Friday, 15 August 2014

விளையாட்டு


குழந்தைகளுக்கான விளையாட்டுத்தளங்கள்

 
COMPUTER GAMES

சிறு குழந்தைகள் ஓவியம்தீட்டி மகிழவோ, கோட்டுச்சித்திரங்களில் வண்ணம் தீட்டுவதிலோ மிக்க ஆர்வம் உடையவராக இருப்பார்கள்.


அவர்களுடைய ஆர்வத்தை மேலும் வளர்க்க உதவும் வகையில் கருப்புவெள்ளைப் படங்களில் - கோட்டோவியங்களில் வண்ணம் தீட்டி அழகுக்கு அழகு சேர்த்து மகிழ ஒரு இணையத்தளம் உள்ளது.




80+ வகையான பிரிவுகளில், ஆயிரக்கணக்கான படங்களை வண்ணமயமாக மாற்றி இன்புறலாம். பிறந்தநாள், மிருகங்களின் சேட்டைகள், பூங்காக்கள், circus போன்றவை சில உதாரணங்கள்

.
மிக எளிதானதாகவும், வண்ணம் தீட்டிமுடிந்ததும் அச்செடுக்கும் (Print) வசதியும் இந்தத்தளத்தில் உண்டு.
இதற்காக இந்தத்தளத்தில் Java, Flash போன்றவற்றைப் பயன்படுத்தவில்லை. ஆதலால் இணையப்பக்கங்கள் (web pages) விரைவாக இயங்குகிறது.



இன்னும் சில தளங்கள்

1.கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கை யான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் டவுண்லோட் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது இந்த முகவரியில் உள்ள தளம்.
www.links4kids.co.uk/



2. நூற்றுக் கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற் பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி கற்றலையும் இணைத்து தருகிறது இந்த முகவரியில் உள்ள இணைய தளம்.

www.alfy.com/


3.இந்தத் தளத்தில் பலவாறான வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தை-களுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் பல-வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன.
www.surfnetkids.com/



இனிய சிறிய குடும்பத்தின் இரண்டு அல்லது ஒரே குழந்தையை அனைத்து நல்ல விஷயங்களுடன் உருவாக்குவதே இன்றைய பெற்றோர்களின் எதிர்காலக் கனவாக உள்ளது. நம் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் இதற்குப் பல வழிகளைத் தருகிறது. ஒரு நல்ல கம்ப்யூட்டரும் அதற்கான பிராட்பேண்ட் இணைப்பும் இருந்தால் குழந்தைகள் தங்கள் நேரத்தை நல்ல வழிகளில் பயன்படுத்த பெற்றோர்கள் துணைபுரியலாம். குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவர்களின் இயற்கையோடு இணைந்த ஒன்று. அதன் வழியாகவே அவர்களின் மன வளர்ச்சியை நல்ல முறையில் உருவாக்கலாம். உலக விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம். அதற்கென உள்ள பல இணையதளங்களை இங்கே பார்க்கலாம்.

1.கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கை யான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் டவுண்லோட் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது www.links4kids.co.uk/


2. நூற்றுக் கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற் பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி கற்றலையும் இணைத்து தருகிறது இந்த தளம்.
www.alfy.com/


3. பலவாறான வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தை-களுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் பல-வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன.
www.surfnetkids.com/


4. குழந்தைகளுக்கான இணைய தளங்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்க விரும்பு-கிறீர்களா? அனைத்தையும் தராவிட்டாலும் பெரும்பான்மையான தளங்களைப் பட்டியலிடுகிறது இந்த முகவரியில் உள்ள தளம்.
www.kidsites.org/


5.குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறது . உலக அளவில் இது சிறந்த தளம் என்ற பாராட்டினைப் பல அமைப்புகளில் இருந்து பெற்றது. குழந்தைகளுக்கு கூட்டல், கழித்தலில் தொடங்கி அல்ஜிப்ரா, பின்னங்கள், டெசிமல் கணக்குகள் என கணக்கின் அடிப்-படையையும் அதன் தொடர்பான பிறவற்றையும் கற்றுத்தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. இவை அனைத்தும் கணக்கியலை விளையாட்டுக்கள் மூலமும் புதிர்கள் மூலமும் கற்றுத் தருகின்றன.
அவற்றின் முகவரிகள்:
www.coolmath.com
www.coolmath4kids.com/
www.sciencemonster.com/
www.spikesgamezone.com/


6.யாஹூவில் இன்னொரு அருமையான குழந்தைகளுக்கான தளம் உள்ளது. கேம்ஸ், மியூசிக், குறும் திரைப்படங்கள், ஜோக்ஸ், விளையாட்டுக்கள் மற்றும் படித்துப் பாருங்கள் எனப் பல பிரிவுகளில் இந்த தளம் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
www.kids.yahoo.com/


7. உங்கள் குழந்தை, தான் கம்ப்யூட்டரில் விளையாடும் கார்ட்டூன் படங்களையும் மற்ற கேரக்டர்களையும் தன் கம்ப்யூட்டரில் (ஏன், உங்கள் கம்ப்யூட்டரிலும் கூட) திரையில் வைத்துக் கொள்ள விரும்புகிறதா? அல்லது ஹோம் பேஜாக வைத்து இன்டர்-நெட்டை இயக்கியவுடன் வர வேண்டும் என விரும்புகிறதா? இத்தகைய ஆவலை நிறைவேற்ற ஒரு தளம் இயங்குகிறது. குழந்தைகள் உலகின் பல கேரக்டர்கள் இங்கு உள்ளன. இந்த கேரக்டர்கள் பங்கு கொள்ளும் சிறிய கதைகள் குழந்தைகளின் மனதில் நல்ல உறுதியை வளர்க்-கின்றன.
www.hitentertainment.com/


8. இரண்டு வயதிலிருந்து எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான அனைத்து விளையாட்டுக்களையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தகவல்-களையும் தருகிறது www.pbskids.org/என்ற முகவரியில் உள்ள தளம். இந்த வகையில் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய தளங்களாக
www.nickjr.com/
www.uptoten.com/
www.kidsgames.org/
www.gameskidsplay.net/
ஆகியவை உள்ளன.


9. இத்தகைய விளையாட்டுக்களோடு குழந்தைகளுக்கான அடிப்படை அறிவியல் விஷயங்களையும் சேர்த்து விளையாட்டுக்கள் மூலமாகத் தரும் ஓர் இணைய தளம் இது. இந்த தளத்தில் குழந்தைகள் செயல்படுகையில் பெற்றோர்களும் உடன் இருந்து அவர்களுக்கு வழி காட்ட வேண்டும். கம்ப்யூட்டர், மேத்ஸ், பிரச்சினைகளைத் தீர்த்து வெற்றிகாணும் வழிகள், படித்து சிந்தித்து தகவல்களைக் கைக் கொள்ளும் வழிமுறைகள் எனப் பல வகைகளில் குழந்தைகளின் பொழுது போக்கும் வழிகளிலேயே நிறைய அறிவு வளர்க்கும் விஷயங்களையும் தருகிறது இந்த தளம்.
www.playkidsgames.com/


10. அனைத்து வயதிலும் உள்ள குழந்தைகளுக்கான தளம் www.funbrain.com என்பது. கேம்ஸ் விளை-யாடுகை-யில் குழந்தைகளிடம் தகவல்-களைப் பெற்று தொடரும் வகையில் கேம்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாடும் ஆசையுடன் வரும் குழந்-தைகளின் ஆர்வம் தூண்டப்பட்டு அவர்கள் கற்றுக் கொள்ளக் கூடிய வழிகளையும் மேற்கொள்கிறது இந்த தளம். சொற்களைப் படிப்படியாகக் கற்றுக் கொடுக்கிறது. குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அவர்களுக்கான பாடத்திட்டத்திற்கேற்ப விளையாட்டுக்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பல விளையாட்டுக்கள் வடிவமைக்கப்பட்டுத் தரப்படுகின்றன.
www.funbrain.com/


11. என் மகள் மட்டும் விளையாடும் வகையில் பெண் குழந்தைகளுக்கான தளம் எதுவும் உள்ளதா? என்று வாசகர்கள் கேட்கலாம். இவர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் உள்ளது ஒரு தளம். வளரும் குழந்தைகள் கம்ப்யூட்டரைச் சாதாரணமாகப் பயன்படுத்தினாலே அவர்களின் சிந்திக்கும் திறன் சீராக்கப்பட்டு கூராகும்.
www.everythinggirl.com/


இதில் மேலே தரப்பட்டுள்ள தளங்கள் இன்னும் பல படிகள் முன்னேறிச் சென்று பல வழிகளைத் தேர்ந்தெடுத்துத் தருகின்றன. உங்கள் குழந்தைகளைக் கம்ப்யூட்டருக்குப் பழக்குங்கள். கம்ப்யூட்டர் கெட்டுப் போய்விடுமோ என்று தயங்காதீர்கள். அதற்கான பாதுகாப்பு வழிகளைக் கொண்டு அவர்களுக்கும் கம்ப்யூட்டரைக் கற்றுத் தாருங்கள். அவர்களை இழுத்துக் கற்றுக் கொடுக்கும் வேலையைத்தான் மேலே சொல்லப்பட்ட தளங்கள் தருகின்றன. இன்னும் பல தளங்கள் குழந்தைகளுக்கென குவிந்து கிடக்கின்றன. அவற்றையும் நீங்கள் தேடி எடுத்துப் பயன்படுத்தலாம்.

கோலங்கள் வரைய

பாரதத்தின் எண்ணெற்ற கலாச்சாரக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று கோலம். முக்கியமாக தென்னிந்தியாவில் பிரசித்திப் பெற்ற கலாச்சாரமாகும். கோலங்கள் வாசலுக்கு மட்டும் விருந்தாளியல்ல, கூரை ஓவியமாக கோவில்களிலும் மண்டபங்களிலும் விருந்தாளியாகக் காணலாம். வாசல் கோலங்கள் இடுவதென்பது ஒரு கலையே அதுவும் பண்டிகைக் காலங்களில் நம்மூர் பெண்கள் பட்டையைக் கிளப்புவார்கள். ஓவியம் என்பது தனியொரு கலையாகயில்லாமல் அன்றாட வாழ்வில் கலந்தவொன்றாவிட்டது. அம்மாதிரி கலை மரபு வழியே வந்ததாலோ என்னவோ திராவிடக் கட்டிடக் கலையில் தனி முத்திரை கொண்டுள்ளோம்.
கோலசுரபி 


இத்தகைய கோலங்கள் இணைய வெளிகளில் பரவலாக படங்கள் வடிவில் பகிரப்படுகிறது. கோலம் சம்மந்தமான மென்பொருட்கள் எதிர்காலத்தில் அதிகம் வரலாம். தற்போதைக்கு கோலம் வடிவமைக்கும் மென்பொருட்கள் அதிகமில்லை ஆனால் இதுவரை இணையத்திலிருந்து செயல்படும் ஒரே ஒரு செயலி இங்கேவுள்ளது. அந்தவரிசையில்கோலசுரபி என்ற ஒரு புதிய செயலி தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்ப்புள்ளியின்மூன்றாமாண்டு பிறந்த நாளன்று அறிமுகமாகும் இச்செயலியின் மூலம் தான்தோன்றித்தனமாக பல கோலங்கள் உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளமுடியும். 3X3 முதல் 20X20 புள்ளிகள் வரை இதில் உருவாக்கிக் கொள்ளலாம். இதன்மூலம் வளை கோடுகள் மற்றும் கம்பிக் கோடுகள் கொண்ட கோலங்களை வேண்டிய அளவுகளில் பெற்றுக் கொள்ளலாம். சதுரம் அல்லது சாய்சதுர வடிவிலும் உருவாக்கிக் கொள்ளலாம். தான்தோன்றித்தனமான கோலங்கள் என்பதால் ஒருமுறை வந்த கோலங்கள் மறுமுறை வருவதறிது அதனால் ரசனையுள்ள கோலங்களை Screenshot மூலம் படங்களாகவும் சேமித்துக் கொள்ளலாம்.

கோலம் அறியாத "பேதை"களுக்கும் , கோலம் பழகும் "பெதும்பை"களுக்கும், கோலம் தேடும் "மங்கை"களுக்கும், கோலம் வரையும் "மடந்தை"களுக்கும், கோலமிட்டுக் கலக்கும் "அரிவை"களுக்கும் இச்செயலி மேலும் உதவும்.

ஆடு புலி ஆட்டம்

ஆட்டை பிரியாணிக்கு மட்டும் பயன்படுத்திவந்த உலக சமுதாயத்திற்கு முன் ஆட்டைக் கொண்டு ஆட்டமும் ஆடிக்காட்டியது நாம்தான். ஒரு கரிக் கட்டை அல்லது செங்கல் அல்லது சுண்ணாம்பு ஒரு புளியமரத்தடியில் இருந்தால் அதுதான் ஆடுகளம் என தொல்லியல்துறை இல்லாமல் கண்டுபிடித்துவிடலாம். மிகப்பெரிய கட்டுமானங்கள் இன்றி சில கற்களும் சில புளியங்கொட்டைகளும் போதும் களத்தில் மோத. சிறுவயதில் திண்ணையைப் பிடித்து நடைபழகும் போதே திண்ணையில் ஆடுபுலி ஆட்டங்களைப் பார்த்திருப்போம். திண்ணைகளெல்லாம் விற்றுத் தின்றுவிட்டப் பிறகு அப்பார்ட்மெண்டில் அஞ்சாவது மடியில் திண்ணை அளவுள்ள வீடுகளில் குடிபுகுந்துவிட்டோம். அங்கும் ஆடு புலி ஆட்டத்தை ஆட இணையத்தில் ஆடு புலியாட்டம் அறிமுகமாகியுள்ளது. இந்த செயலி[Application] இதோ,


ஆடு புலி ஆட்டம்

ஆடுபுலி ஆட்டம் நாட்டார் விளையாட்டுகளில் முக்கியமானது. சாதுர்யமும் சமயோசிதமும் கொண்டு விளையாடப்படுவதால் வயது ஒரு தடையில்லை. தமிழகம் மட்டுமின்றி அவரவர் மொழியில் ஆட்டுக்கும் புலிக்கும் பெயர்வைத்து இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் விளையாடியுள்ளனர். வங்கத்தில் பாக் பண்டி, பஞ்சாப்பில் ஷிர் பகர், நேப்பலில் பாக் சால், மலேசியாவில் மெயின் தபல் எம்பத் என ஒரே விளையாட்டை கொஞ்சம் கட்டங்களின் வடிவத்திலும் காய்களின் எண்ணிக்கையிலும் மாறுபட்டாலும் ஒரே வெட்டு ஒரே குத்து அதே ஆட்டம் தான். யார் விளையாடிக் கொண்டிருந்தாலும் புலி நமது தேசிய விலங்கு ஆகையால் இவ்விளையாட்டின் தாயகம் இந்தியாவாக இருந்திருக்கலாம்.

இப்போது ஆட்டத்திற்கு வருவோம்... இச்செயலி தமிழக ஆடுபுலி வடிவத்தில் 15 ஆடுகளும் முன்று புலிகளும் கொண்டுள்ளது. இச்செயலியில் நீங்களும் உங்கள் நண்பரும் விளையாடலாம் அல்லது கணினியுடன் ஆடுபுலி விளையாடலாம். ஆடு/புலியை காய்களை சொடிக்கி, கட்டங்களின் [intersection]சந்தியைச் சொடுக்கி காய்களை நகர்த்த வேண்டும். கோடுகள் கூடும் சந்திகள் காய்கள் வைக்குமிடம். தனக்கு அருகில் உள்ள ஆட்டை புலி வெட்டித் தாண்டும். வெட்டுப்படாதவாறு ஆடுகளை வைத்து நகர்த்தி புலியை சிறை பிடிக்க வேண்டும். ஆடுகள் எல்லாம் வெட்டப்பட்டால் புலி வென்றதாககும். புலியை நகரவிடாமல் மறித்தால் ஆடு வென்றதாகும். ஆட்டத்தின் தொடக்கத்தில் முன்று புலிகளும் களத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆடாக நீங்கள் விரும்பிய சந்திகளில் களமிறக்கலாம். ஆடு,புலி என மாறி காய்கள் நகர்த்த வேண்டும்

ஆடுபுலி ஆட்டத்தின் ரூல்ஸ் என்று கேட்டால்,
1)புலியும் ஆடும் நான்கு புறத்திலும் ஒரு கட்டம் தான் நகரும். ஆனால் புலி தனக்கு அருகில் ஒரு ஆடும் அதற்கு அடுத்த சந்தி காலியாகவும் இருந்தால் ஆட்டை வெட்டிவிட்டு இரண்டு கட்டம் நகரும்.
2) ஓரங்களில் உள்ள ஆட்டை புலியால் வெட்டமுடியாது காரணம் புலி வெட்ட வேண்டுமானால் புலி-ஆடு-காலிஇடம் என்று வரிசையில் இருந்தால் மட்டுமே வெட்டமுடியும். புலி-ஆடு-ஆடு என்று இருந்தால் புலியால் வெட்டமுடியாது.
3)புலியை மடக்க மிகக் குறைந்த பட்சம் எட்டு ஆடுகளாவது வேண்டும். அதற்கு குறைவான ஆடு களத்தில் இருந்தாலும் ஆடு தோற்றதாகவே கருதப்படும். 11 ஆடுகளுக்குக் கீழ் குறைந்தாலே வெல்வது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடிப்பாருங்கள் ஆலோசனைகள் இருந்தாலும் தாருங்கள்
Game Starts..

No comments:

Post a Comment