அட்டகாசமான அனிமேசனுடன் கூகிள் மேப் இலவசமாக உருவாக்கலாம்.
மேப் என்ற வார்த்தை சொன்னவுடன் உடனடியாக நமக்கு ஞாபகம் வருவது கூகிள் மேப் தான் அந்த அளவிற்கு கிராமத்தை கூட விட்டு வைக்காமல் கூகிள் மேப்-ல் காட்டுவது மேலும் சிறப்பு, கூகிள் மேப் அனிமேசனுடன் காட்டினால் எப்படி இருக்கும் ஆம் கூகிள் மேப்-ஐ அனிமேசனுடன் ஒரு தளம் உருவாக்கி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
வேடிக்கையாக கூகிள் மேப் பார்க்க சென்றவர்களை கூகிள் மேப் விடாமல் பிடித்துக்கொள்கிறது என்று தான் சொல்ல வேண்டும் புதிதாக ஒரு நபர் குறிப்பிட்ட ஊர் எங்கிருக்கிறது என்ற பார்க்க வேண்டும் என்று கூகிள் மேப் பக்கம் சென்றால் எங்கிருக்கிறது என்ற தகவல் மட்டுமல்ல பேருந்தில் பயணம் செய்தால் எத்தனை கி.மீ என்பது முதல் எவ்வளவு மணி நேரம் என்பது வரை துல்லியமாக கொடுக்கும் கூகிள் மேப் -ஐ அனிமேசனுடன் காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.animaps.com
புதிய கோணத்தில் உங்கள் மேப்-ஐ இலவசமாக வடிவமைக்க எங்களிடம் வாருங்கள் என்று அழைக்கிறது இத்தளம். இங்கு சென்று நாம் Get Started என்ற பொத்தானை சொடுக்கி வரும் கூகிள் மேப் -ல் நம் இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும், அதன் பின் நமக்கு தேவையான படங்களை மேப்-ல் எங்கு வைக்க வேண்டும் என்பது போன்ற எல்லாத்தகவல்களையும் கொடுத்து அழகான அனிமேசன் மேப் உருவாக்கலாம். ஒரு அனிமேசன் மனிதன் கூகிள் மேப்-ல் நடந்து நம் இடத்திற்கு வருவது போல் கூட உருவாக்கலாம். புதிதாக இத்தளத்திற்கு வருபவர்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றிய அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம். இத்தளத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அனிமேசனுடன் நாம் உருவாக்கும் மேப்-ஐ நம் பிளாக்-ல் அல்லது இணையத்தில் கூட பகிர்ந்து கொள்ளலாம், சில பெரிய நிறுவனங்கள் இப்படி மேப் உருவாக்க பெரியத் தொகையை கட்டணமாக வசூலிக்கின்றனர், நாமும் அனிமேசன் எல்லாம் செய்துள்ளனர் என்று கேட்கும் தொகையை கொடுக்கின்றோம், ஆனால் இனி எளிதாக இத்தளம் மூலம் நாமும் அனிமேசனுடன் கூகிள் மேப் உருவாக்கி நம் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். அனிமேசனுடன் கூடிய அட்டகாசமான கூகிள் மேப் உருவாக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment