (Zero) என்பதினை வழங்குங்கள். ( அதில் ஏற்கனவே 20 ஆகக்காணப்படும்)




Wednesday, February 10, 2010

Gmail இன் Google Buzz என்னும் தொடர்பாடல் துறைக்கான புதியதொரு சேவை

ஐந்து வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் Gmail ஆனது ஒரு வெறும் மின்னஞ்சல் சேவையாக மாத்திரமே செயற்பட்டுக்கொண்டிருந்தது. காலப்போக்கில் Gmail ஆனது அரட்டை பகுதியை (Chat) ஆரம்பித்து தொடர்பாடல் துறையை மென்மேலும் மெருகூட்டியது. அத்துடன் மேலும் பல படிகள்சென்று குரல்வழி அரட்டை (Voice Chat) ,காணொளி அரட்டை (Video Chat) என தனது தொடர்பாடல் துறையில் பல புரட்சிகளை ஏற்படுத்தியது. அத்தகைய பல புரட்சிகளை படைத்த Gmail ஆனது மேலும் ஒரு புதியதொரு சமூக தொடர்பாடல் சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.





Google Buzz எனப்படும் இச்சேவையானது twitter, lite facebook போன்று நுண்ணிய பதிவுகளை (Micro blogging) பிறருடன் பகிர்ந்து கொள்ளவென உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சேவையினூடாக புகைப்படங்கள்,காணொளிகள்,போன்ற பல்வேறுபட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த சேவையை எமது Gmail முகப்பு பக்கத்தில் Inbox,Sent mail,Spam போன்ற பகுதிகளுடன் இணைந்து காணப்படும். இது எல்லோரினதும் Gmail இல் உடனடியாக தோன்றாது. (எனது முகப்பு பகுதியிலும் இதுவரை தோன்றவில்லை)காலப்போக்கில் இது தோன்றும் என Google அறிவிப்பு செய்துள்ளது. ஆனால் இந்த சேவைக்குரிய உங்களது தனிப்பட்ட கணக்கை நீங்கள் உருவாக்கி கொள்ளமுடியும்.

Google Buzz இல் என்னை பின்தொடர எனது விபரம்: http://www.google.com/profiles/vanniinfo

Google Buzz இன் இணையச்சுட்டி: http://www.google.com/buzz






















Sunday, January 31, 2010

நகைச்சுவையாக புகைப்படங்களை வடிவமைக்கவென இலவச இணையவழி மென்பொருள்

புகைப்படங்களை பல்வேறுபட்ட வடிவங்களில் பலரும் வடிவமைக்க விரும்புவார்கள். ஆனால் அவற்றை நகைச்சுவையாக கேலிசித்திரங்களாக வடிவமைக்கவும் ஆசைப்படுவார்கள்.
அவ்வாறு நகைச்சுவையாக,கேலிசித்திரங்களாக மிக குறுகிய நேரத்தில் மென்பொருட்களை பாவித்து வடிவமைப்பதென்பது மிகவும் கடினமான விடயம். அத்தகைய புகைப்படங்களை வடிவமைக்க விரும்புபவர்களுக்கென இலவச இணையவழியிலான மென்பொருள் உள்ளது.

Picjoke என்னும் இணையத்தளமானது இந்த சேவையை இலவசமாக வழங்குகின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த இணையத்தளத்திற்கு சென்று நீங்கள் எந்த வடிவத்தில் புகைப்படத்தை மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களோ அந்த வடிவத்தில் புகைப்படங்களை தரவேற்றி பெற்றுக்கொள்ள முடியும்.

இது முற்றிலும் இலவசமான ஒரு இணையவழி மென்பொருள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயம்.

இணையத்தளச்சுட்டி: Picjoke
இதோ நான் வடிவமைத்த சில புகைப்படங்கள்.




Monday, January 11, 2010

கணனிக்கு தேவையான அடிப்படை மென்பொருட்களின் பொதி

கணணியை புதியதாக வாங்குபவர்கள் அல்லது கணனியில் புதியதொரு இயங்குதளத்தை (Operating system) நிறுவினால் அததற்கு சில அடிப்படையான மிக மென்பொருட்கள் தேவைப்பாடு அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக தேடி எடுத்து நிறுவுவது என்பது மிக ஒரு கடினமான விடயம். அப்படியானவற்றை ஒவ்வொன்றாக எடுத்து நிறுவுவது என்பது நேரம் விரயமான செயல். அப்படியான மென்பொருட்களை ஒரே மென்பொருளில் எடுத்து நிறுவினால் மிக இலகுவாக இருக்கும் அத்தகைய ஒரு மென்பொருள் பொதி பற்றிய பதிவுதான் இது.


Ninite என்னும் மென்பொருளானது எல்லாவற்றையும் ஒரே குடையின் கீழ் பெறக்கூடியதான ஒரு மென்பொருளாகும். இந்த மென்பொருளானது இலவசமான ஒரு மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். இந்த மென்பொருளில் இணைய உலாவிகள் (Web Browsers), தகவல் பரிமாற்ற ஊடகங்கள் (Messaging),காணொளி, ஒலி ஊடகங்கள் (Media Players) , புகைப்பட வடிவமைப்பு மென்பொருட்கள் (Imaging), ஆவணமென்பொருட்கள் (Documents), கணணி பாதுகாப்பு(Security), போன்ற இன்னும் பல மென்பொருட்களை உள்ளடக்கியதாக இந்த மென்பொருள் பொதி காணப்படுகின்றது. மிகவும் பயனுள்ள இலவச மென்பொருள் என்பது மிகவும் சிறப்பான விடயமாகும்.


மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Ninite http://www.ninite.com/












Friday, January 8, 2010

இணையத்தினூடாக 2GB வரை அளவுள்ள கோப்புக்களை இலகுவாக பகிர்ந்து கொள்ள இலவச இணையத்தளம்


மிகப்பெரிய அளவிலான கோப்புக்களை,ஆவணங்களை (Folders and Documents) மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்து கொள்வதென்பது முடியாத ஒரு விடயம். ஏனெனில் பெரும்பாலான இலவச மின்னஞ்சல்களை வழங்கும் சேவை வழங்குனர்கள் (Gmail,Yahoomail,Hotmail,AOL,USA@net,lycosmail) 20MB வரையிலான அல்லது அதற்கு குறைவான அளவு கொள்ளளவுடையகோப்புக்களையே பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இருந்தபோதிலும் சில yousendit போன்ற சில இணையத்தளங்கள் 200MB வரையிலான கோப்புக்களையே பகிர்ந்து கொள்ள அனுமதிக்கின்றன.

இவை எல்லாவற்றுக்கும் மேலே சென்று 2GB அளவுள்ள கோப்புக்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் WeTransfer என்னும் இணையத்தளமானது இந்த சேவையை வழங்குகின்றது. இந்த இணையத்தளத்திற்கு சென்று நீங்கள் யாருக்கு கோப்புக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களோ அவரின் மின்னஞ்சல் முகவரினையும் உங்கள் மின்னஞ்சல் முகவரியினையும் வழங்கி கோப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த இணையத்தளத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கு பயனாளர் கணக்கு தேவையில்லை. இது முற்றிலும் இலவசமான ஒரு சேவைஎன்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.












இணையத்தளம் : WeTransfer

Tuesday, October 6, 2009

தமிழ் இணைய கலைச்சொல் அகராதிகள்


தமிழில் விஞ்ஞான கலைச்சொற்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் சில பயனுள்ள கலைச்சொல் இணைய அகராதிகள் இங்கு தரப்படுகின்றன.

இந்த கலைச்சொல் அகராதிகளில் தகவல் தொழில்நுட்பவியல்,தாவரவியல்,விலங்கியல்,கணிதவியல்,உயிரியல்,கலை மற்றும் மானிடவியல்,சமுதாயவியல்,மருத்துவம்,வேளாண்மை பொறியியல்,மனையியல்,சட்டம்,அறிவியல்,உயிர் தொழில்நுட்பவியல்,பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல்,புவியியல்,வரலாறு,அரசியல்,உளவியல்,பொது நிர்வாகம் மற்றும் வணிகவியல்,இயற்பியல்,வேதியியல்,நிலவியல் போன்ற பல்வேறுபட்ட கலைச்சொற்கள் உள்ளடங்கியுள்ளன. பயன்படுத்தி பயனடையுங்கள்.

கலைச்சொல் அகராதிகளின் இணையச்சுட்டிகள்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் 
தொழில்நுட்பம்
நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் 
தகவல் தொழில்நுட்ப கலைச்சொல் 
கணணி 
தமிழ் மின்நூலகம்
கணிப்பொறி கலைச்சொல் அகராதி 
கணிப்பொறி கலைச்சொல் அகராதி மென்நூல்
விக்சனரி 
தமிழ்-ஆங்கில ,ஆங்கில-தமிழ் இணைய அகராதி 
தமிழ் சுற்றுப்பலகையியல் 
கலைச்சொல் அகராதி மென்நூல் 




Monday, August 31, 2009

சமூக தளங்களை தாக்கி வரும் Koobface வைரஸ்

Facebook,Twitter,myspace,friendster புதுப்பித்து hi5 கணணியை சமுதாய இணைய தள வலைப்பின்னல்களை பயன்படுத்துபவரா நீங்கள்! அப்படியானால் அண்மைக் காலத்தில் வேகமாகப் பரவி வரும் கூப்பேஸ் (Koobface) வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

இந்த தளங்களின் பேரில் உங்களைத் தூண்டும் தகவல் ஒன்று உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்ட காணொளி ஒன்றை தரவிறக்கம் செய்து பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளும் தூண்டில் செய்தி ஒன்று கிடைக்கும். காணொளிக்கான இணைப்பை சொடுக்கினால் youtube போல தளம் ஒன்று திறக்கப்படும். அங்கே ஒரு காணொளி காட்சி ஒன்று உள்ளதென்றும், அதனைக் காண மென்பொருள் ஒன்றை இறக்கிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு அதற்கான இணைப்பு கொடுக்கப்படும்.

இதற்கு ஆம் என அழுத்தினால், உங்கள் கணனியில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைத் திருடி அனுப்பும் மென்பொருள் ஒன்று இறங்கி அமர்ந்து கொள்ளும். பின் உங்களின் பயனர் கணக்கு, கடவுச்சொல், வங்கி சார்ந்த தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு அனுப்பப்படும்.

ஏற்கனவே இந்த வைரஸ் உங்களுடைய கணனியில் மேலே சொன்ன நடவடிக்கைகளினால் இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் உடனே இந்த koobface வைரஸ் குறித்த அனைத்து வரிகளையும் பதிவகத்திலிருந்து (Registry )நீக்கவும். உங்கள் Anti வைரஸை புதுப்பித்து (Update) கணனியை முழுமையாகச் சோதனை செய்திடவும்.



நன்றி : Lankasri


Sunday, August 30, 2009

ஒரே சொடுக்கில் 12 தளங்களில் கோப்புகளை ஏற்றுவதற்கு


கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்குக.

uploadmirrors

இந்தத் தளத்தின் முகப்பு பக்கத்தை (home page) திறந்து, எந்தக் கோப்பினை (file) ஏற்ற விரும்புகிறோமோ அதை தேர்வு செய்து Upload ஐ சொடுக்க வேண்டும். ஒரே சொடுக்கில் கீழே உள்ள 12 தளங்களிலும் உங்களது கோப்பு ஏற்றப்பட்டு (upload) அவற்றிற்குரிய தரவிறக்கச் சுட்டி (download links) உங்களுக்குக் கிடைத்துவிடும்.

12 தளங்கள்

UploadedTo
DepositFiles
FileFactory
HotFile
MegaUpload
EasyShare
ZShare
FlyUpload
SendSpace
SharedZilla
Badongo
NetLoad
Loadto
MegaShare
RapidShare
ZippyShare

ஆகிய தளங்களில் அந்த கோப்புக்கள் தரவேற்றப்படும்

அந்தச் சுட்டிகளை (links) தனியாகக் குறித்துக்கொண்டு அவற்றை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டால் அவர்கள் எளிதாக தரவிறக்கம் செய்ய இயலும்.

ஒவ்வொரு தளத்திற்கும் தனியாக பயனர் கணக்கு (user account) உருவாக்க வேண்டிய அவசியம் கிடையாது.

Wednesday, August 19, 2009

உலகின் முதல் 64 GB Memory Card :Toshiba நிறுவனம் வெளியிட்டது


ஜப்பானை சேர்ந்த Toshiba நிறுவனம் உலகின் முதல் 64 GB Memory Card வெளியிட்டுள்ளது. இதன் விலை 630 Dollars என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதில் 35 MB per Second வேகத்தில் தகவல்களை எழுதவும் , 60 MB per Second வேகத்தில் தகவல்களை படிக்கவும் இயலும் .

இது சந்தை விற்பனைக்கு வரும் நவம்பர் மாதம் வரலாம் என எதிபார்க்கப்படுகிறது.

மேலும் சில புதிய 32 GB , 16 GB வகை கார்டுகளையும் வெளியிடுகிறது. இதன் சிறப்பு என்னவெனில் , இதில் 35 MB per Second வேகத்தில் தகவல்களை எழுதவும் , 60 MB per Second வேகத்தில் தகவல்களை படிக்கவும் இயலும் என்பது தான் .
நன்றி : தமிழ்.இன்

Wednesday, August 5, 2009

PDF,Ms Word documents இலிருந்து Ms Word Documents,PDF க்கு மாற்றுவது எவ்வாறு? கூகிளின்(Google Docs) மற்றுமொரு சேவை

PDF,Ms Word documents இலிருந்து Ms Word Documents,PDF க்கு மாற்றுவது எவ்வாறு? கூகிளின்(Google) மற்றுமொரு சேவை.

1.முதலில் கூகிளின் ஆவணங்கள்(Google Docs) பகுதியில் login செய்யுங்கள்
2.Upload என்ற இணைப்பின் மீது அழுத்துங்கள்(Click)




3.Browser இன் மீது அழுத்தி ஆவணத்தை(pdf,word,html) தரவேற்றம்(Upload) செய்து கொள்ளுங்கள்








4.Upload நிறைவுபெற்றதன் பின்னர் உங்களுக்கு தேவையான வடிவத்தை(Format: PDF,word,HTML,Text) தெரிவுசெய்து பெற்றுகொள்ளக்கூடியதாக இருக்கும்.







Saturday, July 25, 2009

இலவச அலுவலக செயலி


அலுவலக செயலிகளை குதிரை விலை கொடுத்த வாங்கிய காலம் எல்லாம் மலையேறி போய்விட்டது. தற்போது அநேக நிறுவனங்கள் இணையத்தளத்தில் இலவச அலுவலக செயலி பாவனைக்கு விட்டுள்ளன.

அடோபி (ADOBE) நிறுவனமும் இவ்வாறான ஒரு சேவை ஆரம்பித்துள்ளது. இந்த web சேவையில் ஆவணங்களை உருவாக்குவதோடு அவற்றை PDF கோப்புக்களாகவும் உருவாக்கலாம். மாதத்திற்க்கு குறைந்தது 5 PDF கோப்புக்களை இலவசமாக உருவாக்கலாம்.
மேலும் இவைகளும் அடங்கும்.
Texteditor
Spreadsheet – சிட்டை presentation
எதிர்காலத்தில் உங்கள்I phone, Blackberry Nokia மேலும் Windows Samrtphoen போன்றவற்றிலிருந்து இவற்றை பயண்படுத்துவதற்க்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இணையச்சுட்டி http://www.adobe.com/

Wednesday, July 22, 2009

வெப்சைட்டுக்கு shortcut key


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 இப்போது பழக்கத்திற்கு வந்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. இதில் உள்ள பேவரிட்ஸ் பட்டியல் வழக்கம்போல் நமக்குப் பிடித்த வெப்சைட்டுகளை எளிதான கிளிக்கில் பெற்றுத் தருகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் திறக்கப்படாமல் இருக்கும்போதும் இந்த பேவரிட்ஸ் பட்டியலில் உள்ள தளங்களைத் திறக்கலாம். இதனை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் கமாண்ட் பாரில் பேவரிட்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும்.
2. இதில் உள்ள பேவரிட் தளங்களில் எதற்கு ஷார்ட் கட் கீ அமைக்க விரும்புகிறீர்களோ அதனை ரைட் கிளிக் செய்திடவும். மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இப்போது அந்த பேவரிட் தளத்திற்கான ப்ராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் "Web Document"என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Shortcut Key என்று இருப்பதற்கு அடுத்தபடியாக ஒரு ஷார்ட் கட் கீ தொகுப்பினை டைப் செய்திடவும். இந்த ஷார்ட் கட் கீ வேறு அப்ளிகேஷன் புரோகிராம் அல்லது விண்டோஸ் ஆப்பரெட்டிங் சிஸ்டம் பயன்படுத்தாததாய் இருக்க வேண்டும். இதற்கு Alt, Ctrl, மற்றும் Shift போன்றவற்றைப் பயன்படுத்தவும்.
எடுத்துக் காட்டாக தினமலர் இணைய தளத்திற்கு நீங்கள் Ctrl + Shift + Alt + D என்பதை உருவாக்கலாம். இதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.இனி இந்த ஷார்ட் கட் கீயினை அழுத்தினால் உங்களுக்குப் பிடித்தமான தளம் நீங்கள் டிபால்ட்டாக அமைத்திருக்கும் தளத்தில் திறக்கப்படும். அது இன்டர்நெட் எக்ஸ்புளோரராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பயர்பாக்ஸ், குரோம், சபாரி என எதுவாக வேண்டு மானாலும் இருக்கலாம்.

Undelete program


விண்டோஸ் சிஸ்டத்தில் பயன்படுத்தும் வகையில் நமக்குக் கிடைத்திருப்பது ரோட்கில் தரும் அன்டெலீட் (Roadkil’s Undelete) புரோகிராம். இது ஒரு இலவசமாய் டவுண்லோட் செய்யப்படக் கூடிய புரோகிராம். ஒரு ஸிப் பைல் உள்ளாக எக்ஸிகியூடபிள் பைலாக இது கிடைக்கிறது. இதனை ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவிலும் வைத்துப் பயன்படுத்தலாம். இதனால் ஹார்ட் டிரைவில் அழித்த பைலை எளிதாகத் திரும்பப் பெறலாம்.
இந்த புரோகிராம் பயன்படுத்த மிக மிக எளிதானது. இதனை இயக்கியவுடன் Recover from Drive’ என்பதிலிருந்து எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்கேன் முடிந்தவுடன் அந்த டிரைவில் அழிக்கப்பட்ட பைல்களில் எந்த எந்த பைல்களை மீண்டும் பெறலாம் என்று ஒரு பட்டியல் நமக்குக் காட்டப்படும். ஒவ்வொரு பைலுக்கும் அது இருந்த இடம், அளவு, நாள், அதன் தன்மை வகைகள், பைலின் தற்போதைய நிலை காட்டப்படும். எந்த பைலை மீண்டும் பெற வேண்டும் என விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுக் கவும். பின் "Browse"பட்டனை அழுத்தி எந்த இடத்தில் மீண்டும் பெறப்படும் பைலை வைக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் "Recover" என்பதனை அழுத்தவும். இந்த புரோகிராமினைப் பயன்படுத்திப் பார்த்த பிறகு வெவ்வேறான வகை பைல்களை நீக்கிப் பின் மீண்டும் பெற முடிந்தது. ஆனால் ஒரு பெரிய எக்ஸிகியூடபிள் பைலைப் பெற முடியவில்லை. இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடலாம்.

USB பாதுகாப்பாக அகற்றல்(USB safely Remove)
விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. சில வாரங்களுக்கு முன் இது போன்ற புரோகிராம் ஒன்று குறித்து எழுதி இருந்தோம். USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.1 தற்போது வெளியாகியுள்ளது. இதனைhttp://safelyremove.com/usbsafelyremovesetup.exe?v4newsen என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா!
1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல் மேனேஜரை இயக்கி என்ன என்ன பைல்கள் இருக்கின்றன எனப்பார்க்கலாம்.
2. யு.எஸ்.பி.யில் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தை நீக்கும் முன் அதில் உள்ள பைல்களை ஆட்டோ பேக் அப் எடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.
3. எக்ஸ்டெர்னல் டிரைவ் என்றால் அதனை இணைக்கும்போதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை செய்திடும் படி அமைக்கலாம். இதே போல பல செயல்பாடுகளை செட் செய்திடலாம்.
யு.எஸ்.பி.யில் இணைத்த சாதனம் எந்நிலையில் உள்ளது என்று அறிய பல்வேறு ஐகான்கள் காட்டப்படுகின்றன. இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் இயக்கத்தில் உள்ளனவா என்று காட்டப்படும். போர்ட்டில் சாதனங்களே இல்லை என்றாலும் ஐகான் மூலம் தெரிந்து கொள்ளலாம். இணைக்கப்பட்ட ஒரு சாதனத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் அது நீக்கப்படவில்லை என்றால் காட்டப்படும். இதன் பயன்பாடுகள் குறித்து மேலும் அறிய மேலே தரப்பட்டுள்ள இணைய தளத்தினையே காணவும்.
பி.டி.எப். ஸில்லா
பி.டி.எப். பைல்களை டெக்ஸ்ட் பைல்களாக மாற்றுவதற்கென பல புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின் றன. சில புரோகிராம்கள் குறித்து இந்த பகுதியில் ஏற்கனவே எழுதி உள்ளோம். அண்மையில் சிறப்பு அம்சம் ஒன்றுடன் கூடிய புரோகிராம் ஒன்றினைக் காண நேர்ந்தது. அதன் பெயர் பி.டி.எப். ஸில்லா (pdfzilla). இதனைhttp://www.pdfzilla.com/zilla_pdf_to_txt_converter.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இயக்கலாம். இதுவும் இலவசமே. எந்த ஒரு பிடிஎப் பைலையும் டெக்ஸ்ட்டாக இது மாற்றி தருகிறது. இதன் சிறப்பம்சம் என்னவெனில் மொத்தமாகவும் இது பிடிஎப் பைல்களைக் கையாள்கிறது. இந்த கன்வெர்டரில் பிடிஎப் பைல்களை இழுத்துக் கொண்டுவந்து விட்டுவிட்டால் பேட்ச் ப்ராசசிங் முறையில் டெக்ஸ்ட் பைல்களாக மாற்றுகிறது. அல்லது ஏதேனும் ஒரு டைரக்டரியில் மாற்ற வேண்டிய பிடிஎப் பைல்கள் அனைத்தையும் போட்டுவிட்டு அந்த டைரக்டரியினைச் சுட்டிக் காட்டி விட்டுவிடலாம். டெக்ஸ்ட் கன்வெர்ஷன் வேகமாக நடத்தப்பட்டு அவுட்புட் டைரக்டரிக்கு அனைத்து பைல்களும் டெக்ஸ்ட் பைல்களாகக் கிடைக்கின்றன.

No comments:

Post a Comment