தகவல் பெறும் உரிமைச்சட்டம் - விளக்க புத்தகம் டவுன்லோடு செய்ய
.
உலகில் மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் எத்தனையோ இருக்கின்றன. இந்த உலகில் கடந்த காலத்தில் இருந்தவை, நிகழ்காலத்தில் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிதாய்த் தோன்றிய தோற்றங்கள் என எண்ணிலடங்காத பொருள்கள், உயிர்கள் எத்தனையோ இருக்கின்றன. இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் ஆசைப்பட்டாலும், அவைகளை எல்லாம் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ள மனிதனின் வாழ்க்கை போதுமானதாக இருக்காது. மனிதன் அறிந்து கொள்ள எத்தனையோ தகவல்கள் இந்த உலகில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதுப்புதுத் தகவல்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. மனிதன் எல்லாத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியாது. மனிதனுடைய அறிவுத் தேடலுக்குத் தேவையான சில தகவல்களைத் தேடி அதைத் தெரிந்தவர்களிடம் செல்கிறோம். சில தகவல்களுக்காக நூலகங்களுக்குச் செல்கிறோம். சில தகவல்களுக்காக என்சைக்ளோபீடியாவைத் தேடுகிறோம். தற்போது இணையத்தின் வழியாகவும் தேடுகிறோம். இந்தத் தேடுதலுக்கு விடை கிடைத்து விடுகிறது.
ஆனால் அரசுப் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்பினால் மட்டும் நமக்கு எந்தத் தகவல்களுமே கிடைப்பதில்லை. ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அவன் விரும்பும் தகவல் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் எழுந்த போது அதற்கு அரசின் சில சட்டதிட்டங்கள் இடையூறாக இருந்தது. இது மாற்றப்பட வேண்டும். அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005.
இந்த சட்டம் குறித்த பயனுள்ள தமிழ் விளக்க புத்தகத்தை (PDF வடிவில்) தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
No comments:
Post a Comment