Tuesday, 26 August 2014

கொலஸ்டிரால்" நல்லதா? கெட்டதா?






கொலஸ்டிரால் என்பது என்ன?



1) மிக ஆபத்தான நச்சுபொருள்



2) உடலுக்கு மிக அத்தியாவசியமான மூலப்பொருள்.



இரண்டில் எது சரி? இரண்டாவதுதான்.



கொலஸ்டிரால் தான் உங்கள் உடல் வைட்டமின் "டி"யை உற்பத்தி செய்ய உதவும் மூலப்பொருள். அது மட்டும் அல்ல ஒருவருக்கு ஆண்மையை அளிக்கும் டெஸ்டிஸ்ட்ரோன், பெண்மையை அளிக்கும் ஈஸ்ட்ரோஜென் ஆகிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யத் தேவைப்படுவது கொலஸ்டிரால். அது மட்டும் அல்ல உங்கள் மூளையே ஒரு மிகப்பெரும் கொழுப்பால் ஆன கொலஸ்டிரால் உருண்டைதான். கொலஸ்ட்ரால் இல்லையெனில் மனித இனமே இல்லை.



கொலஸ்ட்ரால் இத்தனை முக்கிய மூலப்பொருள் என்பதால் உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லும் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் சக்தி படைத்து உள்ளது. நீங்கள் துளி கொலஸ்ட்ரால் இல்லாத அரிசி, பருப்பை மட்டுமே ஆயுள் முழுக்க உண்டுவந்தாலும் உங்கள் உடல் அந்த உணவை கொலஸ்டிராலாக மாற்றும் சக்தி படைத்தது. தனக்குத் தேவையான கொலஸ்ட்ராலை உங்கள் உடல் உற்பத்தி செய்தேதான் தீரும். அது நீங்கள் உண்ணும் உணவின் மூலம் நேரடியாக கிடைத்தால் தான் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலின் அளவை உங்கள் உடல் அதற்கு ஏற்ப குறைத்துக் கொள்ளும்.



உங்கள் உணவில் கொலஸ்டிரால் இல்லையெனில் உங்கள் உடல் நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை சத்தை கொலஸ்டிராலாக மாற்றும்.ஆக “கொலஸ்டிரால் ப்ரீ, ஃபேட் ப்ரி” என விளம்பரம் செய்யப்பட்டு விற்கபடும் உணவுகளால் எந்த நன்மையும் இல்லை.



கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஆபத்து எனப் படிக்கிறோம். கொலஸ்ட்ரால் குறைவால் என்ன ஆகும் என படிக்கிறோமா?



உங்கள் மொத்த கொலஸ்ட்ரால் எண் 160க்கு கீழே போனால் நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம். உங்கள் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படலாம். மாரடைப்பு வரலாம். ஆம் உண்மைதான். கொலஸ்ட்ரால் குறைவாக இருந்தால் மாரடைப்பு வராது என பொருள் இல்லை. சொல்லப்போனால் மாரடைப்பு வந்தவர்களில் 75% பேர் பாதுகாப்பான எல்டிஎல் அளவு என சொல்லபடும் 130க்கு கீழே கொலஸ்ட்ரால் அளவு கொன்டவர்கள் தான்.



மாரடைப்பு நோயாளிகளில் பாதிப் பேர் நல்ல ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் எண்களை கொன்டவர்கள் ( மொத்த கொலஸ்ட்ரால் < 200 &  எல்டிஎல்  < 130)



உங்கள் மொத்த கொலஸ்ட்ரால் 330 தாண்டினால் தான் அது உங்களுக்கு மாரடைப்பு வருமா, வராதா என்பதைக் கணிக்கும் சக்தியை பெறுகிறது. ஆனால் உங்கள் கொலஸ்ட்ரால் எண் 160க்கு கீழே விழுந்தால் அது உங்கள் டிப்ரஷன், மன அழுத்தம் முதலிய பலவற்றுக்கு உடனடி காரணம் ஆகிறது.

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்ள முன்னோர்கள் செய்த வழிகள்!








கர்ப்பமாக இருக்கும் போது வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை மருத்துவர்கள் சொல்லமாட்டார்கள். ஆனால் கர்ப்பிணிகளுக்கு தன் வயிற்றில் உள்ள குழந்தை பெண்ணா? ஆணா? என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பார்கள்.



அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில வழிகள் மூலம் தெரிந்து கொள்வார்கள்.



உதாரணமாக, திருமண மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி அதனை வயிற்றிற்கு நேராக வைக்கும் போது மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் இருப்பது ஆண் என்றும், அதுவே முன்னும் பின்னும் ஆடினால், அது பெண் என்றும் அக்காலத்தில் எல்லாம் கணித்தார்கள். இதுப்போன்று நிறைய வழிகள் உள்ளன.



* கர்ப்பிணிகளுக்கு வயிறு சிறியதாக இருந்தால் வயிற்றில் உள்ள குழந்தை ஆண். ஆனால் வயிறு பெரியதாக இருந்தால் பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம்.



* தெற்கு திசையை நோக்கி நிற்கும் போது வயிறானது கீழே இறங்கி காணப்பட்டால் ஆண் குழந்தை என்றும், அதுவே வயிறு பெரியதாக காணப்பட்டால் பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தமாம்.இந்த முறையின் படி பலருக்கு உண்மை நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், இதயத்தின் துடிப்பு நிமிடத்திற்கு 140+ ஆக இருந்தால் பெண் குழந்தை என்றும், 140- ஆக இருந்தால் ஆண் என்றும் அர்த்தம். ஆகவே இதயத் துடிப்பை கண்க்கிட்டு வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்ளுங்கள்.



* கர்ப்பிணிகளுக்கு புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட ஏங்கினால் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே இனிப்பு சாப்பிட விரும்பினால் பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம்.



* சருமமானது பொலிவிழந்து சோர்ந்து காணப்பட்டால் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை. ஆனால் கர்ப்பிணிகள் நன்கு அழகாக, பொலிவோடு காணப்பட்டால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை.



* பொதுவாக கர்ப்பிணிகள் சிலருக்கு காலையில் சோர்வு அதிகம் இருக்கும். ஒருவேளை அப்படி எதுவுமே இல்லாவிட்டால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தமாம்.ஏனெனில் வயிற்றில் வளரும் பெண் குழந்தையானது தாயிடமிருந்து, அழகு மற்றும் வலிமையை எடுத்துக் கொண்டு வளர்கிறதாம்.


மேலும் ஒரு வழிமுறையாக சீனக் காலண்டரும், ஆங்கிலக் காலண்டரும் ஓரளவிற்கு நெருக்கமாக இருப்பதால் ஆங்கிலக் காலண்டருக்குத் தகுந்தபடி மாற்றியமைக்கப் பட்ட அட்டவணை இதோ...





கருவுற்ற பெண்ணின் வயதுஆண் குழந்தைபெண் குழந்தை
18 வயதுபிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.ஜனவரி, மார்ச்.
19 வயதுஜனவரி, மார்ச், ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.பிப்ரவரி, ஏப்ரல், மே, நவம்பர், டிசம்பர்.
20 வயதுபிப்ரவரி, ஏப்ரல்,மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர்.ஜனவரி, மார்ச், அக்டோபர்.
21 வயதுஜனவரி.பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர்,அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
22 வயதுபிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஆகஸ்ட்.ஜனவரி, ஜீன், ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
23 வயதுஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.மார்ச், மே, ஜீன், ஆகஸ்ட், டிசம்பர்.
24 வயதுஜனவரி, மார்ச், ஜீன், ஜீலை.பிப்ரவரி, ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
25 வயதுபிப்ரவரி, மார்ச், ஜீன், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.ஜனவரி, ஏப்ரல், மே, ஜீலை.
26 வயதுஜனவரி, மார்ச், ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட், டிசம்பர்.பிப்ரவரி, மே, ஜீலை, செப்டம்பர்,அக்டோபர், நவம்பர்.
27 வயதுபிப்ரவரி, ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், நவம்பர்.
28 வயதுஜனவரி, மார்ச், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.பிப்ரவரி, ஏப்ரல், நவம்பர், டிசம்பர்.
29 வயதுபிப்ரவரி, ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர்.ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
30 வயதுஜனவரி, நவம்பர், டிசம்பர்பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.
31 வயதுஜனவரி, மார்ச், டிசம்பர்.பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.
32 வயதுஜனவரி, மார்ச், டிசம்பர்.பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.
33 வயதுபிப்ரவரி, மார்ச், ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர்.ஜனவரி, மே, ஜீன், ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.
34 வயதுஜனவரி, மார்ச், நவம்பர், டிசம்பர்.பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.
35 வயதுஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், மே, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்.மார்ச், ஜீன், ஜீலை, செப்டம்பர், அக்டோபர்.
36 வயதுபிப்ரவரி, மார்ச், ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.ஜனவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, செப்டம்பர்.
37 வயதுஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜீன், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.பிப்ரவரி, ஜீலை, ஆகஸ்ட், நவம்பர்.
38 வயதுபிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீலை, ஆகஸ்ட், நவம்பர்.ஜனவரி, மார்ச், ஜீன், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
39 வயதுஜனவரி, மார்ச், ஏப்ரல், செப்டம்பர், அக்டோபர்.பிப்ரவரி, மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்.
40 வயதுபிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், நவம்பர்.ஜனவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
41 வயதுஜனவரி, மார்ச், மே, ஜீலை, செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.பிப்ரவரி, ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட், நவம்பர்.
42 வயதுபிப்ரவரி, ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட், நவம்பர்.ஜனவரி, மார்ச், மே, ஜீலை, செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.
43 வயதுஜனவரி, மார்ச், மே, ஜீலை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.பிப்ரவரி, ஏப்ரல், ஜீன், ஆகஸ்ட்.
44 வயதுஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், மே, ஜீன், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்.மார்ச், ஜீலை, நவம்பர், டிசம்பர்.
45 வயதுபிப்ரவரி, மார்ச், ஜீலை, நவம்பர், டிசம்பர்.ஜனவரி, ஏப்ரல், மே, ஜீன், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை திரும்ப பெற எளிய வழி!!






இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை,தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது.



பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.



நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke,Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும்.



இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம்.



தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும்.24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.



நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம்.அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள்.



அழைக்க வேண்டிய எண் - 155223

பெண்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியமான ஸ்கேன் பரிசோதனைகள்






திருமணத்துக்கு முன்...



* அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பெண்களின் சினைப்பை நல்ல நிலையில் உள்ளதா எனத் தெரிந்து கொள்ளலாம்.



* 20 முதல் 30 வயதில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் மார்பகங்களில் புற்றுநோயல்லாத கட்டிகள் ஏதேனும் உள்ளனவா எனத் தெரிந்து கொள்ளலாம்.



கர்ப்ப காலத்தில்...



* முதல் ஸ்கேன் (35 முதல் 50 நாட்களில்) கர்ப்பத்தை உறுதி செய்யவும், கருவிலுள்ள குழந்தையின் இதயத் துடிப்பைத் தெரிந்து கொள்ளவும்... ஒருவேளை இதயத் துடிப்பு இல்லை என்றால் 15 நாட்கள் கழித்து மறுபடிஇன்னொரு முறை ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம். அப்போதும் இதயத் துடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கரு கலைக்கப்படும்.



* 2வது ஸ்கேன் (11 முதல் 14 வாரங்களில்) கருவின் வளர்ச்சி இயல்பாக இருப்பதை அறிந்து கொள்ளவும், குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் பாதிப்பிருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளவும்...



குழந்தையின் கழுத்துப் பகுதி அடர்த்தியை Nuchal translucency சோதனையின் மூலம் பார்த்து டவுன் சிண்ட்ரோம் உறுதி செய்யப்படும். சில நேரங்களில் இந்த என்.டி. சோதனையில் துல்லியம் தவறிப் போகலாம். அதைத் தவிர்க்க ஆட்டோ என்.டி. என்கிற லேட்டஸ்ட் சோதனை வந்திருக்கிறது.



20 வாரங்களில் குழந்தையிடம் வேறு ஏதேனும் குறை பாடுகள் உள்ளனவா எனத் தெரிந்து கொள்ள செய்யப்படுகிற 4டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் குழந்தை தாயின் வயிற்றுக்குள் கொட்டாவி விடுவது, சொரிவது, கண்களைத் திறந்து பார்ப்பது, கால்களை உதறுவது போன்ற சேட்டைகளைக் கூடப் பார்க்க முடியும்.







கர்ப்பத்தின் கடைசி 3 மாதங்களில்



குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீர் போதுமான அளவு உள்ளதா, தொப்புள் கொடி அமைப்பு, அது குழந்தையின் கழுத்தைச் சுற்றியுள்ளதா, குழந்தையின் தலை கீழே இருக்கிறதா, சுகப்பிரசவம் நிகழ வாய்ப்புள்ளதா போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள...



டிரான்ஸ் வெஜைனல் ஸ்கேன் என்ற அல்ட்ரா சவுண்ட் வகை ஸ்கேன் கருவியை பெண்களின் பிறப்பு உறுப்புவரை கொண்டு செல்லலாம். அதன் மூலம் சினைப்பை, கருப்பை, கருக்குழாய்களில் இருக்கும் பாதிப்பைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.



கர்ப்பிணி அல்லாதவர்களுக்கான சோதனைகள்...



* மார்பகங்களின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஒரு பகுதியிலோ முழுமையாகவோ நிறமாற்றம் ஏற்பட்டாலோ, வலி தோன்றினாலோ, அக்குளில் நெறிகட்டியது போலத் தோன்றினாலோ பெண்கள் நவீன டிஜிட்டல் மோமோகிராம் சோதனைக்கு உள்படுத்திக்கொள்ளவேண்டும். வெறும் பத்தே நிமிடங்களில் இந்தச்சோதனையை முடிக்கலாம்.



* மோமோகிராம் மூலம் கட்டி ஏதேனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது சாதாரண கட்டியா, புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிய ‘எஃப்.என்.ஏ.சி’ என்கிற fine needle aspiration cytology (FNAC) முறையைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வலி இல்லாமல் செல் எடுக்கப்படும். பயாப்சி செய்தும் பார்க்கப்படும். இவை இரண்டையுமே இப்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் வழிகாட்டுதல்படி துல்லியமாக செய்ய முடிகிறது.



* மார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும் 40 வயதைக் கடக்கும் பெண்கள் வருடத்துக்கு ஒரு முறை டிஜிட்டல் மோமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும். அதன் மூலம், நோய் இருந்தால் தொடக்க நிலையிலே கண்டறிந்து சிகிச்சை கொடுத்து  விடலாம்.



* கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் தீவிரமும் இன்று மிகவும் அதிகமாக இருக்கிறது. பாப் ஸ்மியர் சோதனை யின் மூலம் கர்ப்பப்பை வாயிலிருந்து செல்களை எடுத்து புற்றுநோயைக் கண்டறியலாம். அதில் சந்தேகம் இருந்தால் எம்.ஆர்.ஐ. மற்றும் பெட் சி.டி. ஸ்கேன்களும் பரிந்துரைக்கப்படும்.



* 50 வயதுக்கு மேல் பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்ற எலும்பு பலவீன நோய் வரும். எலும்புகளின் பலவீனத்தின் அளவைத் துல்லியமாகக் கண்டறிய ‘டெக்ஸ்சா ஸ்கேன்’ உதவும்.

ஏடிஎம் இயந்திரம் தோன்றிய சுவாரஸ்யமான சம்பவம்






ஒவ்வொரு இயந்திரம் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இப்போது நாம் ஈஸியாக சென்று பணம் எடுத்து வரும் ஏடிஎம் உருவான கதை கூட சுவாரஸ்யமானது தான்.



ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, ‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.



கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார். இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.



அப்போது அவர் கண் முன்னால் பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெசின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான் ஏடிஎம் .



இவர் உருவாக்கிய முதல் ஏடிஎம் இயந்திரம் 1969ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மிஷினா என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார்.



இன்று ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான். இன்று உலகளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன. ஏடிஎம் மிஷின் உருவாக காரணமாக இருந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் 84வது வயதில் கடந்த 2010 மே 19ம் தேதியன்று காலமானார். 

எச்சரிக்கை :எய்ட்ஸைவிட 100 மடங்கு வேகமாகத் தொற்றக்கூடிய நோய்







மலேரியா, சர்க்கரை நோய், எய்ட்ஸ், புற்றுநோய் பற்றி நமக்கு ஓரளவுக்குத் தெரியும். ஆனால், சத்தமில்லாமல் கொல்லக்கூடிய, எய்ட்ஸைவிட 100 மடங்கு வேகமாகத் தொற்றக்கூடிய ஹெபடைட்டிஸ் பி உள்ளிட்ட வைரஸ் கிருமிகளைப் பற்றி அதிகம் தெரியாது.



ஆண்டுதோறும் 14 லட்சம் பேருக்கு, ஹெபடைட்டிஸ் ஏ தொற்று ஏற்படுகிறது. 2.4 கோடி பேர், ஹெபடைட்டிஸ் பி (எச்.பி.வி) கிருமித் தொற்றுடன் வாழ்கின்றனர். 7.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, டி மற்றும் இ வைரஸ் கிருமியால் லட்சக்கணக்காணோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



‘கல்லீரலில் ஏற்படக்கூடிய அழற்சியை ‘ஹெபடைட்டிஸ்’ என்போம். இந்த அழற்சி ஒரு கட்டத்துக்குள் நின்றுவிடலாம். இல்லை என்றால் கல்லீரலில் சுருக்கம், தழும்பு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். மேலும் லிவர் ஸ்காரிங், கல்லீரல் செயல் இழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய்கூட ஏற்படலாம்.



பொதுவாக நோய்க் கிருமிகள் மூலம் இந்த அழற்சி ஏற்படலாம். தவிர, மது அருந்துதல், சில வகையான மருந்து களை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் நம்முடைய நோய் எதிர்ப்பு செல்லே நம் உறுப்பைத் தாக்கும் ‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு போன்றவற்றின் காரணமாகவும் ஹெபடைட்டிஸ் ஏற்படலாம்.



கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகள் நிறைய உள்ளன. இந்த வைரஸ் கிருமிகளின் வகைகள், ‘ஏ’-வில் தொடங்கி ‘ஜி’ வரை சென்றுவிட்டது. இதில், ‘ஹெபடைட்டிஸ் பி’ மற்றும் ‘சி’ மிக மோசமானவை. உலகில் லட்சக் கணக்கானோருக்கு கல்லீரல் சுருக்கம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட, வைரஸ் ‘பி’ மற்றும் ‘சி’ காரணமாக இருக்கின்றன.



ஹெபடைட்டிஸ் ‘ஏ’ மற்றும் ‘இ’ உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவுகிறது. பி, சி, டி ஆகியவை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய ரத்த வழித் தொடர்புகொள்வதன் மூலமே ஏற்படுகிறது.







பொதுவாக, பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தைப் பெறுதல், சரியாகச் சுத்தப்படுத்தப்படாத ஊசி உள்ளிட்ட அறுவைசிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்துவதாலும் பரவுகிறது. ‘ஹெபடைட்டிஸ் பி’வைரஸ் மட்டும் இதனுடன் கூடுதலாகக் கர்ப்பக் காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கும் மற்றும் உடல் உறவு மூலமாகவும் பரவுகிறது. எனவே, கர்ப்பிணிகள் மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தால், சிசுவுக்கு அந்தப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.



கர்ப்பிணியும் தனியாக ஹெபடைட்டிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றைத் தடுக்க, குழந்தைப் பிறந்ததும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட வேண்டும். எந்த வயதினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.









பாதுகாப்பற்ற ரத்தப் பரிமாற்றத்தைத் தவிர்க்க வேண்டும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசியைப் பயன்படுத்த வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் மூலம் ஹெப டைட்டிஸ் ஏ மற்றும் இ வைரஸ் பரவாமல் இருக்க, தனிநபர் சுகாதாரம் அவசியம். நோய்த் தொற்று உள்ளவர் உணவை சமைக்கும்போதோ, பரிமாறும்போதோ, அது மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, சுத்தமாக இருப்பதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்’




விளக்க காணொளி



கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்






நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?



1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.



2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.



3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.



4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.



5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்



6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்…



7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.



8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.



9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.



10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.



11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

மைக்ரோ-இன்சூரன்ஸ் பாலிசி!






இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் துறையை வழிநடத்தி, கட்டுப்பாட்டு அமைப்பான இன்சூரன்ஸ் கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி ஆணையம் (Insurance Regulatory and Development Authority), பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய பிரிவினரிடம் இன்சூரன்ஸ் வசதிகளை கொண்டு வரும் நோக்கத்துடன், மைக்ரோ-இன்சூரன்ஸ் என்ற சிறப்பு வகுப்பு இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது.



IRDA-வின் 2005-ம் ஆண்டுக்கான விதிமுறைகளில் மைக்ரோ-இன்சூரன்ஸ் பற்றி விளக்கம் தரப்பட்டுள்ளது. பொதுவாகவே, ஆயுள் மற்றும் பொதுவான காப்பீடு ஆகிய இரண்டையும் உள்ளடக்கி, ரூ.50,000 அல்லது அதற்கும் குறைவான முதிர்வு தொகையை வழங்கும் வகையில் மைக்ரோ-இன்சூரன்ஸ் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நெகிழும் தன்மையுடனான விதிமுறைகள் உள்ளதால், காப்பீடு செய்தவர்கள் பொதுவான மற்றும் ஆயுள் காப்பீட்டு இன்சூரன்ஸ் திட்டங்கள் போன்ற பேக்கேஜ் திட்டங்களை பெறுகிறார்கள். இந்த வகையில், குறிப்பிட்ட காலத்திற்கான திட்டம், என்டோவ்மென்ட்ஃசேமிப்பு திட்டம், தனிநபர் விபத்து காப்பீடு மற்றும் சொத்து காப்பீடு ஆகிய திட்டங்கள் கிடைத்து வருகின்றன.



மைக்ரோ-இன்சூரன்ஸ் திட்டங்கள் வழியாக கீழ்தட்டு மக்களை அடையும் செயல்பாடுகளுக்கு சிறு-நிதி நிறுவனங்கள் (Microfinance Institutions), தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவை ஈடுபட்டு வருகின்றன.



மைக்ரோ-இன்சூரன்ஸ் திட்டங்களைப் பொறுத்த வரையில், சில முன்மொழிவுகளையும் மற்றும் பரிந்துரைகள் அடிப்படையிலும், இறுதி விதிமுறைகளை சற்றே காலதாமதமாகவே வரையும். இந்த வரைவின் படி, மைக்ரோ-இன்சூரன்ஸ் திட்டத்தை திரும்ப கொடுப்பது அனுமதிக்கப்படமாட்டாது.  இருப்பினும், பாலிசி தொடங்கப்பட்ட 2-வது ஆண்டு முதல், குறைந்த பட்ச வைப்புத் தொகை ஒரு ஆண்டுக்கான பிரிமியம் அளவாக இருக்கும் வேளைகளில், பகுதிவாரியாக பணத்தை திரும்பப் பெற முடியும்.



மைக்ரோ-இன்சூரன்ஸ் திட்டங்கள் மேலும் பரவலாக மக்களை அடையச் செய்யும் வகையில், இந்த சிறப்பு பாலிசி திட்டங்களை (Special Policy Plans) வட்டார கிராம வங்கிகள், மாவட்ட கூட்டுறவு வங்கிகள், சுய உதவிக் குழுக்கள், வங்கிகளின் தொடர்புகள், சிறு-நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், உள்ளூர் கிரான ஸ்டோர்கள், எரிபொருள் விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் ஆகியவ்றறின் வழியாக கொண்ட செல்லவும் வரைவின் முன்மொழியப்பட்டுள்ளது.



இது மாறுபட்ட மைக்ரோ ஆயுள் காப்பீட்டு திட்டங்களுக்கு அவை தொடங்கப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகள் எடுக்க முடியாதவாறு செய்யும் 'லாக்' வசதி, பகுதிவாரியாக பணம் எடுக்கும் வசதியுடன் கொடுக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மூலிகைப் பொடிகளின் பயன்கள்!!







*அருகம்புல் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி



*நெல்லிக்காய் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது



*கடுக்காய் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.



*வில்வம் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது



*அமுக்கலா :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.



*சிறுகுறிஞான் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.



*நவால் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.



*வல்லாரை :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.



*தூதுவளை :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.



*துளசி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.



*ஆவரம்பூ :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.



*கண்டங்கத்திரி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.



*ரோஜாபூ :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.



*ஓரிதழ் தாமரை :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா



*ஜாதிக்காய் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.



*திப்பிலி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.



*வெந்தய :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.



*நிலவாகை :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.



*நாயுருவி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.



*கறிவேப்பிலை :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.



*வேப்பிலை :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.



*திரிபலா :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.



*அதிமதுரம் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.



*துத்தி இலை :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.



*செம்பருத்திபூ :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.



*கரிசலாங்கண்ணி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.



*சிறியாநங்கை :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.



*கீழாநெல்லி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.



*முடக்கத்தான் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.



*கோரைகிழங்கு :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.



*குப்பைமேனி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.



*பொன்னாங்கண்ணி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.



*முருஙகைவிதை :- ஆண்மை சக்தி கூடும்.



*லவங்கபட்டை :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.



*வாதநாராயணன் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.



*பாகற்காய் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.



*வாழைத்தண்டு :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.



*மணத்தக்காளி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.



*சித்தரத்தை :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.



*பொடுதலை :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.



*சுக்கு :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.



*ஆடாதொடை :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.



*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.



*வெட்டி வேர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.



*வெள்ளருக்கு :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.



*நன்னாரி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.



*நெருஞ்சில் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.



*கஸ்தூரி மஞ்சள் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.



*பூலாங்கிழங்கு :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.



*வசம்பு :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.



*சோற்று கற்றாலை :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.



*மருதாணி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.



*கருவேலம்பட்டை :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

PUSH TO TALK (புஷ் டூ டாக்) : மொபைல் தொழில்நுட்பம்






இந்த தொழில்நுட்பம் மற்ற கம்பெனியின் மொபைல்களிலும் இருந்தாலும் நோக்கியா நிறுவனம் தான் இந்த தொழில்நுட்பம் உள்ள போன்களை அதிகமாக வெளியிடுகிறது. இந்த "புஷ் டூ டாக்" தொழில்நுட்பம் ஒரு வாக்கி-டாக்கி சமாச்சாரத்தை ஒத்ததுதான்.



இந்த வகை போன்களில் இதற்காகவே தனியாக ஒரு பட்டன் இருக்கும்.அதனை அழுத்தி நாம் ஐந்துக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் ஒரே நேரத்தில் தொடர்பை ஏற்படுத்தி பேச முடியும்,



அதாவது பொதுவாக கான்பரன்ஸ் கால் என்று சொல்லப்படும் வசதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் பேச வேண்டு மென்றால் நாம் ஒவ்வொருவரின் நம்பரையும் டயல் செய்ய வேண்டியிருக்கும்.ஆனால் இந்த நுட்பத்தில் அந்த நம்பர்களை ஒன்றன் பின் ஒன்றாக சேமித்து வைத்து விட்டால் ஒரு பட்டனை அழுத்தி ஒரே நேரத்தில் அத்தனை பேரிடமும் பேசமுடியும்.



இந்த தொழில்நுட்பத்தை நமது மொபைல் ஆபரேட்டர்கள் உதவியால் தான் பயன்படுத்த முடியும்.புதிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உலக நாடுகள் வரிசையில் இந்தியா மட்டுமே இன்னும் முயலோடு போட்டியில் கலந்து கொண்ட ஆமையாக இருக்கிறது. 

தமிழர்களின் பாரம்பரியம் "பூப்புனித நீராட்டுவிழா "






பூப்புனித நீராட்டுவிழா என்பது, பூப்படைந்தை பெண்ணை புனிதமாக்கும் நீராட்டு விழா என பொருள்படும். அதாவது, பருவ வயதை அடைந்த ஒரு சிறுமி பால்முதிர்ச்சி அடைந்து (சிறுமியாக இருந்தவள் குமரியாக மாறும்) பருவ மாற்றம் பெற்று “பக்குவப் படும்போது” நடாத்தப் பெறும் ஒரு சமயச் சடங்காகும்.



சந்தான விருத்தி (தாய்மை) அடையக் கூடிய பருவத்தை முதன் முதலில் பெறும்போது அதாவது முதல் கரு உற்பத்தியாகியதை (மாதவிடாய் வெளியானதை) காரணமாக வைத்து சமயச் சடங்குகள் செய்யப் பெறுகின்றன. இச் சடங்குகள் செய்வதன் மூலம் அப் பெண்ணிற்கு ஆசூசம், கண்ணூறு, தோஷ நிவர்த்தியும், மாங்கல்ய பாக்கியமும், சந்தான விருத்தியும் கிடைக்கப் பெறும் என்பது இந்துக்களின் ஐதீகம்.



முதல் மாதப்போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் செய்யப் பெறுகின்றன. பூப்புனித நீராட்டுவிழா அதையடுத்துவரும் அண்மைய நாட்களில் அல்லது மாதங்களில் நடத்தப்பெறுகின்றன. இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள் அவர்கள் சார்ந்த இடம், சமூகம், அவர்களின் வாழ்நிலை வசதிகள் போன்றவைகளுக்கு அமைய மாறுபடுகின்றன. பொதுவாக ஒரு பெண் பூப்படைந்த நேரத்தை வைத்து கணிக்கப்பெறும் ஜாதகம் அவள் பிறக்கும் போது எழுதப்பட்ட ஜாதகத்திலும் சிறப்புடையது என ஜோதிடம் கூறுகின்றது.



இச்சடங்குகளும் விழா முறைகளும் மதம், சாதி, வாழ்நிலை, வர்க்கம், இனம் சார்ந்தும் வேறுபடுகின்றன.



இங்கே விபரிக்கப்படுபவை தென்னிந்திய, ஈழத்து தமிழரிடையே (சாதிப் படிநிலைச் சமூக அமைப்பில்) இந்துக்களிடையே நடைபெறும் சடங்குகளின் பொதுவான சில நிகழ்வுகளாகும். இவை இடத்துக்கிடம் மாற்றம் காணலாம், வேறு பல கூறுகள் சேர்க்கப்படலாம். சில கைவிடவும்படலாம்.



முதல் தண்ணி வார்த்தல் (நீராட்டல்):

மஞ்சள் நீராட்டுச் சடங்கு பெண் பூப்படைந்தவுடன் முக்காலத்தில் கிணற்றடியில் காய்ந்த இலைகளின் (குப்பை) மேல் இருத்தி தாய் மாமன் தேங்காய் உடைக்க, மாமி (தந்தையின் சகோதரி) தண்ணீர் ஊற்றி நீராட்டுவார்கள். கிணற்றடி பொது இடம், பெண்ணில் இருந்து வெளிப்படும் தீட்டு பிறர் கண்ணில்படாது குப்பைக்குள் மறைந்துவிடும் என்பதால் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி நீராட்டுவார்கள். இது முதற் தண்ணி எனப்படும்.



தற்காலத்தில் தனியாக குளியலறை வைத்திருப்பவர்கள் பெண்ணை குளியறையில் நீராட்டுகின்றார்கள். பின்பு பெண்ணிற்கு புதிய ஆடை அணிவித்து தாய்மாமனிடம் ஆசீர்வாதம் பெற்றபின்னர் ஒரு தனியறையில் பெண்ணை விடுவர்.



அவ்வறையில் வேப்பிலை மற்றும் காம்புச்சத்தகம் (பன்ன வேலைக்குப் பாவிப்பது) முதலானவற்றை இருப்பிடத்தின் மேல் (காவலுக்காகச்) செருகிவிடுவார்கள். கன்னிப் பெண் பூப்பெய்திய காலத்தில், அல்லது மாதவிடாய் உள்ள காலத்தில் பேய் பிசாசுகள் பிடிக்கும் என்ற பயம் எமது மூதாதையினரிடம் இருந்து வந்துள்ளது. அதனால் போலும் அவர்கள் பூப்பெய்திய பெண்களையும், மாதவிடாய் வந்த பெண்களையும் வீட்டின் ஒதுக்கமான இடத்தில் கரியினால் கோடிட்டு வேப்பம் இலையும், காம்புச்சத்தகம் வைத்து காவல் செய்யப் பெற்ற இடத்தில் 3 நாட்களுக்கு தங்க வைக்கிறார்கள். தீட்டுத்துடக்கு வீட்டை குட்டிச்சுவராக்கும் என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.



பெண் பூப்படைந்தபோது அணிந்திருந்த ஆடையினை குடும்பச் சலவைத் தொழிலாழிக்குக் கொடுப்பதே மரபாக உள்ளது. தீட்டு முடியும் வரை மாற்றுடுப்பு வழங்கும் பொறுப்பும் அவரையே சார்ந்துள்ளது. அவ்வீட்டில் உள்ள அனைவருக்கும் முப்பத்தொரு நாட்கள் வீட்டுத் (ஆசூசம்) துடக்கு ஏற்படுகின்றது.ஆகையால் அதை நிவர்த்தி செய்வதற்கு ஒரு குருவை அழைத்து புண்ணியவாசம் செய்வார்கள். முன்பு கிராமபுறங்களில் பூப்பெய்தி 4 ஆம் நாள் பசும் பால் வைத்து நீராட்டித் துடக்கைப் போக்குவார்கள்.



பூப்பெய்திய பெண்ணை உபசரிக்கும் முறை:

முதற்தண்ணி வார்த்ததும் சில இடங்களில் கத்தரிக்காயை மெதுவான அடுப்புத் தணலில் (சுட்டு) வாட்டி எடுத்து, சிறிய உரலில் போட்டு இடித்துச் சாறு பிழிந்தெடுத்துக் குடிக்கக் கொடுப்பார்கள். ஒரு தரம் இதைக் குடித்தால் பெண்களுக்குப் பிரத்தியேகமாக ஏற்படும் நாரி வலி பின் ஒருபோதும் தோன்றாது என நம்பப்படுகிறது.



உணவாக முதல் மூன்று நாட்களும் பச்சையரிசிச் சாதமும், கத்தரிக்காய் பாற்கறியும் கொடுப்பார்கள். மூன்று நாட்களின் பின் அதிகாலை ஒரு பச்சை முட்டை குடிக்கக் கொடுத்து அதன் அளவு நல்லெண்ணெயும் முட்டைக் கோதுக்குள் விட்டு குடிக்கக் கொடுப்பார்கள். பின்பு காலை உழுத்தங்களி, மதியம் சோறு கறி, கத்தரிக்காய் பொரியல், முட்டைப் பொரியல் கொடுப்பார்கள். பொரியல் வகை சமயல் எல்லாவற்றிற்கும் நல்லெண்ணையையே பாவிப்பார்கள்.



பால் விடாது காலை, மாலை கோப்பி கொடுக்கலாம். இரவு இடியப்பம் கொடுக்கலாம். இக்காலத்தில் இலகுவாக சமிபாடடையக் கூடிய ஊட்டநலன் உள்ள உணவுகளைக் கொடுப்பர். முக்கியமாக அனைத்து உணவுகளிலும் உழுந்தும், நல்லெண்ணெயும் மிகுதியாகச் சேர்க்கப்படும்.



அத்துடன் காலையில் வேப்பிலை 10, மிளகு 3, விரற்பிடி சின்னச் சீரகம், 2 உள்ளிப் பல், சிறுதுண்டு மஞ்சள் இஞ்சி ஆகியவற்றை அரைத்துக் குளிசைகளாக்கி (சரக்கு உறுண்டை) 3 நாட்களுக்கு விழுங்கக் கொடுப்பது உடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது .



சாமர்த்தியச் சடங்கு - தோயவார்த்தல் - (தலைக்குத் தண்ணீர் வார்த்தல்)

சடங்கு செய்வதற்குச் சுபநாள் ஒன்றைத் தெரிவு செய்து அச் சடங்கை விழாவாக வீட்டிலா அல்லது மண்டபத்திலோ செய்வதன முடிவு செய்வர். அத்துடன் அவர்கள் தம் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அவ் விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுப்பார்கள். வசதி படைத்தோர் தலைக்குத் தண்ணீர் வார்த்தலை வீட்டிலும். அதற்கான கொண்டாட்டத்தினை மண்டபத்திலும் ஆடம்பரமாக கொண்டாடுவார்கள்.மற்றையோர் இரண்டையும் வீட்டிலேயே செய்வார்கள்.



வீட்டில் நடத்தப்பெறும் தலைக்குத் தண்ணீர் வார்த்தல் செய்யும் முறைகள்

பருவமடைந்த பெண்ணின் இரண்டு கைகளிலும் பாக்கும் சில்லறைக் காசும் வைத்துச் சுருட்டப் பெற்ற ஒரு வெற்றிலையைக் கொடுத்து, (அபசகுனங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு) தலையில் வெள்ளைத் துணியால் முகத்திரை இட்டு மாமியார் பால் அறுகு வைக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பார்க்ககூடியதாக பாயின் மேலோ அல்லது ஒரு வெள்ளைத்துண்டை இட்டு அதன் மேல் பருவமடைந்த பெண்ணை உட்கார வைப்பர்.



பால் தப்பும் இடதில், நிறைகுடம், குத்துவிளக்கு, ஒரு பாத்திரத்தில் பால் - அறுகம்புல், சில்லறைக் காசும் இட்டு வைக்கப் பெற்றிருக்கும். அத்துடன் வேறு ஒரு தட்டில் பழம், பாக்கு வெற்றிலையும், ஒரு தேங்காயுடன் உடைப்பதற்கு கத்தியும் பாத்திரமும் வைப்பார்கள். இச்சடங்கில் தாய்மாமன், மாமிக்குத்தான் முக்கிய இடம் கொடுக்கப் பெறுகின்றது. பெண்ணை நிறைகுடம் விளக்கில் பார்க்கும்படி பெண்ணுக்குக் கூறி முகத்திரையை விலக்கி விட்டு அதன் பின் கற்பூரம் ஏற்றி பிள்ளையாரைத் துதித்து எல்லாக் காரியங்களும் இனிதே நடைபெற வேண்டும் என்று நினைத்து வணங்குவர்.



தாய்மாமன் தேங்காய் உடைப்பார். பின் பால், அறுகு இருக்கும் தட்டில் சில்லறைக்காசு போட்டு மாமியார் இருகைகளாலும் எடுத்து பெண்ணை ஆசீர்வதித்து தலையில் (தப்புவார்) வைப்பார்கள். அதைத் தொடர்ந்து 5 பேர் அல்லது 7 பேர் என ஒற்றை எண்ணிக்கையாலனவர்கள் பாலறுகு வைப்பார்கள். பாலறகு வைத்து முடிந்ததும் பெண்ணை நீராட்டும் இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் கிழக்கு அல்லது வடக்கு முகமாகப் பெண்ணை இருத்தி முதலில் தாய்மாமன் தலையிலே தண்ணீரை ஊற்றுவார்.



அதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் ஊற்றுவார்கள். பெண்ணுக்கு மஞ்சள் பூசி நன்கு நீராட்டி மீண்டும் தலையைத் துணிகொண்டு மூடி அழைத்து வந்து சுடர்விட்டு பிரகாசிக்கும் குத்துவிளக்கை தரிசிக்க விடுவர்.



ஆரத்தி எடுத்தல்:

பின்பு பெண்ணை அலங்காரம் செய்து தாய்மாமன் பெண்ணின் கையில் கும்பம் (தேங்காய் மற்றும் மாவிலைக் கொத்தினால் மூடப்பெற்ற நிறைகுடம் அல்லது செம்பு) கொடுப்பார். கன்னிப் பெண்கள் குத்துவிளக்குடன் பெண்ணை அழைத்துக் கொண்டு மேடையை நோக்கிச் செல்வர். அங்கு ஆரத்தி தட்டங்கள் வரிசையாக வைப்பார்கள்.



பின்னர் சுமங்கலிப் பெண்கள் எதிரெதிரே நின்றுகொண்டு ஒவ்வொரு தட்டங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று முறை வலது பக்கமாக உயர்த்தி (ஆலயத்தில் சுவாமிக்கு கற்பூர ஆராத்தி எடுப்பதுபோல்) ஆரத்தி எடுத்து பின் தலைக்குமேல் மணிக்கூடு சுற்றும் திசையில் மூன்று முறை சுற்றி அதைப் பின்னுக்கு கொடுத்து கண்ணூறு கழிப்பார்கள். பின்பு கடைசியாக வேப்பிலையால் சுற்றித் தடவி பால் ரொட்டியை உடைத்து நாலுபக்கமும் எறிந்து வேப்பிலையால் தலையையும் உடம்பையும் சுற்றிப் பெண்ணை வாயில் மென்று துப்பச் செய்தபின்னர், வாழைப்பழ திரி ஆரத்தி எடுப்பர். (ஆரத்திக்குரிய தட்டங்களின் ஒழுங்கு இடத்துக்கிடம் வேறுபடலாம்),



ஆரத்தி இரு வகையாக செய்யப் பெறுகின்றது. சுப காரியங்களுக்கு வலஞ் சுழியாகவும் அசுப காரியங்களுக்கு இடஞ்சுழியாகவும் எடுப்பது ஆகம விதி, ஆராத்தி எடுப்பவர்கள் அவதானத்துடன் எடுப்பது முக்கியமாகும். ஆராத்தி எடுப்பவர்கள் சில சமயங்களில் இடஞ்சுழியாக ஆராத்தித் தட்டை சுற்றுவது எதிர்மாறான பலனைக் கொடுக்கக் கூடும். குளிக்கப் போய் சேறு பூசின கதையாக முடிந்து விடலாம். அதனால், ஆராத்தித் தட்டை எடுத்து வலது-இடது பக்கமாக மூன்று முறை ஆட்டியபின் ஆராத்தி யாருக்கு எடுக்கப் பெறுகின்றதோ அவரின்-அவர்களின் வலது பக்கமாக உயர்த்தி இடது பக்கமாக பதித்து மூன்று ்முறை சுற்றுதல் வேண்டும்.



ஆனால் எப்பவும் நிறைநாழி முதலாவதாகவும் வேப்பிலை பால்றொட்டித்தட்டம் இறுதியாகவும் செய்யவேண்டும். அதன் பின் வாழைப்பழம் ஆரத்தி எடுத்து நிறைவு செய்தல் வேண்டும். (பொதுவாகப் பெண்ணின் தாயார் ஆராத்தி எடுப்பதில்லை).



பெற்றோர் ஆண்டாள் மாலையை பெண்ணின் கழுத்தில் அணிந்து (ஆண்டாள் மாலை அணிவது பெண்ணைப் பாவையாக கருதுவதால்) பெண்ணின் முன் இருக்கும் நிறைகுடத்தைத் தாய்மாமனும், குத்துவிளக்கை மாமியாரும் எடுத்துக்கொண்டு அதனுடன் பெண்ணையும் அழைத்துக்கொண்டு பூசை அறையினுள் சென்று வைப்பர், தாய்மாமன் பெண்ணின் கையிலிருக்கும் செம்பை வாங்கி பூஜை அறையில் வைப்பர் (இம்முறை வீட்டில் செய்வோருக்குப் பொருந்தும்) பூஜை அறையில் தூப தீபம் காட்டி வழிபட்டு பெண் பெற்றோரினதும், மாமன் மாமியினதும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவாள். பின்பு சடங்கில் பங்குபற்றிய உறவினர்கள் பெண்ணை வாழ்த்தி தம்மால் இயன்றவரை பரிசளிப்பர். அதன் பின் வந்தவர்கள் மதிய உணவு விருந்தளித்து உபசரிப்பர்.



ஆரத்தி எடுக்கும் முறை

உணவு பொருள்கள் அடங்கிய ஆராத்தி தட்டத்தினனை 3 முறை மேலும் கீழுமாக சுற்றிப் பின் பெண்ணின் தலைக்கு மேல் 3 முறை சுற்றிப் பின்னால் நிற்பவரிடம் கொடுப்பார்கள்.நிறை நாழியும் பன்னீர்த்தட்டமும் முன்னுக்கு வைக்கவேண்டும்.



பூத்தட்டத்தால் ஆரத்தி எடுத்தபின் பூக்களைப் பெண்மேல் தூவிவிடுதல் வேண்டும்.பின் இந்த உணவுப் பண்டங்களை எல்லாம் சலவைத் தொழிலாளிடம் கொடுத்து விடப்படும். அல்லது ஆற்றிலோ, கடலிலோ சேர்த்து விடப்படும்.



மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வுகள்:

இங்கும் ஆரத்தி எடுக்கப்பெற்கின்றன. அத்துடன் விசேடமாக ஒழுங்கு செய்யப்பெற்ற மலர்-தட்டுகளுடன் சிறுமியர்களும், குத்துவிளக்குகளுடன் பூப்பெய்திய பெண்களும், ஆராத்தித் தட்டங்களுடன் சுமங்கலிப் பெண்களும் பூப்பெய்திய பெண்ணை மேடைக்கு அழைத்து வருவார்கள். அதன்பின் ஆராத்திகள் எடுக்கப்பெறும். நிறைவாக நிழல் படங்கள் பிடித்து விருந்துபசாரம் செய்யப்பெறும்.



ஆரத்திக்கான பலகாரங்கள் செய்யும் முறை

பால்சாதம் (பால்புக்கை): பச்சை அரிசியும், தேங்காய்ப் பாலும், நீரும் சிறிது உப்பும் போட்டு சாதமாக அவித்து 3 தளிசுகளாகத் தட்டில் வைக்கப்படும்.



பிட்டு: வழமை போல் வறுத்த உழுத்தமா, அரிசிமா கலந்து செய்த பிட்டை நீற்றுப் பெட்டியில் சிறியனவாக மும்முறை அவித்து தட்டத்தில் வைக்கப்படும்.



களி: வறுத்த அரிசிமா 1 சுண்டு, வறுத்த உழுத்தமா ½ சுண்டு, தேங்காய்பால் 3 சுண்டு, பனங்கட்டி ¾ சுண்டு உப்பு விரற்பிடியளவு, தேங்காய்ப் பாலைக் காய்ச்சி (உழுத்தமா, அரிசிமா, உப்பு, தூளாக்கிய பனங்கட்டி எல்லாவற்றையும் கலந்து பாலின் மேல் தூவி கட்டிபடாமல் கிளறி எடுத்து 3 தளிசுகளாக தட்டத்தில் வைக்கப்படும்.



பாலுறட்டி (பால்ரொட்டி)

1 சுண்டு பச்சை அரியை கழுவி ஊற வைத்து இடித்து ¼ சுண்டு கப்பிமா எடுப்பர். மிகுதியை மாவக்குவர் இரண்டையும் கலந்து ½ தேக்கரண்டி உப்பும்சேர்ப்பர். ஒரு தேங்காய் துருவி முதல் பால் எடுத்து காய்ச்சி மாவில் ஊற்றி இறுக்கமாக கையில் ஒட்டாத பதத்திற்கு குழைப்பர். ½ மணித்தியாலம் விட்டு ஒரு வாழையிலையில் எண்ணை தடவி மாவை சிறு உருண்டைகளாகத் தட்டி எண்ணையில் பொரிப்பர். இது பூரி போல் பொங்கி வரும்.



ஆரத்திப் பொருட்கள்:

நிறை நாழி (நிறை நாழி - கொத்தில் நெல்லை நிரப்பி அதன் நடுவே காம்புச் சத்தகத்தை குத்தி வைத்து துனிக்காம்பில் ஒரு வெற்றிலையைச் சொருகி வைப்பர்.)

பிட்டு, களி, பால்சாதம், சோறுகறி. தேங்காய்த் தட்டம் (முடியுடன் கூடிய 3 தேங்காய்களை மஞ்சள் நீர் கொண்டு கழுவித் தட்டில் வைப்பர்),

பழங்கள்

பலகாரம்

பன்னீர்த்தட்டம்

வெற்றிலை பாக்கு எலுமிச்சை,

பூத்தட்டு,

பாலுறட்டி,

வேப்பிலை,



பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:

ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்து விடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.



நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகி விட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.



ஆபிரிக்கா சுலு (Zulu) இனத்தில் ஒரு பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவள் ஒத்தப் பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்த பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்படைந்த பெண்களும் பூப்படைந்த பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்.



ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் அவரையும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்த பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.



இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென் இந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. ‘பூப்பு நன்னீராட்டல்’ என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.



தமிழ்நாட்டு வழமை:

தமிழ்நாட்டில் ஒரு பெண் பூப்படைந்திருக்கிறாள் என்பதை சில பெண்களைக் கொண்டு உறுதிப்படுத்துகின்றனர். இந்த உறுதிப்படுத்தும் நிகழ்வை பூப்படைந்த பெண்ணின் தாயைத் தவிர பிறரே செய்கின்றனர். இந்து சமயத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் வரை வீட்டின் ஒதுக்குப்புறமாக தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறாள். இந்த தனிமைக் காலத்தில் பூப்படைந்த பெண்ணிற்கு உண்ண தனித் தட்டு, போன்றவையும், படுக்கத் தனிப்படுக்கையும் அளிக்கப்படுகின்றன. (தற்போது இந்நிலை சிறிது மாற்றமடைந்துள்ளது.).



பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் புரோகிதர்களைக் கொண்டு புனிதச் சடங்கும் அதைத் தொடர்ந்து அவரவர் சாதிக் கட்டுப்பாடுகளுக்கேற்ப குடும்பச் சடங்கும் நடத்தப்படுகின்றன. இந்தச் சடங்குகள் தமிழ்நாட்டிலுள்ள பகுதி மற்றும் சாதிகளுக்கு ஏற்ப சிறிது மாறுபடுகின்றன.



புனிதச் சடங்கு

பெண்கள் பூப்படையும் நிகழ்வைத் தீட்டாகக் கருதி அவளைப் புனிதப்படுத்துவதற்காக புரோகிதர்களைக் கொண்டு ஒரு புனிதச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தப் புனிதச் சடங்கில் புரோகிதர்கள் செய்யும் சடங்குடன் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் விருப்பத்தின்படி கூடுதல் சடங்குகளைச் செய்வதுண்டு.



பூப்படைந்த பெண்ணை ஒரு இடத்தில் அமரச் செய்து அந்தப் பெண்ணின் முன்னால் ஒரு வாழை இலை போட்டு, அதில் நெல் போட்டு அதன் மேல் மற்றொரு வாழை இலை போட்டு அதில் அரிசி போட்டு அதையும் ஒரு வாழை இலையைப் போட்டு அதன் மேல் மூன்று செம்புகளில்(கும்பம்) தண்ணீர் நிரப்பி அதில் மாஇலை, பூக்கள் போட்டு வைக்கப்படுகிறது. மஞ்சளைக் கொண்டு உருட்டி பிள்ளையார் உருவமாக வைத்து புரோகிதர் வழிபாடுகளைத் தொடக்குகிறார்.



அதன் பிறகு புரோகிதரால் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு யாகம் வளர்க்கப்படுகிறது. பின்னர் பூப்படைந்த பெண் அங்கிருக்கும் பெரியவர்கள் அனைவரிடமும் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்கிறார்.



இந்த யாகத்தின் முடிவில் தரையில் அரிசி மாவுப் பொடியால் மூன்று கோடுகளுடனான சதுர வடிவம் வரையப்படுகிறது. சதுரத்தின் நான்கு மூலைப்பகுதியிலும் நான்கு விளக்குகள் வைக்கப்பட்டு அனைத்துத் திரிகளிலும் தீபமேற்றப்படுகிறது. நான்கு மூலைகளிலும் இவற்றிற்கிடைப்பட்ட மத்தியப் பகுதியிலும் வெற்றிலை, பாக்கு மற்றும் வாழைப்பழம் வைக்கப்பட்டு நடுவில் பூப்படைந்த பெண் உட்கார வைக்கப்படுகிறாள். அதன் பின்பு நான்கு விளக்குகளும் நூலால் இணைக்கப்படுகின்றன. இப்போது புரோகிதர் மீண்டும் வேத மந்திரங்களை உச்சரிக்கிறார். பிறகு தாய்மாமன் மனைவியைக் கொண்டு ஒரு தீபத்தின் மூலம் நான்கு விளக்குகளையும் இணைத்த நூல் நான்கு மத்தியப் பகுதியில் துண்டிக்கப்படுகிறது.



இதன் பிறகு புரோகிதர் கும்பத்திலிருக்கும் புனித நீர் கொண்டு முதலில் பூப்படைந்த பெண்ணின் மேல் தெளிக்கிறார். பிறகு பூப்படைந்த பெண்ணின் பெற்றோர், அங்கு வந்திருப்பவர்கள் அனைவர் மீதும் தெளிக்கப்படுகிறது. பின்பு வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இப்புனித நீர் தெளித்துப் புனிதப்படுத்தப்படுகிறது.



குடும்பச் சடங்கு

புரோகிதர் புனித நீர் தெளித்துச் சென்றதும் பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் மனைவி மற்றும் பெண்கள் சிலர் சேர்ந்து பூப்படைந்த பெண்ணை மஞ்சள்த்தூள் கலந்த நீர் கொண்டு குளிப்பாட்டுகின்றனர்.



இதன் பிறகு தாய்மாமன் கொண்டு வந்த பட்டுப்புடவை மற்றும் அலங்காரப் பொருட்கள் கொண்டு பூப்படைந்த பெண் அலங்கரிக்கப்படுகிறாள். பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் அல்லது அத்தை மகளுக்கு (சிறுமிக்கு) ஆணுக்கான உடை அணிவிக்கப்பட்டு மாப்பிள்ளையாக்கப்படுகிறாள். பூப்படைந்த பெண்ணிற்கு தாய்மாமன் மனைவியும், மாப்பிள்ளை வேடமணிந்த சிறுமிக்கு பூப்படைந்த பெண்ணின் தாயும் மாலை அணிவிக்கின்றனர். அதன் பிறகு பெண்கள் சேர்ந்து அவர்களுக்குரிய சடங்குகள் செய்து ஆசிர்வதிக்கின்றனர்.

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

போரடிப்பதற்குக் காரணமான மனநிலைகள்!






யார்க் பலகலைக்கழகத்தின் உளவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜான் ஈஸ்ட்வுட் (Dr.John Eastwood) தலைமையில் நடந்த ஆராய்ச்சியில் போரடிப்பதற்குக் காரணமான மனநிலைகள் ஆராயப்பட்டன.



மனதின் எண்ணங்களும், உணர்வுகளும் சரி, வெளியே நடக்கும் நிகழ்வுகளும் சரி, கவனம் முழுமையாக செலுத்த உகந்ததாக இல்லை என்று மனிதர்கள் நினைப்பது தான் போரடிக்க முக்கியக் காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஈடுபட்டிருக்கும் எந்த நடவடிக்கையும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இல்லை, அதில் ஈடுபடுவது திருப்திகரமாகவும் இல்லை என்று மனிதன் உணரும் போது போரடிக்கிறது என்கிறான் என்று அந்த ஆராய்ச்சி சொல்கிறது.



போரடிக்கும் போது மனிதன் தன் கவனத்தைப் போதுமான அளவு எதிலும் செலுத்த முடியாமல் சிரமப்படுகிறான். இருக்கிற சூழ்நிலையும், ஈடுபடுகின்ற செயலும் பிடித்தமானதாக இல்லை. ஆனால் அதற்குக் காரணம் தான் அல்ல, வெளியுலகம் தான் என்று மனிதன் நினைக்கிறான். இதில் மாற்றத்தை ஏற்படுத்துவது தன் கையில் இல்லை என்றும் இது மாறினால் ஒழிய போரடிப்பது தவிர்க்க முடியாது என்று நினைக்கிறான் என்றும் அந்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.



உண்மையில் போரடிப்பதற்கு மிக முக்கிய காரணம் மனிதனின் அகத்தில்தான் இருக்கிறதே ஒழிய புறத்தில் இல்லை.



புரிதல், கவனம், அர்த்தம், சுவாரசியம், பங்கு பெறுதல் ஆகியவை இல்லாத போது எதுவும் அவனுக்கு சீக்கிரம் போரடித்துப் போகிறது. பல சமயங்களில் இவை ஒன்றுக்கொன்று இணைந்ததாகவே இருக்கிறது. உதாரணமாக, ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டே போகிறார். மாணவனுக்குப் பாடம் புரியவில்லை. அவர் சொல்கிற விதம் சுவாரசியமாக இல்லை. அதனால் கவனம் செலுத்த முடியவில்லை. கற்றலில் பங்கு பெற முடியவில்லை. அதனால் அவனுக்குப் போரடிக்கிறது.



வாழ்க்கையின் நிகழ்வுகள் மாற்றமின்றி ஒரே மாதிரி போகும் போதும் போரடிக்க ஆரம்பிக்கிறது. வாழ்க்கையில் சுவாரசியம் குறைகிறது. கவனம் குறைகிறது. வாழ்க்கை அர்த்தம் இல்லாததாகத் தோன்றுகிறது. அதனால் போரடிக்கிறது. புதியதாக பொருளோ, வாகனமோ வாங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படி வாங்கினால் சில நாட்கள் போரடிக்காமல் இருக்கிறது. வாங்கிய பொருள்களால் ஏற்படும் புதிய அனுபவங்களும், வாங்கிய பொருள்களை மற்றவர்களுக்குக் காண்பித்துக் கிடைக்கும் பெருமிதமும் முடிகையில் மறுபடி போரடிக்க ஆரம்பிக்கிறது.



போரடிப்பது பெரிய விஷயமல்ல. அது பெரிய பிரச்சினையும் அல்ல. எல்லார் வாழ்விலும் அது அவ்வப்போது ஏற்படுவது தான் என்றாலும் போரடிக்காமல் இருக்க மனிதன் தேடும் வழிகளில் தான் பெரும்பாலும் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. தேவை இருக்கிறதோ இல்லையோ, பொருள்களை வாங்கிக் குவிப்பதும் போரடிப்பதின் விளைவே. போரடிப்பதால் தான் பெரும்பாலானோர் போதையைத் தேடிப் போகிறார்கள் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.



போரடிக்காமல் இருக்க அதன் அளவுகளை ஒருவன் அதிகரித்துக் கொண்டே போக வேண்டி இருக்கிறது. போரடிப்பதைத் தவிர்க்க அவன் தன்னை மேலும் மேலும் அழித்துக் கொண்டே போகும் அபாயமும் இருக்கிறது.



போரடிப்பதில் இருந்து மீளும் வழிகள் என்ன?

வாழ்வில் ஓர் உன்னத இலக்கும், அதைச் சாதிக்கும் துடிப்பும் இருக்கும் நபர்களுக்கு என்றுமே போரடிப்பதில்லை. ஒவ்வொரு அடியாக முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கும் போது, இலக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறோம் என்ற பெருமிதமும் இருக்கும் போது, எப்படி போரடிக்கும்? இப்படிப்பட்டவர்களுக்கு நேரம் போகவில்லை என்ற எண்ணம் ஏற்படாது. நேரம் போதவில்லையே என்ற எண்ணமே மேலோங்கும்.



எப்போது பார்த்தாலும் வேலை, வேலை என்று இருப்பதை ஒருவர் தவிர்க்க வேண்டும். மாற்றமே இல்லாமல் ஒரே மாதிரி வேலை பார்ப்பது, அந்த வேலையைத் தவிர வேறு எதையும் அறியாமலிருப்பது இரண்டும் இருந்தால் போரடிப்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல அவர்கள் அறிவுக்கூர்மையும் மங்க ஆரம்பித்து விடும் என்பது அனுபவபூர்வமான உண்மை.



எத்தனையோ நல்ல விதங்களில் அல்லது பிரச்சினைகளை ஏற்படுத்தாத வழிகளில் ஈடுபட்டு ஒருவர் போரடிப்பதைத் தவிர்க்கலாம். நல்ல இசையைக் கேட்டல், நல்ல புத்தகம் படித்தல், ஓவியம் வரைவது, தோட்டவேலை போன்ற நல்ல பொழுதுபோக்குகள் ஆகியவற்றில் ஈடுபடுதல், அழகிய இயற்கைக் காட்சிகள் உள்ள இடங்களுக்குச் செல்தல், நல்ல நண்பர்களைச் சந்தித்துப் பேசுதல், நல்ல சொற்பொழிவு கேட்டல் போன்றவற்றை அந்த வழிகளாகச் சொல்லலாம். மீண்டும் பழைய வேலைகளுக்குத் திரும்பும் போது புத்துணர்ச்சி அடைந்திருக்க இவையெல்லாம் நல்ல மாற்று வழிகள்.



போரடிப்பதாகச் சொல்பவர்கள் பெரும்பாலும் தீர்வை வெளியே தேடுகிறார்கள். ஆனால் தீர்வு ஒருவருக்குள்ளேயே இருக்கிறது. போரடிப்பதைத் தவிர்க்க ஒருவரது சிந்தனைகளில் புதுமை இருந்தாலே போதும். பார்க்கின்ற விதம் மாறினாலே, பார்க்கின்ற கோணம் மாறினாலே, எத்தனையோ சாதாரண விஷயங்களின் அசாதாரண அல்லது சுவாரசியமான அம்சங்களை நாம் பார்க்க முடியும். அதே போல் செயல்களைச் செய்கின்ற விதத்தை மாற்றினாலும் கூட வாழ்வில் சுவாரசியத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். வித்தியாசங்களை வெளியே இருந்து தருவித்து சுவாரசியம் காண முயலாமல் உள்ளேயே ஏற்படுத்திக் கொண்டு வாழ்வை சுவைபடுத்திக் கொள்ள முடிந்தவன் “போரடிக்கிறது” என்று என்றுமே நினைக்கவும் மாட்டான்.



ஆஸ்கார் ஒயில்டின் “டோரியன் க்ரேயின் ஓவியம்” (The Picture of Dorian Gray) நாவலில் ஒரு அழகான வசனம் வரும். ஹென்றி வோட்டன் பிரபு என்ற கதாபாத்திரம் இளையவனான டோரியன் க்ரே என்ற கதாபாத்திரத்திடம் சொல்வார். “இந்த உலகில் சகிக்க முடியாத பயங்கரமான விஷயம் போரடிப்பது ஒன்று தான் டோரியன். அந்த ஒரு பாவத்திற்கு மன்னிப்பே இல்லை”.

TAMIL COMPUTER TIPS









கணினியில் எழுத்துக்களை தெளிவாக காண





மென்பொருட்களின் சீரியல் நம்பர் இலவசமாக பெற..





கைப்பேசியில் தமிழ் இணையத் தளத்தை தெளிவாக காண..





குழந்தைகள் கணக்கு பாடம் பயில இலவச மென்பொருள்





தற்போதைய நிகழ்வை தேடி தரும் தேடுபொறி






புகைப்படத்தை கருப்பு வெள்ளையில் மாற்ற





மொபைல்களை Unlock செய்யும் இலவச மென்பொருள்





எல்லா இணைய தளத்தையும் மொபைலில் பார்க்க





முழு மெனு டூல்பார் சிறிய பட்டனில்





நண்பர்களின் இருப்பிடம் தெரிந்து கொள்ள






பிடிஎப் கோப்புகளை எக்சல் கோப்புகளாக மாற்ற





டாட் ( . ) ஐ கண்டு கொள்ளாத ஜிமெயில்





சமூக வலைத்தளங்களுக்கான புகைப்படம் உருவாக்க





எழுத்துக்களை ஒலியாக மாற்றலாம்





டெஸ்க்டாப்பில் பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டையடிக்க






MS-Word-ல் text ஐ table செய்யலாம்





பேஸ்புக்கில் தேவையில்லாத நபர்களுக்கு மட்டும் Offline ஆகலாம்





67 மொழிகளில் அதிக விளக்கம் தரும் புதுமையான அகராதி





வீடியோ எடிட்டிங் செய்ய இலவச மென்பொருள்





உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது உபயோகிக்கிறார்களா?






இணைய பக்கத்தை எடிட் செய்யலாம்





இறந்த பின்னும் உங்கள் கணக்கை நிர்வகிக்க







முப்பரிமாண காணொளி உருவாக்க இலவச மென்பொருள்





தமிழில் கடிதம் எழுதி இணையத்தில் அஞ்சல் செய்யலாம்





பல்வேறு தளங்களின் தேடல்கள் ஒரே பக்கத்தில்






பேஸ்புக் மூலம் கோப்புக்களை பகிர்வது எப்படி ?



கடவு சொல் தெரியாத Administrator கணக்கில் நுழைய





தமிழில் தேடுபொறி இயந்திரம்





டிரையல் மென்பொருட்களின் காலக்கெடு தேதியை நீட்டிக்க





கூகுளில் பாடல்களை மட்டும் தேட






ஒரே சொடுக்கில் பல்வேறு சமூக தளங்களுக்கு செல்ல





கணினியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்க..





கோப்புக்களை உலவியின் மூலமாக பகிர்ந்துகொள்ள





நடிகர் ரஜினிகாந்தின் இரத்ததானம் பற்றிய இணையதளம்





உலக நேர தேடுயந்திரம்






Zip, RAR கோப்பினை தரவிறக்காமல் காண





ஜிமெயிலில் இலவசமாக sms அனுப்புவது எப்படி?





ஃபேஸ்புக் புகைப்படங்களை காணொளியாக மாற்ற





கணிப்பொறியில் செய்யும் செயல்களை பதிவு செய்வதற்கு





உங்களுக்கு பிறக்கும் குழந்தையின் முகம் எப்படி இருக்கும்?






You Tube காணொளியை MP3 வடிவமாக மாற்ற



ஃபேஸ்புக் பக்கத்தை அழகாக்க விதவிதமான தீம்கள்





AVG இன்டெர்நெட் செக்யூரிட்டி 2012 லைசன்ஸ் கீயுடன் இலவசமாக





கூகிள் புத்தகத்தை மென்புத்தகமாக தரவிறக்க இலவச மென்பொருள்





ஃபேஸ்புக் டைம்லைன் வசதியை செயல்படாமல் செய்ய






பேஸ்புக் மூலமாக இலவச குறுஞ்செய்தி (sms) அனுப்ப





பேஸ்புக்கின் டைம் லைன் கவருக்குத் தேவையான படங்கள்





தட்டச்சு பயிலவும் வேகத்தை அளவிட





ரேபிட்ஷேர் கோப்புக்களை தரவிறக்க..





ப்ளூ ரே டிஸ்க்குகளில் தகவல்களை பதிவேற்ற






ஃபேஸ்புக் அரட்டை மூலம் கோப்புக்களை பகிர்ந்து கொள்ள..





தமிழ் மின் அகராதி மென்பொருள் இலவசமாக





டிரையல் Cyberlink PowerDVD 11 ஐ ஒரிஜினலாக மாற்ற





டிரையல் Internet Download Manager ஐ ஒரிஜினலாக மாற்ற





தமிழ் மூலம் சீன மொழி கற்றுக்கொள்ள..






ஃபேஸ்புக்கில் Subscribe செயல்படுவது எப்படி?





டிஜிட்டல் வாய்ப்பாடு





தேதியின் கிழமையை தெரிந்து கொள்ள..





கணினியில் சிக்கிய சிடியை வெளியே எடுப்பது எப்படி?





டிரையல் காஸ்பர்ஸ்க்கி ஆன்டிவைரஸை ஒரிஜினலாக மாற்ற....






அவிரா இன்டெர்நெட் செக்யூரிட்டி 2012 இலவசமாக..





ஃபேஸ்புக்கில் அழைப்புக்களை ஏற்காதவர்களை தெரிந்து கொள்ள..





உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற..





வேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்





ஹெலியோட் புதிய தேடுதளம்






குரோமில் பிடிஎஃப் ரீடர்





வன்தட்டில் அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்க





குரோமில் இந்திய மொழிகளுக்கான எழுத்துரு நீட்சி





கார்டூன் படங்கள் வரைய..





பல்வேறு வண்ணத்தில் Pie Chart உருவாக்க








கணிணியில் வைரஸ் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது ?



மொபைல்களுக்கான அதி வேக உலவி 





கீபோர்டை நமக்குப் பிடித்தவாறு வடிவமைக்க





Hard Disk இன் space ஆல் கணினியின் வேகத்தை அதிகரிக்க..





பேஸ்புக்கில் smart friends list






ஃபேஸ் புக்கில் இசையை கேட்கவும் பகிரவும்





Pen Drive ல் கோப்புகளை மறைக்க





புகைப்படங்களை டிஜிட்டல் மயமாக்க





கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டையடிக்க





AVG Anti Viurs 2012 இலவசமாக டவுன்லோட் செய்ய

தமிழ் கம்ப்யூட்டர்,

Tamil Computer tips Page 2





யூ டியூப் தரும் கல்விச் சேவை வசதிகள்
யு-ட்யூப் வீடியோ தானாகத் தொடங்குவதை நிறுத்துவது எப்படி?
கால்குலேட்டரின் மூலம் இணையத்தில் உலவலாம்!!
உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன! தேடிதருகிறது இந்த தளம்!!
சிறுவர்களுக்கான பயனுள்ள தேடு இயந்திர தளங்கள்
பேஸ்புக்கில் இருந்து வரும் E-mail தொல்லைகளை நீக்க வேண்டுமா?
உலகின் மிகப்பெரிய மீயூசியத்தை இலவசமாக சுற்றிப் பார்க்க!!
இணையதளங்கள் அனைத்தையும் மொபைலில் தெளிவாக பார்க்க!!
டிவி மற்றும் ஆடியோ கேசட்டின் பாடல்களை கணினியில் சேமிக்க இலவச மென்பொருள்
மியூசிக் கீபோர்ட் கற்றுக் கொள்ள இலவச மென்பொருள்
மென்பொருள் இல்லாமல் இரகசிய கோப்புகளை சுலபமாக பாதுகாக்கலாம்
கடவுச்சொல் இல்லாமல் pdf கோப்பைத் திறப்பது எப்படி?
ஃபேஸ்புக்கின் இலவச வீடியோ மின்னஞ்சல் வசதி
கணினியை சுத்தப்படுத்த இலவச மென்பொருள்
எக்ஸல் பார்முலா சந்தேகங்களை இலவசமாக தீர்க்கும் இணையதளம்
கிராபிக்ஸ் கோப்புகளை பயன்படுத்த இலவச மென்பொருள்
எல்லா நாட்டின் நேரத்தையும் மேப் வடிவமைப்பில் தரும் தளம்
இலவசமாக வீடியோ மின்னஞ்சல் அனுப்ப உதவும் தளம்
கூகுள் ஆன்ராய்டு
விரும்பிய வடிவில் வீடியோ கோப்பை மாற்றி தரும் இலவச மென்பொருள்
அஞ்சல் குறியீட்டு எண் வைத்து ஊரை கண்டுபிடித்து தரும் தளம்
வைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி?
Excel-இல் உள்ள Text Wrap வசதி
இணைய தேடுதலுக்கான சுலபமான சுருக்கு வழிகள்
ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை வேகமாக படிக்க இலவச மென்பொருள்
மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பிற்கான கணித நீட்சி
docx, pptx, xlsx, odp போன்ற கோப்புகளை திறக்க!!
My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?
மொபைலில் அனைத்து செய்திதாள்களையும் வாசிக்க!!
Youtube -இல் ஆபாச வீடியோக்களை தவிர்ப்பது எப்படி?
யூடியுப் வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் தரவிறக்க.....
எக்ஸ்செல்-இல் கேமரா கருவி ஆப்சன் செயல்படுவது எப்படி?
டெஸ்க்டாப் ஐகானை - ON/OFF செய்ய இலவச மென்பொருள்
உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறிந்து கொள்ள...
அனைத்து மென்பொருட்களின் ஷார்ட் கட் கீ ஒரே இடத்தில்...
கணினியில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் மென்பொருட்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் மென்பொருள் இலவசமாக
அவுட்லுக்கில் ஜிமெயில் கணக்கை கையாள்வது எப்படி?
உலக (3D) முப்பரிமாண வரைபடம்
சென்னையின் வழிகாட்டித் தளம்
கணினியின் போல்டர்களை கூகிள் டாக்ஸில் தரவேற்ற உதவும் மென்பொருள்
உலக வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள இலவச மின்நூலகம்
வீடு டிசைன் செய்வதற்கு உதவும் எளிய இலவச மென்பொருள்...
தமிழ் வலைப்பூக்களில் விளம்பரம் இடம் பெற செய்ய எளிய வழி
பைல்களை வேகமாக காப்பி செய்ய இலவச மென்பொருள் !!
பேஸ்புக்கில் புத்தம் புதிய வசதி – Social Plus
விக்கிபீடியாவிலிருந்து மென்புத்தகம் தயாரிப்பது எப்படி?
ரகசிய கண்காணிப்பு கேமராவை இலவசமாக பெற...
இலவசமாக கணினி விளையாட்டுகளை தரும் தளங்கள்
WiFiயின் கடவுச்சொல்லை தெரிந்து கொள்ள இலவச மென்பொருள்
டெஸ்க்டாபிலிருந்து ஜிமெயிலை பிரவுசர் இல்லாமல் பார்க்க
இலவச ஜிமெயில் இன்பாக்ஸ் ஸ்கேனர்
யு-ட்யூப் (You Tube ) வீடியோக்களை தரவிறக்க உதவும் தளங்கள்
Flash பைல்களை தவிர்க்கும் குரோம் நீட்சி
தமிழில் எழுத NHM Writer யை பயன்படுத்துவது எப்படி?
இலவச சயின்டிபிக் கால்குலேட்டர் மென்பொருள்
ஃபார்ம் நிரப்ப சொல்லி கொடுக்கும் தளம்
விண்டோஸின் கூடுதல் பயன்களை பெறுவது எப்படி?
நெருப்புபொறியில் காபி பேஸ்ட் செய்யும் Add-On
67 மொழிகளில் அதிக விளக்கம் தரும் புதுமையான அகராதி
MS Word- இல் கணக்கு பண்ணுவது எப்படி?
Microsoft Word 2007 இல் எழுதியதை வேறு மொழிக்கு மொழிமாற்றம் செய்வது எப்படி?
சரியான கோப்புக்களை கேடாக்கும் தளம்
கணினியில் தேவையில்லாத புரோகிராம்களை நீக்கும் இலவச மென்பொருள்
கணிப்பொறியை லாக் செய்ய இலவச மென்பொருள்
ஜிமெயில் மின்னஞ்சல்களை கோப்புகளாக சேமித்து வைப்பது எப்படி?
தமிழ் எழுத கணினிக்கான கூகுளின் இலவச மென்பொருள்
சிறந்த கல்வி மற்றும் பொது அறிவுத்தளங்கள்
இணையதளத்தின் லிங்க் அனைத்தும் வேலை செய்கிறதா என்பதை சரி பார்க்க
இலவச தமிழ் கணினி புத்தகங்கள்
கணினியில் கோப்புகளை தேர்வு செய்ய Check Box வசதி
மைக்ரோசாப்ட் வோர்டில் Greeting Cards செய்வது எப்படி ?
உலவியில் பிழைதிருத்தும் தமிழ் அகராதி நீட்சி
கணினியில் உள்ள பைல் வகைகள்
எக்சலில் Sumif, Countif பங்சன்களின் பயன்பாடு
புதிய ஆங்கில வார்த்தையை உதாரணத்துடன் எளிதாக கற்க
தமிழில் எழுத மைக்ரோசாப்ட்டின் இலவச மென்பொருள்
"GTalk" ஜிடாக்கின் மூலம் அகராதி
குழந்தைகளுக்கு அறிவை வளர்க்கும் விளையாட்டு
"பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள்
அச்சுப் பொறிகளில் ஏற்படும் பிழைகளும் அதற்கான தீர்வுகளும்
அனைத்து வீடியோ இணையதளத்திலிருந்தும் வீடியோக்களை தரவிறக்க
இணையப் பக்கங்களை pdf கோப்பாக மாற்ற...
பதிவர்களுக்கு பணம் தரும் இணையதளங்கள்
மைக்ரோசாப்ட் எக்ஸெல் & வேர்டில் பாஸ்வேர்டு அமைப்பது எப்படி?
விண்டோஸ் - வினாக்களும் விளக்கங்கங்களும்
சமூக தளங்களின் உளவாளி
ஆப்பிள் ஐபேட்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை காண..
எழுத்துகளின் மொழியை கண்டறிய..
புத்தம் புதிய வீடியோக்களை தரவிறக்க..
எக்சலில் குறிப்பிட்ட வரிசைப்படி தகவல்களை மொத்தமாக தேர்வு செய்வது எப்படி?
MS Excel-லில் if நிபந்தனையைப் பயன்படுத்தி கணக்கீடுகள் செய்வது எப்படி?
எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும்?
கோப்புக்களை தரவிறக்கும் நேரத்தை செட் செய்ய
PDF பைல்களை மொழி மாற்றம் செய்ய
இலவச இணைய மின் நூலகங்கள்
உலகத்தின் தலைசிறந்த டாக்குமெண்டரி காணொளிகளை காண..
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?
கடவுச்சொல்லை எப்படி (Password) பாதுகாக்கலாம் ?
தொழிலுக்குரிய விளக்க வரைபடம் உருவாக்க
உலகின் சிறந்த தேடியந்திரங்கள்

தமிழ் கம்ப்யூட்டர்

Tamil Computer tips Page 1





" போல்ட்" புதுமையான புகைப்படங்களால் ஆன சோஷியல் மீடியா அறிமுகம்
மாணவர்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடிய புதுமையான தேடுயந்திரம்
பிரபலமான மனிதர்களின் தகவல்களை தேடித்தரும் புதுமையான தேடுபொறி
அலுவலக பணியாளர்களுக்கு அறிய வாய்ப்பு ! எக்சல் கோப்பின் மூலம் பேஸ்புக்கை பயன்படுத்தலாம்!!
பேஸ்புக்கில் நண்பர்களை தானாக லைக் செய்ய வைக்க சூப்பர் ஐடியா!!
ஒரே அளவுள்ள மெமரிகார்ட் பல விலைகளில் விற்கப்படும் ரகசியம்!
வீட்டுக்கு வண்ணங்களை விரும்பியபடி சுலபமாக தேர்வு செய்யலாம்!! 
மொபைலில் அழிந்த‌ தகவல்களை மீண்டும் பெற உதவும் மென்பொருள்! 
கணினியில் சில கோப்புக்களை நீக்க முடிவதில்லை ஏன்? நீக்குவது எப்படி? 
செய்திகளை ரகசிய குறியீடு மூலம் இலவசமாக அனுப்ப வேண்டுமா? 
நம் முகத்தை கடவுச்சொல்லாக காட்டி கணினிக்குள் நுழைய மென்பொருள்!! 
அதிக நேரம் கணினியில் செலவிடுகிறீர்களா? உஷார்!! 
சிறுவர்களுக்கான சமூக வலைத்தளம் 
கட்டண மென்பொருள்களை இலவசமாக பெற வேண்டுமா? 
உங்கள் ரகசியங்களை அம்பலப்படுத்தும் பேஸ்புக் - உஷார்
சாதாரண வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்ற இலவச மென்பொருள்
கைப்பேசிகளில் பேஸ்புக்கை மிக வேகமாக இயக்க  இலவச அப்ளிகேசன் 
போலி பேஸ்புக் Profile ஜ கண்டறிய எளிய வழிகள்!! 
கோப்புகளை அழிக்க மற்றும் காப்பி செய்வதை தடுக்க இலவச மென்பொருள்
தட்டச்சு செய்த வார்த்தையை MP3 கோப்பாக மாற்றி சேமிக்கலாம்!! 
பயனுள்ள மருத்துவ இணையதளங்கள்
பாஸ்வேர்ட் இல்லாமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்தலாம்!!
ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
அனைத்து விதமான  கோப்புக்களைளையும் பிரிக்கவும் சேர்க்கவும் இலவச மென்பொருள்
சிறப்பான கூகிள் தேடலுக்கான வழிகள்
இணையத்தின் தீய பக்கங்களில் இருந்து குழந்தைகளை காத்திட இலவச மென்பொருள்
லேப்டாப் டச் பேடை disable செய்ய இலவச மென்பொருள்
ஆங்கில பாடல்களின் வரிகளை எழுத்துக்களாக தெரிவிக்கும் மென்பொருள்!!
Notepad ஐப் பயன்படுத்தி Folder ஐ Lock செய்யலாம்!! 
தமிழ் எழுத்துருக்களைப் எம்பி3 வடிவில் மாற்றலாம் 
மொபைல் மூலம் வீடியோவை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்புவது எப்படி?
இணைய பயன்பாட்டில் Cookies என்றால் என்ன?
கணினியில் தமிழ் மொழி தெரிவது எப்படி? 
பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ்! மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!! 
மால்வேர் புரோகிராம்கள் பற்றிய விரிவான தகவல்கள் 
தமிழில் இணையத்தில் தேட தமிழ் தேடுதளம்
சிடி / டிவிடி டிரைவை லாக் செய்ய இலவச மென்பொருள் 
"ஜிமெயில் டிரிக்" தேவையற்ற மின்னஞ்சல்களை மட்டும் delete செய்யும் வழி
கணினியில் USB பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள் 
கோப்பு மற்றும் ஃபோல்டர்களை எளிதாக பேக்கப் எடுக்க !!
ஜிமெயிலின்  ஆப்லைன்பேக் அப் வசதி
அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தங்களை தரவிறக்க...
வைரஸ் தாக்கிய பென்ட்ரைவிலிருந்து பைல்களை மீட்க எளிய வழி
பொது அறிவு வினா விடைகள் இலவசமாக..
மொபைல் போன்களின் ரகசிய குறியீடுகள்
கணினியில் போல்டரை மறைக்கும் ட்ரிக்ஸ்..
ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத படிக்க! 
$29.95 பெறுமதியான Registry Cleaner மென்பொருள் இலவசமாக!
மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு பண்ணலாம்! 
கூகுள் தேடுதலில் சில எளிய வழிகள் 
Microsoft word எழுத்துக்களை ஒலி  வடிவில் மாற்றி தரும் மென்பொருள் 
பேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் ப்ளஸ் சமூக வலைத்தளத்திலிருந்து வெளியேறும் வழிமுறைகள் 
விண்டோஸ் 8: சந்தேகங்களும் விளக்கங்களும்!! 
கணினியின் மெமரியை அதிகரிக்க இலவச மென்பொருள் 
இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி?
சுலபமாக தமிழில் SMS அனுப்பலாம் 
மொபைலில் எடுக்கும் வீடியோக்களை யூடியுபில் எளிமையாக தரவேற்றலாம்
Microsoft Office 2010 யினை Activate செய்யும் இலவச மென்பொருள்
பாஸ்வேர்டுடன் கூடிய மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டுமா? 
கணினியில் பேஸ்புக் இணையத்தளத்தை தடை செய்ய வேண்டுமா? 
கம்ப்யூட்டருக்கு வரும் பிரச்சினைகளும் அதன் தீர்வும் ! 
நெருப்புநரி உலவியில் உங்களின்  மெயில் அப்ளிகேஷனை தேர்வு செய்ய ... 
தரவிறக்கம் முடிந்தவுடன் தானாக கணிணியை  Shutdown செய்யலாம் 
இறப்புக்குப் பிறகு தகவல்களை அழிக்கும் கூகிளின் புதிய திட்டம்! 
இணையதளத்தின் வேகத்தை அதிகரிக்க எளிய வழி 
போல்டர்களை ஒரே மாதிரியான தோற்றத்தில் அமைக்க.. 
ஆபாசமான கோப்புக்களை கணினியிலிருந்து நீக்கும் மென்பொருள் 
"கூகிள் பிரைவசி - பாதுகாப்பற்றது" ஒரு ஆய்வு 
லேப்டாப் திருடப்படாமல் பாதுகாக்க இலவச மென்பொருள் 
கணினி shutdown ஆக அதிக நேரம் எடுத்துகொள்கிறதா ? இதோ தீர்வு! 
செல்போனுக்கு தேவையான இலவச மென்பொருட்களின் தொகுப்புகள் 
கணினியில் தேவையில்லாத புரோகிராம்களை முழுமையாக நீக்கும் மென்பொருள்
புக்மார்குகளை எளிதாக கையாளுவதற்கான நீட்சி 
கால்குலேட்டருக்குத் தேவையான விதவிதமான ஸ்கின்கள் 
இணைய இணைப்பில்லாமல் விக்கிபீடியாவினை பயன்படுத்தலாம் 
மின்கலம் (battery) பற்றிய தகவல்களை விரிவாக தரும் தளம் 
கணினி திரையை படம் பிடிக்கும் இலவச மென்பொருள் 
இணையத்தில் பலான பக்கங்களை தடை செய்யும் நீட்சி! 
பிரவுசருக்குள் மற்றொரு பிரவுசரை உபயோகிக்கலாம் 
மின்னஞ்சல் முகவரி தடயங்களை அழிக்கலாம் 
சந்தேகப்படும் இணையத்தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்யலாம் 
தமிழ் கதைகளை ஒலி வடிவில் சொல்லும் இணையதளம் 
குழந்தைகளுக்கு பயன்தரும் மிருகங்களின் ஒலி நூலகம் 
பி.டி.எப். பைல்களை எடிட் செய்ய மென்பொருள்   
மென்பொருட்கள் இல்லாமல் யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யலாம்
வெளிநாட்டு மொழிகளை கற்றுத் தரும் தளம்
பைல்களில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை தரும் இலவச மென்பொருள்  
குண்டானவர்களுக்கான டேட்டிங் வெப் சைட்! 
ஆங்கிலத் திரைப்படங்களை இலவசமாக பார்க்கவும் தரவிரக்கவும் சிறந்த தளம் 
புரட்டும் வடிவில் மென்புத்தகங்களை இலவசமாக தயாரிக்க 
கோப்பினை உருவாக்கிய நேரத்தை மாற்ற இலவச மென்பொருள்
பேஸ்புக்கில் Photo Tag தொல்லையை ஒழிப்பது எப்படி..?...
வாடிக்கையாளர்கள் அதிகமுள்ள உலகின் சிறந்த 10 இணையதளங்கள்
மின் புத்தகங்களை இலவசமாக தேடித்தரும் தளம்
தமிழ் - ஆங்கிலம் அகராதி இலவசமாக !!
மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி
விண்டோஸ் கணினியில் என்ன நடக்கிறது?