Sunday, 17 August 2014

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள்

அரசு சாரா நிறுவனங்களின் பட்டியல்
இந்தியன் ஜீ ஓ காம்ன்படி சுமார் 1.5 மில்லியன் அரசு சாரா நிறுவனங்கள் இந்தியாவில்
பணியாற்றுகின்றன. குஜராத், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம்
ஆகிய மாநிலங்களில் அதிக அரசு சாரா நிறுவனங்கள் இயங்குகின்றன.
மொத்த அரசு சாரா நிறுவனங்களின் பட்டியலை
பின்வரும் இணையதளத்திலும் பெறலாம்.
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு சாரா நிறுவனங்களின் பட்டியல்
  • கோயம்புத்தூரில் இயங்கி வரும் அரசு சாரா நிறுவனங்களின் பட்டியல்

தமிழ்நாடு கூட்டரசின் அல்லது பேரவையின் தொண்டு நிறுவனங்கள்
தமிழ்நாடு பேரவையின் தொண்டு நிறுவனம் என்பது தமிழ்நாடு மாவட்டங்களில் சமூக
மாற்றங்களை மேற்கொள்ள சுமார் 984 பதிவு செய்யப்பட்ட மற்றும் தொழில் நெறி
மேம்படுத்தப்பட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவானதாகும்.
 2004 ஆம் ஆண்டு இப்பேரரை ஆரம்பத்திலிருந்து, பேரவை உறுப்பினர்கள் கூறியபடி
இத்தொண்டு நிறுவனங்கள் மேம்பாடு கூடங்களை வலிமைப்படுத்த முனைந்து
செயல்படுகின்றன. மேலும் தன்னம்பிக்கை வளர்த்தல் மூல வளங்களை பங்கிடுதல்
அறிவு மேம்பாடு திட்ட ஆலோசனை வழங்குதல் மற்றும் இதர ஆதரவுகளை உறுப்பினர்கள்
அனைவருக்கும் வழங்குவதாகும். மேலும் இவை மறைமுகமாக 10,000,000 உறுப்பினர்களைக்
கொண்ட (தமிழ்நாட்டை சார்ந்த ஆண், பெண்) 5,00,000 சுய உதவிக் குழுக்களின் ஆதரவோடு
இயக்கப்படுகிறது.
முகவரி
தமிழ்நாடு பேரவையின் தொண்டு நிறுவனங்கள்
ஏ3, சிந்தூர் விடுதி
எண் 9, டாங்க் தெரு
யுனைடெட் இந்தியா காலனி
கோடம்பாக்கம்
சென்னை - 600 024.
இந்தியா
தொலைபேசி எண் +9144 64190869 (24840001)
மூலதனம்

உங்களது PF-பிராவிடண்ட் பண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கு?



வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணம் செலுத்தும் அனைத்து அரசுதனியார் நிறுவன ஊழியர்களின் கணக்கு விவரங்களை இணையதளத்திலேயே பார்க்க முடியும். இதற்கு முன்னால் உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தற்போது அது எவ்வளவு என்பதை அவ்வபோதே தெரிந்து கொள்ளலாம்.
இந்த விவரத்தை தற்போது பார்போம்.
இணைய சுட்டி...இதனை கிளிக் செய்து அந்த இணைய தளத்தில் சென்று படத்தில் காட்டியுள்ளது போல் செய்தால் உங்களது விவரங்கள் தெரியும்..

அதில் know your EPF balance என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளதுபோல் விண்டோ ஓபன் ஆகும்.
அதில் Click Here என்பதை கிளிக் செய்து பின்பு வரும் விண்டோவில் படத்தில் சுட்டி காட்டிய இடத்தில் தங்களது மாநிலத்தை தேர்வு செய்தால் படத்தில் காட்டியுள்ளதுபோல் தோன்றும் அதில் உங்களது EPFO OFFICE-யை தேர்வு செய்தால்

மேலே உள்ளது போல் தோன்றும் அதில் சுட்டி காட்டப்பட்ட இடத்தில் தங்களது விவரங்களையும் (முக்கியமாக தொலைபேசி எண்ணை தர வேண்டும்) கொடுத்து submit செய்தால் இணையத்தில் காட்டாது உங்கள் பணத்தின் விவரம் உங்களது தொலைபேசிக்கு ஒரு செய்தி(SMS)ஆக வரும்அதில் உங்களது தொகையின் விவரம் தெரிந்துவிடும்...அவ்வளவுதான் நண்பர்களே..

கொசுறு:பணியிலிருந்து ஓய்வு பெறுவோர் தங்களது PF பிராவிடண்ட் பண்ட் பணத்தை வாங்குவதற்கு பல விதிமுறைகளைச் சொல்லி அலையோ அலை என்று அலைய விட்டு உயிரை எடுப்பார்கள்.. ஆனால்சில வருடங்களாக நிலைமை மாறிவிட்டது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் தனது PFபிராவிடண்ட் பண்ட் பணத்தைக் தர கோரி விண்ணப்பம் தாக்கல் செய்தால், விண்ணப்பம் தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் அவருக்கு பணம் போய் சேர வேண்டும் என்பது கட்டாயமாகி விட்டது.

உங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது



தமிழக முதல்வர் அவர்கள் 11.1.2012 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கான ஒப்புகை கடிதங்களை வழங்கினார்கள். மருத்துவ காப்பீட்டு திட்டம் நல்ல பயனளிக்கும் திட்டம் ஆகும்.
பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை இந்த திட்டத்தை பயன்படுத்தி வாழலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டம் எந்தெந்த மருத்துவமனைகளில் செயல்படுகிறது என்பதையும் அந்த மருத்துவமனைகளில் எந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கிறது என்பதையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது பற்றிய விபரங்கள் பாமர மக்களிடம் சரிவர சென்றடைய வில்லை. அதனை பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்போம் .....

மேலே உள்ள சுட்டியை கிளிக் செய்து அந்த இணையத்தளத்தில் சென்று படத்தில் காட்டியுள்ளது போல செய்தால் கிழே காட்டப்பட்டிருப்பது போல் தோன்றும்...

அதில் வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் இடத்தில் உங்களது மாவட்டத்தின் பெயர்களை கொடுத்தால் உங்களது மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் பெயர்களை காட்டும்..

பின்பு நான் வட்டமிட்டு காட்டப்பட்டிருப்பது போல் அந்த இடத்தில் கிளிக் செய்தால் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் அந்த மருத்துவமனையின் முகவரியும், அந்த மருத்துவ மனையில் குணபடுத்தபடும் நோய்கள பற்றியும் இருக்கும்.அதேபோல் ஒவ்வொரு மருத்துவமனையும் மேலே கிளிக் செய்தால் அதே போல் தோன்றும்.. இவ்வாறு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டகளிலும் உள்ள மக்கள் இதனை தெரிந்து கொண்டு பயனடையலாம்...

ஆயக்கலைகள்


ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு
    1.அட்சரங்கள்.
    2.விகிதம்.
    3.கணிதம்.
    4.வேதம்.
    5.புராணம்.
    6.வியாகரணம்.
    7.ஜோதிடம்.
    8.தர்ம சாஸ்த்திரம்.
    9.யோக சாஸ்த்திரம்.
    10.நீதி சாஸ்த்திரம்.
    11.மந்திர சாஸ்த்திரம்.
    12.நிமித்த சாஸ்த்திரம்.
    13.சிற்ப சாஸ்த்திரம்.
    14.வைத்திய சாஸ்த்திரம்.
    15.சாமுத்ரிகா லட்சணம்.
    16.சப்தப்பிரம்மம்.
    17.காவியம்.
    18.அலங்காரம்.
    19.வாக்கு வன்மை.படத்தைச் சேர்
    20.கூத்து.
    21.நடனம்.
    22.வீணை இசை.
    23.புல்லாங்குழல் வாசிப்பு.
    24.மிருதங்க இசை.
    25.தாளம்
    26.ஆயுதப் பயிற்சி.
    27.ரத்னப்பரீட்சை.
    28.கனகப்பரீட்சை(தங்கம் பற்றி அறிதல்)
    29.யானை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.
    30. குதிரை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.
    31.ரத சாஸ்த்திரம்.
    32பூமியறிதல்.
    33.போர்முறை சாஸ்த்திரம் மற்றும் தந்திரம்.
    34.மற்போர் சாஸ்த்திரம்.
    35.வசீகரித்தல்.
    36.உச்சாடனம்.
    37.பகைமூட்டுதல்.
    38.காம சாஸ்த்திரம்.
    39.மோகனம்.
    40.ஆகரஷனம்.
    41.ரசவாதம்.
    42.கந்தரவ ரகசியம்.
    43.மிருக பாஷை அறிதல்.
    44.துயரம் மாற்றுதல்.
    45.நாடி சாஸ்த்திரம்.
    46.விஷம் நீக்கும் சாஸ்த்திரம்.
    47.களவு.
    48.மறைத்துரைத்தல்.
    49.ஆகாயப் பிரவேசம்.
    50.விண் நடமாட்டம்.
    51.கூடுவிட்டு கூடுபாய்தல்.
    52.அரூபமாதல்.
    53.இந்திர ஜாலம்.
    54.மகேந்திர ஜாலம்.
    55.அக்னி ஸ்ம்பனம்.
    56.ஜலஸ்தம்பனம்.
    57. வாயு ஸ்தம்பனம்.
    58.கண்கட்டு வித்தை.
    59.வாய்கட்டு வித்தை.
    60.சுக்கில ஸ்தம்பனம்.
    61.சுன்ன ஸ்தம்பனம்.
    62.வாள்வித்தை.
    63.ஆன்மாவை கட்டுப்படுத்துதல்.
    64.இசை.

வாக்காளர் பெயர் சரிப்பார்க்க


நீங்கள் பணி(வேலை) காரணமாக வெளிநாட்டில் -வெளி ஊரில் வேலை செய்யலாம். உங்களுக்கான ஒட்டு உரிமை உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம்.நமக்கு ஒட்டு உள்ளதா - வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் படி நமது பெயர் - முகவரி விவரம் சரியாக உள்ளதா என எளிதில சோதித்துக்கொள்ளலாம்.வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவருக்கு சென்னையில் ஒட்டு இருக்கும். மகன்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அவ்வளவு பொறுப்பாக சென்று நமது பெயர் விவரங்களை சரிபார்ப்பர்களா என்றால் இல்லை. நமது பெயர் பார்க்கும் வேலையைஅரசு வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணை விவரத்தில் உள்ள விவரங்கள் சரிபார்க்க நாம் சென்னை வரவேண்டியதில்லை.வெளிநாட்டில் இருந்தே விவரங்களை சரிபார்க்கலாம். இந்த தளம் செல்ல நீங்கள்க்ளிக் செய்யவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
வருகின்ற விண்டோவில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள். அடுத்துள்ள உங்கள சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்யுங்கள்.(இப்போது உங்களுடைய சட்ட மன்ற தொகுதியை மாற்றி அமைத்துள்ளார்கள்).இதில் முதலில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடலாம். அடுத்துள்ள வாக்காளர் பெயர் மூலம் தேட கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் வாக்காளர்பெயர் தட்டச்சு செய்யவும். நீங்கள் வாக்காளர் பெயர் தட்டச்சு செய்வதற்கு வசதியாக உங்களுக்கு தமிழ் கீ-போர்ட் இணைத்துள்ளார்கள். தேவையான எழுத்தை கிளிக் செய்ய அதன் மெய்யெழுத்து அனைத்தும் வரும். தேவையானதை கிளிக் செய்து பெயரை எளிதில் அமைக்கலாம்.

அடுத்துள்ள வாக்குசாவடியின் பெயர் மூலமாகவோ - தெருவின் பெயர் மூலமாகவோ எளிதில் தேடலாம்.

தேர்தல் வருவதற்கு முன் உங்கள் வாக்கு உரிமையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.ஒட்டுப்போடுங்கள். ஜனநாயக கடமையை நிலைநாட்டுங்கள்.

ஆங்கில சுருக்கங்களும் விரிவாக்கம்

இங்கு நமது நடைமுறையில் அதிகம் பயன்படுத்தப்படும் சில சுறுக்கங்களும் அதனுடைய விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் மேலும் இது போன்று நிறைய உண்டு. அது போன்று உங்களுக்கு தெரிந்தால் அதனை பின்னூட்டமாக இட்டால் நன்றாக இருக்கும்...
தொலைப்பேசி துறை:
  • Subscriber trunk dialling, or subscriber toll dialling = STD
  • Internationala Subscriber Dialling - ISD
  • Public Call Office = PCO
  • Bharat Sanchar Nigam Limited = BSNL
  • Subscriber Identity Module = SIM
  • Short Message Service = SMS
  • Multimedia Messaging Service =MMS
  • General Packet Radio Service = GPRS
  • Global System for Mobile Communications =GSM
வங்கித்துறை :
  • Industrial Credit and Investment Corporation of India = ICICI
  • Housing Development Finance Corporation Limited, = HDFC
  • Unit Trust of India = UTI (now Axix Bank)
  • The Hongkong and Shanghai Banking Corporation Limited = HSBC
மருத்துவத்துறை :
  • Blood Pressure = BP
  • Electrocardiogram = ECG
  • Intensive care unit, = ICU
  • Computed tomography = CT
  • Human immunodeficiency virus = HIV
  • Acquired immune deficiency syndrome = AIDS
கல்வித்துறை :
  • Master of Business Administration = MBA
  • Master of Computer Application = MCA
  • Bachelor of Medicine and Bachelor of Surgery, = MBBS
  • Bachelor of Engineering = B.E
  • Master of Science = M. Sc
  • Bachelor of Business Administration = BBA
  • Bachelor of Science = B.Sc
  • Bachelor of Arts = B.A
  • Bachelor of Commerce = B.Com
  • Doctor of Philosophy, = Ph.D
கணிப்பொறித்துறை:
  • Central processing unit = CPU
  • HyperText Markup Language = HTML
  • Beginner's All-purpose Symbolic Instruction Code = BASIC
  • World Wide Web = WWW
  • Hypertext Transfer Protocol = HTTP
  • Random access memory = RAM
  • Universal Serial Bus = USB
  • Joint Photographic Experts Group, = JPEG
  • Portable Document Format = PDF
  • Three dimensional = 3D
  • Computer-Aided Design = CAD
  • Diploma in Computer Application = DCA
  • Compact Disc = CD
  • Digital Video Disc = DVD
  • Business process outsourcing, = BPO
பொதுவானவை :
  • British Broadcasting Corporation = BBC
  • Dalsey, Hillblom and Lynn = DHL
  • TV Sundram Iyengar and Sons Limited = TVS
  • Frequency modulation = FM
  • et cetera = ETC
  • Automated teller machine, = ATM
  • International Air Transport Association = IATA
  • British Petroleum = BP
  • Lucky GoldStar = LG
  • Kentucky Fried Chicken = KFC
  • Bavarian Motor Works = BMW
  • United States of America = USA
  • United Kingdom = UK
  • Kingdom of SaudiArabia =KSA
  • United Arab Emirates =UAE

No comments:

Post a Comment