Friday, 22 August 2014

வலைபூக்களை அழகாக்குவது எப்படி ?!

தற்போதைய நிலையில் வலைபூக்களை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இவற்றில் அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், கதை, கவிதை, கட்டுரைகள், திரைப்படம் என தத்தமது சொந்த கருத்துக்களை இடும் பயனாளர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் வளர்ந்து கொண்டே வந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறான வலைபூவை (பிளாக்கை) எழுத  வருபவர்கள் அனைவரும் தொழில்நுடபம் சார்ந்தவர்கள்  மட்டுமல்லாமல் எழுத்துப் பணியில் உள்ளவர்களுள் பெரும்பாலும் தங்கள் எழுத்துத் திறமையை  காண்பிப்பதற்கு வலைபூவில் எழுதவருகிறார்கள். இவர்களால் எழுதப்படும் கட்டுரைகள், கருத்துக்கள் வியக்கத் தக்க வகையிலும், அரிய கருத்துக்களையும் தாங்கி வந்தாலும் இவர்களுடைய தொழில்நுட்ப அறியாமை யினால் இவர்களின் வலைப் பக்கங்கள் மிகச் சாதாரணமாகவும், சரியாக பண்படுத்துதல் இல்லாமலும் காணப்படுகின்றன.
அதனால் இவ்வாறான வலைபூக்களை அழகாக்க தேவைப்படும், செயல்முறைகளை இப்போது காண்போம்.
  1. மாதிரிபலகம்(மாதிரி பலகத்தை) 7.1
ஒவ்வொரு வலைபூவிற்கும் உள்ள அழகே அதன் மாதிரிபலகங்கள் தான். மாதிரிபலகங்கள் தான் ஒருவரது வலைபூவின் முகப்பு தோற்றத்தை தீர்மானிக்கிறது. அத்துடன் இடப்பட்டுள்ள இடுகைகளையும், இணைப்புகளையும் மிக அழகாக அடுக்கி வைப்பதற்கு இந்த மாதிரிபலகங்கள்  மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு வலைபூஉருவக்கிடும் நிறுவனம் ஒன்று வலைபூவை உருவாக்கும் ஒவ்வொருவருக்கும் என தனது தளத்தில் தயார் நிலையிலுள்ள ஒரு சில மாதிரிபலகங்களை அளிக்கிறது. இவை முறையே Minima, Denim, Rounder, Herbert, Harbor, Scribe, Dots, thisaway என்பன போன்றவையாகும். வலைபூ ஒன்றை உருவாக்கும் ஒவ்வொருவரும் இவற்றில் எதாவது ஒன்றை தேர்வு செய்து விட்டு எழுத ஆரம்பிக்கின்றனர். ஆனால் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு அழகான மாதிரிபலமாக மாற்றிக் கொள்ளமுடியும் என்பதை பெரும்பாலோனோர் அறிந்திருப்பதில்லை.
இணையத்தில் கூகிள் தளத்திற்குச் சென்று “Free Blogger Template download” என்றவாறு இணையத்தில் தேடினால் எண்ணற்ற இலவச வலைபூவிற்கான மாதிரிபலகங்களை கொண்ட தளங்களின் முகவரிகள் கிடைக்கும்.
மிகமுக்கியமாக வலைபூவிற்கான மாதிரிபலகங்களை பட்டியலிடுவதற்கு என்றே பின்வருபவை போன்று பல தளங்கள் செயல்பட்டு வருகின்றன.http://www.bloggerstyles.com/,http://btemplates.com/,
இத்தளங்களில் வலைபூவிற்கான மாதிரிபலகங்களின் வெவ்வேறு வகைகள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது இரண்டு, மூன்று பத்திகளைக் கொண்ட மாதிரிபவகங்கள், சிவப்பு, பச்சை, ஊதா நிற மாதிரிபலகங்கள், தனிநபர், நிறுவன, நிழற்பட உபயோக முள்ள  மாதிரிபலகங்கள் என பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தேவையானவற்றைமட்டும் தெரிவு செய்தால் நமக்கு மாதிரியும்(Demo), பதிவிறக்க இணைப்புகள் கிடைக்கும். தேர்வு செய்யப்பட்ட மாதிரிபலகத்தின் மாதிரியை பார்த்து உறுதிசெய்து விட்டு அதன் கோப்பினை பதிவிறக்கம் செய்து கொள்க. இந்த கோப்பானது பெரும்பாலும் .xml எனும்கோப்பாகவே இருக்கும்.
புதியதாக மாதிரி பலகத்தை மாற்றம் செய்கையில் ஏற்கனவே உள்ள மாதிரி பலகத்தை சேமித்து வைத்துக் கொள்வது மிக அவசியம். ஆதலால் Download Full Template இணைப்பை தெரிவுசெய்து சொடுக்கியபின் இதனை சேமித்து வைத்துக் கொள்க.
பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பினை நமது வலைபூவில் எவ்வாறு உள்ளீடு செய்வது எனப் பார்ப்போம். நம்முடைய வலைபூஉருவாக்குநரின் முகப்புபகுதியி Layout >> Edit HTML என்றவாறு செயற்படுத்தியபின் Browse என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பினை தேர்வு செய்து Upload எனும் பொத்தானைச் தெரிவுசெய்து சொடுக்குக. மாதிரி பலகத்தை மாற்றம் செய்யப்பட்டமையால் ஏற்பட்ட மாற்றங்களைச் சரிசெய்ய Confirm & Save ஐ தெரிவுசெய்து சொடுக்கியபின் ஏற்றுக் கொள்க.
தற்போது நாம் மாதிரியில் பார்த்தே அதே அழகில் நம்முடைய வலைபூ தோற்ற மளிப்பதை காணலாம். தேவையான மாற்றங்களை செய்து மேலும் அழகாக்க முயற்சி செய்க.
2. வழிகாட்டி பட்டை(நேவிகேஷன் பார்).
இது வலைபூஉருவாக்குநர் தளங்களில் காணப்படும் மற்றுமொரு கருவியாகும் இதன் மூலம் வலைபூஉருவாக்குநரில் உள்நுழைவு செய்வதற்கு மிகவும் எளிதாக இருந்தாலும் இதன் தோற்றம் நமது தளத்தை மற்ற இணைய தளங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டக் கூடும்.
3. என்னைப் பற்றி
நம்முடைய வலைபூவில் இருக்க வேண்டிய முக்கியமான பொருள் “என்னைப் பற்றி” (About me) என்பதாகும். நம்முடைய தளத்தை வாசிக்க வரும் நபர்கள் இத்தளத்தின் ஆசிரியர் யார் என்பதை அறிய ஆவலுடன் இருப்பார்கள். அத்துடன் நாம் எழுதும் வரிகளின்மூலம்  நம்முடைய பெயரையும் , நம்மை பற்றிய விவரத்தையும் பார்வையாளர்களின் நினைவுகளில் நிலைநிறுத்துவதற்கும், மறுபடியும் நம்முடைய தளத்தைக் காண வருவதற்கான ஆவலை தூண்டுவதற்கும்  ஏதுவாய் அது அமையும். இந்த பொருளை(கேட்ஜெட்டை) நம்முடைய தளத்தின் வலது அல்லது இடது பக்கத்தில் வைக்கலாம் அல்லது தளத்தில் கட்டளைபட்டியல் இருப்பின் அவற்றில் ”என்னைப் பற்றி” எனச் சேர்த்துக் கொள்ளலாம். நாம் தொடர் அல்லது தொகுப்புகளை வெளியிட்டிருந்தால் அவற்றின் இணைப்பை இந்த என்னைப் பற்றி பகுதியில் இணைக்கலாம்.
4. தலைப்புப் படம்
இது நம்முடைய வலைபூவிற்கு நல்லதொரு தோற்றத்தை அளி்க்கும் மிக முக்கியமான காரணியாகும். பதிவிறக்கம் செய்யப்பட்ட மாதிரி பலகங்களில் உள்ள படங்களை அப்படியே வைத்திருக்காமல் அது எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிந்து அந்தப் படத்திற்கு பதிலாக நம்மால் வடிவமைக்கப்பட்ட படத்தைகூட நம்முடைய வலைபூவிற்கு தலைப்பு படமாக  அமைக்கலாம். இதற்காக டேஷ்போர்டில் Layout >> Page element  என்றாறு கட்டளைகளை செயற்படுத்தி தலைப்பிற்கான படத்தை மாற்றியமைத்து கொள்ளலாம். அவ்வாறு இல்லையெனில் படம் இருக்கும் இணைப்பை Layout >> Edit HTML என்றவாறு  கட்டளைகளை செயற்படுத்தி Edit Template  என்ற கட்டத்தில் தேடி தலைப்புப் படம் அமைந்துள்ள இணைப்பிற்கு பதில் நம்மால் வடிவமைக்கப்பட்ட படத்தின் இணைப்பை பதிவேற்றம் செய்து தலைப்புப் படத்தை மாற்றிக் யமைத்து கொள்ளலாம். இதற்கான விளக்கங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மாதிரி பலகத்தின் விளக்கப் பகுதியில் காணலாம்.
5. அண்மைய பதிவுகள்.
நம்முடைய வலைப்பக்கத்தில் அண்மைய பதிவுகள் என்ற பொருள் மிக முக்கியமானதும் இது வாசகர்களை நம்முடைய தளத்தில் உலாவ விடும் அரிய கருவியாகும். வெவ்வேறான தேடலில் நம்முடைய தளத்திற்கு வருவோர் நம்மால் பதியப்பட்ட மற்ற பதிவுகளையும் காண இந்த பொருள் பேருதவி புரிகிறது. அண்மைய அல்லது சமீபத்திய பதிவுகள் என இணைத்துக் கொள்ள Dashboard >> Layout >> Page Element என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றும் திரையில்  Add Gadget ஐ தெரிவுசெய்து சொடுக்கியபின் அதில் Feed எனும் பொருளைத் தேர்வு செய்யுங்கள். பின்னர் Feed பொருளிற்கான இணைப்பில்http://arugusarugu.blogspot.com/feeds/posts/default என்னும் முகவரியை  கொடுத்தவுடன் நம்மால் பதிவுசெய்யப்பட்ட பதிவுகளைப் பட்டியலிடும். பின்னர் இதனை Save எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் இணைத்துக் கொள்க. ( குறிப்பு: கொடுக்கப்பட்ட இணைப்பில் arugusarugu என்பதற்கு பதிலாக நம்முடைய வலைபூ முகவரியை அளிக்கவும்.
6. அண்மைய மறுமொழிகள்
வலைபூ எழுதும் , எழுத்தாளனுக்கு கிடைக்கும் வருமானம் என்பது  வாசகர்கள் எழுதுகின்ற பாராட்டும், விவாதங்களுமான மறுமொழிகள்தாம். ஆதலாலினால் அண்மையில் மறுமொழி எழுதியவற்றை பக்கவாட்டில் வெளியிட மேற்குறிப்பிட்ட “Feed” எனும் பொருளை தேர்வு செய்து http:// arugusarugu.blogspot.com/feeds/comments/default எனும் முகவரியை இடுக.பின் Save ஐ தெரிவுசெய்து சொடுக்கியபின் இணைத்துக் கொள்க.
7.பெயர்பட்டிகள்
நாம் பதிவிடும் ஒவ்வொரு பதிவையும் வகைப்படுத்தி தேவையெனில் வகைக்கேற்றாற்போல் அடுக்கிக் காண்பதில் பெயர்பட்டிகள் பெரும்பங்காற்றுகின்றன. நம்முடைய பதிவுகளின் வகைக்கேற்ப அவற்றை இடம், பொருள், பெயர் என வகைப்படுத்தி விட வேண்டும். வகைப்படுத்ததிலின் மூலம் நமக்கு அவற்றைப் பட்டியலிட இணைப்புகள் கிடைக்கும். உதாரணமாக கவிதைகள் அனைத்திற்கும் கவிதைகள் என வகைப்படுத்தலின் மூலம் பக்கவாட்டில் ஒரு இணைப்பை இணைத்து அவற்றை கவிதைக்கான இணைப்பையும், பட்டியல்களில் கதைகள் என இட்டு அவற்றை கதைகளுக்கான இணைப்பையும் இணைத்து வலைபூக்களை பண்படுத்த முடியும். மேலும் இவ்வாறான பதிவுகளை படிக்கும் போது பெயர்பட்டிகளின் வெவ்வேறு வகைகளை பட்டியலிட்டுப் படிக்க முடியும்.
8.பார்வையாளர்கள் விபரம்
நம்முடைய தளத்தினைப் பார்வையிடும் பார்வையாளர்களின் விபரங்கள், தினமும் வந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை, எந்தெந்த நாட்டு வருகையாளர்கள், எத்தனை பக்கங்கள் சொடுக்கப்பட்டன, தற்போதுள்ள பார்வையாளர்கள் எண்ணிக்கை என்பன போன்றவற்றை துல்லியமாய் வெளியிட எண்ணற்ற தளங்கள் இலவசமாக செயல் பட்டு வருகின்றன. அவற்றைப் பயன்படுத்தி தேவையான நிரல்தொடர்களைப் பெற்று நம்முடைய தளத்தின் பக்கவாட்டில் HTML/Java Script எனும் பொருள் மூலம் இணைத்து நம்முடைய வலைபூக்களை அழகாக்கலாம்.http://www.neoworx.net/ http://www.histats.com/
9. தோழமைப் பூக்(பிளாக்கு)கள்
நம்முடைய நண்பர்களின் வலைபூக்கள், பிடித்த வலைப்பக்கங்கள் போன்ற வற்றின் பட்டியலை ஒன்றை நம்முடைய வலைபூவில் நிறுவலாம்.மேலும்  நம்மால் பட்டியலிடப் படும் நண்பர்களின் வலைப்பக்கஙகளிலும் நம்முடைய  தள முகவரியை நிறுவிட அறிவுறுத்தலாம். இவை நமக்கு மென்மேலும் பார்வையாளர்களின் வருகைதர உதவியாய் இருக்கும்.
10. ரசிகர்கள் (அ) தொடர்ந்து தொடர்புகொள்பவர்கள்
நம்க்கான ரசிகர்கள் அல்லது நம்முடைய தொடர்ந்து தொடர்புகொள்பவர்கள் என்கிற வகையில் நம்முடைய பதிவுகளைத் தொடரும் நண்பர்களுக்கென இந்த பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.. நம்முடைய பதிவுகளை உடனுக்குடன் இவர்களுக்கு இதன் மூலம் தெரியப்படுத்தப்படுகின்றது. மேலும் நம்முடைய ரசிகர்களாக பல்வேறு வாசகர்கள் இணைவது என்பது நாம் பெருமைப்படக்கூடிய செய்தியும் கூட.
மேற்கூறியவைகள் அனைத்தும் நம்முடைய வலைபூக்களை அழகாக்க மிகவும் உறுதுணையாய் அமைகின்றன

No comments:

Post a Comment