Friday, 15 August 2014

தேர்தல் துறை


வாக்காளர் பட்டியலில் நம்மை பற்றிய விவரங்கள் சரிபார்க்க

நீங்கள் பணி(வேலை) காரணமாக வெளிநாட்டில் -வெளி ஊரில் வேலை செய்யலாம். உங்களுக்கான ஒட்டு உரிமை உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம்.
நமக்கு ஒட்டு உள்ளதா - வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் படி நமது பெயர் - முகவரி விவரம் சரியாக உள்ளதா என எளிதில் சோதித்துக்கொள்ளலாம்.

இந்த தளம் செல்ல நீங்கள் இங்கு கிளிக் பண்ணுங்க.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

வருகின்ற விண்டோவில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள்.அடுத்து சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்யுங்கள்.(இப்போது உங்களுடைய சட்ட மன்ற தொகுதியை மாற்றி அமைத்துள்ளார்கள்).இதில் முதலில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடலாம். அடுத்துள்ள வாக்காளர் பெயர் மூலம் தேட கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் வாக்காளர்பெயர் தட்டச்சு செய்யவும்.நீங்கள் வாக்காளர் பெயர் தட்டச்சு செய்வதற்கு வசதியாக உங்களுக்கு தமிழ் கீ-போர்ட் இணைத்துள்ளார்கள். தேவையான எழுத்தை கிளிக் செய்ய அதன் மெய்யெழுத்து அனைத்தும் வரும். தேவையானதை கிளிக் செய்து பெயரை எளிதில் அமைக்கலாம்.


அடுத்துள்ள வாக்குசாவடியின் பெயர் மூலமாகவோ - தெருவின் பெயர் மூலமாகவோ எளிதில் தேடலாம்.


தேர்தல் வருவதற்கு முன் உங்கள் வாக்கு உரிமையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
ஒட்டுப்போடுங்கள்.
ஜனநாயக கடமையை நிலைநாட்டுங்கள்.

100 ரூபாயில் ரேஷன் கார்டு


100 ரூபாயில் ஏழே நாட்களில் ரேஷன் கார்டு:
தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்
வெறும் இருப்பிட ஆதாரத்திற்காக மட்டும் ரேஷன் கார்டு வேண்டுவோர்ரேஷனில் எந்த பொருளும் தேவைப்படாதவர்கள்,‘தத்கல்’ முறையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனஅரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் போட்டோவுடன் பூர்த்தி செய்துகருவூல கணக்கில் 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
இருப்பிட முகவரிக்கு ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டைபாஸ்போர்ட்வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்மருத்துவ காப்பீடு அடையாள அட்டைஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில்ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்துஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
ஏழு நாளில் வெள்ளை நிறத்திலான ரேஷன் கார்டு வழங்கப்படும்இவற்றை பொருட்கள் பெறும் கார்டாக மாற்றம் செய்ய முடியாது எனஅரசு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment